வடகிழக்கில் தெருக்குத்து: அரசியல் தலைமை
அண்ணே வணக்கம்ணே !
உண்மைய சொல்லனும்னா 1984 லருந்தே தாளி தேய் பிறை ஆரம்பிச்சுருச்சு. ஆனால் இது வெளியுலகத்துக்கு தெரியாத அளவுக்குத்தேன் இருந்தது. கொய்யால 1987 ல பிகாம்ல கோட்டடிச்சது -லவ் மேரேஜ்ல கோட்டை விட்டது நடந்த பிற்காடு ஊரே கொல்லுனு ஆயிருச்சு. 1991 வரை கூட தாய் கட்சியில ஒட்டிக்கிட்டிருந்ததால அஜீஸ் ஆயிருச்சு.
1991ல கண்ணாலம் பண்ணிக்கிட்டு வெளிய வந்த பிற்காடுதேன் அப்பாவோட ரகசிய உதவிகளையும் மீறி வறுமை வாட்ட ஆரம்பிச்சுருச்சு. அதுலயும் 1994 ல அப்பா டிக்கெட் போட்டாரா கிளிஞ்சுருச்சு. நேத்திக்கு வாஸ்து பத்தி ஏதோ டச் பண்ணதோட சரி . இன்னைக்கு சொந்தகதையான்னு சலிச்சுக்கிராதிங்க. மேட்டருக்கு வந்துக்கிட்டே இருக்கேன்.
நேத்திக்கு வீட்டின் இன்னபிற திசைகள் திறந்தவெளியாயிருந்து ஈசானியம் (வடகிழக்கு) மூடியிருந்ததால அவதிப்பட்ட ஒரு குடும்பத்தை பத்தி சொல்லியிருந்தேன். நம்ம லைஃப்லயும் ஈசான்யம் மேஜர் ரோல் ப்ளே பண்ணியிருக்கு.
மேலே சொன்ன கேஸ்ல ஒரு பெண் ஒல்லியோ ஒல்லியா துடைப்ப குச்சி மாதிரி இருந்ததுன்னு சொன்னேன். ஈசானியம் குருவுக்குரிய திசை. குரு தான் புத்திர காரகன் -அவருதான் கங்கண காரகன். இந்த பெண் இப்படி கண்ணாலத்துக்கு அன்ஃபிட்டா இருந்ததுக்கும், அடுத்த பெண் பித்து பிடிச்சு அலைஞ்சதுக்கும், ஒரு பையன் மந்திரவாதி பிடியில சிக்கி பொன் பொருள் இழந்ததுக்கும் மத்த திசை ( தெற்கு) திறந்த வெளியா இருந்து ஈசானியம் மூடப்பட்டதே காரணம்.
நம்ம வீட்டை பொருத்தவரை கிழக்கு பார்த்த வாசல் – வடகிழக்குல பெட் ரூம் – அந்த மூலைக்கு நேர் எதிர்க்க தெரு ( தெருக்குத்து) -மாத்தி கட்டறதுக்கு மிந்தி மேற்கு திசை திறந்த வெளி – ஈசானியம் மூடியிருந்தது.
இதனோட எஃபெக்ட் என்னடான்னா அப்பா கண்ணாலம் கட்டிய பிரம்மச்சாரி ( ஆந்திராவுல அத்தீனி ஜில்லாவுக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆகி கேள்வி கேட்காம போயி வேலை பார்த்த கேசு ) ஒரு சித்தப்பு சின்னவயசுல கண்ணாலமாயிட்டாலும் குழந்தை வரம் கேட்டு அலைஞ்சுக்கிட்டு கிடக்க, இன்னொரு சித்தப்பு பெண் பார்க்க விசிட் அடிக்காத ஊரே கடியாது.
கடேசியில அவரு ஓகே பண்ணின பெண்ணை வர்ணிச்சா அவர் ஆத்மா ராத்திரிக்கு வந்து லொள்ளு பண்ணும். இப்பமே கிரக நிலை சரியில்லாம பேஸ்தடிச்சு கிடக்கோம்.எதுக்கு வம்பு.
அத்தைய பொருத்தவரை மாப்பிள்ளை ஓகே. அவரோட ஃபேமிலி எலுமிச்சம்பழம் மொத்தவியாபாரம்னு சொன்னாய்ங்க. அப்பாறம் பார்த்தா கூடையில விக்கிறவுகளாம். (இதை ஈடு கட்ட சாகிற வரை அப்பா படியளந்துக்கிட்டே இருந்தது வேறு கதை)
நம்ம தலைமுறைக்கு வரும்போது பெரிய அண்ணனோட மேரீட் லைஃபும் ட்ரபுள் சம் தேன். அண்ணி வாடகை வீட்டு கக்கூஸுல கட்டெறும்பு வருதுன்னு தாய் வீட்டுக்கு போயிட்டாய்ங்க .அப்பாறம் அஜீஸ் ஆயி லைஃபை ஆரம்பிச்சாய்ங்க வி.ஆர் .எஸ் வாங்கின பிற்காடு ஹார்ட் அட்டாக்ல டிக்கெட்டு.சின்ன அண்ணன் லேட் மேரேஜுக்கு பிற்காடு நடு வயசுல ப்ளட் கான்சர்ல டிக்கெட். நம்ம கதை தெரிஞ்சது தானே. மொதல் கண்ணாலம் ஃபணால். ரெண்டாவது 16 வருசம் உஞ்ச விருத்தி . தம்பிக்காரன் கதை டிஃப்ரன்ட். படக்குனு பெப்டிக் அல்சர் வந்து ரத்தவாந்தில்லாம் எடுத்திருக்கான்.
இத்தனைக்கும் காரணம் மேற்கு திசை திறந்திருந்து வடகிழக்கு மூடியிருந்ததுதேன். தாளி வீட்டை இடிச்சு கட்டின பிற்காடு மேற்கு திசையில உள்ள கிணற்றுக்கு சூரிய வெளிச்சம் வரணும்னு கூரையில கம்பி சன்னல் வச்சாய்ங்க.மழை விட்டும் தூவானம் விடலைன்னா இதான் போல.
வடகிழக்கு திசைய பத்தி சொல்லனும்னா இன்னம் பத்து பதிவு போடனும். இன்னம் பல மேட்டர்லாம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல நிச்சயமா சொல்றேன்.
டாப் சீக்ரெட்: வடகிழக்குல தெருக்குத்து இருந்தா அந்த வீட்ல இருந்து ஒரு மக்கள் தலைவன் புறப்பட்டே ஆகனும். நம்ம ஜாதகத்துல குரு வேற உச்சம். பாவத்துல குருவோட சந்திரன் வேற சேர்ந்துக்கறாரு. வெய்ட் அண்ட் ஸீ..
March 23, 2012 at 7:50 am
//////இத்தனைக்கும் காரணம் மேற்கு திசை திறந்திருந்து வடகிழக்கு மூடியிருந்ததுதேன்.///////
இந்தியாவோட வட கிழக்கே(இமயமலை ) மூடி தான் கிடக்கே……..
இந்தியாவுல No 1 கோடிஸ்வரனும் இருக்கான் பிச்சை காரனும் தான் இருக்கான்………
எத்தனையோ வளங்களுடன் இந்தியா ஒரு காலத்துள்ள இருந்ததே…..
ஒரு இரவு அரைகிறுக்கன் ஒருவன் குடித்து விட்டு முகம் எல்லாம் அடிபட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்…. தன் முகத்தை கண்ணாடி யில் பார்த்தான்….அடிபட்ட இடத்துக்கு எல்லாம் மருந்து போட்டேன்…
காலை நேரத்தில் அவன் பொண்டாட்டி கண்ணாடியை பார்த்து விட்டு வந்து அவன் வீங்கிய முகத்தில் இன்னும் இரண்டு அடி சேர்த்து கொடுத்தாள்……
ஏன்? அவன் தன் முகத்துக்கான மருந்தை கண்ணாடியில் போட்டு இருந்தான்…..
நீங்க சொல்லுற கதை இந்த கதை மாதிரி தான் இருக்கு 🙂
March 23, 2012 at 2:25 pm
பாஸ் !
ஆஃபீஸ் மொத்தமும் குப்பைத்தொட்டி கணக்கா கிடக்கட்டும். உங்க டேபிள், உங்க டேபிள் ட்ராயர், உங்கள் அலமாரியை ஒழுங்கா வச்சிருந்திங்கனா மத்தவுக அவுட் புட்டை விட உங்க அவுட் புட் நிச்சயம் பெட்டரா இருக்கும்.
வீடுங்கறது உங்க டேபிள் மாதிரி. தட் ரெசம்பிள்ஸ் யுவர் மைண்ட்.
March 23, 2012 at 12:54 pm
WHA TIS MEANT BY நைருதியில
March 23, 2012 at 2:23 pm
தென் மேற்கு திசையில்னு அருத்தம். மனைக்கு தெற்குக்கும் மேற்குக்கும் இடையில் உள்ள மூலை /திசை
March 24, 2012 at 6:58 am
in my office bathroom is in eesaniyam – west faced door entrance – no work – no money – what to do?