வடகிழக்கு மூடியிருந்தால் பைத்தியம்?

Posted on

அண்ணே வணக்கம்ணே !
வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பு – அடுத்த 3 நாள் தேன் சோசியம்னு ஒரு விதிய வச்சுக்கிட்டு ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கோம்.

நிறைய பேரு சோசியத்தை ஒரு சாங்கியமா பார்க்கிறாய்ங்க. ( திமுகவுல பொதுக்குழு செயற்குழு கூட்டற மாதிரி) இவிக எடுக்கிற முடிவுக்கு சோசியர் ஓகே சொல்லனும்னு நினைக்கிறாய்ங்க.

இந்த மயித்துக்கு எதுக்கு சோசியம் பார்க்கனும்? லைஃப்ல ஒரு ஜங்சன் பாய்ண்ட் வந்து – எந்த பக்கம் ஒடிச்சு திருப்பலாம்னு ஒரு பஜில் வந்து – முடிவெடுக்கிற வாய்ப்பிருக்கும் போது சோசியம் கேட்கலாம்.

நம்மாளுங்க எப்டின்னா லைஃப்ல பயங்கரமா கமிட் ஆகியிருப்பான். அவனா போட்டுக்கிட்ட எல்லைக்கோட்ல இருந்து ஒரே ஒரு மைக்ரோ மிமீ கூட வெளிய வர முடியாது.ஆனால் சோசியம் கேப்பான்.

மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடற நிலை இருந்தா டாக்டர் கிட்டே போகனும். அப்பம் நோயும் குணமாகும் .டாக்டருக்கு நெல்ல பேரு.

பத்து வருசத்துக்கு மிந்தி ஒரு வீட்டுக்கு வாஸ்து பார்க்க கூட்டுப்போனாய்ங்க.

தெற்கு பார்த்த வீடு. அப்பம் தெற்குல தெரு இருக்கும்.அது காலியிடத்தின் கீழ் வரும்.

வீட்டுக்கு கிழக்கு வடக்குல காலியிடம் இருந்தா மட்டும் நெல்லது. மத்த திசைகள்ள காலியிடம் இருந்தா நெல்லதில்லை. ஞா இருக்கா?

நைருதியில மாடிப் படிக்கட்டு (ஓகே) ஆக்னேயத்துல பாத்ரூம் ,லேவட்ரி (அதுங்கீழவே செப்டிக் டாங்க்)

சைட்ல தெற்கு பாகம் ஏறக்குறைய காலி. வடக்கு பாகத்துல கன்ஸ்ட்ரக்சன். ஈசான்யம் ச்சொம்மா இரும்பு பொட்டி கணக்கா மோல்டிங் போட்டு கிடக்கும்.

செப்டிக் டாங்க் வெட்ட இருக்கிறது ரெண்டே சாய்ஸ்.

1.வடக்கு சென்டர் 2.கிழக்கு சென்டர்

மத்த எந்த பாகத்துலருந்தாலும் தாளி பல்புதேன். இங்கன ஆக்னேயத்துல இருக்கு. இது பெண்களை காட்டும் திசை. இங்கன பள்ளமிருந்தால் பெண்கள் கடும்மையா பாதிக்கப்படுவாய்ங்க.

வீட்டின் எந்த பாகமாவது திறந்த வெளியாக இருந்து ஈசான்யம் மூடிக்கிடந்தா வேற வம்பே வேணா. ஈசான்யம் மைண்டை காட்டும் இடம் .

எல்லாத்தையும் பார்த்துட்டு டர்ராகி ” நெல்லது கொஞ்சமாவும் கெட்டது சாஸ்தியாவும் ” சொல்ட்டு வந்துட்டம்.

அந்த ஃபேமிலியோட செனேரியோவை சொன்னா வாஸ்துவோட எஃபெக்ட் எந்தளவுக்கு இருக்கும்னு புரியும்.

அம்மா விதவை -பெரிய பொண்ணு 60 வயசு தாத்தாவுக்கு ரெண்டாந்தாரமா போச்சு. அடுத்தது துடைப்பக்குச்சி சைஸ்ல “ஈ” னு இருக்கும். கடேசியில ஒரு பொண்ணு. அது பித்தம் பிடிச்சு ரோட் ரோடா அலைஞ்சுக்கிட்டிருக்கும்.

இடையில ரெண்டு ஆண் பிள்ளைகள். அதுல பெரியவன் ஏதோ ஒரு நாளைக்கு 200 அ 300 சம்பாதிச்சுட்டு வர, அம்மா 100 அ 200 சம்பாரிக்க லைஃப் ஓடிக்கிட்டிருந்தது. பையங்கள்ள சின்னவன்து பெரிய ஸ்கான்டல். எவனோ மந்திரவாதி மந்திரம் கத்துத்தர்ரான்னு அவன் பின்னாடி அலைஞ்சுக்கிட்டு -காசு பணம்னு நிறையவே தெண்டம். ஒரிஜினலா பார்த்தா மந்திரவாதிக்கு கிழங்கு கிழங்கா பொம்பளை பிள்ளைங்க.அதுல எவளையாவது படுக்கப்போடலாம்னு இவிக அலைஞ்சாப்ல இருக்கு.

பெருஸ்ஸா இடிச்சு கட்டலைன்னாலும் ச்சொம்மானாச்சு வேக்குவத்தை குறைக்க சில முதலுதவிகள் மாதிரி சில விஷயங்களை சொல்லிட்டு வந்தேன்.

நமக்கு பேசிக்கலாவே சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கொஞ்சம் சாஸ்தி. ( சிம்மம்ல) முந்தா நேத்து மேற்படி பார்ட்டிய நம்ம கிட்டே கூட்டிட்டு வந்த ஆளு கிராஸ் ஆனான். என்னப்பா சேம லாபம்லாம் எப்டின்னு கேட்டேன். ( ச்சொம்மா ஒரு சக்ஸஸ் ஸ்டோரிய கேட்கலாமேன்னு ஒரு ஆர்வம்) அவன் பழைய குருடி கதவை திறடின்னு இருக்குங்கறான்.

நமக்கு கடுப்பாயிருச்சு.

” யோவ் நான் சொல்ட்டு வந்த ஆல்ட்டரேஷன்லாம் பண்ணாய்ங்களா?”
“இல்லப்பா”
“சரி ஒழிஞ்சு போவட்டும் .ஊட்டை காலி பண்ணிரச்சொன்னேனே அதையாவது செய்தாய்ங்களா?”
“இல்லப்பா”

இந்த மாதிரி பார்ட்டிங்களாலதான் சோசியம் ,வாஸ்துன்னாலே சோர்ஸ் ஆஃப் ஜோக் மாதிரி ஆயிருச்சு.

One thought on “வடகிழக்கு மூடியிருந்தால் பைத்தியம்?

    Sankar Gurusamy said:
    March 22, 2012 at 8:09 am

    இதுக்குதான் ரொம்ப ஜோசியம் பார்க்கரது இல்லை. எப்பவாவது தேவைப்பட்டா மட்டும் பார்க்கிறதுதான் நல்லது.

    http://anubhudhi.blogspot.in/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s