கொலைகாரன்களுக்கு கொடி பிடிக்கும் மீடியா

Posted on

அண்ணே வணக்கம்ணே !
சூர்யா நடிச்சு வெளி வந்த ரத்த சரித்திரம் பார்த்தவுகளுக்கு விளக்கம் எதுவும் தேவைப்படாது. மத்தவுகளுக்காக சிறு விளக்கம்.

அனந்தப்பூர் மாவட்டம் தெ.தேசம் லீடர் பரிட்டால ரவீந்திரா. இவரை லோக்கல் ஆதிபத்யம்+ பழிவாங்கலுக்காவ ஒரு பார்ட்டி போட்டு தள்ளிருச்சு.உன்னை நான் வெட்ட என்னை நீ வெட்டன்னு நடந்த தொடர் சம்பவங்களில் ஒரு பாகமா சூரிங்கறவனை அந்தாளோட ஆளே ( பானு கிரண்) பின் சீட்ல இருந்து துப்பாக்கியால சுட்டு போட்டு தள்ளிட்டான்.

2011 ஜனவரி 3 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த பிற்காடு ஆளு எஸ்கேப். நேத்திக்கு போலீஸ் புடிச்சிட்டாய்ங்க. இது தொடர்பா ப்ரஸ் மீட் நடக்குது.

மீடியாகாரவுக எல்லாம் ஆஜர். சிஐடி ஐஜி ப்ரஸ் மீட்ல வந்து உட்கார்ராரு. பேச ஆரம்பிக்கிறாரு.அப்பம் கொலை குற்றவாளியான பானுகிரணை ப்ரஸ் கான்ஃபிரன்ஸ் நடக்கிற அறைக்கு கூட்டி வராய்ங்க.

நம்ம மீடியா என்னா பண்ணுது.. 15 நாளா கார்ப்பரேஷன் குழாய்ல தண்ணி வராதப்ப வந்த தண்ணி லாரியை நோக்கி ஆணும்,பெண்ணுமா பிளாஸ்டிக் குடங்களோட பாயற மாதிரி வாசல் நோக்கி பாயுது.

எப்படியும் அவனை கான்ஃபிரன்ஸ் ஹால்ல ஆஜர் படுத்தப்போறாய்ங்க.ஆனால் இவிகளுக்கு அத்தனை துடிப்பு.

இதுவாச்சும் பரவால்லை. பானு கிரணை சிஐடி ஆஃபீஸ்ல வச்சு விஜாரிக்கிறாய்ங்க. அதை திருட்டுத்தனமா நீலப்படம் கணக்கா இருளோன்னு ஷூட் பண்ணி போட்டி போட்டுக்கிட்டு காட்டறாய்ங்க.

இந்த அழகுல பானு கிரண் போட்டு த்ள்ளினது ஏதோ தேசத்தலைவனைத்தாங்கற ரேஞ்சுல பானு போட்டுத்தள்ளின சூரியோட மனைவிகிட்டே பேட்டி வேற .அன்னைக்கு எத்தீனி சம்பவங்கள் நடந்திருந்தாலும் – எத்தனை நிருபர்கள் உசுரை கொடுத்து கவர் பண்ணி அனுப்பியிருந்தாலும் பெப்பே. எல்லா சானல்ஸ்லயும் இதே பீடை. இவனுவளை திருத்தவே முடியாதா? சரிங்ணா புத்தாண்டு பலன்ல இன்னைக்கு துலா ராசிக்கான பலனை பார்ப்போம்.

2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : துலாம்

மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.

பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர்இளமையில் வறுமை வாட்டினாலும் மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. ( சித்தூர் பாஷைல சொன்னா உட்டாலக்கடி பட்டாபி) எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.

சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசிக்கு 12 ஆமிடமான கன்னியில சஞ்சரிக்கிறாரு. இதை விரய சனின்னு சொல்லுவம்.

இந்த சனி உங்களுக்கு 4- 5 க்கு அதிபதியா இருக்கிறதால தாய், வீடு, வாகனம்,கல்வி விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்படலாம். மேலும் இருக்கிற பேரை காப்பாத்திக்கனுமேங்கற கவலை, மறதி, சின்ன சின்ன அவமானங்கள்,குழந்தைகள் தொடர்பான திடீர் செலவுகள் கவலை தரும்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி உங்க ராசியான துலாம்லயே சஞ்சரிக்கிறாரு. பொதுவிதிப்படி மந்த புத்தி, முகத்துல எண்ணெய் வடியறது, மலச்சிக்கல் முதல் பைல்ஸ் வரை வரலாம்.அகால போஜனம்,அகால நித்திரை போன்ற பலன்கள் நிகழலாம்..கால், நரம்பு ஆசனம் தொடர்பான நோய்களும் வாட்டலாம். மனக் கவலையில முடி உதிரும், வெள்ளை முடியே கூட வந்துரும்.

இவர் 3 ஐ பார்க்கிறதால சகோதர நஷ்டம், காது நோய் ,சிறு விபத்து நடக்கலாம்.7 ஐ பார்க்கிறாதால கண்ணாலமாகாதவுகளுக்கு திருமண முயற்சிலயும்/காதல் கத்திரிக்காய் பிசினஸ்லயும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம். கண்ணாலமாகியிருந்தா அக்மார்க் லோ கிளாஸ் பார்ட்டியோட காதல் கீதல் ஏறபடலாம். 10 ஐ பார்க்கிறதால அப்பப்போ தொழில் -உத்யோகத்து மேலயும் அக்கறை வந்து செயல்பட ஆரம்பிப்பிங்க ஒடனே ஆப்பு.

சனி இவிகளுக்கு சுகஸ்தானாதிபதிங்கறதால தாய்,வீடு,வாகனம் தொடர்பான கவலைகள் அமைதியை கெடுக்கும். டெக்னிக்கல் லைன்ல உள்ளவுகளுக்கு கடுமையான உழைப்புக்கு பின் நீடித்த பயன் ஏற்படலாம். தாய்க்கு ஆயுள் கூடும்.( ராகு வந்து சேரும் வரை) வீட்டு பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது. ஒரு சிலர் பழைய வீட்டை வாங்கலாம். வாகன விஷயத்துலயும் செகண்ட் ஹேண்ட் ஆஃபர்ஸ் வ்ரும். சர்வீஸுக்கு ஆளிருந்தாலே தவிர தவிர்ப்பது நல்லது.

சனி இவிகளுக்கு பஞ்சமாதிபதிங்கறதால குழந்தை பிறப்பை எதிர்ப்பார்ப்பவர்களுக்கு நிராசை ஏற்படலாம். வாய்ப்பு உள்ளவர்கள் வாலன்டியரா கு.பி தள்ளி வைப்பது நல்லது. கிடைக்க வேண்டிய பெயர் புகழ்,அங்கீகாரம் தாமதமா கிடைக்கும். ஒரு சிலருக்கு மட்டும் உயில் மூலம் ஒரு ஆதாயம் கிடைக்கலாம் ஒருத்தரோட நஷ்டம் /ஏமாற்றம் இவிகளுக்கு எதிர்பாரா லாபமா முடியலாம்.குழந்தைகள் தொடர்பா மனசுக்கு கஷ்டம் தரக்கூடிய செலவுகளும் வரலாம். வெகு சிலர் பட்டம் பதவிக்காக பணம் காசு செலவழிச்சு ப்ராசஸ் லேட் ஆறதை பார்த்து டென்சன் ஆவாய்ங்க.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 7 ஆமிடம். பொதுவிதிப்படி இது நல்லதுதான். இல்லேங்கலை . ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் வகையறாவுல நன்மைகள் ஏற்படனும். ஆனால்
இவர் 3 க்கு அதிபதிங்கற வகையில உ.பி, ர.ரக்களின் ஒத்துழைப்பு கிடைக்கலாமே தவிர, இவரே ரோகாதிபதியாவும் இருக்கிறதால ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் வகையறாவுலயே கடன் ஏற்படலாம்,வழக்கு,வில்லங்கம்,விவகாரம் ஏற்படலாம். அல்லது அவிக நோய் வாய்ப்பட்லாம்,உங்க கிட்டே முட்டிக்கலாம்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா அஷ்டம குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. பொதுவிதிப்படி உ.பி,ர.ரக்கள் வகையில் விரோதம், வயிறு ,இதய கோளாறுகள்,மனைவி ,மக்கள் வழியில் பிரிவு ,அவதி ,விரயம் ஏற்படனும்.ஆனால் சிறப்பு விதிப்படி 6 க்குஅதிபதியான குரு 8ல் மறையறது நல்லதுதான். இதனால் சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி,விவகார ஜெயம்,கடன் வசூல் போன்ற நன்மைகள் நடக்கனும். உ.பி/ர.ர ஒருவரின் நிலைமை, கவலைக்கிடம் தரலாம்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

4/7 க்கு அதிபதியான குரு வக்ரமாறதால உ.பி/ர.ரவின் போக்கு அதிர்ச்சியை தரும். சின்னதுன்னு துவக்கின பயணம் பெருசாகலாம். ஒரு நாள் வேலைன்னு புறப்பட்டது 8 நாள் ஆகலாம். பத்து நாள் திரிஞ்சாகனும்னு நினைச்ச வேலை ஒரே நாள்ள பைசல் ஆகலாம்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 1-7 ஆம் இடங்கள் என்பதால்

இது தங்களை ரகசியங்களுக்குள் புதைத்துவிடும். ஒரு காலத்துல அரசாங்க ரகசியங்கள் வெளி நாட்டுக்கு லீக் செய்யப்பட்டதாய் பரபரப்பு ஏற்பட்டது ஞா இருக்கலாம்.

கண்டதையும் ரகசியம் என்று குறிப்பிட்டு தொலைத்ததால் – ரகசிய காப்பு இயலாத ஒன்றாய் போனதால் இது இப்படி நிகழ்ந்தது

தாங்கள் கண்டதுக்கும் ரகசியம் மெயின்டெய்ன் செய்பவராக மாறலாம். ரகசியம்னா “எல்லாத்துலயும்”

.ஏற்கெனவே ஜன்ம ராசியில் இருக்கும் சனியோட ராகு சேர்ரதால துலா சனிக்கு நான் சொன்ன தீய பலன்கள் வேகம் பிடிக்கலாம்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
துலா ராசிக்கு இவர் 2-7 க்கு அதிபதி பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது பணத்துக்கான அலைச்சல், வெத்து பேச்சு,சவால்கள், 6 க்கு வரும்போது கடன் தொல்லை, வாய்,கண்,தொண்டைக்கு பாதிப்பு ஏற்படலாம்.

அதே போல 3 ல் வரும்போது மனைவிக்கு/மனைவியால் அலைச்சல் திரிச்சல், 6க்கு வரும்போது அவிகளுக்கு நோய்/ அவிகளோட வாக்குவாதம், ஆகிய நெகட்டிவ் ரிசல்ட் வரலாம்.

அதே சமயம் 2ல் வரும்போது பூமி,சகோதரர் தொடர்பான பிரச்சினை முற்றி + தீர்ந்து கைக்கு காசு பணம் வரலாம். 7 ல் வரும்போது மனைவியுடன் ஊடலுக்கு பின்னான கூடல் இன்பம் தரலாம்.

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது துலா ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 12 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 1 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 2 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 3 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 4 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 5 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 6 ஆமிடம்

4 thoughts on “கொலைகாரன்களுக்கு கொடி பிடிக்கும் மீடியா

  arul said:
  April 22, 2012 at 5:28 am

  media coverage is less for people issues

  ThirumalaiBaabu said:
  April 23, 2012 at 6:50 am

  அண்ணனுக்கு வணக்கம் !!
  ////மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம் ///////
  சம்திங் இஸ் மிஸ்ஸிங் இ திங் !!!

   S Murugesan said:
   April 23, 2012 at 11:35 am

   வாங்க பாபு !
   நீங்க சொன்னது கரெக்ட். துலாராசிக்காரவுகளோட குண நலனை சேர்க்காம விட்டுட்டம்

   அதை இப்பம் சரி பண்ணியாச்சு. நன்றி

  Nonna said:
  May 19, 2012 at 12:44 am

  This intrduoecs a pleasingly rational point of view.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s