ஒரு பலான ஐக்யூ டெஸ்ட்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இதே தலைப்புல நாம ஃபேஸ்புக்ல போட்ட மேட்டரை ஆல்ரெடி படிச்சிட்டிருந்தா சாரி.மத்தவுக படிங்க. மத்தபடி இது ஏதோ கில்மா பதிவுன்னு நினைச்சுராதிங்க . வறுமைக்கு காரணங்கள் தொடர்ல அடுத்த அத்யாயம் தான் இது. அத்யாயத்துக்கு போறதுக்கு மிந்தி ஒரு பலான ஐக்யூ டெஸ்ட்.

ஒரு ஊருல ஒரு ராசா. அந்த ராசாவுக்கு ஒரே ஒரு பொண்ணு. பொண்ணு என்னமோ பிலோ ஏவரேஜுதான்.ஆனால் அவளோட மார்பழகு சூப்பர் ஹிட் முக்காபுலா. அந்த ஊரு கவிஞர்களெல்லாம் ஓவர் டைம் பார்த்து எளுதி தள்ளியும் சரக்கு தீரலைன்னா பார்த்துக்கிடுங்க

சுயம்வரத்துக்கு நாள் குறிச்சு – இளவரசியோட ஓவியங்களை பல நாடுகளுக்கும் அனுப்பினாரு ராசா.ஆனால் பலன் பூஜ்ஜியம்.

ராசா ரெம்ப டீலாயிட்டாரு. அப்பம் மந்திரி ஒரு ஐடியா கொடுத்தாரு. “ராசா.. ஆபத்துக்கு பாவமில்லை. இளவரசியோட மார்பழகை ஓவியமா தீட்டச்செய்து அனுப்புவமே ”

இந்த ஜோக்கை கண்டித்து கமெண்ட் போடப்போற முக நூல் அன்பர்களை போலவே ராசாவும் எகிறினாரு.ஆனால் வேற வழியில்லை. நீண்ட விவாதத்துக்கு பிறகு திறமையான -இளம் வயது ஓவியனை ஏற்பாடு செய்யலாம். இளவரசியின் மேலாடையும்,கச்சையும் ஒரே ஒரு கணம் நீக்கப்படும். ஆக்சன் ரீப்ளேல்லாம் கிடையாதுன்னு முன் கூட்டியே அறிவிச்சுரலாம்னு முடிவு செய்தாய்ங்க.

ஆயிரக்கணக்கணக்கான ஓவியர்கள் வந்தாய்ங்க. பல பரீட்சைகளுக்கு பிறகு ஒரே ஒரு இளம் ஓவியன் தேர்வு செய்யப்பட்டான்.

அந்தப்புரம் அழைத்து செல்லப்பட்டான். இளவரசியின் அறை. ஓவியன் சீலை ,வண்ணங்களை ,குச்சங்களை தயார் செய்து கொண்டான். இளவரசி வந்தாள் அவளது மேலாடையும் -கச்சையும் ஒரு கணம் ..ஒரே கணம் நீக்கப்பட்டன. .உடனே சால்வையால் போர்த்தப்பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட்டாள்.

மார்பழகை கண்ட மறு கணம் ஓவியன் தன் கண்களை மூடிக்கொண்டான். என்னால் ஓவியம் வரைய முடியாது என்றான்.

ராசாவுக்கும் அமைச்சருக்கும் பயங்கர கடுப்பு. ராசா உத்தரவிட்டார் ” இந்த ஓவியனின் கண்களை பறித்துவிடுங்கள்”

ஓவியன் அசத்தப்போவது யாரு ப்ரோக்ராம் போல ” நன்றி.. நன்றி.. நன்றி” என்றான் ராசாவும் மந்திரியும் “தப்பு பண்ணிட்டமே”ன்னு நாக்கை கடிச்சுக்கிட்டாய்ங்க.ஏன்?

இந்த கேள்விக்கு சரியான பதில் சொன்னா நீங்க பாஸ்.. இல்லினா டப்பாஸூ..

இப்பம் வறுமைக்கான காரணத்துக்கு போயிரலாமா?

பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்னு ஒரு பழமொழி இருக்கு. ஒரு வகையில அது நெஜம் தான். மன்சன் நாலு கால்ல தான் நடந்துக்கிட்டிருந்தான். எவனோ ஒரு அப் நார்மல் பர்சனாலிட்டி ரெண்டு காலால நடந்து காட்ட சனம் ஒரு ஆயிரம் வருசத்துக்கப்பாறம் அதை ஏத்துக்கிட்டிருப்பாய்ங்க. இதெல்லாம் ஃப்ளாஷ் பேக். பாய்ண்டுக்கு வந்திங்கனா இப்பம் எனக்கு கால்ல ஒரு அடிபட்டிருக்குன்னு வைங்க. நான் நடக்கறப்பல்லாம் அய்யய்யோ ஏற்கெனவே அடிப்பட்டிருக்கு.மறுபடி எங்க படப்போகுதோ? எவன் மிதிச்சு வைக்கப்போறானோங்கற எண்ணம் ஓடிக்கிட்டே இருக்கும். எண்ணம் தானே செயலாகும். ரைட் ப்ரதர்ஸ் ஃப்ளைட்டை கண்டுபிடிக்கிறதுக்கு மிந்தி அது ஒரு எண்ணமாத்தானே இருந்தது. எண்ணம் தானெ செயலாச்சு.

இதே தியரி தான் குடிகள் விஷயத்துலயும் நடக்குது. ஒரு அடி விழுந்ததும் எல்லாம் கலகலத்து போயிருது. அய்யோ இதுலயும் அடி விழுமோ.. இதுலயும் விழுமோன்னு ஒரு எண்ணம் வந்துக்கிட்டே இருக்கும்.எண்ணம் செயலாகும்.

இதுக்குத்தேன் நாம மறுபடி மறுபடி எல்லா கோணங்களில் இருந்தும் சொல்ற பாய்ண்டு. .. எண்ணம் போல் மனம்.மனம் போல் வாழ்வு. இதை பயாலஜிக்கலா – மெடிக்கலா -பயோ கெமிஸ்ட்ரி அடிப்படையில கூட ஸ்தாபிக்க முடியும்.

உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.

இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது.

உதாரணமாக நாம் ஒரு விசயத்தை ஒரு ஸ்டேஜில் விட்டுவிட்டு அடுத்த விசயத்தை யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் சிலர் அதே விசயத்தை வருடக்கணக்கில் யோசித்து பைத்தியமே ஆகிவிடுகின்றனர்.

உ.ம் நம்மை பார்த்து (?) ஒருவன் காறித்துப்புவது . இதற்கு காரணம் குறிப்பிட்ட ரசாயனம் அவன் உடலில் குறைவாய் இருப்பதே. இதை டாக்டர்கள் வெளியிலிருந்து இஞ்செக்ஷன் மூலம் தருகிறார்கள். வியாதி கட்டுப்படுகிறது.

“சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி ” மூலம், ரத்தக்கொதிப்பு, இத்யாதி மனிதனின் குணத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுவதை மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வியாதிகளுக்கு மூலம் (பைல்ஸ் இல்லிங்க) ஜீன் களில் உள்ளது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் .

இந்த எண்ணங்களுக்கு வித்து ஒரு ஆதி எண்ணம். அது நம்மோடயே வந்தது. அதை மாத்த முடியாது. ஆனால் கிளை எண்ணங்களை கட்டுப்படுத்த முடியும்.மடை மாற்ற முடியும். இதுக்கு தேவை ஸ்ட்ராங் வில்.

ஆனால் ஸ்ட்ராங் வில் இல்லாத காரணத்தாலதான் வறுமை வந்துருது. அந்த வறுமையே நம்ம “வில்” ஐ ஸ்ரீராமன் கணக்கா வளைச்சு முறிச்சுருது.

வில்லை ஸ்ட் ராங்கா வச்சுக்கறதும் -வச்சுக்காததும் நம்ம கையில இருக்குன்னு சொன்னா அது பாதி நிஜம். -நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு. ஆனால் இந்த வில் விஷயத்துல அந்த சக்தியும் கொஞ்சம் கோ ஆப்பரேட் பண்ணனும்.

1991 நவம்பர்ல கண்ணாலமாகுது. சத்யவேடு,கும்மிடிப்பூண்டி, புது கும்மிடிப்பூண்டின்னு க்ஷேத்திராடனம்லாம் முடிஞ்சு ஊருக்கு வந்துட்டம். மனைவி முழுகாம இருக்கா. நிறை மாசம். ஜூன்ல பிரசவம் நடக்கப்போவுது. மே மாசம் கங்கையம்மன் திருவிழா நடக்குது. அதுக்கு ஒரு வாரம் முன்னே இருந்து பயங்கர நெருக்கடி.

ஷீரடி பாபா ரேஞ்சுல இமேஜ் இருக்கிறதால பீடி சிகரட்டுக்கு பஞ்சமில்லைதான். நாம தன்மான சிங்க மில்லையா. கை மாத்து,கடன் எல்லாத்துக்கும் நமக்கு நாமே ஒரு சீலிங் வச்சிருப்பம். அது தாண்டிட்டா தாளி உயிரே போனாலும் அந்த ஜோலிக்கு போக மாட்டோம். குறைஞ்ச பட்சம் குறிப்பிட்ட பார்ட்டிய டிஸ்டர்ப் பண்ணமாட்டோம்.

அந்த மாதிரி ஒரு நிலை. திருவிழா கத்திரிலதான் நடக்கும். ஜோசியத்தொழிலுகு அன் சீசன். ஒரே ஒரு டீக்கடைல சீலிங் முடியலை. அதனால அங்கன போய் ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதும் மதியம் மறுபடி ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதுமா இருந்தது. மறுபடி ராத்திரிக்கும் அதே ப்ராசஸ்.

செவ்வாய்கிழமை கங்கையம்மன் திருவிழா. புதன் கிழமை இரவு ஆத்தா புறப்பாடு. நம்ம ஃப்ரெண்டு ஒருத்தன் தான் ஃப்ளவர் டெக்கரெஷன் காண்ட்ராக்டு. அந்த இன்ஃப்ளுயன்ஸுல தேர்ல ஏறியாச்சு. நம்ம ஊரு திருவிழாவுக்கு 3 ஸ்டேட்ல இருந்து சனம் வருவாய்ங்க. சனம் அம்முது. அவனவன் உண்டியல்ல போடச்சொல்லி அம்பதும் நூறுமா நோட்டை தூக்கி தூக்கி தரான் .

ஒரு அம்பதோ நூறோ இருந்தா நம்ம சோத்து பிரச்சினை ஓவர். அந்த க்ஷணத்துல வில் கொஞ்சமா வீல் விட்டிருந்தாலும் கதை கந்தல். ஆனால் நம்ம மனோ சக்தி – நமக்கு மேல உள்ள ஒரு சக்தி உதவ மனசுக்குள்ள பேயாட்டம் போட்ட கெட்ட எண்ணத்துக்கு கட்டை போட்டு மீண்டு வந்துட்டம்.

மறு நாள்ளருந்து வளர்பிறை துவங்கிருச்சா என்ன தெரியலை ( நம்முது கடகலக்னமுங்கோ) ரொட்டீனுக்கு வந்துட்டம். அந்த வாரமே லாரி ட்ரைவரா இருந்த நம்ம மாமன் ஒருத்தனுக்கு விபத்து. ஆப்பரேசன் பண்ணியே ஆகனும்.ரத்தம் வேணம்.. “கொடுத்தாபோச்சு”ன்னுட்டம். (அதான் லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம்)

மிஞ்சிப்போனா மாமன் பத்து நாள் பிழைச்சிருந்தான் தட்ஸால்.ஆனால் அந்த 10 நாள்ள தன்னோட சின்ன வயசு பொஞ்சாதி -புள்ளை குட்டிகளுக்கு ஆதாரமான சில ஏற்பாடெல்லாம் செய்யமுடிஞ்சது.மாமா டிக்கெட் போட்டுட்டாரு.

நாம கண்ணாலம் -கருமாதிக்கு போறதில்லைன்னு ஒரு கொள்கை வச்சிருக்கிறதால போகலை.அப்பா மட்டும் போனாரு போல. அங்கன சனம் நம்மை பத்தி எம்.ஜி.ஆர் படத்துல எம்.ஜி.ஆரை பத்தி பேசறாப்ல பேசியிருக்காய்ங்க.

தானாடாவிட்டாலும் சதையாடும்பாய்ங்களே அப்படி அப்பாவுக்கு பொத்துக்கிச்சு. (பாசத்தை சொன்னேங்ணா) படக்குன்னு தேடி வந்துட்டாரு. 1992 மே மாசத்துலருந்து 1994 வரை ( அப்பா டிக்கெட் போடும் வரை) நமக்கு ராசபோகம்தேன்

ஒரு வேளை தேர் மேல இருந்த நான் ஒரு அம்பதையோ நூறையோ சுட்டிருந்தா அது அந்த வேளைக்கு பசியை விரட்டியிருக்கலாம். ஆனால் நாமஸ்ட் ராங் வில்லோட நின்னதால தேன் மேற்படி விபத்து -ரத்ததானம் -அப்பாவோட பேட்ச் அப் எல்லாம் நடந்ததுன்னு நான் நம்பறேன். நீங்க?

Advertisements

3 thoughts on “ஒரு பலான ஐக்யூ டெஸ்ட்

  கவிதை காதலன் said:
  May 5, 2012 at 5:24 am

  அண்ணே.. அந்த கேள்விக்கு விடைய சொல்லுங்கண்ணே.. ஹி. ஹி..

  arul said:
  May 7, 2012 at 6:19 am

  following ambition with strong will is hard at first but will work later as you had explained

  nice post anna

  ThirumalaiBaabu said:
  May 7, 2012 at 10:57 am

  நீங்க சொன்னா சரிதான் !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s