பா.ஜ.க – காங்கிரஸ் கூட்டு சதி ?

Posted on

தம் சுய நலத்துக்காக ஜனாதிபதி ஜன நாயகத்தை கொண்டுவர பா.ஜ.க – காங்கிரஸ் கட்சிகள் கூட்டு சதி செய்ய எந்த அளவுக்கு வாய்ப்பிருக்குங்கறதை இந்த பதிவுல பார்ப்போம். ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வர்ர இந்த சமயத்துல மறுபடி அப்துல் கலாம் பேரு அடிபடுது. கலாம் எப்படியா கொத்த கிராக்கிங்கறதை ஏற்கெனவே பல தடவை எழுதியிருக்கேன். மறுபடி எழுதனும்னா எனக்கே போரட்டிக்குது. அதனால அந்த பதிவுக்கான தொடுப்பை தர்ரேன். இங்கே அழுத்தி அதையும் ஒரு பாட்டம் படிச்சுருங்க.
சுதேசி இதழ் இந்தியாவில் ஜனாதிபதி முறை ஜன நாயகத்தை கொண்டு வரப்போறாய்ங்கன்னு ஒரு ஹஞ்சை வெளியிட்டிருக்கு. இதுக்கு அவிக கிட்ட இருக்கிற ஆதாரங்கள் என்னன்னு நமக்கு தெரியாது. ஆனால் இந்த ஜனாதிபதி ஜன நாயக பிரஸ்தாவனை வர்ரது இது ஒன்னும் மொதல் முறை கிடையாது.

ஜ.ஜ.நாயகம்னா என்னன்னு தெரியாதவுகளுக்கு ஒரு வரியில சொல்லிர்ரன். இப்பம் நாம எம்பிக்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கறோம். அவிக ஓட்டுப்போட்டு (?) பிரதமரை தேர்ந்தெடுக்கறாய்ங்க. மெஜாரிட்டி எம்பிக்களோட ஆதரவு இருக்கிறவரை தான் பிரதமரா தொடர முடியும்.

இதுவே நாமளே நேரடியா ஓட்டுப்போட்டு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கறம்னு வைங்க. அதான் ஜ.ஜ.நாயகம். இந்த முறையில எம்பிக்கள் உப்புக்கு சப்பா. பார்லிமென்ட் கொண்டுவர்ர எந்த மசோதாவையும் ஜனாதிபதி ரத்துபண்ணிர முடியும். ( வீட்டோ பவர்)

மாஸ் லீடரா இருக்கிறவுக – எம்.பிக்களோட ஆதரவில்லாமல் – அல்லது அவிகளை கட்டி மேய்க்கிற பொறுமை தீர்ந்து போற சமயத்துலல்லாம் ஜ.ஜ. நாயகத்தை பரிசீலிக்கிறது சகஜம். ஒரு கட்டத்துல காலஞ்சென்ற இந்திரா அம்மையார் கூட ரோசிச்சதா தகவல் உண்டு.

ஆனால் ஜ.ஜ. நாயகத்தை கொண்டுவரனும்னா அரசியல் சாசனத்தை திருத்தனுமே. பார்லிமென்ட்ல மெஜாரிட்டி இல்லாம எப்படி திருத்தறதாம்?

ஒரு வேளை நாடு முழுக்க அறிமுகம் உள்ளதால வெந்தா சோனியா, ராகுல் மாதிரி காங்கிரஸ் தலை – வரட்டும் . வேகலைன்னா அத்வானி , மோடி மாதிரி பா.ஜ.க தலை வரட்டும். – ஆருவந்தாலும் சரி- தேர்ட் பார்ட்டிக்கோ – தேர்ட் ஃப்ரண்டுக்கோ இடம் இருக்காது – இடம் கொடுக்கக்கூடாதுன்னுட்டு ரெண்டு கட்சியும் ஒத்து ஊதுமோன்னு ஒரு டவுட்டு நமக்கிருக்கு.

காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கு ஒரே ஒரு மேட்டர்லதான் வித்யாசம் வருது. அது இன்னாடான்னா காங்கிரஸ் அயோத்தியில ராமர் கோவிலை கட்ட விடமாட்டோம்னு சொல்லும். பா.ஜ.க கட்டியே தீருவம்னு கூவும். ஆனா கட்டவே கட்டாது. மத்த மேட்டர்ல எல்லாம் சங்கி மங்கி -மங்கி சங்கி கதைதேன்.

லேசு பாசா வித்யாசம்னு இருந்தா அது கம்யூனிஸ்டுகளோட கொள்கையிலதான் இருக்கு. (அதுவும் இப்பம் ரெம்ப சோனியாயிருச்சுங்கறது வேற கதை) . சாஃப்ட்வேர் ஆசாமிங்க கம்யூனிசத்தை அவுட் டேட்டட்னு விமர்சிச்சாலும் நாளைக்கு 12 மணி நேர வேலை 14 மணி நேர வேலையாயிருச்சுன்னா தொழிற்சங்கம் -கம்யூனிசத்தோட அவசியத்தை தெரிஞ்சுக்கிருவாய்ங்க. சாஃப்ட்வேர் ஆசாமிங்க கதியே இதுன்னா சாமானிய மக்களை பத்தி சொல்லவே தேவையில்லை. இன்னம் இந்த நாட்ல கம்யூனிஸத்துக்கான தேவை இருக்கத்தான் செய்யுது.

ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு சோனியா-ராகுல்-அத்வானி-மோடி ரேஞ்சுக்கு பாப்புலாரிட்டி இருக்கான்னா இல்லைன்னு தான் சொல்லனும். அதனால சுதேசியோட கணிப்பு முழுக்க முழுக்க அசாத்தியம் -அசம்பவம்னு சொல்ல முடியாது.

தாளி. . இந்த பாராளுமன்ற முறையிலயே -மெஜாரிட்டி இல்லாத நிலையிலயே – இந்த ஆட்டம் போடறானுவளே இன்னம் ஜனாதிபதி ஜன நாயகம் வந்தா என்னாவுமோ? பார்ப்போம்.

போனஸ்: டீசல் விலை மேல இருந்த கட்டுப்பாட்டையும் விலக்கிக்கொள்ள “கொள்கை அளவுல” ஒப்புதல் தந்திருக்காய்ங்களாம். பஸ் சார்ஜையும் -விமான கட்டணத்தையும் கிட்டக்க கொண்டுவந்து ஏழை பணக்காரன் வித்யாசத்தை குறைக்கப்போறோம்ல.

இப்பமே நேரம் 11.45 .. ஒரு மணிக்கு பவர் கட். அதனால மகர ராசிக்கான புத்தாண்டு பலனை நாளைக்கு தந்துர்ரனே.

மகரத்துக்கும் -கும்பத்துக்கும் அதிபதி சனி. சனின்னாலே தாமதம்தான். அந்த தாமதம் பலன் தர்ர விஷயத்துல கூட ஒர்க் அவுட் ஆகுது பாருங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s