உணவும் உடலுறவும் – பாகம் 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கில்மா இல்லாட்டி உலகமே கிடையாது. எவன் எதை செய்துக்கிட்டிருந்தாலும் அவனை அதுக்கு உந்தி தள்றது பலான நெனப்புத்தான். விளக்கமா சொன்னா கில்மா கிடைக்கலைங்கற ஏக்கத்துல+ கில்மா கிடைக்குங்கற நம்பிக்கையிலதான் அதுக்கான தயாரிப்பாத்தான் சனம் ஏதேதோ செய்துக்கிட்டிருக்கம்.

கில்மா எண்ணம் பிறக்கறதுல ரெண்டு விதம் இருக்கு. ஒன்னு ஒரு பூ மலர்ந்து மணம் வீசறாப்ல. இது ஒரு மன்சன் உடல் ரீதியா கில்மாவுக்கு ப்ரிப்பேர் ஆனபிற்காடு நடக்கும். ( இது டீன் ஏஜ் பார்ட்டிகளுக்கு மட்டுமல்ல – இடைவெளி – குறிப்பிட்ட கால பிரம்மச்சர்யத்துக்கு பிறகு கிழவாடிகளுக்கு கூட இது நடக்கக்கூடியதுதேன்).

மத்தபடி காலத்தின் கோலமா மண்டையில பிறக்கிற கில்மாவும் உண்டு ஆனால் இது சோனி. ஒரு எண்ணம் செயலாகறதுக்குள்ள அதன் தீவிரம் லட்சம் மடங்கு குறைஞ்சுருதாம். அட இந்த பதிவையே எடுத்துக்கங்களேன் நான் அடிக்க நினைச்சதுல 00.01% கூட பதிவுல வராது .நான் கியாரண்டி. அதே மாதிரி தான் கில்மாவும்.

மைண்ட்லருந்து பாடிக்கு ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் ஆறதுக்குள்ள ஃபைல் தேசலாயிருது. இதுக்கு இன்னாடா காரணம்னா மைண்டுக்கும் பாடிக்கும் டிஸ்டன்ஸ் சாஸ்தி. லைன் லாஸ் அதிகம். இயற்கையான கில்மா உணர்வு உடல் ரீதியானதுங்கறதால அதுக்கு ஏதும் ஏற்பாடு /முன்னேற்பாடெல்லாம் தேவையில்லை.

ஆனால் பழக்க தோஷத்துலயோ – பழைய ஞாபகத்துலயோ -ஸ்தூலமான தூண்டுதல்கள் காரணமாவோ பிறக்கும் கில்மா எண்ணம் செயலாகனும்னா இந்த பாடியை கொஞ்சம் போல கூர் தீட்டிக்கனும். செம்பு,பித்தளை,வெள்ளி,தங்கக்கம்பிகளின் ஊடே மின்சாரத்தை செலுத்தும்போது எப்படி கண்டக்டிவிட்டி வேறுபடுதோ பாடிக்கு பாடி கில்மா செயலாறதுல வித்யாசம் இருக்கு.

பாடியை கூர் தீட்டறது எப்படி? பாடியை ஒரு டூ வீலர்னு வச்சுக்குவம். தரமான பெட்ரோல் -சரியான அளவுல ஆயில் போடனும்ல. போடாட்டி என்னாகும்? ஸ்டார்ட்டிங் ட்ரபுள் ஒரு பக்கம். பிக்கப் இருக்காது புகையா கக்கும் . நடந்து வந்தே பிடிச்சுருவாய்ங்க.

வண்டிக்கு பெட்ரோல் மாதிரிதான் பாடிக்கு உணவு. கிக்கர் அடிச்சதும் ஒரு ஸ்பார்க் உருவாகுது பாருங்க அதான் கில்மா பற்றின தூண்டல். ஸ்பார்க் ஓகே. அங்கே ப்ளக்ல ஆயிலடிச்சு கருத்து கிடந்தா வண்டி ஸ்டார்ட் ஆகுமா ஆகாது.

எந்த காலத்துலயோ ஆத்திரம் அவசரத்துக்கு பீடா கடையில வித்த பெட்ரோலை போட்டிருப்பம்.அது சரியா பர்ன் ஆகாம புகையா கக்கி நாறியிருக்கும். மொதவேலையா என்ன பண்ணனும்? ப்ளக்கை கழட்டி துடைச்சு போடனும்.

அதாவது கடந்த காலத்திலான தவ்றான உணவுபழக்கங்களால் நாறிப்போன பாடியை க்ளீன் அண்ட் க்ரீன் பண்ணனும். அதே போல இனி எடுத்துக்கற உணவு பாடிக்கு எனர்ஜியை கொடுக்கிறதா இருக்கனும். அது செரிக்க அதிக சக்தி தேவைப்படக்கூடாது. அவுட் கோயிங்ல தகராறு வரக்கூடாது. அது தந்த சக்தி செலவழிக்கப்படனும். பாடி ஃபங்சனிங்கை பாதிக்காத அளவுல சேமிக்கப்படனும் இதான் பேசிக். இப்படி மஸ்தா மேட்டரு கீது வாத்யாரே .. இந்த புத்தாண்டு பலன் முடிஞ்சதும் இதான் .. இதுவேதான்.ப்ளீஸ் வெய்ட்.

2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : கன்னி

மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் பெண்ணாயிருந்தால் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். கணிதம், ஜோதிடம்,மருத்துவ துறைகள்ள ஆர்வமிருக்கும்.பப்ளிக் ரிலெசன்ல புலிங்க.ஆனால் புலி தன் குட்டியை தானே தின்னுர்ராப்ல தன் செட்டுக்குள்ள இருக்கிறவகளையே லொள்ளு பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை உங்க ராசியான கன்னியிலயே சஞ்சரிக்கிறாரு. இதை ஜன்ம சனின்னு சொல்லுவம். பொதுவிதிப்படி மந்த புத்தி, முகத்துல எண்ணெய் வடியறது, மலச்சிக்கல் முதல் பைல்ஸ் வரை வரலாம்.அகால போஜனம்,அகால நித்திரை இதெல்லாம் போனஸ்.. இவர் 3 ஐ பார்க்கிறதால சகோதர நஷ்டம், காது நோய் ,சிறு விபத்து நடக்கலாம்.

7 ஐ பார்க்கிறாதால கண்ணாலமாகாதவுகளுக்கு திருமண முயற்சிலயும்/காதல் கத்திரிக்காய் பிசினஸ்லயும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம். கண்ணாலமாகியிருந்தா அக்மார்க் லோ கிளாஸ் பார்ட்டியோட காதல் கீதல் ஏறபடலாம். 10 ஐ பார்க்கிறதால அப்பப்போ தொழில் -உத்யோகத்து மேலயும் அக்கறை வந்து செயல்பட ஆரம்பிப்பிங்க ஒடனே ஆப்பு. இதெல்லாம் பொதுவிதிப்படியான பலன்.

இந்த சனி உங்களுக்கு 5 -6 க்கு அதிபதியா இருக்கிறதால இருக்கிற பேரை காப்பாத்திக்கனுமேங்கற கவலை, மறதி, சின்ன சின்ன அவமானங்கள்,குழந்தைகள் தொடர்பான கவலைகள் வாட்டும். அதே போல கால், நரம்பு ஆசனம் தொடர்பான நோய்களும் வாட்டலாம். கடன்,வழக்கு விவகாரங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி வரும். இந்த கவலையில முடி உதிரும், வெள்ளை முடியே கூட வந்துரும்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி துலா ராசியில சஞ்சரிக்கிறாரு. இது இவிகளுக்கு 2 ஆமிடம்.இதனால் கொடுக்கல் வாங்கலில் தாமதம், நிஷ்டூர வாக்கு, வாக்கு வாதங்கள் ,குடும்ப கலகம், கண் நோய் இப்படி பாதிப்புகளை தரலாம். சிலருக்கு வாய்,தொண்டை தொடர்பான பிரச்சினையும் வரலாம்.

சனி இவிகளுக்கு சனி பஞ்சமாதிபதிங்கறதால சிலருக்கு மரணம் தொடர்பான ஆதாயம் கிடைக்கலாம் ஒருத்தரோட நஷ்டம் /ஏமாற்றம் இவிகளுக்கு எதிர்பாரா லாபமா முடியலாம்.குழந்தைகள் தொடர்பா மனசுக்கு கஷ்டம் தரக்கூடிய செலவுகளும் வரலாம். வெகு சிலர் பட்டம் பதவிக்காக பணம் காசு செலவழிச்சு ப்ராசஸ் லேட் ஆறதை பார்த்து பீதியில பேதியாவாய்ங்க.

இவர் ரோகாதிபதியாவும் இருக்கிறதால மெடிக்கல் பில், லாயர் ஃபீஸு, வட்டி,அபராதம்லாம் பிச்சு உதறும். மருத்துவ, நீதித்துறையில் உள்ளவர்கள் கொஞ்சம் போல சேஃப். பேச்சை மானிட்டர் பண்ணி பேசுங்க. வாக்கு கொடுக்காதிங்க. கொடுக்கல் வாங்கல்ல சாக்கிரதையா இருங்க.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 8 ஆமிடம். . எட்டில் குரு வந்தால் கெட்டது குடிம்பாய்ங்க. தங்கம், காசு பணம் டீல் பண்ணும்போது சாக்கிரதை. ஜாய்ன்ட் ஷ்யூரிட்டில்லாம் போடாதிங்க. ஊர் பஞ்சாயத்துக்கு போகாதிங்க.போனா ஆப்புதாண்டி. செயிலுக்கு கூட போக வேண்டி வரலாம்.டேக் கேர்.

இவர் 4 க்கு அதிபதிங்கற வகையில தாய்,வீடு,வாகனம்,கல்வி வகையறால நோய்,பிரிவு, கடன்,நஷ்டம், தோல்வி ஏற்படலாம் .ஏழுக்கதிபதிங்கற வகையில ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர் ,வைஃப் வகையறால மனோ வேதனை, வீண் பழி , சிலர் மஹிளா ஸ்டேஷன்/ஃபேமிலி கோர்ட் வரை போறதும் நடக்கலாம்

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா பாக்ய குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. இதனால தாய்,மனைவி வகையறாவில அனுகூலம் ஏற்படலாம்.வண்டி வாகனம் வந்து சேரலாம். சிலர் வீடு கூட கட்டலாம் . சிலருக்கு ஒரு காலத்துல சேர்த்து வச்சிருந்ததோ – முதலீடு செய்திருந்ததோ கைக்கு வரும்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

4/7 க்கு அதிபதியான குரு வக்ரமாறதால உங்க தாய் -மனைவியின் போக்கு அதிர்ச்சியை தரும்.
( அம்மா-பொண்ணா இழைஞ்சிட்டு இருந்தவுக முட்டிக்கலாம் -எலியும் பூனையுமா இருந்தவுக ஓரணியில திரண்டு உங்களுக்கு ஆப்படிக்கலாம்)

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 2-8 ஆம் இடங்கள் என்பதால்

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
.ஏற்கெனவே 2 ல் இருக்கும் சனியோட ராகு சேர்ரதால துலா சனிக்கு நான் சொன்ன தீய பலன்கள் வேகம் பிடிக்கலாம்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
கன்யா ராசிக்கு இவர் 3-8 க்கு அதிபதி பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா உங்களுக்கு மட்டும் 3 ல் வரும்போது சகோதரர்களுக்கும்/சகோதரர்களாலும் பிரச்சினை வரும். 10 ல வரும்போது செய்தொழில்ல போட்டி பொறாமை சாஸ்தியாயி கடுமையா உழைக்க வேண்டி வரும். சின்னதா விபத்து மாதிரி கூட நடக்கலாம். 11 ல வரும் போது மூத்த சகோதரர்களுக்கு/மூத்த சகோதர வர்கத்தால் ஆப்பு வரலாம். அதேசமயம் 6 , 12ல் வரும்போது நல்ல யோகத்தை எதிர்பார்க்கலாம்.

லக்னத்துல வரும்போது உடல் மனம் , ரெண்டுல வரும்போது பர்ஸ் , 4 ல் வரும்போது அம்மா , 5 ல வரும்போது குழந்தைகள் ,மன அமைதி, 7 ல் வரும்போது மனைவி , எட்டில் வரும்போது நீங்க, 9ல் வரும்போது அப்பா கடுமையா பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு.

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது கன்னி ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 1 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 2 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 3 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 4 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 5 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 6 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 7 ஆமிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s