வக்ர கிரக பலன்: திகீர் தகவல்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
வாரத்துல 3 நாள் நாட்டு நடப்பு . 3 நாள் சோசியப்பதிவுன்னு ஒரு ஏற்பாடு செய்துக்கிட்டு ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்ரோம். சோசியத்துல சரக்கு தீர்ந்துருச்சு போல அதான் நம்ம முருகேசு ரூட்டை மாத்தறாருன்னு கூட சில பேர் அக்கப்போர் பண்ணலாம்.

அசலான மேட்டர் இன்னாடான்னா சோசியத்துல உள்ள எல்லா ஆப்சனையும் எளுதனும்னா பத்து பேரோட ஆயுள் வேணம். அட லக்ன பாவம் ஒன்னை எடுத்துக்கங்க. இங்கன சூ முதல் சுக்ரன் வரை 9 கிரகங்கள் இருந்தா ஜாதகனோட கேரக்டரு என்னவா இருக்கும்னு எளுத ஆரம்பிச்சா 9 நாள் காலி. இப்படியே மத்த 11 பாவத்துக்கும் எளுத ஆரம்பிச்சா 99 நாள் காலி.ஆக 99+9 = 108 நாள் ஒப்பேத்திரலாம்.

இதுல கிரக சேர்க்கை எளுதினா அது ஒரு தொடர். லக்னத்தை மேஷம் டு மீனம் நகர்த்தி எழுதினா ஒரு தொடர். இப்படி அனுமார் வாலா எளுதி தள்ளிக்கிட்டே போகலாம்.

நிர்வாண உண்மைகள் வலைப்பூவை ஆரம்பிச்சப்போன்னுட்டு சின்னதா ஒரு ஃப்ளாஷ் பேக்கை ஆரம்பிக்க போறேன். ஆக்சுவலா இன்னைக்கு எளுத நினைச்சது கிரக வக்ரம் பற்றி.

கிரகங்கள் வக்ரம் பெறும்போது மனித மனம் கடந்த காலத்துக்கு தாவும். கடந்த கால சம்பவங்கள் ரிப்பீட் ஆகலாம். கடந்த கால தொடர்புகள் ரிவைவ் ஆகலாம். இப்பம் சனி வக்ரமானதால நம்மை ஃப்ளாஷ் பேக்க வச்சுருக்காரோ என்னமோ?

ஃப்ளாஷ் பேக்:

நாம நிர்வாண உண்மைகள் வலைப்பூவை ஆரம்பிச்சப்போ நமக்கு தொழில் சோதிடம்ங்கற எண்ணம் சத்தியமா நமக்கில்லை. கண்டதையும் எளுதிக்கிட்டிருந்தோம். ( 2000 ,ஜூலை 31 ல ஆரம்பிச்சு 2008 நவம்பர் வரை ) ஸ்டேட்ல எலீக்சன் சூடு சாஸ்தியாயிரவே தெலுங்கு வலையுலகம் பக்கம் ஒதுங்கினோம்.அங்கன 2009 மே வரை அலப்பறை உட்டு வெற்றி கொடுத்த தெம்புல விட்டதை பிடிக்க தமிழ் பக்கம் ட்ராக் மாறினோம்.

நாம திரும்பி வந்த நேரம் நாலஞ்சு திரட்டிகள் இருக்கவே நூல் பிடிச்சாப்ல போச்சு. நாம கண்டதையும் எளுதினாலும் சனம் நாம எளுதின சோதிட கட்டுரைகளுக்கு நிறைய கவனம் கொடுத்தாய்ங்க. ஆன்லைன் ஜோதிட ஆலோசனை ஆரம்பிச்சோம்.பத்திக்கிச்சு.

ஒரு கட்டத்துல தினத்தந்திக்கு நியூஸ் அடிக்க கூட நேரமில்லாத நிலைமை ஆயிருச்சு. எதை இழந்தாவது காப்பாத்திக்க வேண்டியது சுதந்திரங்கறது நம்ம சித்தாந்தம். தந்திலருந்து கழண்டுகிட்டோம்.

போன வருசம் அனுபவஜோதிடம் டாட் காம் ஆரம்பிச்சம்.சைட்டோட பேருக்கு மரியாதை கொடுக்க சோதிடப்பதிவுகளே எளுதவேண்டியதாயிருச்சு.

சமீபத்துலதான் நமக்கு ரியலைசேஷன் வந்தது . ” தத்.. நீ யாரு? உன் லட்சியம் என்ன? நீ என்ன செய்துக்கிட்டிருக்கே”ன்னு மனசாட்சி உலுக்கிருச்சு. அதனாலதேன் வாரத்துல 3 நாள் நாட்டு நடப்பு . 3 நாள் சோசியப்பதிவுன்னு ஒரு முடிவை எடுத்தம்.

நம்ம ஜாதகமே டிஃப்ரன்டான ஜாதகம். லக்னத்துல குரு உச்சம்.பத்துல ராகு. பத்துல ராகு இருந்தா இல்லீகல்னு தெரிஞ்சே தகிடுதத்தம்லாம் செய்து பணம் பார்க்கனும். லக்னத்துல குரு உச்சமா இருந்தா பழி பாவத்துக்கு அஞ்சனும்.

இது ரெண்டையும் பாலன்ஸ் பண்றது பெரிய்ய தலைவலி. இருந்தாலும் எப்படியோ வண்டி ஓடிக்கிட்டுத்தேன் இருக்கு. பாருங்க வயசு ஏற ஏற மொக்கை சாஸ்தியாயிருது.

ஆக்சுவலா ஏற்கெனவே சொன்னாப்ல இன்னைக்கு கிரக வக்ரம் பத்தி எழுதலாம்னு தேன் சின்சியரா ஆரம்பிச்சம்.ஹும் அது . எங்கெங்கயோ போயிருச்சு.

வக்ரம்னா என்ன? மெகாசீரியல்ல இதுவரைன்னு போடறானே அது மாதிரி /வீக்லி மேகசின்ல தொடர்ல நடந்த கதைன்னு போடுவானே அது மாதிரி வச்சுக்கலாம்.

முன்னோக்கி போற கதைய பின்னோக்கி ஓட்டறது .டெக்னிக்கலா சொன்னா ஒரு கிரகம் தான் கடந்து வந்த நட்சத்திர மண்டலத்தினூடாக பின்னோக்கி சஞ்சரிப்பது. இந்த பின்னோக்கிய பயணம் சில சமயம் அதே ராசிக்குள்ள மட்டும் நடக்கலாம். அல்லது அதுக்கு மிந்தின ராசிக்கும் எக்ஸ்டென்ட் ஆகலாம்.

எந்த கிரகம் எப்ப வக்ரமாகுங்கறதுக்கெல்லாம் ஐபிசி மாதிரி பக்கா ரூல்ஸ் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.

தற்சமயம் ச்சொம்மா ஒரு புரிதல் வந்தா போதும் . ஒரு பந்தியை கற்பனை செய்ங்க. 12 இலை போட்டிருக்கு. மேஷம் டு மீனம்னு 12 ராசிக்காரவுகளும் உட்கார்ந்திருக்காய்ங்க.

மொதல்ல ஒருத்தரு வந்து மேஷம் டு ரிஷபம் இலை போடறாரு. மீனம் வரை போட்டபிற்காடு அப்டியே யு டர்ன் அடிச்சு ரிட்டர்ன். அப்படி திரும்பி வரும்போது ஆருக்குனா இலை போடாம விட்டிருந்தா அவிகளுக்கு போடுவார். ( பசியில இலையை தின்னுட்டுருந்தா அது வேற கதை) அப்பாறம் போயி கொத்து கிண்ணம் கொண்டு வந்து பதார்த்தம்லாம் வைப்பாரு. யு டர்ன் – ரிட்டர்ன் போகும்போது ஆருக்குனா பதார்த்தம் விடுபட்டிருந்தா வச்சுட்டு போவாரு.

கிரகங்கள் வக்ரம் ஆகும்போதும் இதான் நடக்குது. வக்ரம்னா யுடர்ன் அடிச்சு போற சப்ளையர் மாதிரி. ஏற்கெனவே பரிமாறியிருந்தா அது கிடைக்காது. விடுபட்டிருந்தா அது கிடைக்கும்.

கிரகங்கள் சாதாரண நிலையில் சஞ்சரிக்கும் போது பலன் பெறாதவர்கள் அவை வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பலன் பெறுவாய்ங்கன்னு ஒரு விதி இருக்கு.

ஆன்லைன் நிறைய சோசியருங்க எழுதப்படாத விதி ஒன்னை வச்சிருக்காய்ங்க.அது என்னன்னா எதாவது ஒரு புஸ்தவத்தை எடுத்துக்க வேண்டியது .ஃபுல் ஸ்டாப் ,கமா கூட மாத்தாம அப்டியே வாந்தி எடுக்க வேண்டியது. அவிகளை அப்டியே சைடுல விட்டுட்டு மேட்டருக்கு போவோம்.

ஒரு கிரகம் வக்ரமாகும் போது கிடைச்ச வேலை அது வக்ர நிவர்த்தியானதும் ஃபணாலாகலாம். ஒரு கிரகம் வக்ரமாகும் போது நடந்த கண்ணாலம் அது வக்ர நிவர்த்தியான பிறவு விவாகரத்துல முடியலாம்.

ஏற்கெனவே சொன்னாப்ல கிரகம் வக்ரமாகும் போது பழைய சம்பவங்கள் ரிப்பீட் ஆறது – பழைய மனிதர்கள் திரும்பி வருவது ( உ.ம் போயஸ் தோட்டத்துக்கு சசிகலா) கூட நடக்கும்.

ஒரு கிரகம் வக்ரமாறதை இன்னம் பர்ஃபெக்டா புரிஞ்சுக்கனும்னா ஃபுல் மப்புல உள்ள மனிதனை கற்பனை பண்ணுங்க.அவன் ரெம்ப நல்லவன்னா அவனுக்குள்ள ஒளிஞ்சிருந்த “வில்லத்தனம்லாம்” வெளிய வரும். அவன் ரெம்ப கெட்டவன்னு வைங்க. மப்பு ஏறினதும் பையில உள்ளதையெல்லாம் வாரி வாரி கொடுப்பான். ( மறு நாள் மப்பு இறங்கினதும் ஆட்டோ பிடிச்சு வந்து கத்தியை கழுத்துல வச்சு வாங்கிருவான் அது வேற கதை)

முக்கியமான சமாசாரம் வக்ர கிரகம் நின்ன இடத்தை வச்சு அது சாதாரணமா நின்னிருந்தா என்ன பலனை தரனும்னு கணிச்சுக்கங்க. அது வக்ரம்ங்கறதால உங்க கணிப்புக்கு நேர் எதிரிடையான பலன் தான் நடக்கும்.

உ.ம் சிம்மத்துக்கு வாக்குல சனி. சாதாரணமா நின்னா வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கனும். அவரு வக்ரங்கறதால கறாரா பேசி காசு பணம் பார்க்கனும்.

Advertisements

3 thoughts on “வக்ர கிரக பலன்: திகீர் தகவல்கள்

  arul said:
  March 29, 2012 at 7:28 am

  good explanation

  கிருஷ்ணா said:
  March 29, 2012 at 8:14 am

  தீகிர் தகவலா …ஒரு தகவலையும் காணோம் 🙂

  அப்போ மறுபடியும் போலி முருகேசு வருவார்னு சொல்லுறேள் ….

  போலி முருகேசு கமெண்ட்ட approve பண்ணுங்க….. ஒண்ணுமே இல்லாமா இருக்கரதுக்குக்கு போலி முருகேசு வந்தாவாவது பொழுது போகும் ஜாலியா 🙂

   S Murugesan said:
   March 30, 2012 at 4:19 am

   வாங்க கிருஷ்ணா !

   போலி முருகேசு கமெண்ட் போடறாரு – நான் தேன் அப்ரூவ் பண்றதில்லைங்கற மேட்டர் எனக்கு தெரியும் -போலி முருகேசுக்கு தெரியும். ஒங்களுக்கு எப்டி தெரியும்?

   ஜா.ரா தேன் இப்பம் உங்க பேர்ல வந்திருக்காரா அ நீங்கதேன் ஜா.ரா/போலி முருகேசனா

   பத்திக்கிச்சு பத்திக்கிச்சு .. டைம் பாஸு தானே வேணம். எஞ்ஜாய் எவ்ரி படி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s