2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : மிதுனம்

Posted on

அண்ணே வணக்கம்ணே!
ஆ.வில ராஜூ முருகன் போர் அடிக்கிறதை பத்தி எழுதியிருந்தாரு. மன்சன் நெல்லாவே எளுதறாரு.ஹார்ட் டச்சிங்கா கீது. இந்த மேரி மாஸ் மீடியால இந்த மேரி தொடர்கட்டுரை எளுதறதுக்கு ஒரு ஃபார்முலா இருக்கு போல. இதை சுஜாதா வெளி நாட்டு ஆங்கில பத்திரிக்கைகள்ளருந்து உருவி சக்ஸஸ்ஃபுல்லாக்க ராமகிருஷ்ணன் தொடர ராஜு முருகனும் கலக்கிக்கிட்டு இருக்காரு.ஆனால் சீக்கிரமே இந்த கேட்டகிரி கட்டுரைகள் போரடிச்சுரும் கியாரண்டி.
இந்த கேட்டகிரி கட்டுரைகள்ள அடி நாதமா இருக்கிறது “பழசை நினைச்சு ஏங்கறது -முக்கியமா இயற்கைய விட்டு விலகி வந்துட்ட சமுதாயத்துக்காவ புலம்பறது” சரி ராஜூ முருகன் கதைக்கு வருவம். கட்டுரையின் கடேசியில ஒரு முதிய தம்பதிகளை பத்தி சொல்றாரு. அந்த லைஃப் போரடிக்கவே அடிக்காதுங்கற மாதிரி முடிக்கிறாரு.
எனக்கென்னமோ கான்ட்ராடிக்சன் இல்லாத தம்பதியை கற்பனை பண்ணவே முடியலை.ஏதோ என் பொஞ்சாதி இந்த உலகத்தின் ஒட்டு மொத்த பிரதி நிதியா இருந்து கடுப்பேத்திக்கிட்டே இருந்ததால இம்மாம் மட்டுக்கும் ஸ்டெடியா கீறோம். அவளும் நம்ம ரேஞ்சுல இருந்திருந்தா என்னெல்லாம் ஆகியிருக்குமோ? ( நான் சொல்றது சோஷியல் லைஃப்) நினைச்சாலே பயம்மா கீது.
இப்படி கான்ட்ராடிக்சனோட வாழற சோடிக்கு ஒரு கட்டத்துல முட்டி மோதி போரடிச்சு “தத் இது இவ்ளதான்” னு தோனின பிறவு வரும் பாருங்க ஒரு அஜீஸ்மென்டு அதை வச்சு 40 வயசுக்கு மேல ஒரு பத்து இருவது வருசம் ஓட்டலாம்.
ஆனால் பல சோடிங்க சுடுகாடு போற வரை முட்டி மோதிக்கிட்டுத்தானே இருக்காய்ங்க. பலர் ஒப்புத்துக்கறதில்லை. நம்மை மாதிரி பார்ட்டிங்க போட்டு உடைச்சுர்ரம்.
அது சரீ..இ .. வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பை தானே எழுதனும். இதென்ன பதிவு இப்டி போயிக்கினு கீது. அட.. புத்தாண்டுபலன் வேற எளுதனும்ல. என்ன இது லொள்ளு? நக்கீரன்ல மோடி அண்ணாத்தை எந்த ரேஞ்சுக்கு சுருட்டி இருக்காருன்னு சோலை அண்ணன் கிளிச்சிருக்காரு. ஆனால் அவாள் என்னமோ மோடியை கல்கி அவதாரமாவே எஸ்டாப்ளிஷ் பண்ண பார்க்கிறா. தில்லி மாநகராட்சியில ஜெயிச்சதுமே மத்தியிலயும் அடுத்த ஆட்சி நம்முதுதான்னு அலப்பறை பண்றாய்ங்க.
பா.ஜ.கன்னா மதவாத கட்சி -மைனாரிட்டி ஓட்டுக்கிடைக்காதுங்கற ஒரே ஒரு அப்ஜெக்சன் தான் இருந்தது. இப்பம் ஊழல் – நீலப்படம்னு ஏகப்பட்ட அப்ஜெக்சன். பா.ஜ.கவோட கை கோர்க்க அம்மாவே பின்வாங்கறாய்ங்கன்னா பார்த்துக்கங்க. நிலைமை எவ்ள மோசம்னு.
நீங்க கவலைபடாதிங்ணா ஆந்திராவுல ..நடக்கப்போற இடைத்தேர்தல்ல வயலார் ரவியில்லை -ராகுல் இல்லே -சோனியா அம்மாவே வந்து கேம்ப் அடிச்சாலும் ஜகன் 17+1 தொகுதிகள்ளயும் காங்கிரஸுக்கு ஆப்படிக்கிறது கியாரண்டி.
ஆனைக்கு அடி சறுக்கினா பூனையெல்லாம் கர்பமாக்கிரும்லா. மொதல்ல ராயலசீமா எம்பி எல்லாம் காங்கிரஸுக்கு கா விட்டுட்டு பதவிக்கு ராஜினாமா பண்ணிட்டு ஜெய் ஜகன்ம்பான்.(அவனுக்கு தேவை வெற்றி.அதை காங்கிரஸ் கொடுக்க முடியாது -ஜகன் தான் கொடுக்க முடியும்னா ஒடனே ஜம்ப்) கூடவே மூக்கர் தெலுங்கான இப்பமே வேணம்னு தன் எம்பிக்களை ராஜினாமா செய்யவச்சு காங். எம்பிக்களை சீண்டி விடுவாரு .அவிகளுக்கும் ராஜினாமா பண்றதை தவிர வேற வழி கிடையாது. (அவிகளை ஜெயிக்க வைக்கக்கூடிய ஒரே அம்சம் தெலுங்கானா தான்) ஆக மத்தியில இடைத்தேர்தல் ஷ்யூரா வரும்.
காங்கிரஸுக்கும் பெப்பே. பா.ஜ.கவுக்கு பெப்பே. 3 ஆவது அணிதான் ஆட்சியை பிடிக்கும் பார்த்துக்கங்க. உஸ் அப்பாடா நாட்டு நடப்பு ஓவர்.
இப்பம் புத்தாண்டு பலன். இன்னைக்கு மிதுனம்.
மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். அதே போல் உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம். இவிக வாழ்க்கைல மரண சமானமான ஒரு துக்கமோ, நஷ்டமோ வந்தா உடனே ஒரு சொத்து வாங்கற அமைப்பு ஏற்படும். பட்டுனு ஒரு லிஃப்ட் கிடைக்கும். தூர தேசத்துலருந்து உதவி வரும்.
சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னியில் சஞ்சரிக்கிறாரு கன்னி இவிகளுக்கு 4 ஆமிடம். சனி 8, 9, க்கு அதிபதி. பொதுவிதிப்படி தாய்க்கு ஆயுள் நீடிப்பு, வீடு மாற்றம், சீட் மாற்றம், ஆள் காட்டிகளால லொள்ளு, வாகன வகையில நஷ்டம்,கல்வியில் தடைல்லாம் நடக்கனும் இல்லேங்கலை.

ஆனால் இவர் 8 க்கு அதிபதியா 4 ல் நின்று பொதுவிதிப்படி மேற்படி பிரச்சினைகளை கொடுத்தாலும் ஒன்பதுக்கும் அதிபதியா இருக்கிறதால வண்டி வாகன சேர்க்கை, தாய் வழி சொத்தில் அனுகூலம், தொழில் நுட்ப படிப்பில் முன்னேற்றம் இத்யாதி நற்பலனையும் தருவாரு.

ஆனால் இவர் இவிகளுக்கு 8,9 க்கு அதிபதிங்கறதால 4 ல் நின்று ஆரம்பத்துல அம்மாவுக்கு கெண்டம், அல்லது அவிகளோட ஒரு தற்காலிக பிரிவுன்னு தரலாம். வீடு, வாகனம் தொடர்பாக இமிசை வரலாம்.

அதே சமயம் ஒரு சொத்தை, முதலீட்டை,சேமிப்பை, அப்பாவோட உதவியால /அப்பாவழி சொத்தை வச்சு அ தூரதேச தொடர்புகளால கிடைச்ச லாபத்தை வச்சு வண்டி ,வாகனம்னு வாங்கவும் வாய்ப்பிருக்கு.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி துலா ராசியில சஞ்சரிக்கிறாரு. இது இவிகளுக்கு 5 ஆமிடம் நற்பெயருக்கு களங்கம், குழந்தைகள் தொடர்பான பிரச்சினை, அதிர்ஷ்ட குறைவு, நிராசை ஏற்படனும். அதே சமயம் ஜஸ்ட் குருட்டு அதிர்ஷ்டத்துல லாஜிக்கே இல்லாம ஒரு சொத்தே கூட கைக்கு வரலாமுங்கோ

குரு:
2012, மே 17வரை லாபஸ்தானத்துல சஞ்சரிக்கிறாரு. இவர் சப்தமாதிபதிங்கற வகையில ஒரு கோணத்துல இது நல்லது தான். மனைவியோட ஒத்துழைப்பு கிடைக்கும்.பொன் பொருள் கூட சேரலாம். ஆனால் ஒரு உயர்குல பெண்ணுடன் நட்பு (?) குடும்ப வாழ்க்கையில பிரச்சினைய உண்டுபண்ணலாம்.இவர் ஜீவனஸ்தானாதிபதியாவும் இருக்கிறதால ஓவர் டைம் , சைட் பிசினஸ்,பார்ட் டைம் ஜாப் மாதிரி கூடுதலா அமையவும் வாய்ப்பிருக்கு.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா விரய குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. இதனால மனைவி ,மனைவி வழி உறவினர்களால செலவுகள் ஏற்படலாம். அவிகளுக்கும் உங்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கலாம். நீங்க விற்பனை துறையில் இருந்தாலன்றி செய் தொழில் வியாபாரம் உத்யோகத்துல பிடிப்பு,ஆர்வம் குறையும் போதிய அங்கீகாரம் கிடைக்காம போயிரலாம்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

ஜீவனஸ்தானாதிபதியா இவர் வக்ரமாறது பிளைப்புக்கு நல்லது தான் “எங்கே கோட்டை விட்டோம்” னு. தீர ரோசிச்சு அனலைஸ் பண்ணலாம்.(பழசை எல்லாம் துருவவச்சிருவாய்ங்க) ஆனால் களத்ராதிபதிய இவர் வக்ரமாறதால உங்கள் வாழ்க்கை துணையின் செயல்பாடுகளை பார்த்து ஷாக் ஆயிருவிங்க. அவிக லைஃப்ல செய்யாத காரியத்தை எல்லாம் செய்ய ஆரம்பிச்சுருவாய்ங்க.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 5-11 இடங்கள் என்பதால் மறதி – அதிர்ஷ்ட குறைவு – அவமானங்கள் குழந்தை விஷயத்துல பிரச்சினை இத்யாதி உண்டு. இவற்றால் விரக்தி, தேடல் அதிகரிச்சுரும். யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படிச்சு மனசை பக்குவப்படுத்திக்கனும். இல்லாட்டி மேற்சொன்ன தீயபலன்கள் வாழ்க்கையையே புரட்டிப்போடுரலாம்.

அடுத்த ஒன்னரை வருசத்துக்குங்கோ) பிற மொழி பேசறவுக பிற மதங்களை சேர்ந்தவுக,புதுசா அறிமுகமாகிறவுகளால பிரச்சினை வரலாம்.ஏற்கெனவே 5 ல் இருக்கும் சனியோட ராகு சேர்ரதால நான் சொன்ன தீய பலன்கள் வேகம் பிடிக்கலாம்.

ஆனால் அப்பாவோட (இருந்தா) பலம் குறையும், தொலை நோக்கோடு நீங்க எடுக்கிற முடிவுகளை செயல்படுத்தற விஷயத்துல ரகசிய எதிரிகள் சதி திட்டங்கள் தீட்டலாம். செய்தொழில் வியாபாரத்துலயும் ” நீக்கு போக்கா” செயல் படவேண்டி வரலாம். செவ்வாய் அனுகூலமா இருக்கிற காலத்துல ஓகே. செவ் ஆப்படிக்கிற நிலையில இருந்தா இந்த அஜீஸ்மென்ட்ஸால போலீஸ் வரை கூட கை கட்டி பதில் சொல்லவேண்டி வரலாம்.டேக் கேர்.

அஷ்டமாதிபதியாகவும் உள்ள சனியோட ராகு சேர்ர்ரதால ரகசிய ப்ளாக் மெயிலுக்குள்ளாகவும் வாய்ப்பிருக்கு. ஃபுட் பாய்சன், மெடிக்கல் ரியாக்சன் கூட நடக்கலாம். (எந்த அளவுக்குன்னா உங்க நெர்வஸ் சிஸ்டத்தையே பாதிச்சுர்ர அளவுக்கு)

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால திங்கள் கிழமை மேஷ ராசிக்கு செவ் சஞ்சாரத்தை வச்சும் சில விஷயங்களை சொல்லியிருந்தேன் . முக்கியமா மேஷ ராசிக்கு இவர் ராசி நாதனாவும் இருக்கிறதால இது மேஷராசிக்காரவுகளுக்கு ரெம்ப அவசியமானதுங்கற வகையில ஓகே.

எச்சரிக்கை:
ரிசபராசிக்கு செவ்வாயை வச்சு சொன்ன பலன்ல சின்ன தவறு நடந்து போச்சு அதை http://anubavajothidam.com/2012-13-rasipalan/ திருத்தியிருக்கேன். ஒரு தாட்டி பார்த்துருங்க சிரமத்துக்கு மன்னிக்கவும்.

மிதுன ராசிக்கு இவர் 6-11 க்கு அதிபதி பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா 6 ல் வரும்போது மட்டும் சத்ரு ரோக ருண உபாதைகள் அதிகமாயிரும்.டேக் கேர்.

மத்தபடி செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது மிதுன ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 4 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 5 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 6ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 7 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 8 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 9 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 10 ஆமிடம்

2 thoughts on “2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : மிதுனம்

  arul said:
  April 18, 2012 at 7:54 am

  K.N.Rao in his astrology blog had also indicated mid term elections within a year

   S Murugesan said:
   April 18, 2012 at 9:48 am

   வாங்க அருள்!
   வைஸ் மென் திங்க் அலைக்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s