வில்லங்க சாமியார் விரை நசுக்கி கொலை

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இந்த பதிவுக்கு மொதல்ல நித்யானந்தாவும் ரஸ்புதினும்னு தான் தலைப்பு வச்சேன். ஆனால் ஞா கிழமை ஆச்சா ஆரும் கண்டுக்கிட மாட்டாய்ங்களோங்கற சந்தேகத்துலதான் இந்த வில்லங்க தலைப்பு. ஆனால் இது சரித்திர உண்மைங்கோ..

நித்யானந்தாவை பற்றி சொல்ல வந்தால் கழண்டுக்குவிங்க. அதனால சரித்திரத்துல ஏறக்குறைய இதே கேரக்டரோட இருந்த ரஸ்புதினை பத்தி சொல்லலாம்னு ஒரு கெட்ட எண்ணம்.

ரஷ்யாவுலன்னு ஞா. அலெக்சியான்னு ஒரு இளவரசனுக்கு ரத்தம் உறையா நோய் இருந்தது. நமக்கு அடிப்பட்டா ரத்தம் வரும் .கொஞ்சம் நேரத்துல பாடி என்னென்னமோ ரசாயனத்தை எல்லாம் சுரந்து ரத்தம் போற வழியை சீல் பண்ணிரும். ஆனால் அலெக்சியாவுக்கு இது நடக்காது. சோசியக்காரவுக எல்லாம் “இது வேலைக்காகாது இளவரசர் டிக்கெட் போட்டுருவாருன்னு “சொல்லியாச்சு.

ரஸ்புதின் நம்ம நித்யானந்தா மாதிரி கிராக்கி. லேசா ஹிப்னாட்டிசம் தெரியும் போல (மனவசியம்)
மேற்படி இளவரசனோட அம்மா (?) என்னென்னமோ முயற்சி எல்லாம் செய்துட்டு நொந்து கிடக்க ரஸ்புதினுக்கு அரண்மனை சகவாசம் ஏற்படுது.

தன்னோட ஹிப்னாட்டிக் பவர் மூலம் இளவரசருக்கு அடிப்படும்போதெல்லாம் ரத்த சேதம் அதிகமாகாம அதை உறைய வச்சுருவாரு.

இந்த ஒரே ஒரு ட்ரம்ப் கார்டை வச்சுக்கிட்டு ஓவர் ஆலா அந்த நாட்டையே தன் கைக்குள்ள வச்சுக்கறாரு. அல்லாருக்கு வர்ர சாவு அவருக்கும் வருது. மேட்டர் ஓவர்.

இப்பம் நித்யா மேட்டருக்கே வருவம். மதுரை ஆதீனம் நித்யாவை இளைய ஆதீனமா பட்டம் சூட்ட ஆயிரத்தெட்டு காரணம் சொல்லப்படுது. ஆனால் நான் என்ன நினைக்கிறேன்னா நித்யா தன் ஹிப்னடிக் பவரை உபயோகிச்சு அவரோட இளைப்பு நோயை கட்டுப்படுத்தியிருக்காரு. ஆதீனம் படக்குனு விழுந்துட்டாரு.

இளைப்பு நோய் போய் ஒரு நோயான்னு கேட்கலாம்.ஆனால் தலைவலியும் ஜுரமும் அவிகவிகளுக்கு வந்தாத்தானே தெரியும். அதுலயும் இந்த இளைப்பு வந்துருச்சுன்னா தாளி ரோசிக்க கூட முடியாது. (அனுபவம்)

சரித்திரம் பைத்தியம் மாதிரி ஒன்னையே உளறும்னு சொல்வாய்ங்க. நித்யாவுக்கும் ரஸ்புடின் மாதிரி ஒரு கதி கெட்ட சாவு கியாரண்டி.

ஆமா ரஸ்புடின் எப்படி வாழ்ந்தாரு?

அரச குடும்பத்தின் மேல் வரம்பு மீறிய அரசியல் ஆதிக்கம் அவருக்கு இருந்திருக்கு. 12 வயசு கன்னித்துறவியை கற்பழிச்சதா ஒரு கட்டுப்பாடற்ற பாலுணர்வு வாழ்க்கைய வாழ்ந்ததா பல மேம்பட்ட நபர்களின் மூலம் ரஸ்புடின் குற்றஞ்சாட்டப்பட்டார்.

நம்ம நித்யா பெட்டருப்பா. ரஞ்சிதாம்மா மேஜருதானே.அவரும் ரஷ்ய வைதீகமான தேவாலயமும் ஒரு பதற்றமான உறவைக் கொண்டிருந்தன. எல்லா ஆதீனமும் நித்யாவின் தேர்வை திரும்பப்பெற சொல்லி தீர்மானிச்சிருக்காய்ங்க .தெரியும்ல.

//மனமார ஒன்றிணைந்து பாவம் செய்வதால், மனிதனின் மேல் இந்தப் பாவத்தில் ஆற்றலானது இரத்து செய்யப்படுகிறது//ன்னு நம்பி செயல்படற குழுவோட ரஸ்புடின் தொடர்பு கொண்டிருந்தாரு.

//தானாகவே-கசையடி கொள்வதன் மூலமாக இறையருள் உணரப்படும் //னு நம்பியிருக்காரு. (குறிப்பே எளுதி வச்சிருக்காராம்)

//சபலத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மையை//வலியுறுத்தியிருக்காரு. பாவம் செய்து -பாவமன்னிப்பு கோருதல் மூலம் ஆன்மீகத்துல வளரலாங்கறது அவரது கொள்கை (?)

எப்படி செத்தாரு?

ஒரு பார்ட்டி கத்தியால் குத்த குடல் சரிந்தது.பிறவு சர்ஜரி.ரஸ்புடின் பிழைச்சுக்கிட்டாரு.//அதற்குப் பிறகு ரஸ்புடின் முன்பிருந்தது போல் இல்லை: அவர் மிகவும் எளிதாக சோர்வடைவதாகக் காணப்பட்டார், மேலும் அடிக்கடி வலி நிவாரணத்திற்காக அபின் உபயோகித்தார்.//

ஒரு குழு ரஸ்புடினை நிலவறைக்குக் கூட்டிச் சென்று அதிக அளவிளான விஷம் கலந்த கேக்குகள் மற்றும் சிகப்பு வைனை அவர்கள் பரிமாறியிருக்காய்ங்க.நான்கு முறைகள் சுடப்பட்டிருக்காரு.அதுக்கப்பாறமும் அவர் எதிர்த்து தாக்க முயல ரஸ்புடினின் பவர் அவரோட லுல்லாவுல தான் இருக்குன்னு நம்பின குழு அதை “கசக்”கிட்டாய்ங்க.

ரஸ்புடின் தன் தந்தைக்கு மெகா சைஸ் இன உறுப்பு இருந்ததா தன் குறிப்புகளில் எளுதியிருக்காராம். அப்பம் ஜெனட்டிக் சைன்ஸ் படி பார்த்தா பார்ட்டிக்கும் அந்த ரேஞ்சுலதான் இருந்திருக்கும் போல. நாம கிளப்பி விடற புரளி நமக்கே ஆப்பா முடியறதுன்னா இதான் போல.

மேற்படி கைங்கரியங்கள் எல்லாம் முடிஞ்ச பிறகு உறைந்த ஆற்று நீரில் அவரோட பாடி வீசப்பட்டது. பாவம் நித்யானந்தா..

அவரது பிரேத பரிசோதனையில், நீரில் மூழ்கி மூச்சுத் திணறியதால் இறப்பு ஏற்பட்டதாக விவரிக்கப்பட்டது.

நித்யாவுக்கும் இதே நிலை வருமான்னு கேப்பிய. நம்ம பதில் : நமக்கொன்னும் தெரியாதுங்னா நாம வெளியூரு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s