எம்.ஜி.ஆரின் ரகசிய வாழ்க்கை

Posted on

அண்ணே வணக்கம்ணே !
லக்னாதிபதி எங்கே இருந்தாலும் திருமணத்தடை – தாமதம் – திருமண வாழ்வில் சிக்கல் -ஆண்மை இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்குன்னு ஸ்தாபிச்சு 12 பாவங்களுக்குமா தொடர் பதிவுகள் எழுதி முடிச்சாச்சு.

ச்சொம்மா ஜாலியா வாழ்ந்து முடிச்ச ஒரு பார்ட்டியோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணா என்னன்னு ஒரு ரோசனை.

மொதல்ல நம்ம மைண்ட்ல ஸ்பார்க் ஆன பேரு வாத்யாரு பேருதேன். இந்த சப்ஜெக்ட்ல ஆராச்சும் இதுக்கு மிந்தியே எழுதிட்டாய்ங்களோன்னு பார்த்தா சொல்லிவச்சாப்ல சுப்பையாசாரும், நம்ம சதீஷ் சாரும் எளுதியிருக்காய்ங்க. ஆனால் அவிக செலாவணியில இருக்கிற பர்த் டைமை எடுக்காம ஆரோ எப்பமோ எளுதின பர்த் டைமை வச்சு ஜாதகம் கணிச்சு போட்டிருக்காய்ங்க. அவிக உபயோகிச்ச பர்த் டீட்டெய்ல்ஸ் கீழே.
பிறந்த நாள்: 28 .01.1917
காலை மணி 6.30
இடம் : கண்டி

ஆனால் மேம்போக்கா அலசினதுல வாத்யாரு அஃபிஷியலா கொண்டாடிக்கிட்டிருந்த டேட் ஆஃப் பர்த்தை வச்சு கணிச்ச ஜாதகமே அவரோட லைஃபுக்கு பச்சக்குன்னு பொருந்துதுன்னு தோனிச்சு. அதனால கோதாவுல இறங்கிட்டம். பிறந்த நேரத்துல ஒரு சின்ன அஜீஸ்மென்ட் அதாவது சுப்பையா சாரும் ,சதீஷ் சாரும் காலை 6.30 க்கு கணிச்சிருக்காய்ங்க. அதனால மகர லக்னம் வந்திருக்கு. மகரலக்னம்னா தமிழ்சினிமாவுல ரெண்டாவது சிவாஜியா இருந்துட்டு போயிருப்பாரு.(மகரம் ராசிச்சக்கரத்துல 10 ஆவது ராசி – இவிக கீதை சொல்ற கர்மயோகத்துக்கு அருமையான எடுத்துக்காட்டு – கருமத்தை செய்வாய்ங்க -பலனை எவனோ அனுபவிச்சுட்டு போயிருவான் – எவன் அனுபவிக்கிறான்னு கூட கண்டுக்க மாட்டாய்ங்க-ரஜினி மாதிரி)
ஆனால் வாத்யாரு அப்படியா வாழ்ந்தாரு? அவரு மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்னாலும் ஹோம் ஒர்க் பண்ணாலும் ஹார்ட் ஒர்க் எல்லாம் பண்ணதில்லை -அவரு ஷோ மேன்.
அதனால வாத்யாரு இன்னம் கொஞ்சம் மிந்தியே அதாவது தனுசு லக்னத்துல பிறந்திருக்கனும்னு பட்சி சொல்லுது . அப்பம் ஜாதக சக்கரத்தில் கிரகங்கள் நின்ற நிலவரம்:
லக்னம்: தனுசு ; ராசி : துலா ; லக்னத்துல சுக்கிரன்,ராகு , தன பாவத்துல சூரியன்,செவ்வாய், வக்ர புதன், அஞ்சுல குரு , 7 ல கேது , எட்டுல வக்ர சனி , எட்டுக்கதிபதியான சந்திரன் 11 ல்
வாத்யாரு ஜாதகப்படியான தசாபுக்திகள்ள அவருக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க உதவின சைட்டு இதோ
எச்சரிக்கை :
1. நீங்க எம்.ஜி.ஆர் ரசிகரா இருக்கலாம் ( ஹிஹி ஒரு காலத்துல நாமும்) ஆனால் இங்கன அவர் ஒரு ஜாதகர் தான். நல்லது கெட்டது ரெண்டும் வரும். உ.வ படாதிங்க.வாழ்ந்து முடிச்சவுக வாழ்க்கையெல்லாம் நமக்கும் ஒரு பாடம்.அதுவும் ஜோதிடத்தின் மீது ஆர்வம் உள்ளவுகளுக்கு ஒரு ப்ராஜக்டுன்னு கூட சொல்லலாம்.
2.நீங்க எம்.ஜி.ஆரை பிடிக்காதவரா இருக்கலாம். ஆனால் இதை ஒரு உதாரண ஜாதக ஆய்வா மட்டும் எடுத்துக்கங்க. உங்களுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காதுங்கறதுக்காவ அவரோட ப்ளஸ் பாய்ண்டை சொல்லாம இருக்க முடியாதில்லை.
லக்னம் தனுசு:
தனுசு ராசி/லக்னம் மன்சனுக்கு ஃபோர் சைட்டட்னெஸ்ஸை வாரிக்கொடுக்கும். எம்.ஜி.ஆரோட படங்களை பார்க்கிறவுகளுக்கு “கொய்யால இந்தாளு முதல்வர் பதவியை எய்ம் பண்ணி ப்ளான் பண்ணியிருக்கான்யா”ன்னு தான் தோனும்.
மேலும் தனுசு ராசி/லக்னத்தோட பெரிய மைனஸ் பாய்ண்ட் அவிக பேச்சு ( மானில சுயாட்சிக்காக ராணுவத்தை சந்திப்பேன் , தொண்டர்கள் கத்தி வச்சுக்கனும்,போஸ்ட் கார்டு விலையை குறைப்பேன் – இதெல்லாம் ச்சொம்மா சாம்பிள்தான்)
ராசி துலாம்:
இதுக்கு நாம ஜோதிடம் 360 புஸ்தவத்துல தந்திருக்கிற பலனை அப்படியே பேஸ்ட் பண்ணிர்ரன். ப்ராக்கெட்ல இன்டர்ப்ரிட்டேஷன்
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். ( நிறைய தடவை ப்ரொட்யூசர்ஸ் கிட்டே அட்வான்ஸ் வாங்கித்தான் தான தருமம் பண்ணியிருக்காரு)
தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட் ( கலைஞர் ) ,லவர் ( ????) ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும்.
எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். (இது ஜானகியம்மா மேட்டர்ல நடந்ததா படிச்சிருக்கன்)
சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர் (ப்ரூக்ளின்ல அப்படித்தானே இருந்தாரு)
இளமையில் வறுமை வாட்டினாலும் மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . 28/03/1936 – லயே மொத படம் சதிலீலாவதி ரிலீஸ் ஆகுது. ( ஆனால் பத்தோட ப்தினொன்னா தான் இருந்தாரு மத்திம வயசுலதான் ஸ்டார் அந்தஸ்து கிடைக்குது)
என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். ( பண்ருட்டி ராம்ச்சந்திரனை வச்சு ஒரு சேதி சொல்வாய்ங்க அதெல்லாம் வதந்தின்னே நம்புவோம்)
இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். ( ஜெ கூட ராஜீவ் காந்திக்கு லெட்டர் எல்லாம் எழுதினதா கேள்வி)
1-7 ல் ராகு,கேது:
ஆரம்ப கட்டத்துல வாத்யாரு சோமாலியா பிரஜை மாதிரி கண்ல மட்டும் உசுரை வச்சுக்கிட்டு இருந்தது தெரியும். 17/Jan/1917 முதல் 13/Dec/1930 வரை ராகு தசை நடந்ததால படிப்பு காலி.ஆனால் ஜன்ம ராகுவால் வரக்கூடிய இதர பிரச்சினைகள் அவாய்ட் ஆயிருச்சு. ஆனால் ராகு அவர் வாழ்க்கையில நிறைய ரகசியப்பக்கங்களை கிரியேட் பண்ணி வச்சுட்டதை ஆரும் மறுக்க முடியாது. கலைஞருக்கும் இவருக்கும் பகை ஏற்பட இது கூட ஒரு காரணம். இவிக பகை பாம்பு பகை. ( மு.க.முத்துவோட படத்துக்கு க்ளாப் அடிச்சதே வாத்யாரு தான். ஞா வச்சுக்கங்க)
ஜன்மத்துல வெறும் ராகு இருந்திருந்தா அது வேற மாதிரி போயிருக்கும்.ஆனால் கூட சுக்கிரனும் சேர்ந்ததால பொம்பளை மேட்டர்ல மட்டும் டெக்காமெரான் கதைகள் மாதிரி நிறைய உருவாயிருச்சு.
எதிர்காலத்துல எரிசாராய ஊழல் வெடிச்சு கிளம்பி வாத்யார் பேரை டேமேஜ் பண்ணதுக்கு கூட இதுவே காரணமா இருக்கலாம். 7 என்றால் மனைவி .ராகு நிழல்கிரகம். நிழல் கிரகங்கள் தாங்கள் நிற்கும் பாவங்களின் காரகத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துரும். இதனால்தான் அவரோட முந்தின மனைவியர் நிலைமை அப்படி ஆயிருச்சு. அரசியல்ல ஜானகியம்மா பட்ட பாடு தெரியும்ல.
ஒரு வகையில இன்னைக்கு அம்மா பட்ட மரமா தனி மரமா நிக்கவும் ,கோவில் குளம், யாகம்,ஹோமம்னு அலையவும் இந்த 7 லான கேது கூட ஒரு காரணமா இருக்கலாம். ( போரில் தோள் கொடுத்த தோழிங்கற வகையில)
வாக்குஸ்தானத்தில் சூரியன்+செவ்வாய்:
வாத்தியாருக்கு தொண்டையில குண்டு இறங்க இதான் காரணம். ஏதோ வக்ர புதன் கூட இருந்ததால சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
இதுக்கு பிறவுதான் ரத்தத்தின் ரத்தமேங்கறதை ஆரம்பிச்சாரு. ( செவ்வாய் என்றால் ரத்தம்)
அஞ்சுல குரு:
புத்ரகாரகனான குரு புத்ரஸ்தானத்துல நின்னா புத்ரர்கள் இருக்கமாட்டாய்ங்கங்கறது பால பாடம். ப்ளானிங்குக்கு காரகரான குரு புத்திஸ்தானத்துல நின்னதால தான் “எதையும்” ப்ளான் பண்ணி சமாளிச்சாரு.
மேலும் அஞ்சுங்கறது பெயர் புகழை காட்டும் இடம். லக்னாதிபதின்னா ஜாதகர். இங்கே ஜாதகர் செய்யவேண்டிய எல்லா வேலையையும் ஜாதகரோட பெயரும் புகழும் சாதிச்சுரும்னு அருத்தம். இது அதிர்ஷ்டத்தை காட்டுமிடம். அதிர்ஷ்டம் ஜாதகருடன் ஒட்டிப்பிறந்ததுன்னு அருத்தம்.
இதே குருவுக்குத்தான் மாத்ருபாவாதிபத்யமும் கிடைச்சிருக்கு. போன ஜென்மத்துல இவருக்கு அம்மாவா இருந்தவுகளே இந்த ஜென்மத்துலயும் அம்மாவா வந்தாய்ங்க (போல) அதனாலதான் அம்மாவை தெய்வமா நினைச்சு வணங்கினாரு வாத்யாரு.
7 ல இருந்த கேது ( இவருக்கு சம சப்தகத்துல நின்ன ராகு) வேவு பார்க்கிறது உளவு பார்க்க வைக்கிறது ,ரகசிய மைக் வச்சு பதிவு பண்றது ,பாதாள அறைன்னு ஒரு சில பலனை எல்லாம் தந்திருக்காரு.
ஒரு சனி மட்டும் வெளிய வந்து வக்ரமாகாம இருந்திருந்தா 45 வயசுவரை சிங்கியடிச்சிருக்கனும்.ஆனால் அந்த வக்ர சனி கொஞ்சம் மிந்தியே லைஃப் கொடுத்துட்டாரு. ( சனி என்றால் நொண்டி -வாத்யாருக்கு வீரமணிய தூக்கிப்போடறச்ச கால் உடைஞ்ச பிறவுதான் புது இன்னிங்ஸ் அதுவும் வெற்றிகரமான இன்னிங்ஸ் துவங்கிருச்சுங்கோ)
2 க்கு அதிபதி எட்டுல இருந்தா ஊமை .அவரு வக்ரமானதால குளறலோட போச்சு. ஆனாலும் கடேசி காலத்துல மறுபடி இந்த எஃபெக்ட் வந்துருச்சு.
இதே சனிக்கு 3 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கு ( தைரியஸ்தானம்) இவரு எட்டுல நின்னதால தான் தில்லு துரையா வெல் எஸ்டாப்ளிஷ்ட் ரூலிங் பார்ட்டிய விட்டு வெளியவந்து ஃபைட் பண்ணாரு. சனி வக்ரம் பெற்றதால உயிர் தரிச்சிருந்து வெற்றியை அனுபவிச்சாரு.
இந்த அஷ்டமாதிபத்யம் சந்திரனுக்கு கிடைச்சு அவரு 11 ல நின்னாரு.அதனாலதேன் இவரளவு அழகு,கவர்ச்சி இருந்தும் அண்ணாரு திரைக்கு பின்னாலயே இருக்கவேண்டியதாயிருச்சு. தலைவருக்கும் சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை வந்தது.
தசாபுக்தி பலன்:
குரு தசை : (13/Dec/1930 முதல் 13/Dec/1946 வரை )
குரு மத்யகாலத்துல பலன் தரனும் . 1933 லயே அரசியல் ஆர்வம் ஆரம்பிக்குது. குரு அஞ்சுல நிக்கிறதால குழந்தைகளின்மை +பெயர் புகழ் ஆகிய பலன்கள் நடக்குது.
சனி தசை:( 13/Dec/1946 முதல் 12/Dec/1965 வரை )
சனின்னா அடிமைத்தனம். சனி வக்ரமா நின்னதால இவரா விருப்பப்பட்டும் – பிறரால் வேண்டப்பட்டும் 1950 முதல் 1972 வரை திமுகவுக்கு சர்வ் பண்றாரு.
புத தசை: 12/Dec/1965 முதல் 12/Dec/1982 வரை:
புதன் கேந்திராதிபத்யம் பெற்று பாவியா இருக்காறே அதெப்படி புத தசை சக்ஸஸ் ஆச்சுன்னு கேப்பிக.சொல்றேன். அந்த புதன் வக்ரமாயிருக்கிறதை கவனிங்க. பாக்யாதிபதியான சூரியனோடவும், பஞ்சமாதிபதியான செவ்வாயோடவும் சேர்ந்திருக்கிறதை பாருங்க.
1977 முதல் 1987 வரை முதல்வரா இருக்காரு. 12/Dec/1982 முதலே கேது தசை ஆரம்பிச்சுருது.05/Nov/1987 வரை கூட கேது தசையில குரு புக்திவரை கூட நின்னு விளையாடறாரு. அதுக்கு பிறகு வந்த சனி புக்தி ஆப்படிச்சுருது.

Advertisements

4 thoughts on “எம்.ஜி.ஆரின் ரகசிய வாழ்க்கை

  arul said:
  April 14, 2012 at 5:46 am

  nice explanation

  vinoth said:
  April 16, 2012 at 4:35 am

  ஜி.. இந்த பதிவை பாருங்க… பஞ்சாகமே தப்புன்னு சொல்லுறாங்க..
  இது சரியா …http://shanthibabu.blogspot.in/2012/04/blog-post_13.html
  இதையும் பாருங்களேன். http://valavu.blogspot.in/2007/01/blog-post.html

   S Murugesan said:
   April 16, 2012 at 6:58 am

   பாஸ் !
   நம்முது அனுபவ சோசியம். சனங்களோட ஃபீட் பேக் தான் முக்கியம்.அது அனுகூலமாவே இருக்கு. மத்தவுக என்ன வேணா சொல்லிட்டு போவட்டுமே.

   மேலும் ஆன்லைன் சோதிட ஆலோசனைங்கற ஒரு சுழல்ல மாட்டி ரெம்ப பிசி.

   நேரம் கிடைக்கும் போது கிளிச்சுரலாம்.

   -எஸ்.எம்

  kirshy.com said:
  May 19, 2012 at 12:46 pm

  அருமையான பதிவு …
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s