விகடனும் நானும் ( 18+ only)

Posted on

அண்ணே வணக்கம்ணே !
வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பு -அடுத்த 3 நாள் சோசிய படைப்புனு ஒரு விதிய வச்சுக்கிட்டு எளுதிக்கிட்டு வர்ரம்.

நாம என்னமோ இதை பெரிய தியாகமா நினைச்சுத்தேன் ஆரம்பிச்சம். மேட்டர் இன்னாடான்னா சகட்டுமேனிக்கு சோசிய பதிவுகளை தொடர்ந்து போட்ட காலகட்டத்தை விட இப்பத்தேன் ஹிட்ஸ் அதிகம்.புதிய வாசகர்கள் வர்ராய்ங்க.

விகடனும் நானும்னு தலைப்பை வச்சுட்டு என்னத்தையோ பினாத்த ஆரம்பிச்சுட்டாருப்பா. சித்தூர் பக்கம் வெயில் சாஸ்தி போலன்னு நினைச்சுராதிங்க.

வ்ர்ர ஆகஸ்டுக்கு 44 வயசு முடிஞ்சு 45 ஆரம்பிக்க போகுது. இதுல ஒரு 20 வருசத்தை விட்டுட்டாலும் 1987 லருந்து 2007 வரைக்கும் இந்த பாடாவதி பத்திரிக்கைக்காரவுக – விஐபிங்க கதவை கடிதங்களால தட்டி தட்டியே கிழடு தட்டி போயிட்டம்.

இத்தனைக்கும் கதை,கவிதைன்னு மாரடிச்சது கொஞ்ச காலம் தேன்.அதுக்கப்பாறம் ஜஸ்ட் ஆப்பரேஷன் இந்தியா 2000 தேன் மேட்டரு.பாதிரியாருங்க பரலோக ராஜ்ஜியத்தை பத்தி சலிக்காம சொல்றாப்ல எளுதி தள்ளிக்கிட்டிருந்தம். கொய்யால எந்த விலைமகள் மகனும் ஒரு துணுக்கா கூட போடலை. விஐபிங்க கதைய சொன்னா தொடரா போயிரும். இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.

இப்பம் ஆரோ தமிழ் நாட்டோட 234 எம்.எல்.ஏக்களுக்குமான இ மெயில் ஐடிய தூக்கி போட்டிருக்காய்ங்க. கொய்யால விஜய்காந்த் கூடத்தேன் தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கெல்லாம் ஒரு ஐடிய கொடுத்து பப்ளிசைஸ் பண்ணியிருந்தாரு. என்னா புரோஜனம்?

கு.ப இன் பாக்ஸை திறந்தாச்சும் பார்த்தானுவளோ இல்லையோ . ஆனால் நாளைக்கு நம்ம மேல தப்பு வரப்படாது – நம்ம முயற்சியில குறை இருக்கப்படாதுன்னு ஒரு மெயிலை தட்டிவிட்டோம். ( மானில அரசுகள் நிர்வாக செலவை குறைச்சு – மக்கள் மேல பாரம் சுமத்தாமயே தங்கள் நிதி ஆதாரங்களை பெருக்கிக்க நம்ம ரோசனைகள்)

இது வரை ஒரு ம..ரு ரெஸ்பான்ஸும் கடியாது. நேத்திக்கு கூட 234 ல அம்மாவோட மெயில் ஐடிய பொறுக்கி மேற்படி ரோசனைகளுக்கான சுட்டியை அனுப்பினேன்.

இதெல்லாம் எதுக்கு? நமக்கும் ஒரு நாளு வரும்.அன்னைக்கு லைம் லைட்ல இருப்பம். சனம் நம்மை மொய்ப்பாய்ங்க. அன்னைக்கு எவனாச்சும் ” சரி தலை .. இன்னைக்கு கிளிச்சுக்கறியே இடைப்பட்ட காலத்துல என்னா பண்ணிக்கிட்டிருந்தே” ன்னு கெட்பான்ல அவனுக்கு பதில் சொல்லனும்ல.

அதுக்காவத்தேன் செவிடன் காதுல சங்கு கணக்கா ஆ.இ 2000 ஐ இவிகளுக்கு அனுப்பிக்கிட்டிருக்கம். மன்மோகனார்,சோனியா அம்மையார்,கலாம் அய்யா ,அத்வானி ஒரு விஐபியை விட்டதில்லை. கூரியர் ரசீது, பதிவு தபால் ரசீது, ஃபேக்ஸ் ரசீதுன்னு குப்பையா கிடக்குல்ல. அந்த குப்பைய கேட்டவன் தலையில கொட்டுவம்ல.

விகடனும் நானும் ஃப்யூச்சரை படிச்சுட்டு சர்ர்குலேஷன்ல எத்தீனி பிரதி சாஸ்தியாச்சோ தெரியாது. ஆனால் நம்மை இர்ரிட்டேட் பண்ணி இப்படி ஒரு பதிவை போட வ்ச்சுருச்சு.

கொய்யால .. ப்ராண்டை ப்ரமோட் பண்ணனும்னா அடுத்தவன் பத்திரிக்கையில விளம்பரம் கொடுக்கனும். டிவியில போயி பிச்சை எடுக்கனும். விகடனோட பக்கங்கள் அதை வாங்கற வாசகனுக்கு சொந்தம். அதை எப்டி இவிக சுய விளம்பரத்துக்கு பயன் படுத்தலாம். நான் சொல்றது எத்திக்ஸ்.

இந்த மவனுக்கு அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு தானே புயலுக்கு நிவாரணம் வசூலிப்பாய்ங்களாம். நிவாரண பொருட்களை போட்டு தர்ர பையில பெருஸ்ஸா விகடன் லோகோ.இதையெல்லாம் கேட்க நாதியில்லை த. நாட்ல.

தமிழ் தமிழ்னு கிளிக்கிறானுவ. ஆந்திரால பிறந்தவன் தமிழ் படிக்கிறான்னா அவனுக்கு விலையில சலுகை கொடுக்கனும். இவிக ஒரு ரூபா அபராதம் விதிக்கிறாய்ங்க.

அடப்போங்கடா நீங்களும் உங்க பாடாவதி பத்திரிக்கைகளும் . சர்க்குலேட்டிங் லைப்ரரியில வாடகைக்கு வர்ரதை படிச்சாலே வவுறு எரியுது. துட்டை கொடுத்து வாங்கி படிக்கிறவுக எப்டி படிக்கிறாய்ங்களோ?

இதுல விகடனார் எங்க வராருன்னா இவிகளுக்கும் ரொட்டீனா “ஆப்பரேஷன் இந்தியா 2000” திட்டம், அதற்கான போராட்டத்திலான (?) டெவலப்மென்ட்ஸை கன்வே பண்ணிக்கிட்டிருந்தோம்.

ஒரு தாட்டி மாத்தி ரோசிங்கறாய்ங்களேன்னுட்டு ஒரு அம்பது ரூவா ஆடியோ காஸட் வாங்கி – ரிக்கார்டிங் சென்டர் போயி ( அன்னைக்கு டேப் ரிக்கார்டரெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு லாப் டாப் மாதிரிங்ணா) அவனுக்கு ஒரு பத்தோ இருபதோ அழுது ஆ.இ.200ல் பத்தி விலாவாரியா பேசி மாரடிச்சேன்.

அந்த ஆடியோ காசட்டை விகடனாருக்கு அனுப்பினேன். வழக்கம்போல தண்ணியிருக்கிற கிணத்துல போட்ட கல்லு.

கடுப்பாகி நீ பிரசுரிக்காட்டி ம..ராச்சு என் ஆடியோ காசட்டை திருப்பி அனுப்புங்கடான்னுட்டு ரூ.10 எம்>ஓ பண்ணேன்.

அப்பம் இவிக ஆகாசத்துக்கு தூக்கி ஜல்லி அடிக்கிற எஸ்.பாலசுப்ரமணியன் (ஐயர்) அலைவ். என்னாச்சுங்கறீங்க..

நான் நடந்ததையெல்லாம் எழுதி காட்டமா போஸ்ட் கார்ட் அனுப்பினேன். அப்பம் ஆ.வி ஆசிரியர் ஜே.வி. நாதன்னு ஒரு ரிப்போர்ட்டரை என் கிட்டே அனுப்பி வச்சாரு.

அவரு வந்ததுமே ஒரு புது காசட் வேணம்னா ஏற்பாடு பண்ணிரலாமான்னு ஆரம்பிச்சாரு. நாம காந்தி தாத்தா புழுக்கை பென்சிலுக்கு அடம் பிடிச்சாப்ல குரங்குப்பிடி.

அப்பாறம் நிருபர் அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்த மாதிரி ரெம்ப அழகா பேசினாரு. ஆ.இ 2000 பத்தி நோண்டி நோண்டி கேட்டாரு. ( பேட்டி மாதிரியே )

நாமளும் மத்திய மானில அரசுகளின் நெக்லஜென்ஸிய ப்ரூவ் பண்ண இருக்கிற ஆதாரங்களையெல்லாம் காட்டினோம். தெலுங்கு தினசரிகள்ள வந்த க்ளிப்பிங்ஸ்,ஸ்டோரிஸ் எல்லாம் காட்டினோம்.

அல்லாத்தையும் பார்த்துட்டு போனவர் போனவர்தான். இன்னைக்கு வரைக்கும் கு.ப “பேட்டியை பிரசுரிக்க இயலாமைக்கு (?) வருந்துகிறோம்னு ஒரு கடிதாசி கூட கிடையாது.

இவிக அரசுத்துறைகளின் சிகப்பு நாடாவை அவுக்கறாய்ங்க..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s