தமிழ் புத்தாண்டு பலன் 2012 – 13

Posted on

அண்ணே வணக்கம்ணே ! நேயர் விருப்பம் கணக்கா தமிழ் புத்தாண்டு பலன் எழுதச்சொல்லி அப்பப்போ மெயில்,ஃபோன்,கமெண்டுன்னு வந்துக்கிட்டே இருக்கு.

என்னைக்கு தமிழ் புத்தாண்டுன்னு வெட்டுப்பழி குத்துப்பழியா இருக்கா பலன் எழுதற சிரமத்தை விட என்னைக்கு எழுதறதுங்கற வில்லங்கம் ரெம்பவே பயமுறுத்துது.தாத்தா தை முதல் நாள்ங்கறாரு,அம்மா என்னடான்னா ஏப்ரல் 13 ஐ கொண்டாடுங்கறாய்ங்க. வகுப்பறை சுப்பையா சார் ராசிச்சக்கரத்துல மொத ராசி மேஷம் இதுல சூரியன் பிரவேசிக்கிற ஏப்ரல் 13 தேன் தமிழ் புத்தாண்டுங்கறாரு.

நம்ம லாஜிக் என்னடான்னா நீங்களோ நானோ வெளிய புறப்படறோம்னு வைங்க. வீட்லருந்துதானே புறப்படறோம். அந்த கணக்குல பார்த்தா ஏன் சூரியன் சிம்மத்துலருந்து வெளிய வந்து கன்னியில (உத்தரம் 2 ஆம் பாதத்தில்) பிரவேசிக்கிற நாளை புத்தாண்டா கொண்டாடக்கூடாது ( டவுட்டு)

சரி நக்கல் நையாண்டியெல்லாம் போதும் மேட்டருக்கு வாங்கன்னு நீங்க துடிக்கிறது புரியுது. இதுக்கு நிறைய ஒர்க் அவுட்லாம் செய்ய வேண்டியிருக்கு. திங்கள் முதல் ஒவ்வொரு ராசிக்கு எழுதிக்கிட்டு வர்ரேன்.

ஆடியோ ஃபைலா போட்டுருவம்னு தான் நினைச்சேன்.ஆனால் அது மன்ஸுக்கு வர்ல வாத்யாரே அதான் நீக்கிட்டன். ப்ளீஸ் வெய்ட்!

தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 13 க்கு அப்பாறம் நடக்கப்போற முக்கிய கிரக பெயர்ச்சிகளை (மாற்றங்களை) மொதல்ல பார்த்துருவம்.

சனி:
2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னி அதுக்கு பிறவு துலாம்.

குரு:
2012, மே 17வரை மேஷம் பிறகு ரிசபம். செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை வக்ரம்

ராகு கேது :
2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துல என்டர் ஆறாய்ங்க.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி ,ஆகஸ்ட் 14 துலா, செப் 28 விருச்சிகம் , நவம்பர் 9 தனுசு, டிசம்பர் 17 மகரம்.

2013 , ஜனவரி 25 கும்பம் , மார்ச் 4 முதல் மீனம்

எச்சரிக்கை:
ராசிபலனை ரெம்ப நம்பாதிங்க:

இந்த ராசிபலனின் எஃபெக்ட் ஜஸ்ட் 15 சதம் கூட இருக்காது. ராசிபலன் நடப்பில் உண்மையானால் உங்க ஜாதகம் டுபாகூர் ஜாதகம்னு அர்த்தம்.

உங்க ஜாதகம் தான் கார். தசாபுக்திகள் தான் ரோடு. இந்த ராசிபலனெல்லாம் ச்சும்மா காத்து தான். வண்டில ஷாக் அப்சர்பர் எல்லாம் கரெக்டா இருந்தா எந்த பாடாவதி ரோட்லயும் ச்சும்மா சல்லுனு போயிரலாம்.

டப்பா காரா இருந்தா ? எனிவே.. சிலர் ராசிபலனுக்கு ரொம்ப முக்கியத்வம் தந்து படிக்கிறாங்க. அவிங்களுக்காகத்தான் இந்த புத்தாண்டு பலன்.

( நமக்கும் அலெக்ஸா ரேங்கு அந்த ரேங்குன்னு கொஞ்சம் ஜொள்ளு இருக்குங்ணா ..அதனாலதேன் இந்த காம்ப்ரமைஸ்)

நம்ம ராசிபலனை கொஞ்சம் போல நம்பலாம்:

என் கையில் சனி ரேகை ஸ்கெட்ச் பேனாவால் இழுத்தது போல் இருக்கும். புத்தி ரேகைக்கு கீழே துவங்கி மணிக்கட்டு வரை நேஷ்னல் ஹைவே மாதிரி இறங்குகிறது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் சனிபலம் உள்ளவன் “சந்தேக புத்தி கொண்டவன்” எதையும் அத்தனை எளிதாக நம்ப மாட்டான். தங்க காசே தந்தாலும் அதை சோதிக்காது ஸ்வீகரிக்கமாட்டான் என்பதற்கே.

இவ்வகையில் நான் ஜோதிட ஆய்வாளன் ஆனேன் . இன்று என்னை அணுகுவோர்க்கு நான் தரும் பலன் எல்லாம் இன்ட்டிரியம் ஆர்டர் தான். நாளையே என் ஆய்வில் ஜோதிடம் பொய் என்பது நிரூபணமானால் பொய் என்று சொல்ல வெட்கப்படமாட்டேன் .

நானேதும் கிரகங்களின் ஏஜெண்ட் அல்லன். நான் என்னை ஒரு ஜோதிடனாக உணர்ந்ததும் இல்லை. கடிகாரத்தை கண்டுபிடித்தவன் தான் மேதையே தவிர அதை பார்த்து நேரத்தை சொல்பவன் மேதையில்லை. அதே மாதிரிதான் ஜோதிடத்தை வடிவமைத்த ரிஷிகள் மேதைகளே தவிர பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மேதைகளல்லர்.

மேஷம்

மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
இவிக கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா மேஷ ராசிக்காரங்க தான். (உங்க கொலிக்ஸ் உங்களை சரியான பிட்பிட் சமாசாரம்/ அலிகிரி/ஆத்திரம் பிடிச்சவருனு கிண்டலடிப்பாய்ங்க)
போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க.வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது.முன்னணில, முன்னுதாரணமா திகழனும்னு பார்ப்பாய்ங்க. உலகம் பிழைக்க விடுமா? விடாது. ச்சோ போராட்டமயமான வாழ்க்கை. நல்ல தலைமை குணங்கள் உள்ள எம்.டி, மேனேஜர், பிறவித்தலைவர்கள் கண்ல நீங்க பட்டிங்கனா உங்க மாதிரி பார்ட்டிங்கள விடவே மாட்டாய்ங்க. ஒரே அமுக்குத்தான். அரைகுறைங்க கிட்டே மாட்டினா நாஸ்திதான்.

சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னியில் சஞ்சரிக்கிறாரு கன்னி இவிகளுக்கு 6 ஆமிடம். சனி 10,11 க்கு அதிபதி. பொதுவிதிப்படி சத்ரு,ரோக,ருண உபாதைகளில் இருந்து ரிலீஃப் கிடைக்கனும் தான் இல்லேங்கலை. ஆனால் இவர் இவிகளுக்கு 10 க்கு அதிபதிங்கறதால செய்தொழில்,உத்யோகம்,
வியாபாரத்துல பிரச்சினை வர்ரதுக்கு வாய்ப்பிருக்கு. 11 க்கு அதிபதிங்கறதால மூத்த சகோதர சகோதரி வகையிலும் லொள்ளு வரலாம்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி துலா ராசியில சஞ்சரிக்கிறாரு. இது இவிகளுக்கு 7 ஆமிடம். பொதுவிதிப்படி சனி 7 ல வரக்கூடாது. அப்படி வந்தா துஷ்ட களத்ரம்,அரூப களத்ரம்,குரூர களத்ரம்,களத்ர ஹீனம், நீச களத்ரம் இப்படி ஏதோ ஒரு வகையில ஆப்படிச்சுருவாரு.
( களத்ரம்னா காதலி,மனைவிங்கோ)

குரு:
2012, மே 17வரை ஜன்மராசியிலயே சஞ்சரிக்கிறாரு. இதனால ரோசனை சாஸ்தியாயிரும். டைட் ஷெட்யூல் இருக்கும். வேளைக்கு சாப்பிட முடியாது. முகத்துல கவர்ச்சி குறையும், சிலருக்கு அடி பிடின்னு கண்ணாலம் நடக்கும். ஆனால் செப்டம்பர் 5 ஆம் தேதி குரு மாறி 2 ஆமிடத்துக்கு வர்ரவரை பொருளாதார ரீதியில நெருக்கடி இருக்கும். ஜாய்ண்ட் ஷ்யூரிட்டி போடாதிங்க.

குரு உங்களுக்கு 9/12 க்கு அதிபதி. சேமிப்பு சொத்தா மாறலாம். அல்லது ஒரு சொத்தை சேமிப்பா மாத்தலாம். உ.ம் ஃபிக்சடை உடைச்சு சொத்து வாங்கறது, அ சொத்தை வித்து ஃபிக்சட்ல போடறது. என்னதான் சேமிப்பே மொத செலவுன்னு இருந்தாலும் படக்குன்னு வீண் விரயங்கள் நட்ந்தே தீரும்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல சஞ்சரிப்பாரு. அப்போ பொருளாதார நெருக்கடி குறையும்.ரெவின்யூ இன்கமை வச்சு சொத்து வாங்க பார்ப்பிங்க. அல்லது சொத்து/சேமிப்புகள்ளருந்து ரெவின்யூ இன்கம் அதிகரிக்கும்.

பேச்சுக்கு மதிப்பு கூடும்.பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள தொழில்/துறைகளில் உள்ளவுக நெல்லாவே டெவலப் ஆவீக.

குடும்பத்துல நல்ல ஒற்றுமை -புரிதல் உருவாகும்.ஆனால் வருமானம் கூடினாப்பலயே செலவும் கூடும். என்ன ஒரு ஆறுதல்னா அதெல்லாமே சுப செலவா இருக்கும்.( தேவையில்லாத சாங்கியம்,
சம்பிரதாயத்துக்கு வேட்டு விடாம ப்ரொடக்டிவா செலவழிக்க பாருங்க)

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
இந்த காலகட்டத்துல பணம் முடங்கலாம். கொடுக்கல் வாங்கல்ல வில்லங்கம் வரலாம். பேச்சு தடுமாறலாம், கொடுத்த பேச்சை காப்பாத்த முடியாம போகலாம். குடும்பத்துல பிரச்சினைங்க வரலாம். கண் நோய் கூட வரலாம்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 1-7 ஆம் இடங்கள் என்பதால் ராகு கேது 1-7 ல் உள்ள பலன் நடக்கும். ( அடுத்த ஒன்னரை வருசத்துக்குங்கோ)

உடல் இளைக்கலாம், முகம் கருக்கலாம். அல்லது ஊளை சதை போடலாம். சந்தேக புத்தி ஏற்படலாம். அல்லது அனைவரையும் நம்பி மோசம் போகலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி ஏற்படலாம்.நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ மாறலாம்.
தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.
மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் உருவாகலாம்.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால செவ் சஞ்சாரத்தை வச்சும் சில விஷயங்களை சொல்லியிருக்கேன். முக்கியமா மேஷ ராசிக்கு இவர் ராசி நாதனாவும் இருக்கிறதால இந்த பலன் மேஷராசிக்காரவுகளுக்கு ரெம்ப அவசியமானது.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி:
இது ஆறாமிடம். பொதுவிதிப்படி சத்ரு ரோக ருண உபாதைகளில் இருந்து ரிலீஃப் கொட்க்கனும்.ஆனால் ராசி நாதனாக இவர் 6 ல் நிற்கிறதால சத்ரு ரோக ருண உபாதைகள் ரெம்பவே அலைக்கழிக்கும்.

ஆகஸ்ட் 14 முதல் துலா:
இது உங்களுக்கு 7 ஆமிடம் இதனால ஃப்ரெண்ட் லவர் பார்ட்னர் வைஃப் வகையறாவில் முட்டல்மோதல்னு ஆரம்பிச்சு பிரிவு கூட வரலாம். இவர் ஜன்மத்தை பார்க்கிறதால உஷ்ண ரோகங்கள் வரலாம். மின்சாரம், நெருப்பால் ஆபத்து வரலாம்,கொம்புள்ள பிராணிகளால் தொல்லை வரலாம் ( தம்பதி இருவருக்கும்) ஆகஸ்ட் 4 ஆம் தேதியே துலா ராசிக்கு வந்துர்ர சனியோட இந்த செவ் வேற சேர்ரது ரிஸ்குதேன்.

ஆனால் 10/11+10/11 ங்கற கோணத்துல பார்க்கும் போது செய் தொழில் உத்யோகத்துல அதிகம் உழைக்க வேண்டி இருந்தாலும் உழைப்புக்கேற்ற பிரதி பலன் நிச்சயமா கிடைக்கும்.

ஆனால் சனி+செவ் என்ற கோணத்துல பார்க்கும் போது உங்களுக்கு/மனைவிக்கு தையல் போடவேண்டி கூட வந்துரலாம். அல்லது மேற்சொன்ன தீய பலன்கள் ( உஷ்ண ரோகங்கள் முதல் கொம்புள்ள பிராணி சமாசாரம் வரைக்கும் ) பெரிதாகவே பாதிச்சுர வாய்ப்பிருக்கு.

செப் 28 முதல் விருச்சிகம்:
இது உங்களுக்கு எட்டாமிடம். மரண செய்தி எதாவது வந்தாலோ அ அதுமாதிரி ஃபங்க்சன்ஸ்ல கலந்து கிட்டாலோ நாட் பேட். இல்லின்னா மட்டும் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிருவிங்க. டேக் கேர்

நவம்பர் முதல் 9 தனுசு:
அப்பாவோட மோதல் வரலாம். சேமிப்பை கூட செலவழிக்க வேண்டி வரலாம், தூர தேச தொடர்புகள் லாபம் தரலாம்.

டிசம்பர் 17 முதல் மகரம்.
இது செவ்வாய்க்கு உச்சராசி. ஜீவன பாவம் வேற. அதனால யு கென் எக்ஸ்பெக்ட் பெஸ்ட் ரிசல்ட்ஸ் இன்
யுவர் கேரியர்.ஆனால் மத்தவுக உங்களை புரிஞ்சிக்க முடியாம போயிர்ர அளவுக்கு ஒர்க்கஹாலிக்காயிருவிங்க. பார்த்து செய்ங்க.

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்:
இது உங்களுக்கு லாபஸ்தானம். பிரச்சினை ஏதும் இருக்காது. செவ் காரகம் கொண்ட துறைகளில் (போலீஸ் மிலிட்டரி, ரயில்வே இத்யாதி) லாபத்தை எதிர்பார்க்கலாம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :
இது உங்களுக்கு விரயஸ்தானம். லக்னாதிபதியே விரயத்துல வர்ரதால ஹெல்த் ட்ரபுள் கொடுக்கலாம். மனசு கூட ரெம்ப சுஸ்தா இருக்கும். ஒதகாத மேட்டர்ல கூட ஆருனா கைட் பண்ணா நல்லாருக்குமேன்னு நினைக்கிற அளவுக்கு ஆயிருவிங்க. அவிக கைடன்ஸும் உதவாது. முக்கியமுடிவுகள் ஏதும் எடுக்க வேண்டாம். தள்ளி போடுங்க. (கு.ப ஒன்னரை மாசம்)

Advertisements

One thought on “தமிழ் புத்தாண்டு பலன் 2012 – 13

    Muthamizh said:
    April 16, 2012 at 3:22 pm

    Sir,

    I have sent you a mail on 11.04.12 with my horoscope. Please tell me when will I settle in my life financially.

    Thanking you.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s