2012-13 புத்தாண்டு பலன் : ரிஷபம்

Posted on

எச்சரிக்கை:
நமக்கு கோசார பலன் மேல அந்த அளவுக்கு நம்பிக்கை கடியாது. மேலும் கடந்த வருசம் மாஞ்சு மாஞ்சு எல்லா பெயர்ச்சிக்கும் பலன் எழுதியாச்சு. கொக்குக்கு ஒன்னே மதின்னு ஒரு கிரகத்தை பத்தி நோண்டி நுங்கெடுக்க சொன்னா ஆராய்ச்சிக்கெல்லாம் சான்ஸ் இருக்கும்.ஆண்டுபலன்லாம் கல்லை மூட்டையா கட்டிக்கிட்டு மாங்கா அடிச்ச மாதிரி தான்.

நம்முது கடகலக்னமாச்சா எதை செய்தாலும் நமக்கா ஸ்பார்க் ஆகி செய்தாதேன் த்ரில்லு. ஆரோ நாலு பேரு மெயில் பண்ணிட்டாய்ங்களேன்னு எழுத ஆரம்பிச்சது தப்பா போச்சு.இதுல வழக்கம் போல ஜா.ரா அண்ட் கோ பயத்துல நோ கமெண்ட்ஸ் வேற. அதனால தேன் ஆண்டுபலன் டல்லடிக்குது ( நமக்கே உறைக்குது)

நாளைக்கும் நோ கமெண்ட்ஸ்னா ஆண்டுபலனை ஊத்தி மூடிட்டு உணவும் உடலுறவும் சூப்பர் முக்காபுலாவுக்கு போயிருவம்.ஆமாம் சொல்ட்டன்.

மத்தபடி பாக் அதிபர் வந்து போனதை பத்தி தமிழக அரசியல்ல நெல்லாவே அலசியிருக்காய்ங்கப்பா. இதை நம்மாளுங்க ( சக பதிவர்கள்) சூட்டோட சூடா செய்திருக்கலாமே. ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு விமர்சனம் எழுத சொல்லி கேட்டிருந்தேன். சிலர் ஹிந்து காரவுக மாதிரி எழுத்து பெரிசா இருந்திருக்கலாம் எட்ஸெட்ரான்னு முடிச்சுட்டாய்ங்க.

முக்கியமான பார்ட்டிங்க ரெண்டு பேர் கிட்டருந்து விமர்சனம் எதிர்ப்பார்க்கிறேன். கிடைச்சதும் போட்டுரலாம். இன்னொரு முக்கியமான மேட்டர் விமர்சனம் எழுத நினைக்கிறவுகளாகட்டும் -வாங்க நினைக்கிறவுக ஆகட்டும் சீக்கிரம் செய்துருங்க.ஏன்னா மிக குறைந்த பிரதிகளே இருக்கு. மறு அச்சு -மறுபதிப்புக்கெல்லாம் போற மாதிரி இல்லை. ( 2012 ,ஜூன்ல மகளுக்கு கண்ணாலம் வச்சிருக்கமில்லை)

எங்க கிளம்பிட்டிங்க? ஜோதிடம் 360 க்கு ஆர்டர் கொடுக்கவா? விமர்சனம் எழுதவா? சுபஸ்ய சீக்ரம் !
உடுங்க ஜூட்

மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
இவிக குழந்தை மாதிரி .அல்ப்ப சந்தோஷி. எதிராளி கொஞ்சம் போல அக்கறையோட பேசினா போதும் மனசுல எதுவும் வச்சிக்காம உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி வம்பில் மாட்டிப்பாய்ங்க. ஆனா போக போக மித பாஷியாயிரவும் வாய்ப்புண்டு. (முக்கியமா பெண்கள்) கொடுத்த பேச்சை காப்பாத்தனும்னு துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பாரு. . தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லனாக பெயரெடுக்கலாம். மாற்றங்களை விரும்பாத ராசி இது. செக்கு மாடு மாதிரி ரொட்டீனுக்கு பழக்கப்பட்டவுக. பணம், பேச்சு, குடும்பம்னால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே இந்த விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்ப உறவுகளில் அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்

சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னியில் சஞ்சரிக்கிறாரு கன்னி இவிகளுக்கு 5 ஆமிடம். சனி 9, 10 க்கு அதிபதி. பொதுவிதிப்படி மறதி வாட்டனும், அவமானம் நடக்கனும்,மந்த புத்தி ஏற்படனும், குழந்தைக மேட்டர்ல பிரச்சினை வரனும். இல்லேங்கலை.

ஆனால் இவர் இவிகளுக்கு 9,10 க்கு அதிபதிங்கறதால செய்தொழில்,உத்யோகம்,வியாபாரத்துல திடீர் அதிர்ஷடம் கதவை தட்டலாம். கை விட்டுப்போன சொத்து மீள வரலாம். தூரதேசங்கள்ளருந்து உதவி கிடைக்கலாம். ஒரு காலத்து சேமிப்போ முதலீடோ இப்ப திரும்ப கிடைக்கலாம். லாஜிக்கே இல்லாம தொழில்,உத்யோகம்,வியாபாரம் அமையலாம். அதை நீங்க உங்க தகுதிக்கு குறைவானதா நினைச்சு குமுறலாம்.அது வேற விசயம்.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி துலா ராசியில சஞ்சரிக்கிறாரு. இது இவிகளுக்கு 6 ஆமிடம். பொதுவிதிப்படி பொதுவிதிப்படி சத்ரு,ரோக,ருண உபாதைகளில் இருந்து ரிலீஃப் கிடைக்கனும் தான் இல்லேங்கலை. ஆனால் இவர் இவிகளுக்கு 9, 10 க்கு அதிபதிங்கறதால அப்பா ,அப்பாவழி உறவு, சொத்து,சேமிப்பு,தூர தேசத்து தொடர்புகள் மற்றும் செய்தொழில்,உத்யோகம்,
வியாபாரத்துல கடன் ஏற்படலாம் -இவிக உடல் நிலைபாதிக்கப்படலாம் ( முக்கியமா கால் ,நரம்பு,ஆசனம்) மேற்சொன்ன விஷயங்களில் பிரச்சினைகள் வர்ரதுக்கும் வாய்ப்பிருக்கு. ஒரு சிலர் கடன்பட்டு சொத்து வாங்குவாய்ங்க. சிலர் சொத்தை வித்து கடன் தீர்ப்பாய்ங்க. மிக மிக சிலர் சொத்தை வச்சு சொத்து வாங்குவாய்ங்க.

குரு:
2012, மே 17வரை விரயத்துல சஞ்சரிக்கிறாரு. இவர் அஷ்டமாதிபதிங்கற வகையில இது நல்லது தான். ஆயுள் கூடும். உங்களால ஃபேஸ்பண்ணவே முடியாத எதிரி தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுப்பாரு.

இவர் உங்களுக்கு லாபாதிபதியாவும் இருக்கிறதால நீங்க ரெம்ப எதிர்பார்த்த லாபம்/பலன் கிட்டாது போவதோடு நஷ்டமும் வரலாம்.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா ஜன்ம குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. இதனால ரோசனை சாஸ்தியாயிரும். டைட் ஷெட்யூல் இருக்கும். வேளைக்கு சாப்பிட முடியாது. முகத்துல கவர்ச்சி குறையும், சிலருக்கு அடி பிடின்னு கண்ணாலம் நடக்கும். ஆனால் செப்டம்பர் 5 ஆம் தேதி குரு மாறி 2 ஆமிடத்துக்கு வர்ரவரை பொருளாதார ரீதியில நெருக்கடி இருக்கும். ஜாய்ண்ட் ஷ்யூரிட்டி போடாதிங்க.

குரு உங்களுக்கு 8/11 க்கு அதிபதிங்கறதால நெருங்கிய உறவுல ஒரு மரணம் நிகழும் ( அண்ணன் முறை உள்ளவுக/அல்லது பிள்ளை முறை வர்ரவுக ) வயிறு இதயம் பாதிக்கலாம். அதே நேரம் உங்கள்ள ப்ராஃபிட் மோட்டிவ் அதிகமாகும். எது எப்படி போனாலும் ரெண்டு கிராம் தங்கமாச்சும் வாங்கிருவிங்க. இது உங்க எல்டர் சிஸ்டர்/எல்டர் ப்ரதர் உதவியால கூட மெட்டீரியலைஸ் ஆகலாம்.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

அஷ்டாமதிபதியா இவர் வக்ரமாறது நல்லது.ஆயுள் கூடும். ஆனால் அதுக்கு மிந்தி மறைஞ்சிருந்த உடல் நல பிரச்சினை எல்லாம் வெளிப்படும்.

லாபாதிபதியா இவர் வக்ரமாறது நல்லதில்லை. உங்க மூத்த சகோதர/சகோதிரியின் செயல்பாடுகளை பார்த்து ஷாக் ஆயிருவிங்க.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 12-6 ஆம் இடங்கள் என்பதால் ராகு கேதுவால் பிரச்சினை இருக்காது. ( அடுத்த ஒன்னரை வருசத்துக்குங்கோ) பிற மொழி பேசறவுக பிற மதங்களை சேர்ந்தவுக,புதுசா அறிமுகமாகிறவுகளால நல்லது நடக்கும். ஏற்கெனவே 6 ல் இருக்கும் சனியோட ராகு சேர்ரதால சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி போன்ற பலன்கள் வேகம் பிடிக்கலாம்.ஆனால் அப்பாவோட (இருந்தா) பலம் குறையும், தொலை நோக்கோடு நீங்க எடுக்கிற முடிவுகளை செயல்படுத்தற விஷயத்துல ரகசிய எதிரிகள் சதி திட்டங்கள் தீட்டலாம். செய்தொழில் வியாபாரத்துலயும் ” நீக்கு போக்கா” செயல் படவேண்டி வரலாம். செவ்வாய் அனுகூலமா இருக்கிற காலத்துல ஓகே. செவ் ஆப்படிக்கிற நிலையில இருந்தா இந்த அஜீஸ்மென்ட்ஸால போலீஸ் வரை கூட கை கட்டி பதில் சொல்லவேண்டி வரலாம்.டேக் கேர்.

இந்த மாதிரி சந்தர்ப்பத்துல விரயத்துல உள்ள கேது விரக்தியை கொடுப்பாரு.கோவில் குளம்,சாமி பூதம்னு கொஞ்சம் சுத்தல்ல விடுவாரு.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால நேத்திக்கு மேஷ ராசிக்கு செவ் சஞ்சாரத்தை வச்சும் சில விஷயங்களை சொல்லியிருந்தேன் . முக்கியமா மேஷ ராசிக்கு இவர் ராசி நாதனாவும் இருக்கிறதால இது மேஷராசிக்காரவுகளுக்கு ரெம்ப அவசியமானதுங்கற வகையில ஓகே.

ரிஷபராசிக்கு இவர் களத்ராதிபதி + விரயாதிபதி. பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது.

ஆனால் களத்ராதிபதியா இவர் 6 ல வர்ரது மட்டும் நல்லதில்லை .பொஞ்சாதியோட லொள்ளு தாங்க முடியாம போயிரும்ன்னு சொல்லி முடிச்சுர்ரன். .

மத்தபடி செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது ரிஷபராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு அஞ்சாமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 6 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு ஏழாமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு எட்டாமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 9 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 10 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 11 ஆமிடம்

Advertisements

5 thoughts on “2012-13 புத்தாண்டு பலன் : ரிஷபம்

  arul said:
  April 17, 2012 at 6:00 am

  pathivukku nandri

  ThirumalaiBaabu said:
  April 17, 2012 at 8:10 am

  அண்ணனுக்கு வணக்கம் !!!
  நிச்சயம் இந்த ஆண்டு பலன் பதிவுகள் அந்த அந்த ராசிகாரர்களுக்கு ஒரு நல்ல அறிவுரையாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை . பிறகு ஏன் ??? வருத்தம் ???

  இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளது திருமணத்திற்கு …
  தங்களது மகளின் திருமணத்திற்கு , எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  நன்றி !!! வணக்கம் !!!

  yoghi said:
  April 17, 2012 at 10:40 am

  நல்லாதேன போய்க்கிட்ருக்கு அப்புரம் ஏன் சஞ்சலம்?
  ப்லீஸ் கன்டினியூ பன்னுங்க தல‌

  MINNAL said:
  April 17, 2012 at 12:23 pm

  அண்ணனுக்கு வணக்கம் !!!

  send your daughter marraige invitation to our raders, we will come and attedn the marriage

  thanks
  MINNAL MARUTHU

  Mani said:
  April 17, 2012 at 4:18 pm

  தலை ரொம்ப நாளா கமெண்ட் போடாம பதிவை படிக்கறதோட சரி. ம் இங்கு நமக்கு தலைக்கு மேல ஏகப்பட்ட வேலைகள். தொல்லைகள் எங்கு தான் இல்லை. ஆனாலும் ஜுலை மாதத்தில் தங்கள் மகளுக்கு திருமணம் நிகழ உள்ள செய்தி அறிந்து வாழ்த்துக்களை சொல்லாமல் இருக்க முடியவில்லை. மிக்க மகிழ்ச்சி. தங்கள் மகள் நல்லதொரு குடும்ப வாழ்கையை பெற்று வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று இன்புற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s