அம்மாவோட பர்சனல் மெயில் ஐடி

Posted on

அண்ணே வணக்கம்ணே !
வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பு -அடுத்த 3 நாள் சோசிய படைப்பு ஞா கிழமை ஓய்வுன்னு ஒரு விதிய வச்சுக்கிட்டு எளுதிக்கிட்டு வந்தம். ஆனால் மேற்படி விதியை மீறி நேத்திக்கு நானும் விகடனும் ( 18+ ஒன்லி) னு ஒரு பதிவை போடவேண்டியதாயிருச்சு. விதிகள் இருக்கிறதே மீறத்தானே ( எதிர்கால அரசியல்வாதி!)

ஞா கிழமைன்னாலே வலையுலகம் செவ்வாய் கிழமை சலூன் மாதிரி ஆயிருது. மேற்படி பதிவை ஜஸ்ட் 839 பேர்தான் படிச்சிருக்காய்ங்க. சாதாரண சப்பை பதிவை கூட 1,200 பேர் படிக்கிறாய்ங்க. ஆக 400 பேர் பதிவை மிஸ் பண்ணியாச்சு.

அதுக்குன்னு மீள் பதிவு போடப்போறதில்லை. நேத்திக்கு பதிவுல மிஸ் பண்ண சில பாய்ண்ட்ஸை கொடுக்க பார்க்கிறேன். அதுக்கு மிந்தி அம்மாவோட மெயில் ஐடி முதல்வரா இருக்கிறதால (எத்தனை நாளைக்கோ) ஏற்கெனவே ஒரு ஐடி இருக்கும்னு நினைக்கிறேன். (இப்பம் பார்த்தா சிக்கலை)

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏங்கற வகையில ஒரு ஐடிய அனவுன்ஸ் பண்ணியிருக்காய்ங்க.. இதுக்கெல்லாம் மெயில் அனுப்பி மண்டை காஞ்சா நாம பொறுப்பு கிடையாதுங்கோ.. ஏன்னா நம்ம அனுபவம் அப்படி.

ஆனால் ஒன்னு கடமையை செய் பலனை எதிர்பாராதேங்கற கீதை போட்ட பாதையில நடக்கிற பார்ட்டியா இருந்தா தமிழ் நாடு உருப்பட நாம கொடுத்த ரோசனைகளை /கு.ப அதற்கான சுட்டியை மேற்படி ஐடிக்கு ஃபார்வாட் பண்ணுங்க (பார்ப்போம்) நீங்க ஃபார்வார்ட் பண்ண வேண்டிய சுட்டி http://kavithai07.blogspot.in/2010/05/blog-post_29.html

வ்ர்ர ஆகஸ்டுக்கு 44 வயசு முடிஞ்சு 45 ஆரம்பிக்க போகுது. இதுல மொத 20 வருசத்தை விட்டுட்டாலும் 1987 லருந்து 2007 வரைக்கும் இந்த பாடாவதி பத்திரிக்கைக்காரவுக – விஐபிங்க கதவை கடிதங்களால தட்டி தட்டியே கிழடு தட்டி போயிட்டம்.

மன்சன்,ஒரு ஃபேமிலி நாசமா போக எத்தனையோ வளி இருக்கு.அதுல ரெண்டு பத்திரிக்கைக்காரவுக – விஐபிங்க கதவை கடிதங்களால தட்டறது.

நமக்கு ஆரம்பத்துல பாசிட்டிவ் திங்கிங் சாஸ்தி. எரிமலை வெடிக்குதுல்ல. வெடிச்சு முடிச்சு குழம்பெல்லாம் ஆறினபிற்காடு அதுலருந்து புது ஜீவராசிகள் பிறக்குதாம் (தகவல்) சார்லி சாப்ளினுக்கு ஒரு பார்ட்டியில சமீபத்துல பிரப்லமான ஒரு ஆக்டரை அறிமுகப்படுத்தறாய்ங்க. சாப்ளின் “என்னப்பா சமீபகாலமா லெட்டரே போடறதில்லை”ன்னு கேட்டாராம். ( கவனிச்சிருக்காரு)

நமக்கு சரித்திரம் ரெம்ப பிடிக்கும். ஏன்னா எதிர்காலம் அதுல ஒளிஞ்சிருக்கு. நாமல்லாம் யாரோ ஒரு அமரரோட வாழ்க்கையத்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கம். சரித்திரத்துல தேடினா 1000 முருகேசன் கிடைப்பான்.

நம்முது கடகலக்னமாச்சா எவனுக்கோ எதுவோ நடந்தா அது ஏன் நமக்கு நடக்கக்கூடாதுன்னு நினைக்கிற சைக்காலஜி. நாம படிச்ச/கேள்விப்பட்ட நெல்ல மேட்டரு எதுவா இருந்தாலும் நம்ம லைஃப்லயும் நடந்தே தீரனும்னு ஒரு அவா. ( இது அந்த அவா இல்லை .அவான்னா ஆவல்,விருப்பம்னு அருத்தம்) .

சில விஷயங்கள்ள ஹிஸ்டரி ரிப்பீட் ஆகியிருக்கு. உ.ம் என்.டி.ஆர் 1989 சி.எம் ஆனாரு. உடனே உ.வ பட்டு வாழ்த்தி ஒரு கடிதம் போட்டேன். ( சாதாரண தபால்) .உடனே பதில்வந்தது. நமக்கு வீட்லயே ஒரு கவுண்ட்டர் பார்ட். அப்பா. அவரு “போடா போடா போக்கத்தவனே அவன் சினிமாக்காரன். உன்னை மாதிரி ஜொள்ளுங்களுக்கு பதில் போடவே ஒரு க்ரூப்பை வச்சிருப்பான்.வேணம்னா வேலை கொடுன்னு கேளு பார்ப்போம்”னு ரிவிட் அடிச்சாரு.

பல நாள் ரோசனைக்கு பிற்காடு ” தலை! இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு அல்லாடறேன்.எதுனா வேலை போட்டு கொடுக்கக்கூடாதான்னு” இன்லண்டு லெட்டர் தான் போட்டேன்.

ஆனால் பாருங்க மறு தபால்லயே பதில். இன்டர்காஸ்ட் பண்ணிக்கிட்டவுகளுக்கு சம்பந்தப்பட்ட ஜீ.ஓ காப்பி எல்லாம் வச்சு கலெக்டருக்கு ஒரு மெமோ /அதனோட காப்பி நமக்கு. இது பாஸிட்டிவ்.

இந்த பத்திரிக்கைகாரவுக மேட்டரை பார்ப்போம். இத்தனைக்கும் கதை,கவிதைன்னு மாரடிச்சது கொஞ்ச காலம் தேன்.அதுக்கப்பாறம் ஜஸ்ட் ஆப்பரேஷன் இந்தியா 2000 தேன் மேட்டரு.பாதிரியாருங்க பரலோக ராஜ்ஜியத்தை பத்தி சலிக்காம சொல்றாப்ல எளுதி தள்ளிக்கிட்டிருந்தம். கொய்யால எந்த விலைமகள் மகனும் ஒரு துணுக்கா கூட போடலை. விஐபிங்க கதைய சொன்னா தொடரா போயிரும். இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.

இப்பம் ஆரோ தமிழ் நாட்டோட 234 எம்.எல்.ஏக்களுக்குமான இ மெயில் ஐடிய தூக்கி போட்டிருக்காய்ங்க. கொய்யால விஜய்காந்த் கூடத்தேன் தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கெல்லாம் ஒரு ஐடிய கொடுத்து பப்ளிசைஸ் பண்ணியிருந்தாரு. என்னா புரோஜனம்?

கு.ப இன் பாக்ஸை திறந்தாச்சும் பார்த்தானுவளோ இல்லையோ . ஆனால் நாளைக்கு நம்ம மேல தப்பு வரப்படாது – நம்ம முயற்சியில குறை இருக்கப்படாதுன்னு ஒரு மெயிலை தட்டிவிட்டோம். ( மானில அரசுகள் நிர்வாக செலவை குறைச்சு – மக்கள் மேல பாரம் சுமத்தாமயே தங்கள் நிதி ஆதாரங்களை பெருக்கிக்க நம்ம ரோசனைகள்)

இது வரை ஒரு ம..ரு ரெஸ்பான்ஸும் கடியாது. நேத்திக்கு கூட 234 ல அம்மாவோட மெயில் ஐடிய பொறுக்கி மேற்படி ரோசனைகளுக்கான சுட்டியை அனுப்பினேன்.

இதெல்லாம் எதுக்கு? நமக்கும் ஒரு நாளு வாழ்வு வரும்.அன்னைக்கு லைம் லைட்ல இருப்பம். சனம் நம்மை மொய்ப்பாய்ங்க. அன்னைக்கு எவனாச்சும் ” சரி தலை .. இன்னைக்கு கிளிச்சுக்கறியே இடைப்பட்ட காலத்துல என்னா பண்ணிக்கிட்டிருந்தே” ன்னு கெட்பான்ல அவனுக்கு பதில் சொல்லனும்ல.

அதுக்காவத்தேன் செவிடன் காதுல சங்கு கணக்கா ஆ.இ 2000 ஐ இவிகளுக்கு அனுப்பிக்கிட்டிருக்கம். மன்மோகனார்,சோனியா அம்மையார்,கலாம் அய்யா ,அத்வானி ஒரு விஐபியை விட்டதில்லை. கூரியர் ரசீது, பதிவு தபால் ரசீது, ஃபேக்ஸ் ரசீதுன்னு குப்பையா கிடக்குல்ல. அந்த குப்பைய கேட்டவன் தலையில கொட்டுவம்ல.

ஆ.விகடன்ல வர்ர விகடனும் நானும் ஃப்யூச்சரை படிச்சுட்டு சர்ர்குலேஷன்ல எத்தீனி பிரதி சாஸ்தியாச்சோ தெரியாது. ஆனால் நம்மை இர்ரிட்டேட் பண்ணி இப்படி ஒரு பதிவை போட வ்ச்சுருச்சு.

கொய்யால .. ப்ராண்டை ப்ரமோட் பண்ணனும்னா அடுத்தவன் பத்திரிக்கையில விளம்பரம் கொடுக்கனும். டிவியில போயி பிச்சை எடுக்கனும். விகடனோட பக்கங்கள் அதை வாங்கற வாசகனுக்கு சொந்தம். அதை எப்டி இவிக சுய விளம்பரத்துக்கு பயன் படுத்தலாம். நான் சொல்றது எத்திக்ஸ்.

இந்த மவனுங்க அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு தானே புயலுக்கு நிவாரணம் வசூலிப்பாய்ங்களாம். நிவாரண பொருட்களை போட்டு தர்ர பையில பெருஸ்ஸா விகடன் லோகோ.இதையெல்லாம் கேட்க நாதியில்லை த. நாட்ல.

தமிழ் தமிழ்னு கிளிக்கிறானுவ. ஆந்திரால பிறந்தவன் தமிழ் படிக்கிறான்னா அவனுக்கு விலையில சலுகை கொடுக்கனும். இவிக ஒரு ரூபா அபராதம் விதிக்கிறாய்ங்க.

அடப்போங்கடா நீங்களும் உங்க பாடாவதி பத்திரிக்கைகளும் . சர்க்குலேட்டிங் லைப்ரரியில வாடகைக்கு வர்ரதை படிச்சாலே வவுறு எரியுது. துட்டை கொடுத்து வாங்கி படிக்கிறவுக எப்டி படிக்கிறாய்ங்களோ?

இதுல விகடனார் எங்க வராருன்னா இவிகளுக்கும் ரொட்டீனா “ஆப்பரேஷன் இந்தியா 2000” திட்டம், அதற்கான போராட்டத்திலான (?) டெவலப்மென்ட்ஸை கன்வே பண்ணிக்கிட்டிருந்தோம்.

ஒரு தாட்டி மாத்தி ரோசிங்கறாய்ங்களேன்னுட்டு ஒரு அம்பது ரூவா ஆடியோ காஸட் வாங்கி – ரிக்கார்டிங் சென்டர் போயி ( அன்னைக்கு டேப் ரிக்கார்டரெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு லாப் டாப் மாதிரிங்ணா) அவனுக்கு ஒரு பத்தோ இருபதோ அழுது ஆ.இ.200ல் பத்தி விலாவாரியா பேசி மாரடிச்சேன்.

அந்த ஆடியோ காசட்டை விகடனாருக்கு அனுப்பினேன். வழக்கம்போல தண்ணியிருக்கிற கிணத்துல போட்ட கல்லு.

கடுப்பாகி நீ பிரசுரிக்காட்டி ம..ராச்சு என் ஆடியோ காசட்டை திருப்பி அனுப்புங்கடான்னுட்டு ரூ.10 எம்>ஓ பண்ணேன்.

அப்பம் இவிக ஆகாசத்துக்கு தூக்கி ஜல்லி அடிக்கிற எஸ்.பாலசுப்ரமணியன் (ஐயர்) அலைவ். என்னாச்சுங்கறீங்க..

நான் நடந்ததையெல்லாம் எழுதி காட்டமா போஸ்ட் கார்ட் அனுப்பினேன். அப்பம் ஆ.வி ஆசிரியர் ஜே.வி. நாதன்னு ஒரு ரிப்போர்ட்டரை என் கிட்டே அனுப்பி வச்சாரு.

அவரு வந்ததுமே ஒரு புது காசட் வேணம்னா ஏற்பாடு பண்ணிரலாமான்னு ஆரம்பிச்சாரு. நாம காந்தி தாத்தா புழுக்கை பென்சிலுக்கு அடம் பிடிச்சாப்ல குரங்குப்பிடி.

அப்பாறம் நிருபர் அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்த மாதிரி ரெம்ப அழகா பேசினாரு. ஆ.இ 2000 பத்தி நோண்டி நோண்டி கேட்டாரு. ( பேட்டி மாதிரியே )

நாமளும் மத்திய மானில அரசுகளின் நெக்லஜென்ஸிய ப்ரூவ் பண்ண இருக்கிற ஆதாரங்களையெல்லாம் காட்டினோம். தெலுங்கு தினசரிகள்ள வந்த க்ளிப்பிங்ஸ்,ஸ்டோரிஸ் எல்லாம் காட்டினோம்.

அல்லாத்தையும் பார்த்துட்டு போனவர் போனவர்தான். இன்னைக்கு வரைக்கும் கு.ப “பேட்டியை பிரசுரிக்க இயலாமைக்கு (?) வருந்துகிறோம்னு ஒரு கடிதாசி கூட கிடையாது.

இவிக அரசுத்துறைகளின் சிகப்பு நாடாவை அவுக்கறாய்ங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s