உணவும் உடலுறவும்

Posted on

உணவுங்கறது வண்டிக்கு போடற பெட்ரோல் மாதிரின்னு சொன்னா உடலுறவுக்கான சக்தி மட்டுமில்லை பொதுவான இயக்கத்துக்கு தேவையான சக்தியும் சேர்த்து வண்டி கொடுக்கிற மைலேஜுன்னு சொல்லலாம்.

உடலுறவுக்குன்னு பிரத்யேகமா உணவு முறைகளை நிறைய பார்த்திருப்பிங்க .. படிச்சிருப்பிங்க. தமாசு என்னடான்னா நீங்க பசிச்சு தின்னு – செரிச்சு கழிச்ச பிறகே திங்கறதுன்னு ஒரு சிஸ்டம் வச்சுக்கிட்டா போதும் 50 பர்சன்ட் பிரச்சினை ஓவர்.

இதை அடுத்து நீங்க திங்கறது பச்சைன்னா 100 % கியாரண்டி, அரை வேக்காடு,வேக வச்சதுன்னா 50% கியாரண்டி,வெறுமனே தாளிச்சதுன்னா 40% , எண்ணெயில போட்டு வதக்கினதுன்னா 20% கியாரண்டி. இதுவே பிணம்னா அது விஷம்.

உடலுறவுக்கும் உணவுக்கும் இடையில ஒரு ரெண்டு மணி நேரம் இடைவெளி மெயின்டெய்ன் பண்றதுதான் உடலுறவுக்கான முறை.

மத்தபடி கலப்புணவு பெட்டர் சாய்ஸ். ஐ மீன் அரிசி அரிசின்னு அலையாம கம்பு,கேழ்வரகு,கோதுமைன்னு கலந்து சாப்பிடனும். அரிசி ஒரு கப்புன்னா காய்கறி நாலு கப் சாப்பிடனும். இப்படி சின்ன சின்ன மாற்றங்கள் செய்தாலே தூள் பண்ணலாம்.

உணவு வாய் தொடர்பானது. வாய் ஒரு குழாயின் ஆரம்பம்னா ஆசனம் அதன் முடிவு. உடலுறவு இன உறுப்பு தொடர்பானது. இன உறுப்பு அதே குழாயின் முடிவான ஆசனத்துக்கு சற்று மேலே அமைஞ்சிருக்கு.

வாயில் ஏற்படும் அதிர்வு இன உறுப்பையும் தாக்கும். உடலுறவுக்கு வாய்ப்பில்லாதவுக நிறைய பேசி,தின்னு தினவை தீர்த்துப்பாய்ங்க. தங்கள் உடலுறவுக்கான தகுதிகளை மேலும் குறைச்சுக்குவாய்ங்க.

ஆமாம் திடீர்னு ஏன் இந்த மேட்டர் வந்துச்சுன்னு கேப்பிக. சொல்றேன். இன்னைக்கு நாம எடுத்துக்கிட்ட விஷயம் லக்னாதிபதி 12ல இருந்தா திருமணத்தடை எப்படி ஏற்படும்ங்கறதுதேன். 12ங்கறது விரயஸ்தானம். நம்மோட உணவு -உடலுறவு இச்சைகள் முறைகளை காட்டறது இந்த பாவம் தேன்.அதனாலதேன் மேற்படி சிறுகுறிப்பு. மேட்டருக்கு போயிரலாமா?

லக்னம்னா ஜாதகர். ஜாதகரோட உடல்,மனம்,புத்தி எல்லாத்தையும் காட்டும் இடம். விரயம்ங்கறது செலவழிக்கிற விதம் , திங்கறது,தூங்கறது, பலான காரியம் ஆகிய விசயங்களை காட்டுது. லக்னாதிபதி விரயத்துல இருக்கும் போது ஜாதகரோட மனம் மேற்சொன்ன 4 விஷயங்களையே சுத்தி சுத்திவர வாய்ப்பிருக்கு.

உங்க மனசு எதை சுத்தி சுத்தி வருதோ அது கிடைக்கிறது ரெம்ப கஷ்டமாயிரும். How long you have money at you mind you will not get money in to you hand. எதுவரைக்கும் பணம் உங்க மண்டையில இருக்கோ அதுவரை அந்த பணம் உங்க கைக்கு வராது.

இப்போ எந்த பத்திரிக்கையில பார்த்தாலும் ஆண்மை இழப்பு, செக்ஸ் குறைபாடு,எழுச்சியின்மைன்னு கவர் ஸ்டோரியாவே வருது. மேட்டர் இன்னாடான்னா சமுதாயத்தால ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்ட செக்ஸ் அண்டர் கிரவுண்டுக்கு போயிருச்சு. ஐ மீன் சனங்களோட தலைக்கு போயிருச்சு.

என் தலைக்குள்ள இருக்கிறதை உங்களால பார்க்க முடியாதில்லையா? செக்ஸ் தலைக்கு போனதும் ஃபிசிக்கல் ஆட்டிட்ட்யூட் மங்கிப்போயிருச்சு.

லக்னாதிபதி விரயத்தில் உள்ளவன் ஆன முதலில் அதிகம் செலவாகி அந்த டென்ஷன்லயே செக்ஸ் பவரை இழந்துர கூடும். இன்னைக்கு வர்ர நோய்கள்ள 90 சதவீதம் நோய்களுக்கு காரணம் ஆன முதலில் அதிகம் செலவாறதுதான்.

வரவுக்குள்ளயே செலவு பண்ண கத்துக்கிட்டா ( ஐ மீன் கட்டுப்படுத்திக்கிட்டா 90 சதம் நோய்களை விரட்டிரலாம்.

லக்னாதிபதி விரயத்தில் உள்ளவன் திங்கறதுக்கும்,தூங்கறதுக்கும் அதிகம் இம்பார்ட்டென்ஸ் கொடுக்கிற ஆளா மாறலாம்.

தூக்கமும், தீனியும் இயக்கத்துக்கு கட்டை போடற சமாசாரம். தீனிய பத்தி தனியா சொல்லத்தேவையில்லை “உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு”ன்னு சாமியாட ஆரம்பிச்சுருவம்.

உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது.

சாதாரண பௌதீக விதி என்னன்னா இயக்கத்துலதான் சக்தி பிறக்கும். ஆனால் யோகத்துல “ச்சும்மா இருந்தா சக்தியின் வட்டம் ஏற்படுங்கறாய்ங்க” இயக்கத்துல பிறக்கிற சக்தி செலவாகியே தீரும். ச்சும்மா இருந்ததால உருவான சக்தி இழக்கப்பட வாய்ப்பு குறைவு.

அடுத்தது தூக்கம். ஃப்ரெஷ்ஷா ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சா மூடு கிளம்பும் பாருன்னு சில பேர் சொல்வாய்ங்க. அது உழைப்புக்கு பின்னான தூக்கத்துக்கு பிறகு வர்ர ஃபீலிங். இதுவே 24 மணி நேரம், 365 நாள் தூங்கி வழிஞ்சுக்கிட்டிருந்தா செக்ஸ் பவர் கோவிந்தா.

செக்ஸ் பவர்னு தனியா ஒரு ம..ரும் கிடையாது. பொதுவான பாடி ஃபிட்னஸ் , ஹெல்த் கண்டிஷனை பொருத்ததுதான் செக்ஸ் பவரும். உபயோகிக்கப்படாத எதுவும் திடீர் இயக்கத்துக்கு வரும்போது மொரண்டு பிடிக்கும். லாஜிக்.

மேலும் சக்தி பிறக்கிறதே இயக்கத்துலதான். லக்னாதிபதி விரயத்துல மாட்டினா ஆரம்பத்துல அதிவேகமான இயக்கம் இருக்கும். எல்லாத்தையும் ஒழிச்சாகனுமே – விரயமாக்கனுமே. கில்மாவுக்கு வாய்ப்புள்ளவன் கில்மா அதுக்கு வாய்ப்பில்லாதவன் திண்ணிப்பண்டாரம், தூங்கு மூஞ்சியாயிருவாய்ங்க.

இதுவரை சொன்னது ஒரு கோணம். இன்னொரு கோணத்துல பார்க்கும் போது..இவிகளோட உடல் பலம்,மனோபலம்,முயற்சி,பயிற்சி,பட்டம் பதவி,பணம் பவிசு எல்லாமே வீண் விரயமாத்தான் போகனும். இதெல்லாம் அடுத்தவுகளுக்கு வேணம்னா உபயோகப்படலாமே தவிர இவிகளுக்கு உபயோகப்படாது.

“என்ன பேசறே.. மூளை இருந்து சுய நினைவோட தான் பேசறியா”ங்கற வசனத்தை அடிக்கடி கேட்டிருப்பிங்க. இது சொல்லப்படுவது அனேகமா லக்னாதிபதி விரயத்தில் உள்ள பார்ட்டிகளை நோக்கித்தான்.

நாம செய்றது தப்போ சரியோ மூளை இருந்து சுய நினைவோட செய்தா மீண்டுவர ஒரு சான்ஸ் இருக்கும். அதை விட்டுட்டு ஜீசஸ் சொன்னாரே ” இவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலிருக்கிறார்கள்”னு அதைப்போல செயல்பட்டா என்னா அருத்தம்.

கவி காளிதாஸ் பெரிய்ய முட்டாள். ஒரு கிளையில உட்கார்ந்துக்கிட்டு அதே கிளையை வெட்டிக்கிட்டிருந்தாராம்.அப்பத்தேன் சரஸ்வதி வரம் கொடுத்தாய்ங்களாம்.

நம்ம ஆட்சியாளர்கள், குடிகளோட செய்ல்களை பார்த்தா உட்கார்ந்திருக்கிற கிளையை வெட்டறாப்லயே தோனுது.

ஆக மொத்தத்துல லக்னாதிபதி விரயத்துல இருக்கிறது கூட திருமண /திருமண வாழ்வு ஆகியவிஷயங்களுக்கு ஆப்புதேன்.

எச்சரிக்கை: எப்படியோ டீல்ல விட்ட தொடர்பதிவை ஏறக்குறைய முடிச்சுட்டம். ஆனால் லக்னாதிபதி 9,10,11,12 லருந்தா அதனால ஏற்படக்கூடிய தீயப்பலன்களை குறைக்க என்ன பரிகாரங்கற டீட்டெய்ல்ஸை தராத விட்டுட்டம். இதை ஒரே மூச்சுல ஒரே பதிவுல முடிக்க முடியுதா பார்க்கிறேன். அதுவரை உடுங்க ஜூட்..

எச்சரிக்கை:
ஆக்சுவலா இந்த பதிவுக்கு லக்னாதிபதி 12ல் : திருமணத்தடைன்னு தலைப்பை வச்சிருக்கனும் அலெக்சா ரேங்க்ஸ்ல 25,000 க்குள்ள இருந்த நாம ஜோதிடம் 360 புண்ணியத்துல 1,40,000 த்துக்கு வந்துட்டமா இடைக்காலத்துல முட்டி மோதி 79 ஆயிரத்து 622 க்கு வந்திருக்கம். இதையாச்சும் தக்கவச்சுக்கனும்ல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s