தமிழ் புத்தாண்டு பலன்: மீனம்

Posted on

இன்னைக்கு சென்சேஷன் முன்னாள் பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமணுக்கு 4 ஆண்டு சிறை.
( எங்களை மட்டும் ஈசியா உள்ளே தூக்கி போட்டுர்ராங்கய்யா -வாய்ஸ் ஆஃப் தலித்/தென் இந்தியர்கள் )

..புத்தாண்டு பலனை தொடரலாமா? இன்னைக்கு மீனராசி. மொதல்ல இவிக கேரக்டரை பார்த்துருவம்

இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பிரயாணங்கள்ள ஆர்வமிருக்கும் (அதுவும் டெஸ்டினேஷன் இல்லாத பயணம், நோக்கமில்லாத பயணம், ரிட்டர்ன் ஃபேருக்கு பணமில்லாத பிரயாணமாவும் இருக்கலாம்).இவிக பாதம் / நடை கொஞ்சம் விசித்திரமா இருக்கும். பிடி கொடுத்து பேச மாட்டாய்ங்க. எதுலயும் பட்டும் படாமயே இருப்பாய்ங்க(குடும்ப விஷயத்துல கூட)

சனி:

உங்களுக்கு லாப,விரயாதிபதியான இவர் இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசிக்கு 7 ஆமிடமான கன்னியில சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி மட்டுமில்லை சிறப்பு விதிப்பதியும் இது ரெம்ப ரெம்ப நல்லதில்லை.

விரயாதிபதியாக சனி 7 ல நின்னா காதல்,கல்யாணம்,திருமண வாழ்வுக்கெல்லாம் ஆப்பு. உங்களுக்கோ உங்க காதலி/மனைவிக்கோ கால்,ஆசனம்,நரம்பு தொடர்பான பிரச்சினை வரலாம்.ஏன் பிரிவு கூட ஏற்படலாம்.அவிகளால நஷ்டமும் ஏற்படலாம்.

அதே சமயம் லாபாதிபதியாக சனி 7 ல நிக்கிறதால தகுதியில்லாத பெண்/ஆணிடம் புதுசா காதல் ஏற்படறது -கண்ணாலமானவுகளுக்கு இரண்டாவது கல்யாணத்துக்கு வாய்ப்பு ஏற்படறது கூட நடக்கலாம். டேக் கேர் !

ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் வகையறாவில் கஷ்டம்,நஷ்டம்,மனக்கஷ்டம் வர்ரதுக்கு வாய்ப்பிருக்கு. பரிகாரம்: எதை செய்தாலும் சொந்த யோசனையில் தனியா செய்ங்க.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி உங்களுக்கு 8 ஆவது ராசியான துலாம்லயே சஞ்சரிக்கிறாரு. அஷ்டம சனின்னாலே இம்சை தான். அடிபடறது, வீண்பழி சுமக்கறது, அபராதம் கட்டறது,செயிலுக்கு போறது இப்படி பலப்பல எதிர்கொள்ளனும். இதுல இவர் லாபாதிபதியாவும் இருக்கிறதால அண்ணன்/அக்கா போன்றவர்களுக்கு /போன்றவர்களால் இம்சை ஏற்பட வாய்ப்பிருக்கு.

ஆனால் சனியே உங்களுக்கு விரயாதிபதிங்கறதால மைனஸ் ப்ளஸ் மைனஸ் பிகம்ஸ் ப்ளஸ் அதாங்க கெட்டவன் கெட்டால் கிட்டிடும் ராஜயோகம். டீட்டெய்லா சொன்னா செலவு படிப்படியா குறையும். பொருளாதாரம் சீர்ப்படும்.

இவரோட ராகு வந்து சேர்ந்தபிறவு உங்களுக்கு நாள்பட்ட/ எக்ஸ்பயர் ஆன ஃபுட் ஐட்டத்தாலயோ -தூக்கமின்மையாலயோ ஒரு தாட்டி வாந்தி வயிற்று போக்கு நடக்கலாம். அல்லது ஈசி மணி மேல கவர்ச்சியாலயோ -ஷேர் மார்க்கெட் இத்யாதியாலயோ பணம் பறிபோகலாம். பூச்சி பொட்டுகடிச்சு வைக்கலாம்.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இவர் உங்களுக்கு லக்னாதிபதி மற்றும் ஜீவனாதிபதி. மேஷம் உங்களுக்கு 2 ஆமிடம். பொதுவிதிப்படி நல்லதே . இதனால் வருமான உயர்வு, பேச்சுக்கு மதிப்பு,வாக்கு வன்மை ,குடும்ப ஒற்றுமை போன்ற நற்பலனை எதிர்ப்பார்க்கலாம். பேச்சுக்கு முக்கியத்துவமுள்ள தொழில் அமையலாம். ஏற்கெனவே உள்ள தொழிலில் உங்கள் வாக்குவன்மையால் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல சஞ்சரிப்பாரு இது உங்களுக்கு 3 ஆமிடம். பொதுவிதிப்படி நல்லதில்லை. இதனால் மனசுல இனம் புரியாத பீதி பயம் எற்படலாம். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். உ.பி/ர.ர க்களால் பிரச்சினை வரலாம்.

குரு 1-11 க்கு அதிபதியா இருக்கிறதால உங்களுக்கு மட்டுமில்லை அண்ணன்,அக்கா (ஆருனா இருந்தா ) ஆகியோருக்கும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம். உங்கள்+ அண்ணன்,அக்கா ஆகியோரின் போக்கு அதிர்ச்சி தருவதா இருக்கும். தோள் பகுதியில் அடிபடுத்தல் ,சுளுக்கு மாதிரியும் நடக்கலாம்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இவை உங்களுக்கு 2- 8 ஆம் இடங்கள் என்பதால்

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
இவர் உங்களுக்கு 2+9 பாவங்களுக்கு அதிபதியா இருக்காரு பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது பணம் /உபி க்கள்/ர.ர க்கள் காரணமா அல்லல் அலைச்சல் ஏற்படும்.

இவர் 6 ல் வரும்போது உ.பி/ரரக்களுடன் முட்டல் மோதல் ஏற்படும்.அவிகளால கடன் ஏற்படலாம். உங்களுக்கும் மெடிக்கல் பில்/லாயர் பில் வரலாம். 10,11 ல வரும்போது மாச/வருட வருமானமும் உசரும் -சொத்து,சேமிப்பு,முதலீடு வகையறாவிலும் நன்மையே கிடைக்கும்.

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது உங்க மீன ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 7 ஆமிடம் )

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 8 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 9 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 10 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 11 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 12 ஆமிடம்

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு ஜன்ம ராசி

உஸ் ..அப்பாடா .. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்குமான புத்தாண்டு பலன் முற்றியது.

Advertisements

2 thoughts on “தமிழ் புத்தாண்டு பலன்: மீனம்

  Nanda said:
  April 28, 2012 at 11:44 am

  The character mentioned in first para is common for everyone in “Meena rasi”? I have seen Meena rasi people who are very attached to family even in their final days.

   S Murugesan said:
   April 28, 2012 at 1:46 pm

   Nanda(?)
   Age man .. age..That may be in younger ages..due to reverse effect

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s