பிரபல ஹீரோவுக்கு சிறு நீர் தெளித்து மொட்டை

Posted on

அண்ணே வணக்கம்ணே !

அண்ணன் பெரிய்ய ஹீரோ. நம்மாளும் ஃபீல்டுல என்ட்ரி கொடுத்து ” நாங்களும் ஹீரோதான்”னு அலப்பறை பண்ணிக்கிட்டிருந்தாரு. நகரத்துல ஒரு சைட்டை வாங்கினாரு. சைட் டைட்டில்ல ஒன்னும் குழப்படி இல்லை.ஆனால் அந்த சைட்டை வாங்கின முகூர்த்தம் ஒரு மாவட்டத்தையே கைக்குள்ள வச்சிருந்த டான் கும்பல் சிறு நீர் தெளிச்சு மொட்டை போட்டுவிட்டாய்ங்க.

குறிப்பிட்ட டான் தன் வீட்டுக்கு முன்னே பின்னே ரைட்ல லெஃப்ட்ல ஆரையும் வீட்டை கட்ட உடமாட்டாரு.செக்யூரிட்டி ப்ராப்ளமாம். நம்மாளு அந்த டான் வீட்டுக்கு அக்கமோ பக்கமோ இருக்கிற சைட்டை வாங்கி தொலைச்சாரு.

ஒடனே சைட்டை தங்களுக்கே வித்துரச்சொல்லி டான் கும்பல் ப்ரஷர் பண்ணியிருக்காய்ங்க. ஒரு அம்பது லட்சம் வரை ரேட் பேசியிருக்காய்ங்க. நம்மாளுக்கு சினிமாவுக்கு -ரியல் லைஃபுக்கும் வித்யாசம் தெரியாது. ஒரு கட்டத்துல கடுப்பாயி டான் இல்லாத சமயம் அவரு வீட்டுக்கு போயி கைத்துப்பாக்கிய எடுத்து சில்லறை சாமானுகளை சிதறடிச்சுட்டு வார்ன் பண்ணிட்டு வந்துட்டாரு.

மேட்டர் தெரிஞ்ச ஒடனே டான் கும்பல் நம்ம ஹீரோவை புக் பண்ணிக்கிட்டு வந்து சிறு நீர் தெளிச்சு மொட்டை போட்டு விட்டுட்டாய்ங்க.

இந்த மேட்டரை தம்பி அண்ணங்காரனுக்கு சொல்ல அவரு அப்பம் ஸ்டேட்ல பவர் ஃபுல் பொசிஷன்ல இருந்த பார்ட்டிக்கிட்ட தம்பியை கூட்டி போயி முறையிட பஞ்சாயத்துக்கு நாள் குறிச்சாய்ங்க. டான் வந்தாரு. பவர் ஃபுல் பார்ட்டிக்கிட்டே ” நீங்க ஒன்னும் கவலை படாதிங்க .. நான் முடிச்சுர்ரன்” னுட்டு ப்ரதர்ஸை கூட்டிக்கிட்டு லிஃப்டுக்கு வந்தாரு.

லிஃப்ட்ல வச்சு “கொய்யால.. நான் அம்பது லட்சம் தரேன்னேன். நீ பஞ்சாயத்துக்கு வந்ததால 25 தான்.”னு சொல்ட்டு போய்க்கினே இருந்துட்டாரு டான்.

எச்சரிக்கை: 1
இதுல வர்ர ஹீரோ ஆரு? பஞ்சாயத்து பண்ண பவர் .ஃபுல் பார்ட்டி யாரு? டான் யாருன்னு தெரிஞ்சுக்கனும்னா நமக்கு ஒரு ஃபோனை போடுங்ணா. ப்ளாக்ல எழுதி கோர்ட்டு கேசுன்னு அலைய முடியாதுல்ல ( நம்ம நெம்பர்: 9397036815 )

எச்சரிக்கை:2

ஜோதிடம் 360 புஸ்தவம் பெங்களூர்லயும் கிடைக்கும். தொடர்பு கொள்ளவும் திரு .B.R.யாதவ் செல் 08088336838
உஸ் அப்பாடா சென்சேஷன் போதும் ..புத்தாண்டு பலனை தொடரலாமா? இன்னைக்கு கும்பராசி. மொதல்ல இவிக கேரக்டரை பார்த்துருவம்

என்னைக்கும் எதுவும் சுத்தமா தீர்ந்து போகாது (செல்வம்,செல்வாக்கு முதலியவை) எவ்ள கஷ்ட காலம் வந்தாலும் கொஞ்சமாச்சும் மிஞ்சும். ரகசியங்கள் இருக்கும். எதை செய்தாலும் நமக்கென்ன லாபம்னு பார்த்து செய்யற நேச்சர் இருக்கும். (இளமைல இதுக்கு மாறா இருந்திருக்கலாம்) கொஞ்சம் போல சோம்பல் இருக்கலாம். வெட்டி பந்தா, நாவல்ட்டீஸ்,ஃபேன்சி, காஸ்மெடிக்ஸ்ல விருப்பம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆகுதானு மட்டும் பார்க்கிற குணம் இருக்கும். வாழ் நாள் முழுக்க இரும்பு,ஆயில், எண்ணெய் கறை உங்களை விடாது. அல்லது யூனிஃபார்ம் போடற வேலை . நீங்க என்னதான் லாபம் பார்த்து இறங்கினாலும் நேரம் கெட்டதா இருந்தா நஷ்டம் வரத்தானே செய்யும். உங்க லைஃப்ல உங்க மூத்த சகோதரன்,சகோதிரியோட ரோலுக்கு ரெம்ப முக்கியத்துவம் இருக்கும். எவன் எக்கேடுகெட்டுப்போனா என்ன என் கூலி எனக்கு கிடைச்சதாங்கற மென்டாலிட்டி இருக்கும். இருந்தாலும் படக்குனு அதிகாரி, சூப்பர் வைசர்கிட்ட முட்டிக்குவிங்க.

சனி:

உங்களுக்கு ராசியாதிபதியான இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசிக்கு 8 ஆமிடமான கன்னியில சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி மட்டுமில்லை சிறப்பு விதிப்பதியும் இது ரெம்ப ரெம்ப நல்லதில்லை.

வெறுமனே அஷ்டம சனின்னாலே இம்சை தான். அடிபடறது, வீண்பழி சுமக்கறது, அபராதம் கட்டறது,செயிலுக்கு போறது இப்படி பலப்பல எதிர்கொள்ளனும்.

இதுல இவரு லக்னாதிபதியா 8 ல நிக்கிறது அசலுக்கு மோசத்தை கொடுத்துரும். சிலருக்கு தற்கொலை நினைவே வரலாம்னா பார்த்துக்கங்களேன். சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறதெல்லாம் உங்க லைஃப்ல ப்ராக்டிக்கலா நடக்கும்.

இரும்பு,ஆயில்,தலித் இப்படி சனி காரகம் கொண்ட எல்லா விஷயத்துலயும் கஷ்டம்,நஷ்டம்,மனக்கஷ்டம் வர்ரதுக்கு வாய்ப்பிருக்கு. பரிகாரம்: நான் வெஜ் விட்டுருங்க. தினசரி ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க. 24 மணி நேரமும் ராம நாமம் ஜெபிச்சுக்கிட்டிருங்க.

இதுல சனி விரயாதிபதியாவும் இருக்கிறதால சுய திருப்திக்கு பத்து காசு செலவழிக்கவும் மனசு வராது. சில்லறை சில்லறையா மிச்சம் பண்ணி மொத்தமா ஏமாந்துரவும் வாய்ப்பிருக்கு. டேக் கேர்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி உங்களுக்கு 9 ஆவது ராசியான துலாம்லயே சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி இது நல்லதுதான். ஆனால் சனி தாமச கிரகம்ங்கறதால
அப்பா,அப்பாவழி சொந்தக்காரவுக, சொத்து,முதலீடு ,சேமிப்பு தூர தேச தொடர்புகளில் தாமதம் ஏற்படலாம்.

இவரோட ராகு வந்து சேர்ந்தபிறவு அப்பாவுக்கு/உங்களுக்கு நாள்பட்ட/ எக்ஸ்பயர் ஆன ஃபுட் ஐட்டத்தாலயோ -தூக்கமின்மையாலயோ ஒரு தாட்டி வாந்தி வயிற்று போக்கு நடக்கலாம். அல்லது ஈசி மணி மேல கவர்ச்சியாலயோ -ஷேர் மார்க்கெட் இத்யாதியாலயோ பணம் பறிபோகலாம். பூச்சி பொட்டுகடிச்சு வைக்கலாம். மேற்கு நோக்கிய பயணத்தில் உங்க காசு பணம் ( சேர்த்துவச்ச) களவு போகலாம்.சாக்கிரதை.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 3 ஆமிடம். பொதுவிதிப்படி இது நல்லதில்லை. மனசுல இனம் புரியாத பீதி பயம் எற்படலாம். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். உ.பி/ர.ர க்களால் பிரச்சினை வரலாம்.

சிறப்பு விதிகளின் படி இவர் 2 , 11 க்கு அதிபதிங்கறதால வாயை விட்டு ( பஞ்ச் டயலாக்/சேலஞ்சிங் டயலாக் விட்டு) இம்சை படலாம். என்னமோ கிடைக்கும்னு வெத்தா அலைஞ்சு திரிய வேண்டி வரலாம்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல சஞ்சரிப்பாரு இது உங்களுக்கு 4 ஆமிடம். பொதுவிதிப்படி நல்லதில்லை. சேஞ்ச் ஆஃப் ப்ளேஸ் நடக்கலாம். தாய்,வீடு,வாகனம் வகையறாவிலும் இம்சைதான்.

குரு 2-11 க்கு அதிபதியா இருக்கிறதால சிலர் வீடு,வாகன வகையில பெரிய மாற்றத்துக்கு ப்ளான் பண்ணி நஷ்டத்துக்குள்ளாகலாம். அம்மா கிட்டயே கொடுக்கல் வாங்கல் செய்யவேண்டி வரலாம்.

அம்மா உறவு வரும் பெண்களோ – அம்மா வயசு பெண்களோ -அம்மா சாயல் கொண்ட பெண்களோ உங்க மேல அன்பு காட்டலாம். அவிக கிட்டே கூட கொடுக்கல் வாங்கல் செய்யவேண்டி வரலாம்

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம். தாய்/தாய் வழி உறவினரின் போக்கு அதிர்ச்சி தருவதா இருக்கும். உங்க சீட்டு/வீடு/அறைய பார்த்தா உங்களுது போலவே தோனாது.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இவை உங்களுக்கு 3- 9 ஆம் இடங்கள் என்பதால் விலகிப்போன உ.பி/ரரக்கள் நெருங்கி வருவர் திடீர் .பயணங்கள் லாபம் தரும். சில சமயம் ஞானமும் தரும்.

அப்பா,அப்பா வழி உறவினர்,சொத்து,முதலீடு,சேமிப்புகள் விஷயத்தில் சதி ஏதாவது அரங்கேறலாம். சாக்கிரதை. சிலர் தம் இயல்புக்கு மாறாக வெளி நாடு போகவும் துணிஞ்சிருவிக.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
இவர் உங்களுக்கு 3+10 பாவங்களுக்கு அதிபதியா இருக்காரு பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது தூளா இருக்கும். இவர் 6 ல் வரும்போது உ.பி/ரரக்களுடன் முட்டல் மோதல் ஏற்படும். 10,11 ல வரும்போது மட்டும் நன்மையே கிடைக்கும்.

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது உங்க கும்ப ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 8 ஆமிடம் ( அதுவரை ஏழுல சஞ்சரிப்பாரு – ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர் ,வைஃப் இத்யாதி மேட்டர்ல ரெம்ப உசாரா இருங்க. இல்லாட்டி ஆப்புதேன்)

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 9 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 10 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 11 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 12 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு ஜன்ம ராசி

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 2 ஆமிடம்

Advertisements

One thought on “பிரபல ஹீரோவுக்கு சிறு நீர் தெளித்து மொட்டை

    gopi said:
    May 9, 2012 at 5:00 am

    rowdy paritala ravi.antha actor pawan kalyan sarithana.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s