ஜெ -சசி உறவும் பிரிவும் :ஸ்பெக்ட்ரம் ஜி 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கெட்டது நடக்கிறதுக்கு மிந்தி எச்சரிக்கை செய்தா “போகாதே போகாதே என் கணவா”பாடறதா நினைச்சுக்கிறாய்ங்க.

இளமையில இருக்கிறவனை முதுமை வரும் கண்ணா அதுக்கு இப்பமே ப்ரிப்பேர் ஆயிருன்னா கேட்க மாட்டான். வெற்றியில உள்ளவனை நாளைக்கு தோல்வி வரும் நைனா அதுக்கு இப்பமே ப்ரிப்பேர் ஆயிருன்னா மாட்டான்.

நம்ம ஊருல ஒரு பார்ட்டி. ரெம்ப கஷ்டப்பட்ட குடும்பம். கடவுள் கடைக்கண்ணால பார்த்தாரு. ரேன்ஜு சாஸ்தியாயிருச்சு. ஒரு தாட்டி பாண்டிச்சேரி போயி லாலா போட்டுக்கிட்டு கார்ல வர்ரான்.கூட அல்லக்கைங்க. எஸ்.ஐ நிறுத்தி என்ன ஏதுன்னு விசாரிக்கிறாரு.பார்ட்டி பதில் சொல்லிட்டு 20 ஆயிரம் ரூபா செல் ஃபோனை தூக்கி கொடுக்கான்.

“என்னப்பா இது?”
“ச்சொம்மா வச்சுக்கங்க சார்.. ”

கேவலம் எறும்பு .. மழைக்காலத்துக்கு தேவையானதை வெய்யில் காலத்துலயே சேர்த்து வச்சுக்குது. ஆனால் மன்சன்?

இன்னைக்கு ஆளுங்கட்சியா இருக்கிறவன் நாளைக்கு நாம எதிர்கட்சியாயிட்டா நிலைமை என்னான்னு ரோசிச்சு நடந்துக்கிட்டா அவன் எதிர்கட்சியாக வேண்டிய நிலையே வராமகூட போவலாம்.அப்படியே வந்தாலும் “கொத்து கொத்தா” தூக்கி உள்ளே போடற நிலைமை வராது.

நாம தான் வர்ர தேர்தல்ல ஆளுங்கட்சின்னு எதிர்கட்சிக்காரன் பொறுப்பா நடந்துக்கிடறது வேற. நாம எதிர்காலத்துல டைரக்ட் எலீக்சன்ல ஜனாதிபதியாகி தொலைச்சுட்டா என்னா பண்றதுன்னு ஆக்சன் ப்ளான் எல்லாம் போட்டு வச்சிருக்கம். ( பாசிட்டிவ் திங்கிங்)

அவனவன் இது நம்ம ப்ளாட்டு, இது நம்ம சொந்த வீடுங்கறப்ப “ங்கொய்யால இந்த நாடே என்னுதுரா”ன்னு நினைச்சுக்கற சாதி நாம.

எது ஒன்னுமே உச்சத்துக்கு போயிட்டா அதனோட இயல்பே மாறிப்போகுது. பாடி டெம்பரேச்சர் கச்சா முச்சான்னு எகிறிப்போயிட்டா டிக்கெட் போட்டுர்ராய்ங்க.பாடி ஃப்ரிட்ஜ்ல வச்ச மாதிரி ஆயிருது.

ஈகோ கூட அவ்ளதான் அது உச்சத்துக்கு போயிரனும். அப்பம் அது அன்னாட வாழ்க்கையில பிரச்சினைய கொடுக்காது.

காதலோட உச்சம் :

நான் உன்னை காதலிக்கிறேன்.அதை உன் கிட்டே சொல்லனுங்கற அவசியம் இல்லை. நீ என்னை காதலிக்கனுங்கற அவசியமுமில்லை.

பகையின் உச்சம்:

உன்னை நான் எதிர்த்தா உன்னை நான் அங்கீகரிச்சுட்டதா அருத்தம். நீ என்னை கமாண்ட் பண்றேன்னு அருத்தம்.கொய்யால ஒன்னை கண்டுக்கவே மாட்டேண்டா

சிலதெல்லாம் மட்டும் என்னதான் உச்சத்துக்கு போனாலும் நான் இறங்கித்தான் தீருவேங்கும். தண்ணியை பாருங்க. 118 ஆவது மாடி டாங்க்ல இருந்தாலும் தாளி சாக்கடைக்குதான் இறங்கும்.
ஆனா நெருப்பை பாருங்க.. ஒரு தீப்பந்தந்தை தலை கீழா பிடிச்சாலும் நெருப்பு மேனோக்கித்தான் போகும்.

ஒரு பெண் தனக்கு மட்டுமேன்னு ஒருத்தனை டிசைட் பண்ணிட்டா அவன் ஒருத்தனுக்குத்தான் காதலி/மனைவியா இருக்க முடியும்.

இதுவே அவள் ஒரு சகோதிரியா ..ஒரு தாயா இருக்க டிசைட் பண்ணிட்டா ஒரு மானிலத்துக்கே சகோதிர்யாக முடியும். மம்தா அக்கா மாதிரி.

ஒரு தாட்டி ரவீந்திர நாத் தாகூர் படகு வீட்ல ஆத்துல போயிட்டிருக்காரு.அன்னைக்கு பவுர்ணமி. படகு வீட்ல மெழுகு வர்த்தியோ ,பந்தமோ ஏதோ ஒரு இழவு எரிஞ்சுக்கிட்டிருக்கு. படக்குன்னு காத்தடிச்சு அது அணைஞ்சு போயிருது.

அப்பத்தேன் பவுர்ணமி நிலாவோட அழகு அவன் கண்ணுக்கு உறைச்சது. சுய நலம் அந்த மெழுகுவர்த்தி/பந்தம் மாதிரி.பவுர்ணமி நிலா பொது நலம்.

இதையே சைக்காலஜிப்படி பார்த்தா உங்க ஈகோ அந்த மெழுகுவர்த்தி/பந்தம் மாதிரி. அதை தூக்கி எறிஞ்சா முப்பது நாளும் பவுர்ணமிதேன்.

இதையே ஆன்மீகமா பார்த்திங்கனா மாயையால் போர்த்தப்பட்ட உங்க ஆன்மா அந்த மெழுகுவர்த்தி/பந்தம் மாதிரி. அந்த மாயையை தோரகா பண்ணிட்டிங்கனா ஆன்மீக புயல்ல ஆன்மா அணைஞ்சு போயிரும். பவுர்ணமிங்கற இறை ஒளி ஆன்மாவை ஜொலிக்க வைக்கும்.

சின்னதை விட்டாதான் பெருசு கிடைக்கும். பெருசு கிடைச்சுட்டா சின்னதுக்கெல்லாம் அவசியமே இருக்காது. சின்னது டெம்ப்ரரி.பெருசு பர்மனென்ட்.

அம்மா மேட்டரை எடுத்துக்க்கங்க. ஒரு உடன் பிறவா சகோதிரியை விரட்டி விட்டாய்ங்க. லட்சக்கணக்கான சகோதிரிகளுக்கு நெருக்கமானாய்ங்க. இப்பம் மறுபடி உ.பி.ச ரீ என்ட்ரியாம். விளைவு என்னவா இருக்கும்? சொல்லனுமா?

ஆமா இது என்ன நடைபாதையில கூடையில முட்டை விக்கிற பொம்பளைங்க தகராறா? ஆட்சி பீடத்துல இருந்த/இருக்கிற ஒரு பெண்ணுக்கும் – பவர் சென்டரா , ராஜ்யாங்கேத்தர சக்தியா செயல்பட்ட ஒரு பெண்ணுக்கும் இடையிலான விவகாரம்.

ஏன் முட்டிக்கிட்டாய்ங்க? ஏன் கட்டிக்கிட்டாய்ங்க? இந்த 3 மாசத்துல என்னெல்லாம் பேரம் நடந்ததுன்னு விஜாரிச்சா ஸ்பெக்ட்ரம் ஜி எல்லாம் ஜூஜுபி ஆயிரும்.

தாத்தா என்னடான்னா பாக்கு மசியலைன்னு புலம்பிக்கிட்டிருக்காரு. விசயகாந்த் விசயமில்லாத விசயங்கள்ள அலம்பல் பண்ணிக்கிட்டிருக்காரு. வைகோவுக்கு அழுது புலம்பவே நேரம் போதலை. இதெல்லாம் எங்கத்தான் போயி முடியப்போகுதோ?

கெட்டது நடக்கிறதுக்கு மிந்தி எச்சரிக்கை செய்தா “போகாதே போகாதே என் கணவா”பாடறதா நினைச்சுக்கிறாய்ங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s