சினிமா வினியோகஸ்தராகிறார் ஜெ !

Posted on

அண்ணே வணக்கம்ணே!
தெலுங்கு நியூஸ் சானல்ஸ் பத்தி தனிப்பதிவே எழுதலாம். ஒரு ஆங்கிள்ள பார்த்தா ஈறை பேனாக்கி,பேனை பெருமாளாக்கி கல்லா பெட்டியை நிரப்பற அல்லக்கைங்க. இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா அதுவும் சன் நியூஸ் தொ.கா, ஜெ டிவி இத்யாதியோட ஒப்பிட்டா ஜெம்.
கொய்யால ஆஃப்டர் ஆல் ஒரு அறிக்கையை வரிக்கு வரி படிக்கிறய்ங்க. அதை எழுத்துல வேற காட்டறாய்ங்க. தெலுங்கு சானல் காரவுக எங்கயோ போயிட்டாய்ங்க ( நல்ல/கெட்ட விஷயங்கள் ரெண்டுலயும்) நல்லதை மட்டும் தமிழ் நியூஸ் சானல்ஸ் எடுத்துக்கிட்டா நல்லாருக்கும். பார்க்க முடியலிப்பா. சன் நியூஸ்ல ஒரே சிடி. காலையிலருந்து (மன்னிக்கனும் மதியத்துலருந்து) அர்த ராத்திரி வரை அதையே போட்டு போட்டு தேய்க்கிறாய்ங்கப்பா.
அந்த செய்திகளாவது எதுனா உருப்படியா இருக்கான்னா ஊஹூம், மழை ,வெய்யில்,தினத்தந்தியில சிங்கிள் காலமா வரவேண்டிய செய்திங்கதேன்.தூத்தேரிக்க
தெலுங்குல அப்டியில்லை . நெம்பர் ஆஃப் சானல்ஸ்.போட்டி -போட்டிக்கு ஈடு கொடுக்கனும்.இல்லாட்டி பல்பு. வாரப்பத்திரிக்கையில எடிட்டோரியல் மீட்டிங்ல ஸ்கூப்பை பிடிங்கப்பா ஸ்கூப்பை பிடிங்கப்பான்னு பினாத்துவாய்ங்களே அப்ப்டி ஒரு சின்ன ஹன்ச் கிடைச்சாலும் அதை தடுக்கி தடுக்கி விஜாரிச்சு போட்டு தாளிச்சிருவாய்ங்க.
இந்த லைன்ல வந்த ஒரு செய்திதான் சினி வினியோகஸ்தராகிறார் ஜெயலலிதாங்கறது. அம்மா ஜாதகத்துல சுக்கிரன் உச்சம்ங்கறதால இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் அந்த சுக்கிரன் கேந்திரம் பெற்றதை கவனிக்கலை போலிருக்கு.
டிவி 5 சானல்ல வந்த இந்த செய்தி ரஜினி,கமல் கூட டிஸ்கஷன் எல்லாம் கூட ஆயிட்டதா சொல்லுது.மேலும் எதிர்காலத்தில் சினிமா தயாரிப்பிலும் ஈடுபடப்போறாய்ங்களாம். ( சன் பிக்சர்ஸ் கணக்கா மாறாம இருந்தா சரி)
நம்ம கணிப்பு:
அம்மாவின் இந்த முடிவு கருப்பை வெளுப்பாக்கத்தேன்னுட்டும் , மோனோப்பலி ஆயிட்டாய்ங்கன்னும், பட உலகை கொள்ளையடிக்கிறாய்ங்கன்னும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்ட ஒரு வாய்ப்பாத்தான் அமையப்போகுது. லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ.
தன்னம்பிக்கைக்கும் -தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்கறதுக்கும் பெயர் போன ராசி சிம்மம். இப்பம் புத்தாண்டு பலன் தொடர்ல சிம்மம்.
மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
ஜாதகரில் லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், (அல்லது இவர் வளர வளர தந்தையின் நிலை பலகீனமடைந்து வரும்) தாய் மீது அதீத பற்று இருக்கலாம். பற்றுனு கூட சொல்ல முடியாது டிப்பெண்டன்ஸ். இந்த குணத்தால எதிர்காலத்துல அம்மாவுக்கும் மனைவிக்கும் தகராறு வரச்ச ரெம்ப குழம்பி போவாங்க .சிலர் தாய்க்காக மனைவியையே பிரியவும் ப்ரிப்பேர் ஆயிருவாய்ங்க. இவிக பணமோ காசோ கடனா கொடுத்தா திரும்பறது கஷ்டம்.
தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . அதுக்கேத்தாப்ல இவிகளை கேள்வி கேட்கிற நிலைல உள்ளவுக சீக்கிரமே மொக்கையாயிருவாய்ங்க. கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும். சூரியனை பற்றி சைண்டிஃபிக்காக எடுத்து சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கனும். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார். இவிக குடியுள்ள வீட்டுக்கு எதிர்க்க வீடு இருக்காது. இருந்தாலும் பூட்டிக்கிடக்கும்.திறந்திருந்தா எ.வீட்டுக்காரன் ஷெட். இவரை கண்டிப்பதோ,குறை கூறுவதோ கூடாது. மீறி செய்தால் நாம ஷெட்.

சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னியில் சஞ்சரிக்கிறாரு கன்னி இவிகளுக்கு 2 ஆமிடம் இதனால் கொடுக்கல் வாங்கலில் தாமதம், நிஷ்டூர வாக்கு, வாக்கு வாதங்கள் ,குடும்ப கலகம், கண் நோய் இப்படி பாதிப்புகளை தரலாம். சிலருக்கு வாய்,தொண்டை தொடர்பான பிரச்சினையும் வரலாம்.

சனி இவிகளுக்கு 6, 7பாவங்களுக்கு அதிபதி. 6 என்றால் கடன் – 2 என்றால் தனபாவம் “சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு”ன்னு சொல்றாப்ல தான் நிலைமை இருக்கும்.

7 என்றால் மனைவி – 2 என்றால் தனபாவம். பலருக்கும் பொஞ்சாதியால வீண் விரயம்- கைப்பணம் முடங்கறது இத்யாதி நடக்கலாம். சிலருக்கு ( ஜாதகத்துல சனி பலம் உள்ளவுகளுக்கு) பொஞ்சாதி வகையறாவுல எதுனா நான் ஃபங்க்சனிங் பிராப்பர்ட்டி வரலாம்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி துலா ராசியில சஞ்சரிக்கிறாரு. இது இவிகளுக்கு 3 ஆமிடம்ங்கறதால மனசுல ஒரு தைரியம் இருக்கும்.பிரயாணங்களால அனுகூலம் இருக்கும். சிலும்பிக்கிட்டிருந்த உடன் பிறப்புகள் உங்க உதவியை நாடி வர்ராப்ல ஆயிரும்.
.
அதே சமயம் உ.பிக்களோட ஃபைனான்சியல் டீலிங் வச்சுக்கிட்டா இமிசைதான். முடிஞ்ச உதவியை செய்ங்க அதுவேற கதை. சவுண்ட் பாக்ஸ் பத்திரம். மனைவிக்கு அல்லல் அலைச்சல் ,உடல் நல பாதிப்புல்லாம் வராப்ல இருக்கு.

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 9 ஆமிடம். சனி ரோகாதிபதிங்கற வகையில அப்பாவுக்கு நோய் பாதிப்பு அ அவருடன் தகராறு, சொத்து,சேமிப்பு, முதலீடுகளில் வில்லங்கம் வரலாம்.
அதே நேரம் சனி சப்தமாதிபதியாவும் இருக்கிறதால மனைவி வகையில அறுத்த நெல்லா கிடைக்கலன்னாலும் விதை நெல்லா உதவி கிடைக்கும்.உபயோகிச்சுக்கங்க, கடன் வாங்கி மேற்கு பக்கமா ஒரு பயணம் போகவேண்டி வரலாம். தொடை பகுதியில் எதுனா பிரச்சினை வரலாம்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா ஜீவன குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு.

இது உங்களுக்கு 10 ஆமிடம். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும்னு ஒரு விதி. பதவியில இல்லாதவுகளுக்கு ஒரு நற்செய்தி. பறிபோகறதுக்காச்சும் ஒரு பதவி இருந்தாகனும்ல. பறிபோகவாச்சும் வந்தாகனும்ல. வரட்டும் பார்த்துக்கலாம். ( ஏற்கெனவே வேலையில உள்ளவுக வேலை விஷயத்துல எம்.ஜி.ஆர் வேலைகள் வேண்டாம் – கறாரா இருங்க -இல்லாட்டி அவப்பேர் வரும் -பதவி ஃபணாலாயிரும் )

அதே சமயம் சனி ரோகாதிபதிங்கற வகையில செய்தொழில் வியாபாரம், உத்யோகம் வகையறாவுல கடன் ஏற்படலாம், எதிரிகள் தொல்லை கொடுக்கலாம், கோர்ட்டு கேஸுன்னு கூட வரலாம்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

ரோகாதிபதியா இவர் வக்ரமாறது நல்லதுதான். சொத்து,ஃபிக்சட் டெப்பாசிட் மேல இருந்த கடன் தீரலாம்.அதே சமயம் இவரு களத்ராதிபதியாவும் இருக்கிறதால மனைவி மேட்டர்ல தான் அதிர்ச்சிகள் காத்திருக்கும். கண்ணாலமான புதுசுல முரண்டு பிடிச்ச கதையா முரண்டு பிடிக்கலாம். அல்லது அவிகளுக்கு உடல் நலம் பாதிக்கலாம்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 3-9 ஆம் இடங்கள் என்பதால் பெருசா பிரச்சினை இருக்காது.(அடுத்த ஒன்னரை வருசத்துக்குங்கோ)

அதேசமயம் உ.பிக்களோட பிரச்சினை /அ அவிகளுக்கு பிரச்சினை வந்து உங்க உதவியை நாடலாம். வீண்பிரயாண்கள் ஏற்படலாம்.

அப்பாவுக்கு உடல் நல பாதிப்பு -அவருடனான உங்கள் உறவில் பாதிப்பு ஏற்படலாம். பிற மொழி பேசறவுக பிற மதங்களை சேர்ந்தவுக,புதுசா அறிமுகமாகிறவுகளால உங்க சொத்து,சேமிப்பு,முதலீடு வகையில தீமை ஏற்கெனவே 3 ல் இருக்கும் சனியோட ராகு சேர்ரதால துலா சனிக்கு நான் சொன்ன தீய பலன்கள் வேகம் பிடிக்கலாம்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
சிம்ம ராசிக்கு இவர் 4-9 க்கு அதிபதி பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா 3ல் வரும்போது அப்பா,அம்மாவுக்கு அல்லல் அலைச்சலை கொடுப்பாரு. 6ல் வரும்போது அவிகளுக்காக கடன் வாங்க வேண்டி வரலாம் அ அவிகளோட முட்டிக்கும்.

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது சிம்ம ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 2 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 3 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 4 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 5 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 6 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 7 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 8 ஆமிடம்

Advertisements

2 thoughts on “சினிமா வினியோகஸ்தராகிறார் ஜெ !

  Sugumarje said:
  April 20, 2012 at 1:31 pm

  யப்பா கை.கந்தசாமி….முருகேசன் அய்யா நிச்சயம் உன் கேள்விக்கு பதில் சொல்லுவாருப்பா.

  ThirumalaiBaabu said:
  April 21, 2012 at 5:22 am

  அண்ணனுக்கு வணக்கம் !!
  பதிவுக்கு மிக்க நன்றி !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s