ஷுகர் – பைல்ஸ் – பி.பி -மனப்பிறழ்வு

Posted on

அண்ணே வணக்கம்ணே !
என்னடா இது முருகேசு திடீர்னு ட்ராக் மாறிட்டாருன்னு சிண்டை பிச்சுக்காதிங்க. நம்ம நண்பர்கள் ரெண்டு பேருல ஒருத்தருக்கு ஷுகர் – பைல்ஸ் மாட்டிக்கிச்சு. இன்னொருத்தருக்கு பி.பி -மனப்பிறழ்வு வந்துருச்சு.

இது ஏதோ அந்த ரெண்டு பார்ட்டிகளோட பிரச்சினைன்னு நினைச்சுராதிங்க. இன்னைக்கு நாம வாழற
“நாறிப்போன வாழ்க்கையில” நாலஞ்சு வயசு குழந்தைக்கு இந்த வியாதிகள் வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.

காரணம் நம்ம லைஃப் ஸ்டைல் மாறிப்போச்சு. இந்த உடம்பு இருக்கே உடம்பு.. இது கட்டின பொண்டாட்டி மாதிரி. நமக்கு 40 வயசு வர்ர வரைக்கும் நம்மளோட சகல பைத்தாரத்தனங்களையும், அகட விகடங்களையும் சகிச்சுக்கிட்டு பதவிசா கிடக்கும்.

அதுக்கப்பாறம் பொருத்தது போதும் பொங்கி எழுன்னு எந்திரிச்சுருது. ( எந்திரிக்க வேண்டியதெல்லாம் படுத்துருது அது வேற மேட்டர்)

மேற்படி ரெண்டு நண்பர்களோட லைஃப் ஸ்டைலை சுருக்கமா சொல்றேன். இந்த லைஃப் ஸ்டைல்ல உள்ளவுக மாறிருங்க. இல்லைன்னா நாறிரும்ங்க..

ஷுகர் -பைல்ஸ்:

பார்ட்டியோட பேரை சதானந்தன்னு வச்சுக்குவம். இவரோட லைஃப் ஸ்டைல் . காலையில ஏழரை எட்டுக்கு எந்திரிப்பாரு. தினசரி கிராண்டா பூசை பண்ணுவாரு.பூஜா சாமக்ரி வாங்கி முடிக்கிறதுக்குள்ள ஒரு அரை பாக்கெட் சிகரட்டு, நாலஞ்சு டீ முடிஞ்சுரும். கடை திறப்பாரு. ஒரு பக்கம் வியாபாரம் ஓடிக்கிட்டிருக்கும்.சைக்கிள் கேப்புல பூஜை.

மதியம் 12 மணி வாக்குல சாப்பிடுவாரு ( டிஃபன்). மாலை 4 மணி வாக்குல சின்னதா ஒரு குவார்ட்டரை உள்ள விட்டுக்கிட்டு மீல்ஸ். நான் வெஜ்ல எத்தீனி ரகம் இருக்கோ அதுல அட்லீஸ்ட் ரெண்டாச்சுமிருக்கும்.
ராத்திரி கடைக்கணக்கு பார்த்து முடிக்கிறதுக்குள்ள மணி பத்தரை ஆகும். அதுக்கு மேல டாஸ்மாக்கை தேடி – சரக்கை அடிச்சு தின்னு முடிச்சு வீடு சேர பாதி ராத்திரி 12 ஆகும்.

சகோதிரிகளுக்கு கண்ணாலம் பண்ற பிசியில இவரோட கண்ணாலம் தள்ளி போயிருச்சு. தனிக்கட்டை தேன். சோனியா ஒரு தம்பி. அவனுக்கு ஸ்பான்ஸரரும் இவரே.

அவன் “அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்” னு இருக்கிற கேஸு. 1995 முதல் 2004 வரை யாவாரத்துல பயங்கர அடி வாங்கி ஊரை விட்டே போயி அஞ்ஞாத வாசம்லாம் பண்ணிட்டு வந்த பார்ட்டி.அந்த 9 வருசத்துல பசி பட்டினி, அவமானம்லாம் பார்த்தாச்சு. இது ரெண்டாவது இன்னிங்ஸ். இந்த ஒரு பாய்ண்ட்ல நமக்கு இவர் மேல பிடிப்பு.

போன வருசம் முகமெல்லாம் மினு மினுத்துக்கிட்டிருந்தது. ஷுகரா இருக்கப்போகுது பாருன்னேண். கரீட் ரெகுலரா மாத்திரை மருந்துன்னு வண்டி ஓடிக்கிட்டிருந்தது.

போன வாரம் அட்டென்ஷன்ல நிக்க முடியலை, ஸ்டான்டர்ட் ஈஸ்லதான் நிக்க முடியுதுன்னு டாக்டர் கிட்ட போயிருக்காரு.

அவுத்துரு – குப்புறப்படு – முட்டிப்போடுன்னுட்டு டாக்டர் டார்ச் வெளிச்சத்துல பார்த்துட்டு பைல்ஸுன்னுட்டாரு. வாரம் பத்து நாள் மாத்திரை சாப்புடு- லிக்விட் பாராஃபின் போடு – சரியாகலின்னா ஆப்பரேஷன் தான்னுட்டாரு.

இப்படி பார்த்தா பைல்ஸ், அப்படி பார்த்தா ஷுகரு. பைல்ஸ் வந்தவன் உணவுக்கட்டுப்பாட்டை மெயின்டெய்ன் பண்ணனும்.வேளை தவறி தின்னக்கூடாது.

ஷுகரு வந்தவனுக்கு அகாலமா பசிக்கும். கொஞ்சம் கொஞ்சமா தின்னுக்கிட்டே இருக்கனும். அறுத்தா ஆறாது. இதான் பிரச்சினை.

நாம 2004 லருந்தே தலைபாடா அடிச்சிக்கிட்டிருந்தோம். அகடவிகடம் வேணா. லாலா,மசாலா குறை, அகால போஜனம் வேணா உப்பு ,காரம்,புளி குறை ,வாக்கிங் போன்னுட்டு வேப்பிலை அடிச்சு அடிச்சு நமக்குத்தேன் கைவலி.

டாக்டருக்கு என்ன இருக்கு அவரை பொருத்தவரைக்கும் இந்த பாடி பித்தளை பாய்லர் மாதிரி , மேலே போட்டா கீழே சாம்பல் வருதாங்கறதுதேன் கணக்கு.

”நோய் நாடி நோய் முதல்நாடி”ன்னு வள்ளுவர் சொன்னாரு. அதையெல்லாம் பார்க்கனும்னா ஒரு நாளைக்கு நாலு பேஷண்டுக்கு மேல பார்க்க முடியாது.

நோயை மட்டும் நாடிர்ராய்ங்க. நோய் முதல் நாடனும்னா பேஷண்டுக்கிட்டே பேசனும்.அவன் லைஃப் ஸ்டைலை தெரிஞ்சுக்கனும்.

“அது தணிக்கும் வாய் நாடனும்னா” ( பிரச்சினைக்கான தீர்வை எட்டிப்பிடிக்கிறது) அவர் படிச்ச படிப்புல கட்டியா கரைக்கப்பாரு, இல்லையா அறுத்துருன்னு தேன் சொல்லிக்கொடுத்திருப்பாய்ங்க.

ஒரு மணி நேரம் க்ளாஸ் எடுத்து உடுப்பி ஓட்டலுக்கு கூட்டுப்போனா சட்னி , சாம்பாரை துடைச்சு சாப்பிடறான் மன்சன். தொட்டு சாப்பிடுன்னு சொல்லிக்கொடுக்காதது ஆரோட தவறு?

நாம திங்கறது வாய்ல ஒன் மினட் கூட தங்கறதில்லை.ஆனால் குடல்ல ஒரு ஷிஃப்ட் நேரம் தங்கியாகனும். அது என்ன ஸ்டீல்லயா செஞ்சு வச்சுருக்கு.

அட உசுரு இல்லாத டூ வீலருக்கு போடற பெட்ரோல்,ஆயில்ல பிரச்சினை இருந்தா -அது சரியா பர்ன் ஆகலின்னா சைலன்ஸர் புகை மண்டலத்தை கிளப்புது.ஆயிலா கொட்டுது.வண்டி முக்கி முனகுது.

உசுருள்ள ஹ்யூமன் பாடியப்பத்தி சொல்லனுமா? இதை படிக்கிறவுகள்ள எத்தீனி பேருக்கு ஷுகரு -பைல்ஸ் இருக்குன்னு கைய தூக்கினா நாளைக்கு தடுப்புகளை – தீர்வுகளை பார்ப்போம்.

ரெண்டாவது கேஸையும் வர்ர வியாழக்கிழமை எடுத்துக்குவம்.மேற்படி வியாதிகள் வருவதற்கான சோதிட காரணங்களையும் அன்னைக்கே சொல்றேன்.

Advertisements

2 thoughts on “ஷுகர் – பைல்ஸ் – பி.பி -மனப்பிறழ்வு

  arul said:
  March 31, 2012 at 8:39 am

  nalla pathivu anna

  ஆகா. பூதத்தை கிளப்பி விட்டுட்டீங்களே.. இனிமே ஃபுட்ல ஜாக்கிரதையா இருக்கணும்டோய்….

  நட்புடன்
  கவிதை காதலன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s