முன்னாள் முதல்வரின் மன்மதலீலைகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இந்த தலைப்பு தமிழகத்து முன்னாள் முதல்வர்கள்ள பலருக்கும் பொருந்தும்னு ஆருனா சொன்னா நான் அம்பேல். நாம வெளியூரு. நாம எதுனா சொல்லவந்தா கொய்யால இது எங்களுக்கு தெரியாதான்னிருவாய்ங்க. அல்லது ஒரு காலத்துல ஜெயமோகன் நரகல் நடையில எம்.ஜி.ஆரை நக்கலடிச்சு எழுத அதை மாஸ் மீடியா மரு(று) வெளியிட்டு குரூர திருப்தி பெற்ற சரித்திரம் புனராவ்ருதம் ஆகும்.அதெல்லாம் நமக்கெதுக்குங்ணா.

ஆனால் எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு வந்த மேரேஜ் ப்ரப்போசல்ஸ் பத்தி / அவர் எப்டில்லாம் அதை தன் கேரியருக்கு உபயோகிச்சுக்கிட்டாரு/ இத்யாதி விஷயங்களை மட்டும் துணிச்சலா ஒரு சைட்ல எளுதிட்டன். செமை ரெஸ்பான்ஸ். (இன்னாது சைட் யு ஆர் எல்லா மேட்டரு ஜிலேபி ஜிலேபியா தெலுங்குல இருக்கும் பாஸ்.

ஆக்சுவலா இன்னைக்கு ஆந்திர அரசியலை பத்தி பொறுப்பா ஒரு பதிவு போடலாம்னுதேன் ஆரம்பிச்சேன்.தலைப்புல உள்ள மசாலா பதிவுல இல்லியேன்னு கோவிச்சுக்கிட்டு பக்கத்தை மூடிராதிங்க. மேட்டருக்கு போயிரலாமா.

நாம ஆறாங்கிளாஸ் படிக்கிறோம் .அப்பம் நம்ம க்ளாஸ் டீச்சரு என்.டி.ஆரை பயங்கர நக்கலடிச்சாப்ல. நக்கல் அடிச்ச பார்ட்டிய பத்தி எளுதினா நாறிரும். நாறிப்போன பார்ட்டி ஒரு பார்ட்டிய கிளிக்குதுன்னா கிளிக்கப்பட்ட பார்ட்டி பவர்ஃபுல் பர்சனா இருக்கனும்னு ஒரு லாஜிக்.அன்னைக்கே என்.டி.ஆர் நடிச்ச படம் ஒன்னை பார்த்தோம்.படத்தோட பேரு சேலஞ்ஜ் ராமுடு.

தெலுங்கு சினிமாவுல என்.டி.ஆரோட கேரக்டர்ஸ் எல்லாம் கடவுளுக்கு கொஞ்சம் கிட்டக்க இருக்கும். நாமளும் ஏறக்குறைய அதே கேரக்டரு. பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு.

எதுக்குண்ணே இம்மாம் நேரம் கொசுவர்த்திய சுத்தினிங்கன்னு கேப்பிக சொல்றேன். ஆந்திர அரசியல் பத்தி நமக்கு என்.டி.ஆர் வரவுக்கு பிற்காடுதேன் தெரியும்.அதுக்கு மிந்தி அரசியல்லாம் அம்பேல்.அதை சொல்லத்தேன் இந்த ஃப்ளாஷ் பேக்.

ஆந்திர அரசியலையே என்.டி.ஆருக்கு முன் என்.டி.ஆருக்கு பின் என்று பிரிக்கலாம். அந்த அளவுக்குஅரசியலை புரட்டிப்போட்டுட்டாரு. அதுக்கு மிந்தில்லாம் சாமானிய சனத்துக்கு அரசியல்னா எந்த வித ஆர்வமோ ஈர்ப்போ இருந்ததில்லை. முக்கியமா இளைஞர்களுக்கு. என்.டி.ஆர் வருகை அதை தந்தது.

தில்லியில உள்ள காங்கிரஸ் மேலிடம் சீஃப் மினிஸ்டரை மாசா மாசம் மாத்தி நாறடிச்சுட்டிருந்தாய்ங்க.தலீவரு வந்தாரு. இதை பெரியார் கணக்கா தெலுங்கு மக்களின் சுயமரியாதைக்கு இழுக்கு வந்துருச்சுன்னு ஏத்திவிட்டாரு.

கடுப்பாகிக்கிடந்த சனம் குத்தோ குத்துன்னு குத்திட்டாய்ங்க. தலை அரியணை ஏறிட்டாரு. இடையில நாதேள்ள பாஸ்கர்ராவ் எப்பிசோட்.

(இப்பம் அந்த துரோகியோட மகன் தான் ஸ்பீக்கர் நல்ல வமிசம் – நல்ல ஜீன்ஸ் – நல்ல புத்தி வெளங்கிரும் ஆக்சுவலா சமீபத்துல நடந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களோடு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவா ஓட்டுப்போட்ட/ ராஜினாமா செய்த ஜகன் ஆதரவு எம்.எல்.ஏ க்களோட 18 தொகுதிகளுக்கும் சேர்ந்து நடந்திருக்கனும்.நடந்தா மொட்டைன்னுட்டு ராஜினாமாவை ஊறப்போட்டு வச்சிருந்ததால மே மாசம் இடைதேர்தல் நடக்கப்போகுது -டிவைட் அண்ட் ரூல் பாலிசி )

நாதேள்ள எப்பிசோடுக்கு அப்பாறமா -அதுக்கு மிந்தியேவா ஞா இல்லை தலீவரு சாதி கணக்கு தெரியாம விளையாட ஆரம்பிச்சாரு. அரசு ஊழியர்களோட வேற மோதிக்கிட்டாரு. ஆந்திராவுல கம்மா,ரெட்டி,வெலமா,ராஜூன்னு ரூலிங் கேஸ்டுங்க இருக்கு. இதுல காங்கிரஸ் ரெட்டிங்க கட்சி,தெலுங்கு தேசம் நாயுடுங்க கட்சி. ஆனால் காங்கிரசோட தலித்,மைனாரிட்டி ஓட்டுகளை ஆட்டைய போட்டு தலைவரு தூள் பண்ணிட்டாரு. இது சக்ஸஸ் ஸ்டோரி.

இன்னைக்கு ஜெ பண்றாப்ல அன்னைக்கு என்.டி.ஆர் சாதிப்பின்னணி தெரியாம மந்திரி சபைய இஷ்டத்துக்கு ஷஃபில் பண்ணிக்கிட்டே வந்தாரு. இதுல பதவி போனவன்லாம் நம்ம சாதிக்கு மரியாதையில்லைன்னு கிளப்பி விட்டான்.பல்பு வாங்கிட்டாரு தலைவரு.

இதுல என்.டி.ஆர் உத்தமர், அவதாரம்,ஆதர்ச புருசன்னு வக்காலத்து வாங்கறது நம்ம நோக்கமில்லை.ஆனால் அவரு சாமானியரு இல்லை. கொஞ்சம் ஸ்பெசல். இதை டி ஜெனரேட்டட் பீப்புள் தலைகனம்,மடிக்கனம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டாய்ங்கங்கறதுதான் மேஜர் ப்ராப்ளம்.

என்.டி.ஆர் உசுரோட இருக்கிறப்பல்லாம் தெலுங்கானா கிலுங்கானால்லாம் மூச். இன்னைக்கு தெலுங்கானாவுக்காக புலி வேசம் போடுற சந்திரசேகர் ராவ் என்.டி.ஆர் பக்தர். தன் மகனுக்கு என்.டி.ஆர் பேரை வச்சிருக்காருன்னா பார்த்துக்கங்க.

தெலுங்கானாவை பொருத்தவரை மக்கள் போராட்டம் ,வர்கபோராட்டம் எல்லாம் அசல். அரசியல் தலைவருங்க கோதாவுல இறங்கறச்ச தான் அது நாறிருது. உதாரணமா சென்னாரெட்டி காலத்துல கொழுந்துவிட்டு எரிஞ்சது. காங்கிரஸ் மேலிடம் அவரை தில்லிக்கு கூப்டு சி.எம் போஸ்டுங்கற பிஸ்கட்டை தூக்கி. போட்டதும். தெலுங்கானாவா ம..ரான்னுட்டான் அந்த பெரிய மன்சன்.

இப்பவும் தில்லியோட சந்திரசேகர் ராவ் பேரம் என்னா தெரியுமா? நீ தெலுங்கானா அனவுன்ஸ் பண்ணு நான் என் கட்சியை காங்கிரஸ்ல கரைச்சுர்ரன்.

நான் என்ன சொல்ல வரேன்னா என்.டி.ஆர் சரித்திர நாயகனா இல்லின்னாலும் அவருக்கு ஜன ஆகர்ஷணம் இருந்தது. ஸ்டேட்ல எந்த பார்ட்டுக்கு போனாலும் “தேவுடுதேன்” இதை ஒய்.எஸ்.ஆர் 90% மெயின்டெய்ன் பண்ணாரு. இப்பம் உள்ளவன்லாம் தெரு நாய் மாதிரி.தெலுங்கானா பக்கத்து தெருமாதிரி. இவிக அங்கன போனா கடிச்சு வச்சிருவாய்ங்க ( ஜகன் உட்பட)

மேலும் மொத டென்யூர்லயே என்.டி.ஆர் உங்களுக்கு பெருசா தெரியாத மேட்டரையெல்லாம் செய்தாரு. தாலுக்காக்களை ஒழிச்சு மண்டலங்களை ஏற்படுத்தினாரு. அரசை -அரசு துறைகளை எளிதில் அணுகும் வாய்ப்பு பாமரனுக்கு ஏற்பட்டது.

விவசாயிக்கு அநியாய மானியத்தோட மின்சாரம் ( 5 HP மோட்டருக்கே ரூ.250 தேன் – 30 நாளும் விடாம ஓட்டினாலும் ) அரிசி அட்டை உள்ளவுகளுக்கு இலவச வேட்டி சேலை தனி. இதுல ரெண்டு ரூவா கிலோ அரிசில்லாம் உங்களுக்கே தெரியும்,மகளிர் பல்கலை கொண்டு வந்தாரு. திருமலையில பார்ப்பானுங்க ஆட்டத்துக்கு ஆப்படிச்சாரு. இப்படி ஒன்னு ரெண்டு இல்லை . மஸ்தா கீது.

என்.டி.ஆரால தெலுங்கு ஜர்னலிசத்துக்கே ஒரு பொற்காலம் ஆரம்பிச்சது. இளைஞர்களுக்கு அரசியல் ஈடுபாடு பெருக அவிக பத்திரிக்கை படிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.ரஷ்ய இரும்புத்திரைய விலக்கின கார்ப்பச்சேவுக்கு அதுவே ஆப்பானப்ல என்.டி.ஆர் உருவாக்கின அரசியல் விழிப்புணர்ச்சி -ஆக்டிவ் ஜர்னலிசம்லாம் அவருக்கே ஆப்பாச்சு. இதுல தலைவரோட எக்ஸ்டரா ஆர்டினரி ஆக்டிவிட்டீஸ் தனி.

இதன் பலனா அடுத்த தேர்தல்ல பல்பு.அடுத்த டென்யூர்ல மறுபடி விட்டதை பிடிச்சாரு. மறுபடி பல்பு.கடேசியா மீண்டும் சி.எம்.ஆனா சந்திரபாபு சைக்கிள் கேப்ல கொடுத்த வேலைக்கு போயி சேர்ந்தே உட்டாரு.

இதுவரை ஒரு அத்யாயம்.அடுத்தது சந்திரபாபு .இவரோட ஆட்சியை ரெண்டா பிரிக்கலாம் ஒன்னு என்.டி.ஆர் கிட்டே இருந்து அதிகாரத்தை பறிச்சு ஆண்ட காலம். அடுத்தது பா.ஜ.க கூட்டணி தருமத்துல ஜெயிச்சு வந்த கடைசி டென்யூர்.

சந்திரபாபு பத்தில்லாம் சொல்ல ஆரம்பிச்சா உலகத்துல உள்ள கெட்டவார்த்தையெல்லாம் நுழைஞ்சுரும். அதனால கழண்டுக்கறேன். சந்திரபாபுவோட மென்டாலிட்டிக்கு ஒரே உதாரணம். மின்சார கட்டணத்தை ஏத்தினாரு. அனைத்துக்கட்சி போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு. உயிர்பலி. ( இந்த மேட்டர்ல அம்மா எவ்வளவோ மேலுங்ணா.)

ஒய்.எஸ்.ஆர் பாதயாத்திரை ஆரம்பிச்சாரு. சி.எம் ஆனாரு.பேசிக்கலா அவரும் என்.டி.ஆர் ஃபேன். என்.டி.ஆர் உசுரோட இருந்தப்ப கலாச்சுருக்கலாம்.ஆனால் என்.டி.ஆர் மறைவுக்கு பிறகு பல்லு மெல நாக்க போட்டு ஒரு பேச்சு பேசினதில்லை.

நம்ம ஸ்டைல்ல ( ஜெயிக்க முடியாதவனை காப்பியடிச்சுரு) என்.டி.ஆர் திட்டங்களை எல்லாம் பாலிஷ் போட்டு அமல் படுத்தினாரு. மேலிடத்தை ஒரு பக்கம் சமாளிச்சுக்கிட்டு – கட்சிக்குள்ள இருக்கிற கிழ நரிகளை சமாளிச்சுக்கிட்டு மேக்சிமம் சனத்துக்கு என்ன பண்ண முடியுமோ அதைவிட கொஞ்சம் அதிகமாவே செய்துட்டாரு.

சந்திரபாபு இப்ப செயிக்கலின்னா எப்பவும் செயிக்கமாட்டோம்னு மெகா கூட்டணில்லாம் போட்டாரு.ஊஹூம் மெகாஸ்டார் புண்ணியத்துல ஒய்.எஸ்.ஆர் மறுபடி சி.எம். ( சிரஞ்சீவி கட்சி மட்டும் எலக்சன்ல நிக்காம இருந்திருந்தா ஆப்புதேன்) மெஜாரிட்டி குறைஞ்சது ,எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறைஞ்சது .மேலிடமும் கொஞ்சம் சீண்டி பார்க்க ஆரம்பிச்சுட்டாப்ல இருக்கு. அல்லது கிழ நரிகளோட ஆட்டம் கூட ஆரம்பிச்சுருக்கலாம். இதை ஓவர்லுக் பண்ண ஆப்பரேஷன் ஆகர்ஷான்னு ஒய்.எஸ் மாற்றுகட்சிகளையெல்லாம் காங்கிரஸுல கரைக்க ப்ளான் பண்ணாரு. சிரஞ்சீவி மேட்டர் அப்பமே ஓவரு.
துரதிர்ஷ்ட வசமா டிக்கெட் போட்டுட்டாய்ங்க.

அடுத்து ஜகன் எப்பிசோட் ஆரம்பமாச்சு. மெஜாரிட்டி எம்.எல்.ஏல்லாம் கை.எ போட்டு சி.எம் ஆக்க சொல்லி கேட்டாய்ங்க. மாப்பிள்ளையை மாப்பிள்ளை தோழனாக்கின கதையா சி.எம் ஆக ஆசைப்பட்ட ஜகனை ரோசய்யாவை ப்ரப்போஸ் பண்ண வச்சாய்ங்க. தொடர்ந்து சீண்டி விட்டாய்ங்க. ஜகன் ரேங்க ஆரம்பிச்சாரு.

ரோசய்யா சி.எம் ஆனபிற்காடு அவரால பொட்டி அனுப்ப முடியலியா என்னன்னு தெரியலை. அல்லது ட்வாக்ரா க்ரூப் விவகாரமா கூட இருக்கலாம் .அவரை வீட்டுக்கு அனுப்பிட்டாய்ங்க.

நம்பமுடியாதவனை ஸ்பீக்கராக்கறது ஆந்திரால ஒரு சம்பிரதாயம். சந்திரபாபு சந்திர சேகர் ராவுக்கு ஸ்பீக்கர் போஸ்ட் கொடுத்ததாலதான் மூக்கர் தனிக்கட்சியே துவங்கினாரு.

இந்த ரூட்ல இப்போதைய சி.எம்மை ஒய்.எஸ் ஸ்பீக்கராக்கிட்டாரு. இந்த ஆளு பெரியமன்சத்தனமா இருந்துக்கிட்டு சோனியாவுக்கு போட்டு கொடுத்துக்கிட்டே இருந்தாப்ல இருக்கு. ஒய்.எஸ்க்கு மாஸ்டர் மைண்டே நானுதாங்கற ரேஞ்சுல.இதை ஒன்னு ரெண்டு மீட்டிங்ல எடுத்து விட்டு செருப்படி பட்டது வேற கதை.

சோனியா அம்மா தெரியாத்தனமா கிரணை சி.எம் ஆக்கிட்டாய்ங்க. இவருக்கு பிடிச்ச வசனம் ” ஐ நோ” தான். இந்தாள எவனும் நம்பறதில்லை. இந்தாளும் எவனையும் நம்பறதில்லை. பொத்சா சத்ய நாராயணாங்கற அக்மார்க் பொலிட்டீஷியனை மானில கட்சி தலைவரா போட்டாய்ங்க. அவரு இவரை ஓவர் டேக் பண்ண ஆரம்பிச்சாரு.

பொத்சா வீட்டு வேலைக்காரன் பேர்ல எல்லாம் பிராந்தி ஷாப் இருக்கு. (பினாமி) .சி.எம் லிக்கர் மாஃபியாவை பத்தி விஜாரிக்க சொல்லி லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு உத்தரவு போட்டாரு.அவிக எக்ஸைஸ் கான்ஸ்டபிள்ளருந்து மினிஸ்டர்ஸ் வரைக்கும் வாங்கின லஞ்சம் லாவண்யம் எல்லாத்தையும் பட்டியல் போட்டுட்டாய்ங்க.

கட்சி தலைவருக்கும் – சி.எம்முக்கும் முட்டிக்கிச்சு.இதுக்குத்தேன் முந்தா நேத்து தில்லியில பஞ்சாயத்து. தாளி..ஒழுங்கு மரியாதையா ஒத்துமையா வேலை பார்த்து மே மாசம் நடக்கிற 18 இடை தேர்தல்ல கட்சி செயிக்கனும் . தோத்தா லுல்லாவ அறுத்துருவன்னு மானில இன் சார்ஜ் ஆஜாத் வார்ன் பண்ணியிருப்பாரு.

ல.ஒ.போலீஸ்ல ஆக்டிவா செயல்பட்ட ஆஃபீசரை மாத்திட்டாய்ங்க. டிஜிபி நான் ரிலீவ் பண்ணமாட்டேன்னு அடம் பிடிக்கிறாரு.

இடைத்தேர்தல்ல காங்கிரசுக்கு பட்டை நாமம் கியாரண்டி.ராகுலை ஒரு நடை அனுப்பினாகேட்கவே தேவையில்லை.ஜகனை உள்ளே தூக்கி போட்டாலும் சரி . இதான் ஆந்திர அரசியல்ல அ,ஆ,இ,ஈ.
நாளைக்கு நல்ல கில்மா பதிவா போட்டுருவம்.கவலைய விடுங்க.

Advertisements

2 thoughts on “முன்னாள் முதல்வரின் மன்மதலீலைகள்

  arul said:
  April 6, 2012 at 9:37 am

  what will happen to jagan?

   S Murugesan said:
   April 6, 2012 at 10:45 am

   வாங்க அருள் !
   ஜகனுக்கு என்ன ஆகும்? தூக்குல போடற அளவுக்கு மத்திய மானில அரசுகளுக்கு அதிகாரம் இல்லேன்னு நம்பறேன். மிஞ்சிப்போனா உள்ளே தூக்கி போடுவாய்ங்க.ஆனால் அவர் சி.எம் ஆறதை எந்த கொம்பனாலும் முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s