“அம்மா” உசுருக்கு ஆபத்து Vs ஸ்டாலின்-அழகிரி அலப்பறை

Posted on

அண்ணே வணக்கம்ணே !
அம்மா உசுருக்கு ஆபத்துன்னு ஏற்கெனவே ஒரு பதிவை போட்டம்.அந்த காலகட்டத்துல தான் மோடி சொல்லி கார்டன் வந்த நர்ஸ் கார்டன் நிலவரத்தை பார்த்துட்டு அங்கன உள்ளவுக அம்மாவுக்கு ஆகாத ஐட்டத்தை எல்லாம் கொடுத்து “கொல்லப்பார்க்கிறாய்ங்க”ன்னு மோடிக்கு புகார் சொன்னதா சில பத்திரிக்கைகள்ள செய்தி வந்தது.

சசிகலா அண்ட் கோ மேற்படி நர்ஸையே வெளியேற்ற பார்த்ததாவும்-மோடி மூலமா நர்ஸோட பாடு அம்மா காதுக்கு போனதாவும் சசி அண்ட் கோ வெளியேற்றப்பட இதுவும் ஒரு காரணம்னும் அதே பத்திரிக்கைகள்ள செய்தி வந்தது.

இப்பம் மறுபடி நாம அம்மா உசுருக்கு ஆபத்துன்னு சொல்றோம். அம்மாவோட ராசி சிம்மம். சிம்மத்துலயே செவ் இருக்காரு.4 ,7 ,8 ஆம் பாவங்களை பார்ப்பாரு. ராசிக்கு நாலாவது இடத்துல ஏற்கெனவே அங்கன ராகு இருக்காரு. ராகு மட்டும்னா செரி ( 4 ஆம் பாவம் =வீடு ,தன்னவர்கள் ; ராகு =திருடர்கள்) . அந்த ராகுவை செவ்வாயும் பார்த்தா எப்டி? செவ் =எதிரிகளாச்சே .

ஜன்ம லக்னம் மிதுனம். ஜாதகத்துல லக்னத்துக்கு ரெண்டுல செவ்வாய். அவரு 7 ஆம் பார்வையா எட்டை பார்க்கிறாரு. தற்சமயம் செவ் புக்தியே நடந்துக்கிட்டிருக்கு. கூட்டிக்க்ழிச்சு பார்த்தா மழை விட்டும் தூவானம் விடலைங்கற கதையா ரெண்டுலருந்து எட்டை பார்க்கிற செவ் தன் புக்தி காலத்துல ஏடா கூடமா எதையாவது செய்துருவாரோன்னு ஒரு ஹன்ச்.

தினகரன் நாளிதழ் சமீபத்துல வெளியிட்ட பொதுவான ஆண்டு பலன்ல ஏதோ ஸ்லோகம்லாம் சொல்லி ராஜாவுக்கு கெண்டம்னு போட்டிருந்ததாம். நாம பார்க்கலை.

இன்னைக்கு ஸ்டாலினும் -அழகிரியும் பண்ற அலப்பறைய பார்த்தா ஆஃப்டர் ஆல் எதிர்கட்சியா கூட இல்லாத கட்சியை கைக்குள்ள வச்சுக்க பண்றதா காணோம். என்னமோ நாளைக்கே மறுபடி ஆட்சி கைக்கு வருங்கறதை போன்ற எண்ணத்தோட இருக்காப்லதான் இருக்கு.

சசியம்மா திமுகவோட பேர சாரங்களையெல்லாம் பேசி முடிச்சுட்டு – ஆகவேண்டியதை பாருங்க சமயம் பார்த்து ஜாய்ன் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி கார்டனுக்குள்ள வந்து
பதுங்கிட்டாப்லதான் தோனுது. (செவ்= சகோதர காரகன் ; சசி =உடன்பிறவா சகோதிரி )

பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவை எதிர்ப்பார்த்து இப்படி ஸ்டாலின்-அழகிரி அலப்பறை – சசியம்மா சரண்டர் நடந்திருந்தா ஓகே. அல்லது இனி எப்படியும் “எதையும்” கண்ல கூட பார்க்க முடியாது -சம்பாரிச்சதையாவது காப்பாத்திக்கிட்டா போதுங்கற எண்ணத்துல சசியம்மா இருந்து எதிரிகளோட கை கோர்த்திருந்தா? ( செவ்=எதிரிகள்)

செவ்வாய் என்றால் என்னென்னமோ வருது . ஆயுதங்கள் ,வெடிகுண்டு ,மின்சாரம் . புத்தி பேதலிச்சு போயி இப்படி ஏதாவது ஒரு “அபத்தமான” திட்டத்துல ஆருனா இறங்கிருவாய்ங்களோன்னும் பட்சி சொல்லுது.

எது எப்படியோ .. நம்ம கணிப்பெல்லாம் பொய்யா போயி அம்மா நீடூழி வாழ்ந்து இனியாச்சும் ஏட்டிக்கு போட்டி முறையை விட்டு நல்லாட்சி தந்தா நமக்கு சந்தோசம் தேன். இருந்தாலும் ஊதுற சங்கை ஊதி வைக்கிறோம்.

இப்பம் செவ்வாய்க்குரிய நட்சத்திரமே நாம போட்டிருக்கிற பதிவும் அவரை பற்றியதே. மூக்கு வேற ஞம ஞமங்குதா.. போடறதை சீக்கிரமே போட்டுரலாம்னு ஒரு பதைப்பு .சரிங்ணா நேத்தே மகர ராசிக்காரவுக ஏமாந்திருப்பாய்ங்க. இன்னிக்காச்சும் அவிகளுக்கான புத்தாண்டு பலனை தரலின்னா மருவாதியா இருக்காது.

புத்தாண்டு பலன் : மகரம்
மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள்.அதே சமயம் ஏதோ ஒரு கலையில் ஆர்வம், திறமை இருக்கும். பேச்சு குறைவாகவே இருக்கும். கணவருடனான இவரது நெருக்கம் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். ஒற்றைத்தலைவலி,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். சாஸ்திர சம்பிரதாயங்களை தன்னிச்சையாக (பிரத்யேக ஆர்வமோ, பிடிப்போ இல்லாமலே) கன்டின்யூ பண்ணுவாய்ங்க.
சனி:

உங்களுக்கு ராசியாதிபதியான இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசிக்கு 9 ஆமிடமான கன்னியில சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி இது நல்லது தான்.ஆனால் ஏற்கெனவே கர்ம வீரரான நீங்க அதீதமான தொலை நோக்கோடு சேமிப்பு -முதலீடு -சொத்துன்னே இருந்துராதிங்க ரெம்ப நாளா போஸ்ட் போன் பண்ணிக்கிட்டிருந்த .தூர பிரயாணத்தை இன்னம் ஒன்னு ரெண்டு தாட்டி தள்ளிப்போட்டு கடேசியில புறப்பட்டு போய் கொஞ்சம் போல அவதிப்பட்டு வருவிக. எதிர்காலம் எவ்ள முக்கியமோ நிகழ் கால தேவைகளும் முக்கியம் தான் இதை மறந்துராதிங்க.

ஆனால் சனி தாமச கிரகம்ங்கறதால செய்தொழில்,வியாபாரத்துல பணம் கொஞ்சம் போல முடங்கும். உத்யோகத்துலயும் மந்தத்தன்மை இருக்கும்,மேலதிகாரிங்க தங்கள் பாராட்டை கூட தாமதமாத்தான் தெரிவிப்பாய்ங்க.
,
சனி உங்களுக்கு 2 க்கு அதிபதியா இருக்கிறதால உங்கள் வெகண்டை பேச்சு,அல்லது கல்லுளிமங்கத்தனம்,மவுன சாமியார் வேசம் கஞ்சத்தனம் உங்க அப்பா,அப்பாவழி சொத்து, உங்க முதலீடு சேமிப்பு ஆகிய விஷயங்களில் பிரதிகூலமான பலனுக்கு காரணமாயிரலாம். டேக் கேர்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி உங்களுக்கு 10 ஆவது ராசியான துலாம்லயே சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி இது நல்லதுதான். தொழிலாளிகள் ஒத்துழைப்பாய்ங்க. இரும்பு பொருள் வந்து சேரும். நீங்க டெக்னிக்கல் லைன்ல/ லாயர்/ ஐரன் ஸ்டீல் மாதிரி ஃபீல்டுல இருந்தா ஓகே .ஒரு வேளை நீங்க வெள்ளையும் சொள்ளையுமா ஏசில வேலை பார்க்கிற பார்ட்டியா இருந்தா இது அந்த அளவ்க்கு ஒர்க் அவுட் ஆகாதுங்கோ. சட்டை நசுங்கறதோ -அழுக்கு படியறதோ -ஏசி ரிப்பேர் ஆறதோ நடந்தா அன்னைக்கு ஒரு டர்னிங் பாய்ண்டை எதிர்பார்க்கலாம்.

சனி உங்களுக்கு தன,வாக்கு குடும்ப பாவாதிபதியாவும் இருக்கிறதால செய் தொழில்ல உங்க பேச்சு, கஞ்சத்தனம், குடும்பத்தாரின் சோம்பல் இத்யாதி கூட முன்னேற்றத்துக்கு காரணமாகலாம்.

இவரோட ராகு வந்து சேர்ந்தபிறவு ஒரு தாட்டி வாந்தி வயிற்று போக்கு நடக்கலாம். அல்லது ஈசி மணி மேல கவர்ச்சியாலயோ -ஷேர் மார்க்கெட் இத்யாதியாலயோ பணம் பறிபோகலாம்.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 4 ஆமிடம். பொதுவிதிப்படி இது நல்லதில்லை. தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையறாவில் இம்சை ஏற்படலாம். சிறப்பு விதிகளின் படி இவர் 3 , 12 க்கு அதிபதிங்கறதால மேற்சொன்ன விஷயங்களில் வீண் விரயம் ஏற்படும். பிரிவு ஏற்படலாம். அபராதம் இத்யாதி கூட கட்டவேண்டி வரலாம். அல்லல் அலைச்சலும் ஏற்படும்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல சஞ்சரிப்பாரு இது உங்களுக்கு 5 ஆமிடம். பொதுவிதிப்படி ஓகே தான். இதனால மன அமைதி,நற்பெயர், வாரிசுகள் மேன்மையடைதல் இத்யாதி பலன் கிடைக்கனும்.

ஆனால் குரு 3-12 க்கு அதிபதியா இருக்கிறதால வேவரிங், ஓவர் திங்கிங், ரிஸ்க் எடுக்கிறதுல ஒரு த்ரில் ஏற்படும். நீங்க போடற ஸ்கெட்ச் எல்லாம் அடுத்தவுகளுக்கு லாபமா முடியும். குழந்தைகள் விஷயத்துல வீண் விரயம் ஏற்படலாம். நல்லதை செய்யப்போயி கெட்ட பேரும் வாங்குவிங்க.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம். சகோதரர்களின் போக்கு அதிர்ச்சி தருவதா இருக்கும். போகாத இடத்துக்கெல்லாம் போயி நிப்பிங்க.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 10-4 ஆம் இடங்கள் என்பதால் ராகு கேதுக்களால் பிரச்சினை இல்லை. உங்கள் இயல்புக்கு மாறாக செய்தொழில் உத்யோகம் வியாபாரத்துல கஷ்டப்பட்டு வேலை செய்யாம கதை செய்றது -புதுமைய புகுத்துறது நடக்கலாம். வீட்டில் -வீட்டினருடன் கழிக்கும் நேரம் குறையும். அந்த அளவுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பாய்ங்க. பிறமொழி பேசுவோர்,அன்னிய மதத்தினருடன் ஒட்டுறவு ஏற்படும். இதனாலும் நன்மையே கிடைக்கும்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
இவர் உங்களுக்கு 4+11 பாவங்களுக்கு அதிபதியா இருக்காரு பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது அல்லல் அலைச்சல் ,ட்ரான்ஸ்ஃபர் ,தாய்க்கு சுகவீனம் அ அவிகளோட முட்டல் மோதல் ஏற்படும் ,ஆறுக்கு வரும்போது இது இன்னம் கொஞ்சம் அதிகமாகலாம்.10,11 ல வரும்போது மட்டும் நன்மையே கிடைக்கும்.

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது துலா ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 9 ஆமிடம் ( அதுவரை எட்டுல சஞ்சரிப்பாரு – ரியல் எஸ்டேட் ,மின்சாரம்,ஆயுதங்கள்,போலீஸ் இத்யாதி மேட்டர்ல ரெம்ப உசாரா இருங்க. இல்லாட்டி ஆப்புதேன்)

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 10 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 11 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 12 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு ஜன்ம ராசி

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 2 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 3 ஆமிடம்

Advertisements

2 thoughts on ““அம்மா” உசுருக்கு ஆபத்து Vs ஸ்டாலின்-அழகிரி அலப்பறை

  ThirumalaiBaabu said:
  April 26, 2012 at 9:04 am

  பதிவுக்கு மிக்க நன்றி !!
  அண்ணே பழைய டெம்போ சரக்க (10 கேள்விகளுக்கான பதில் ) டெலிவரி கொடுக்க இன்னும் மணசு வரலையா ???

  MINNAL said:
  April 26, 2012 at 1:28 pm

  பதிவுக்கு மிக்க நன்றி !!

  மின்னல் மருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s