வறுமைக்கான காரணங்கள் : 20 To 30

Posted on

அண்ணே வணக்கம்ணே !
என்னடா இது திடீர்னு வறுமைக்கான காரணங்கள்ள இறங்கிட்டம்னு ரோசிச்சா தன வாக்கு ஸ்தானத்துல உள்ள சனி ஞா வந்துட்டாரு. (இருக்கட்டும் ..இருக்கட்டும்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்)

ஏற்கெனவே சொன்னாப்ல இந்த காரணங்கள் எல்லாம் நம்ம அனுபவம். இதை உங்க அனுபவத்தோட டாலி பண்ணி ஒர்க் அவுட் பண்ணுங்க.வறுமைய விரட்டிரலாம். இல்லாட்டி அது உங்களை விரட்ட ஆரம்பிச்சுரும். நாக்கு தள்ள வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடவேண்டியதுதான்.

நேத்து போட்ட அத்யாயத்தை படிச்சவுக 902. அவிகளுக்கு கிளக்கு திசையில் இருந்து படுகில்மா பார்ட்டி மிஸ் கால் உடட்டும் ( ச்சொம்மா தமாசு)

மேட்டருக்கு வந்துருவம்.வறுமைக்கான மொதல் 20 காரணங்களை பார்த்துட்டம். இன்னைக்கு 20 To 30 காரணங்களை பார்த்துருவம்.

21.பணம் அடிஷ்னலா வருதா,அக்கேஷ்னலா வருதா,ரெகுலரா வருதாங்கறதை பொருத்து ப்ளான் பண்ணனும். நமக்கு எல்லாமே லாட்டரித்தனமான வருமானம்தேன்.அதனால ஒரு காலகட்டம் முழுக்க கடன்லயே ஓட்டிக்கிட்டு இருந்தமா என்னதான் மொதல் வச்சு மோதிப்பார்க்கிற தில் இருந்தாலும் டெம்ப்டேஷன் இருந்தாலும் மொதல்ல கடன் காரவுகளுக்கு பைசல் பண்ணிர்ரது. 2007 ஏப்ரல்ல தந்தியில சேர்ந்த பிற்காடு கூட இதே ஃபார்முலா தான். ஏன்னா மறுபடி கடன்லதானே ஓட்டனும். ஒரு கட்டத்துல சம்பளம் எல்லாம் ஃபிக்ஸ் ஆன பிறவு பரவால்லை தந்தியில தொடரலாம்ங்கற நம்பிக்கை வந்த பிறவு தேன் முதலீடு -முட்டை போண்டான்னு ரோசிக்க ஆரம்பிச்சம்.

22.எம்.ஜி.ஆர் வேலைகளுக்கு நாம எப்பவும் எதிரி இல்லை.ஆனால் இந்த எம்.ஜி.ஆர் வேலைகளை இதயத்தால ரோசிச்சு மூளையோட செயல்படுத்தனும் இல்லாட்டி கேலிக்கூத்தாயிரும். நமக்கே ஆப்பாயிரும். அடுத்த மாச செலவுக்குன்னு ரிசர்வ்ல வச்ச காசை கை மாத்து கொடுக்கவே ரோசிப்பானுவ.ஆனால் நாம அந்த வேளை சோத்துக்கான காசையே தூக்கி கொடுத்துட்டு முழிச்சதுண்டு.
ஒரு தாட்டி சோத்துக்கில்லாத வாழ்ந்து கெட்ட குடும்பத்துக்கு ஒரு அமவுண்டை கொடுத்து அட்வைஸ் எல்லாம் பண்ணிட்டு வந்தன். என்னடா செய்திருக்காய்ங்கன்னா அந்த வேளைக்கு சமைக்க வச்சுக்கிட்டு மத்த காசுல சோஃபா செட்டுக்கு கவர் மாத்தியிருக்காய்ங்க.

எம்.ஜி.ஆர் வேலையில இறங்கும்போது சில பளமொளிகளை ஞா வச்சுக்கனும். ஆத்துல போட்டாலும் அளந்து போடு – பாத்திரமறிந்து பிச்சை இடு -தனக்கு மிஞ்சித்தான் தருமம் எட்செட்ரா.

23.போதும் என்ற மனம். இதை பத்தி சொன்னா அடங்கோத்தா நாலு காசை பார்த்ததும் இந்தாளு மைண்ட் செட்டே மாறிருச்சுன்னு நினைச்சுரப்படாது. 1997 ல ரூ. 5 மிச்சமானா போதும். அரை கிலோ நொய் வரும். அதை பொங்கி – வறுத்த கடலை சட்னி அரைச்சு மதியம் ஒரு 4 மணி வாக்குல தின்னுட்டா அந்த நாள் ஓடிப்போனாப்ல.

நண்பர் ஒருத்தரு தன் ஃப்ளாட்ல வீடு கட்ட அவிக அண்ணா ஃப்ளாட்ல ஷெட் போட்டிருந்தாரு. ஊடு கட்டி முடிச்சும் ஷெட் அப்படியே இருந்ததா அதை நமக்கு ஆஃபர் பண்ணாரு. (ஓடிப்போயிருவான்னு) .வாடகை இல்லை. (இன்னைக்கு வாடகையே ரூ.1,400 வாட்டர் சார்ஜஸ் ரூ.300) பவர் பில் இல்லை – ஐ மீன் பவரே இல்லை (இன்னைக்கு ரூ.500 க்கு குறைஞ்சு பவர் பில் வர்ரதில்லை)

காலம் மாறிக்கிட்டே இருக்கும். இந்த உதவாக்கரை அரசாங்கங்களும் – உலகவங்கியும் – நம்ம கோவணத்தை கூட விட்டு வைக்கப்போறதில்லை.உசாரய்யா உசாரு.

24..கொடுக்கல் வாங்கல்ல பல முறைகள் இருக்கு. நான் பஸ் கம்பெனியில வேலை செய்யும் போது செட்டியார் சேட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லுவாரு. அவிக புடவை பார்சல் மாதிரி தந்தி பேப்பர்ல கட்டு கட்டி வச்சிருப்பாய்ங்க. வட்டி? பத்து பைசாவோ நாலணாவோ? நாம போயி வாங்கிட்டு வரவேண்டியதுதேன். இது டாப் க்ளாஸ். இங்கருந்து படிப்படியா இறங்க இறங்க பத்து வட்டி ,மீட்டர் வட்டி ,ஏடிஎம்மை ஒப்படைச்சுர்ரதுன்னு போகும்

நாம ஆரையாவது கடன் கேட்க போயி ஃபார்மாலிட்டிஸ் எதுனா இருந்தாலும் நோ ப்ராப்ளம்னு சொன்ன உடனே அவன் பதறனும்..அடடே போங்க சார் .உங்க கிட்ட போயி அதெல்லாமா.. ன்னு பதறனும்.அந்த ரேஞ்சுக்கு வரனும். நான் சொல்றது பணத்துல இல்லை. குட் வில். நம்பிக்கை. இல்லாட்டி ஒரு சின்ன மெடிக்கல் கிரைசிஸ், லீகல் கசமுசால பொளப்பே நாறிரும்.

கடவுள் புண்ணியத்துல நம்ம ஜாதகத்துல ரோகாதிபதியான குரு லக்னத்துலே உச்சமானதாலயோ என்னமோ நம்ம மைண்ட்ல பொஞ்சாதி புள்ள குட்டி இல்லின்னாலும் கடன் காரன் இருந்துட்டே இருப்பான். கையில பணம் இல்லின்னாலும் கை நீட்டின இடத்துல ஒடனே கிடைக்கும்.

குறைஞ்ச பட்சம் 10 பார்ட்டி. ஆனால் 9 கிரகமும் பிரதிகூலமான சந்தர்ப்பத்துல 10 பேரையும் கான்டாக்ட் பண்ண முடியாம 11 ஆவது பார்ட்டிக்கிட்ட போய் தலை சொறிஞ்சு நாறினதும் உண்டு அதெல்லாம் டாப் சீக்ரெட்.

25.ஹை பட்ஜெட் ப்ராஜக்ட்ல இறங்கறதா இருந்தா எந்த நேரத்துல எவ்ள காசு தேவையோ அதை ஒரு காசு குறையாம அந்த நிமிசமே இறக்குற கப்பாசிட்டி இருக்கனும்.இல்லாட்டி பொத்திக்கிட்டு இருக்கனும்.

ஒரு ப்ராசஸுக்கு பத்து ரூபா தேவைப்படுதுன்னு வைங்க. அதுக்கு அஞ்சு ரூவா மட்டும் கையில இருந்து என்ன புண்ணியம்?

ஒரு கிணத்துல 60 அடியில தண்ணி இருக்கு. 59 அடி கயிறை விட்டு என்ன பிரயோசனம்.. (இப்படி கூட நாறியிருக்கம்)

26.ஒரே வெட்டுல வறுமையை வெட்டி தீர்த்துரனுங்கற வெறி.. இந்த வெறி புதையல் க்ரூபல் கூட கொண்டு சேர்த்துரும்.

ஒரு பார்ட்டி இப்படித்தான் ஒரு பாம்பை பாத்ரூம்ல வச்சு ஹார்லிக்ஸ் ஊத்தி மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டிருந்தான். (பரம ரகசியமா) .ஒரு நாள் வசம்மா மேட்டர் லீக் ஆயிருச்சு. கொய்யால என்னடா இது பைத்தாரத்தனம்னா பாம்பு கல்லை கக்கினா விடிஞ்சுரும்னான். மொதல்ல எடுத்து வீசிரு.பொளப்ப பாரு. ஒனக்கு லட்ச ரூவா பிரச்சினை இருக்குன்னா அதை ஒரு லட்சம்னு பார்க்காதே.டிவைட் அண்ட் ரூல். அதை பத்தா பிரி. சால்வ் பண்ணு.மவனே இன்னொரு தடவை இந்த மாதிரி மேட்டர்லாம் என் காதுக்கு வந்தது ..உ .. தந்தியில நியூஸா வந்துருவன்னுட்டு வந்தன்.

அவனுக்கு அட்வைஸ் விட்டமே கண்டி நாம பண்ண பைத்தாரத்தனம்லாம் சொன்னா சிரிச்சு சிரிச்சு வவுறே புண்ணா போயிரும்.

27.லட்ச ரூவா செக் வந்திருக்கு.ஆனா அக்கவுண்ட் பேயி.நமக்கா அக்கவுண்ட் இல்லை. ரெண்டு வழி இருக்கு. ஒன்னு பத்துவட்டிக்கு கடன் வாங்கி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும். அல்லது மேனேஜரை மேனேஜ் பண்ணனும். கடன் தர்ரவனையோ மேனேஜரை தெரிஞ்சவனையோ கான்டாக்ட் பண்ணனும்னா ஃபோன்ல கரன்சி இல்லை. அவன் வரச்சொன்னா போய் பிக் அப் பண்ண ஷேர் ஆட்டோக்கு காசில்லை.

இந்த பொசிஷன்ல அய்யோ லட்ச ரூபா செக்காச்சே ..அது வந்தும் புண்ணியமில்லையேன்னு ரோசிக்க கூடாது. மொதல்ல ஃபோனுக்கு கரன்சி..அப்பாறம் ஷேர் ஆட்டோக்கு காசுன்னு பிரிச்சு பிரிச்சு ரோசிக்கனும்.

எவனாச்சும் கடன் காரன் வந்து இர்ரிடேட் பண்ண லட்ச ரூவா செக்கை அவன் முகத்துல வீசி எறிஞ்சுரக்கூடாது. (இந்த தப்பையும் நான் செஞ்சிருக்கன்)

28. இனம் இனத்தோடு சேரும்னுட்டு நாம நம்ம ரேஞ்சு ஆட்களோடயே மூஞ்சி நக்கிக்கிட்டு இருக்கப்படாது. எல்லா சர்க்கிள்ளயும் புகுந்து வரனும்.ரவுடி நண்பனை பஞ்சாயத்துக்கு கூப்ட கூடாது. .போலீஸ் நண்பனை ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணுப்பான்னு கேட்ககூடாது. ஃபைனான்ஸ் பண்றவங்கிட்ட கடன் கேட்க கூடாது.ஆனால் மூவ் பண்ணனும். இந்த பாய்ண்டை கோட்டை விட்டாலும் வறுமை வந்துரும். கூடவே வெறுமையையும் கூட்டி வரும்.

29.ஒரு பெரும்புகழை தரக்கூடிய செயல்ல சின்ன சின்ன அவமானங்கள் வரத்தான் செய்யும். செல்வத்தை பெருக்கனும்னா வறுமைய வாலன்டியரா அனுபவிச்சுத்தான் தீரனும். பணம் துப்பாக்கியில லோட் பண்ண புல்லட் மாதிரி. குண்டுகளை துப்பிக்கிட்டிருக்கிற துப்பாக்கிய விட குறி வைக்கப்பட்ட துப்பாக்கிக்குத்தான் கமாண்டிங் பவர் அதிகம்.

30.வீடுங்கறது மூக்கு மாதிரி ,லேசா பட்டா கூட ரத்தம் கொட்டும் .குடும்பத்தலைவனின் வறுமை வீட்டை பாதிக்காம பார்த்துக்கனும். தன் இல்லாமை இயலாமையா மாறிராம பார்த்துக்கனும். இல்லாமைய விட இயலாமை கொடூரமானது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s