அரசு விருதுகள் அந்தணர்க்கே!

Posted on

வேலை செய்றது எவ்ள முக்கியமோ ச்சும்மா இருக்கிறதும் அவ்ளோ முக்கியம். சிவாஜி வருசத்துக்கு டஜனுன்னு நடிச்சுக்கிட்டிருந்தாரு.தாளி எம்.எல்.ஏவா கூட ஜெயிக்க முடியல்லை. உலகம் தெரியாம வாழ்ந்துட்டாரு.

இதே நம்ம வாத்தியாரு 2 வருசத்துக்கு ஒரே படம்.அதுவும் பூஜையோட நிக்குமோ .. பாடல் பதிவோட நிக்குமோ மொத நா ஷூட்டிங்கோட நிக்குமோ தெரியாது சஸ்பென்ஸ். ஆனா சி.எம் ஆயிட்டாரு. இதுலருந்து என்னா தெரியுது?

வேலை செய்றது எவ்ள முக்கியமோ ச்சும்மா இருக்கிறதும் அவ்ளோ முக்கியம்.இது தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் பொருந்தும்.

இன்னைக்கு சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருதை அறிவிச்சிருக்காய்ங்க. விருதுக்குரியவர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி என்ற பிராமண கல்வி வியாபாரி..

“ஆமா நான் பாப்பாத்திதான்”னுட்டு சட்டசபையிலயே அறைகூவறவுக சி.எம்மா இருந்தா இன்னும் வேற என்ன நடக்கும்.

ஜஸ்ட் ஒரு கல்வி வியாபாரி மட்டுமில்லை. தங்களோட கல்லா பெட்டி நிரம்பாதுன்னு சமச்சீர் கல்வி, தனியார் பள்ளி கல்வி கட்டண சீரைமைப்புக்கெல்லாம் கோர்ட்டு வரி போய் “கட்டை”போட்ட அக்மார்க் கல்வி வியாபாரி. ( இதை பார்த்துத்தேன் நாமளும் கல்லா கட்டினா என்னன்னு லதா ரஜினிகாந்த் ஆஷ்ரம் ஆரம்பிச்சாய்ங்க போல.இவிக ரெண்டு பேருக்கும் என்ன உறவுன்னு பின்னாடி வருது)

இவிக ஆத்துக்காரரு ஆரு தெரியுமா? மூன்றாம் பிறை படத்துல ஊட்டியில குளிர் காயற நெருப்பு வெளிச்சத்துல காலஞ்சென்ற செக்ஸ் பாம் சிலுக்கு ஸ்மிதாம்மாவுக்கு முதுகுப்பக்க ஜிப்பை அவிழ்த்துவிடுவாரே ஒரு பெரியவரு. ஞா இருக்கா அவருதேன்.

நம்ம கவுண்டமணி, வடிவேலு வரவுக்கு மிந்தி ஜஸ்ட் லாபியிங் பலத்துல சினி ஃபீல்டுல நுழைஞ்சு பத்திரிக்கை ஜோக்குகளை வச்சு காமெடி(?) பண்ணிக்கிட்டிருந்த அய்யருங்க க்ரூப்புல மகேந்திரன்னு ஒரு பார்ட்டி இருந்தாரு. ஞா இருக்கா. இவிக அம்மாதேன் திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி.

ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இன்னொரு தகுதி கூட இருக்கு.இவரு நம்ம சூப்பற ஸ்டாருக்கு சகலை. அவ்வையார் ஆரு? கூழுக்கு பாட்டிசைத்து , தன் தமிழ் சேவைக்கு தன் இளைமையால எதுனா தடை வருமோன்னு பயந்து தமிழ்க்கடவுள் முருகன் கிட்டே முதுமையை வரமா கேட்ட பார்ட்டி.

சுடுகாட்டுக்கு போற வயசுல கூட ப்யூட்டி பார்லர்ல குடியிருக்கிற இந்த கிழவிக்கு அவ்வையார் விருது

சாதி இரண்டொழிய வேறில்லைன்னு சொன்ன அவ்வையார் “இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்”னு ஃபினிஷிங் டச் கொடுத்திருக்காய்ங்க.

இவிக இடாத போனா போவுது அரசுங்கற கோழி போட்ட முட்டைய கூட கட்டையால அடிச்சு உடைச்சவுக.

கொடுப்பதழக்கறுப்பான் சுற்றம் உண்டியும் உடையும் இன்றிக்கெடும்ங்கற குறளை ஆருனா இங்கிலிபீஸுல ட்ரான்ஸ்பர் பண்ணி அனுப்புங்கப்பா.

அவ்வையாருக்கும் இந்த மாராஜிக்கும் என்னா சம்பந்தமிருக்குன்னு இந்த விருதை கொடுத்திருக்காய்ங்களோ புரியலை. இப்படி பொருத்தமே இல்லாத விருதை தகுதியே இல்லாத பார்ட்டிக்கு
கொடுக்கிறதை விட ச்சும்மா இருந்திருந்தா இந்த வில்லங்கமே வந்திருக்காதில்லை.

சரிங்னா ரெம்பவே பத்திக்கிட்டு எரியும் போல ( நமம் டோண்டு அய்யருக்கு) மேட்டருக்கு வந்துருவம். லக்னாதிபதி பத்துல இருந்தா திருமணத்தடை எப்படி நிகழும்னு எழுத வேண்டிய தினம் இது.

பத்துன்னா ஜீவனம். ஐ மீன் செய்தொழில்,உத்யோகம் ,வியாபாரம். லக்னாதிபதின்னா ஜாதகர். லக்னாதிபதி பத்துல போயி நின்னா பார்ட்டி ஒர்க்கஹாலிக்காயிருவாரு.

சோறு,தண்ணி,தளுப்பு (?) எல்லாத்தையும் மறந்துருவாரு. ரவுண்ட் தி க்ளாக் வேலை,வேலை. இப்படியிருக்கிற பார்ட்டிக்கு சகஜமாவே திருமணத்து மேல ஆர்வம் இல்லாம போகலாம். தப்பித்தவறி பெரியவுக பாத்து முடிச்சு வச்சாலும் பொஞ்சாதி பிச்சுக்கிட்டு போயிரலாம்.

எந்த மேட்டரா இருந்தாலும் டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். ஜெ டிவியில நாமம் போட்ட பார்ட்டிங்க வரலாம்.அதுக்குன்னு அவிகதான் வருவாய்ங்க. சூத்திரப்பயலுவ எல்லாம் பார்த்துத்தான் தீரனும்னா எப்டிங்ணா?

அரசியல்ல ஊழல் இருக்கலாம். ஊழல் தவிர வேற எதுவும் செய்யமாட்டேன்னா எப்பூடி? ஜோதிட பதிவுகள்ள மூல நூல்களை குறிப்பிடலாம்.அதுக்குன்னு பக்கம் பக்கமா ஸ்கான் பண்ணி போடுவம். வரிக்கு வரி அப்படியே அடிச்சு விடுவம்னா எப்படி?

அதனால வாழ்க்கைங்கற பரீட்சையில வேலை உத்யோகங்கற சப்ஜெக்டுல மட்டும் நூத்துக்கு நூறுவாங்கிட்டா போதாது. கண்ணாலம், பொஞ்சாதி,புள்ளைக்குட்டிங்கற மேட்டர்ல அட்லீஸ்ட் 35 பர்சென்ட் கூட வாங்கலன்னா எப்படி?

Advertisements

9 thoughts on “அரசு விருதுகள் அந்தணர்க்கே!

  S Murugesan said:
  April 10, 2012 at 6:10 am

  மெயிலில் வந்த கமெண்ட்:
  அவ்வையார் “இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்”னு சொன்னதை (நாமம்) இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்னு புரிஞ்சுக்கிட்டாங்களோ என்னமோ?
  -எம்.மீனாட்சி சுந்தரம்

  arul said:
  April 10, 2012 at 6:31 am

  anna,

  eppadiyavathu 40% mark ella life subjectlayum vanganumnu thaan ellorum try pandrom but miss aagi life mudinchiduthu.enakku therinthavarai unavailability of sufficient money in a job or business is also a thing that is a reason for delay in marriage

  MINNAL said:
  April 10, 2012 at 10:29 am

  தமிழ் புத்தாண்டையொட்டி RASI PALANGAL PLEAES

  surya said:
  April 10, 2012 at 10:43 am

  Mooram pirai silk smitha’s husband was “poornam viswanathan” and not YGP.
  YGP acted in “sila nerangalil sila manithargal”.

   S Murugesan said:
   April 10, 2012 at 12:47 pm

   வாங்க சூர்யா,
   மனிதனின் நினைவுகள் எந்த அளவுக்கு பழுதுபட்டதுங்கறது இன்னொரு தடவை உறுதியாச்சு. அந்த வரியை நீக்கி படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  Muthamizh Chinnasamy said:
  April 10, 2012 at 4:46 pm

  Sir,

  I have sent you a mail on 2 April 2012 regarding my elder brothers marriage. May I know when will I get the reply Sir. I have sent the mail to the mail address chittoor.s.murugesan@gmail.com. It will be very helpful if I get the details.

  Thanking you.

   S Murugesan said:
   April 10, 2012 at 7:53 pm

   ஜாதகத்துல 6 ல் சுக்கிரன், அவருடன் ராகு சேர்க்கை, களத்ராதிபத்தியம் சந்திரனுக்கு கிடைச்சு அவர் 3 ல் நின்றதை தவிர வேற எதுவும் தப்பா தெரியலை. இன்னம் ஒரு நாலு மாசம் பாருங்க. தானாவே அமைய வாய்ப்பிருக்கு. அப்படியில்லைன்னா இன்னம் கொஞ்சம் டீப்பா பார்ப்போம்.

   உங்க மெயில் ஸ்பம் ஃபோல்டர்ல சிக்கிக்கிட்டாப்ல இருக்கு.அதான் தாமதம்.

  ThirumalaiBaabu said:
  April 11, 2012 at 4:58 am

  நெத்தியடி !!!
  எல்லாருமே ரோசிக்கணும் !!! இல்லேனா எதிர்காலம் இன்னும் கடினம் தான் …

  Muthamizh said:
  April 11, 2012 at 5:41 pm

  Sir,

  I have sent you another mail with my horoscope. I request you to tell me when will I settle financially in my life.

  Thanking you.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s