7 X 23 = ஸூப்பர் கில்மா

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நம்மளோட பன்முகத்திறமைகளை பாராட்டற சனம் மத்தியில கில்மா எதுக்குங்கறாய்ங்க. ஒரு தாட்டி ரஜினியை கிழிச்சு தொங்க போட்டிருந்தோம் அப்பம் ஒரு பார்ட்டி “ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தறே”ன்னு கேட்டாச்சு. இத்தனைக்கும் அப்பமே நம்ம ஆவரேஜ் ஹிட்ஸ் நானூற்று சில்லறை (இப்பம் இது ஆயிரத்தை எட்டிருச்சு)

அன்னைலருந்து நம்ம மூளைக்குள்ள புதுசா ஒரு சுரப்பி உருவாயிருச்சு. ஹிட்ஸை பார்த்தியா ஹிட்ஸை பார்த்தியான்னு உசார் பண்ணுது.

ஒரு பொது அறிவு கேள்வி. நம்ம வலைப்பூ வலைதளத்துல அடிக்கடி 7 -23ன்னுட்டு ஒரு மேட்டரை சொல்லிட்டே வருவம்.அது என்னான்னு இங்கே க்ளிக் பண்ணி படிச்சுருங்க ருங்க ராசா. படு கில்மா மேட்டரு..

கொஞ்சம் ஏமாந்தா சோடா புட்டி கேசா டிசைட் பண்ணிர்ர அளவுக்கு விஞ்ஞானி நாம. அதே நேரம் “டா ஆ ய்” னு குரல் கொடுத்தா பேண்டை நனைச்சுக்கிற பார்ட்டி கடியாது. முடிஞ்சா அடி -முடியலின்னா ஓடு – தூரமா ஓடி நின்னு “கொய்யால கை வச்சுட்டல்ல 24 மணி நேரம்.. உனக்கு வைக்கிறேன்டா ஆப்புன்னுட்டு தான் ஓடனும். கு.ப 48 மணி நேரத்துல பேசி முடிக்கிறதோ – கீசி முடிக்கிறதோ செய்தே ஆகனும்.அது நம்ம கேரக்டரு.

சோடா புட்டி இமேஜ் வந்துரவே கூடாதுங்கறது நம்ம மொத அஜெண்டா.அதுக்காவத்தேன் புத்தாண்டு பலனை கூட படு ஜிகாவான டைட்டில் கொடுத்து ,கில்மா சரக்கை சேர்த்து -ஜோவியலா மொக்கை போட்டு தந்துக்கிட்டிருக்கம்.

நமக்குள்ள பெரிய்ய பெரிய்ய நினைப்பெல்லாம் உண்டு ( ஜனாதிபதி ஜன நாயகத்துல ஜனாதிபதி ) அதே நேரம் கொய்யால அல்பாயுசுல பூட்டாங்கற முன்னெச்சரிக்கையும் உண்டு. ஆத்தா புண்ணியத்துல பெண்ணோட கண்ணாலம் நல்லபடியா முடிஞ்சு விருந்து உபசாரத்துக்கப்பாறம் சின்ன வீடா பார்த்துக்கிட்டு (சைஸை சொன்னேங்ணா) செலவை எல்லாம் பாதியா குறைச்சு (உ.ம் சோலார் லாம்ப்ஸ்) வருமானத்தை கூட்டி ( இங்கிலீஷ்ல நம்ம ப்ளாக் கன்டென்ட்ஸ் – கூகுல் ஆட்சென்ஸ்) ஏதோ ஒரு தகிடுதத்தம் பண்ணி நம்ம செயல்பாடுகளை நிறுவனமயமாக்கிரனும்.

நிறைய வேலை இருக்கு. நம்ம சித்தாந்தம் மரணம் நிச்சயம் தெரிஞ்சுட்டா அசால்ட்டா தம் போட்டுக்கிட்டே ஃப்ரீசர் பாக்ஸுக்கு ஃபோன் பண்ணிரனுமே தவிர “அய்யய்யோ போறேனே அய்யய்யோ போறேனே” ன்னு புலம்பக்கூடாது. இந்த ரெண்டுல எதை செய்யறோம்ங்கறது நாம வாழ்ந்த வாழ்க்கைய பொருத்த மேட்டரு.

இந்த நிமிசத்துக்கு கடவுள் புண்ணியத்துல கடவுள் நமக்கு கொடுத்த எந்த வாய்ப்பையும் தவ்ற விட்டதில்லை அவரு கொடுத்த எல்லா சோர்ஸையும் ஓவர் எக்ஸ்ப்ளாய்ட்டேஷன் பண்ணியிருப்பமே தவிர டீல்ல விட்டது கடியாது.

நம்ம வேலை திட்டம் அரைகுறையா நிக்க காரணம் நம்முது தீர்காயுசு ஜாதகம்ங்கறதுதேன். நினைச்சாலே பயம்மா இருக்கு. இப்பமே ஊருக்குள்ள ஒரு ரவுண்டு போய் வந்தா தலைமயிர் எல்லாம் டீசல் புகை.கண்ணெல்லாம் எரியுது. ராத்திரி நேரம் குளிச்சுட்டு மொட்டை மாடியில போய் படுத்தா அரைமணி நேரத்துல பாடியில கைபட்டா பச்சக் பச்சக்குன்னு ஒட்டுது . இந்த இழவுல 60 ..70 வயசெல்லாம் வாழனும்னு நினைச்சாலே கடுப்பாகுது.

வேலை வேலைன்னு புலம்பிக்கிட்டிருக்கேன்ல.. என்ன வேலைங்கறிங்க.. நம்ம ரைட்டிங்ஸை இணையத்துல ஏத்தறது. கு.ப தெலுங்கு மற்றும் ஆங்கிலத்துல மொ.பெயர்க்க செய்யறது. இன்னம் எழுத்துல வடிக்காத ரோசனைகளை வடிக்கிறது. பார்ப்போம்.. வறுமையோ -செல்வமோ – மரணமோ எதுவந்தாலும் ப்ராப்ளம் சால்வ்டு.

வறுமை வந்துட்டா இதையெல்லாம் ரோசிக்கவே முடியாது. செல்வ்ம் வந்துட்டா ரோசிக்க நேரமிருக்காது.ஒன்லி ஆக்சன் தான். மரணம் வந்துட்டா பஞ்சாயத்தே தீர்ந்துரும். சரிங்ணா இன்னைக்கு தனுசு ராசிக்கான புத்தாண்டு பலனை பார்த்துருவம். இன்னம் 3 நாள்ள இதை ஊத்தி மூடிட்டா அப்பாறம் ஃப்ரீ தான். இருக்கவே இருக்கு உணவும் -உடலுறவும் . மெகாதொடர் கணக்கா இழுத்துரமாட்டோமா.?

மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். நீங்க எதிர்காலத்துல குரு ஸ்தானத்துல இருந்து நாலு பேருக்கு நல்லது சொல்லவேண்டிய பார்ட்டி. அதனால இளமைல கெட்ட ஆட்டம் போடவும் வாய்ப்புண்டு. சிலர் மத்திம வயசுல கூட டபுள் ஆக்டு கொடுப்பாய்ங்க. ஒரு பஞ்சாயத்து கெட்டுப்போகனும்னா இவிகளை விட்டா போதும் வெகண்டையா பேசி விவகாரத்தை முதலுக்கு கொண்டு வந்துருவாய்ங்க. இவிக லைஃப்ல தந்தை,தந்தை வழி சொத்து ,இவர் சேமிப்பு, இவர் வாங்கின சொத்து,தீர்த்த யாத்திரைகள்,தூரபிரயாணங்கள், தூர தேசத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இதுக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கும். இவிகளுக்கு ரெண்டாமிடத்ததிபதி சனிங்கோ. அதனால இந்த வருசம் வந்த லாபத்தை இந்த வருசம் சாப்பிடற யோகம் கிடையாது. எட்டுவருசம் கழிச்சு அழுது புரண்டு ரிட்டர்ன் வாங்கி சாப்பிடுவாய்ங்க.

சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசிக்கு 10 ஆமிடமான கன்னியில சஞ்சரிக்கிறாரு.
பொதுவிதிப்படி இது நல்லது தான். ஆனால் சனி தாமச கிரகம்ங்கறதால செய்தொழில்,வியாபாரம்,உத்யோகத்துல மந்தத்தன்மை இருக்கும், தள்ளிப்போடறது அதிகமாகும். உத்யோகஸ்தர்கள் முக்கியமா க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயிஸ் கோ ஆப்பரேட் பண்ண மாட்டாய்ங்க.
,
இந்த சனி உங்களுக்கு 2- 3 க்கு அதிபதியா இருக்கிறதால உங்கள் வெகண்டை பேச்சு, கஞ்சத்தனம்/ஊதாரித்தனம் தொழில் முன்னேற்றத்துக்கு தடையா இருக்கும். உ.பி/ர.ர க்களால் தொழில்ல நஷ்டம் வரதுக்கும் வாய்ப்பிருக்கு. கொஞ்சம் தள்ளியே வைங்க. பயணங்களால் அனுகூலமும் உண்டு. குறிப்பா மேற்கு திசையிலான பயணங்கள் லாபம் தரும்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி உங்களுக்கு 11 ஆவது ராசியான துலாம்லயே சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி இது நல்லதுதான். தொழிலாளிகள் ஒத்துழைப்பாய்ங்க. இரும்பு பொருள் வந்து சேரும்.

ஆனால் சனி உங்களுக்கு சோதராதிபதிங்கறதால சகோதரவர்கத்தாலயும், பயணங்களாலயும் லாபம் டபுளாகும்.

ராகு வந்து சேர்ந்தபிறவு ப்ரதர்ஸ்/சிஸ்டர்ஸுக்கு பிரச்சினை வந்து அந்த பிரச்சினையால உங்க லாபம் இரட்டிப்பாகும்.உங்களுக்கு காது நோய் வரலாம்.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 5 ஆமிடம். பொதுவிதிப்படியும் நல்லதுதான். சிறப்பு விதிகளின் படியும் நல்லதுதான்.

பொன் . பொருள் வந்து சேரும்.பெரிய தொகையா கூட வரலாம். பெரியமன்சங்களோட ஆதரவு கிடைக்கும்.
ஆனால் இந்த காலகட்டத்துல ஆண்குழந்தை தரிக்கிறது கஷ்டம். இவர் ராசியாதிபதிங்கறதால உடல்,உள்ள நலம் பெருகும். முடிவெடுக்கும் திறன் கூடும்.மனைவி மக்களால் மகிழ்ச்சி கூடும். தாய்,வீடு,வாகன வகையறாவிலயும் நன்மையே !

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல சஞ்சரிப்பாரு இது உங்களுக்கு 6 ஆமிடம். . வயிறு இதயம் தொடர்பான பிரச்சினை வரலாம். பொன் பொருள் நாசம். கடன் வாங்க வேண்டி வரலாம்.பெரிய மன்சங்களால, பூணூல் அணியும் சாதியினரால பிரச்சினை வரலாம்.

சிறப்பு விதிப்படி 1- 4 பாவங்களுக்கான ஆதிபத்யம் குருவுக்கு கிடைக்கிறதால நீங்களும் ,அம்மாவும் ஒரே தாட்டி ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகவேண்டி வரலாம். வீடு,வாகன வகையறாவுல கடன் வாங்க் வேண்டி வரலாம். சிலருக்கு வம்பு வழக்கு கூட எதிர்படலாம்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 11-5 ஆம் இடங்கள் என்பதால் ராகு கேதுக்களால் பிரச்சினை உண்டு. ஐந்தில் உள்ள கேது புத்தி குழப்பம்,மறதி,விரக்தி,அவமானம் ஆகியவற்றை தரலாம்.குழ்ந்தைகள் விஷயத்திலும் டென்ஷன் ஏற்படலாம்.

11ல் உள்ள ராகு எதிர்பாராத லாபங்களை கொடுப்பார். அடடே ராகு சூப்பரா இருக்காரா அப்ப லாட்டரி டிக்கெட் வாங்கலாம்,ஷேர் மார்க்கெட்ல விளையாடலாம்னு டிசைட் பண்ணிராதிங்க. தப்பித்தவறி மேற்படி ராகு காரகத்துல எதுனா லாபம் பார்த்திங்கனா உடனடியா ஒரு அவமானம் அ பெரு நஷ்டம் அ குழந்தைகளுக்கு பிரச்சினை இத்யாதி வந்துரும்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
இவர் உங்களுக்கு 5+12 பாவங்களுக்கு அதிபதியா இருக்காரு .புத்திமான் பலவான். செவ் அனுகூலமா இருக்கிற காலத்துல புத்தி ப்ருஹஸ்பதி கணக்கா வேலை செய்யும். இவர் அனுகூலமா இல்லின்னா கூளம்தேன்.

அதனால இவரோட சஞ்சாரம் ரெம்ப முக்கியம்.பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது ஓவர் திங்கிங்,வேவரிங் இருக்கும். குழந்தைகளுக்கும் நல்லதில்லை.

6 ல் வரும் போது எவங்கூட சண்டைபோடலாம்னு அலைவிங்க. 10 ,11 ஓகே தான்.

உங்க ராசியிலயே வரும்போது உஷ்ண ரோகங்களை கொடுத்தாலும் பூமி சகோதர வகையில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது துலா ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 10 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 11 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 12 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு ஜன்ம ராசி

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 2 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 3 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 4 ஆமிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s