கூடங்குளம்: 'ஜெ'வின் பச்சை ..தனம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நாம அல்லாருமே தற்சமயம் லைஃப்ல கொஞ்சம் ஸ்ட்ரகிள் இருக்கு எல்லாம் செட் ரைட் ஆன பிற்காடு “மனசுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு – மனசுக்கு பிடிச்சதை மட்டும் செய்யனும்பா”ன்னு நினைக்கிறோம்.

மேட்டர் இன்னாடான்னா இந்த நாளை விட அடுத்த நாள் இந்திய அரசியல் இன்னம் கொஞ்சம் “கலீஜு” ஆயிட்டிருக்கும்.

இந்திய பொருளாதாரம் இன்னம் கொஞ்சம் வீங்கியிருக்கும். முக்கியமா நம்ம பாடியில இன்னம் கொஞ்சம் தேய்மானம் சாஸ்தியாகி வயசாகியிருக்கும்.

1984 லயே பத்திரிக்கைகளுக்கு “படைப்புகள்”அனுப்ப ஆரம்பிச்சுட்டம். 1990 மார்ச் வரை பிரசுரமானதென்னவோ “ஐந்தே ஐந்து” சிறுகதைகள் தான். இந்த அஞ்சு சிறுகதைகள் சங்கப்பலைகை ஏற கொய்யால 5000 சிறுகதைகள் எழுதியிருக்கனும்.

ஆந்திரபிரபா மாதிரி செத்துப்போன பத்திரிக்கைக்கு உதவாக்கரை செய்திகள் எழுதியிருக்கம். தினத்தந்தி மாதிரி பத்திரிக்கைக்கு மீன் விலை உயர்வு , தக்காளி விலை வீழ்ச்சின்னு பர பர செய்திகள் எழுதிக்கிட்டி ருந்தம்.

அப்பம் இருந்த அறியாமை, ப்யூரிட்டி, உலகத்தின் மீதான நம்பிக்கை ,பாடியில இருந்த ஸ்டாமினா ,உற்சாகம் நிச்சயமா இப்ப இல்லை

அதெல்லாம் இருந்தப்ப விரயம் பண்ணிட்டம். இதான் வாழ்க்கை. ஒவ்வொரு தப்பையும் -ஒவ்வொருத்தரும் தனித்தனியா செய்துத்தான் திருந்தனும்னா லட்சம் தடவை பிறந்து வாழ்ந்தாலும் நோ யூஸ்.

அடுத்தவுக லைஃபும் நமக்கு பாடம்தேன். ட்யூஷன் ஃபீஸ் எல்லாம் கடியாது. அதுசரி ஒரு காலத்துல “ஏதாவது நடந்திருக்கும் . நல்லது துவங்கியிருக்கும்”ன்னு மலையளவு நம்பிக்கையோட விடிஞ்சும் விடியாத சமயத்துல போயி நியூஸ் பேப்பர் வாங்கி படிப்பம்.

இப்பம்லாம் கொய்யால ..ஆன்லைன்ல ச்சும்மா மேஞ்சாலே வவுறு எரியுது.. முந்தா நேத்து வாரத்துல 3 நாள் நாட்டு நடப்பு – 3 நாள் சோசியப்பதிவுன்னு 2 வருசத்துக்கு மிந்தி ஆரம்பிச்சிருந்தா குறைஞ்ச பட்சம் சிறை -அதிக பட்சம் என் கவுண்டராச்சும் நடந்திருக்கும்.

தமிழ்த்தாய்க்கு ஒன் டைம் செட்டில்மென்ட் பண்ணியிருக்கலாம். ஹூம்..பெட்டர் லேட் தேன் நெவர்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்னு ஒரு கதை வலையுலகத்துல ஓடிக்கிட்டிருந்தது . மவனே இதை ஆதரிக்கலை டர்பனை உருவிருவம்னு மன்மோகனாரை நெருக்கித்தள்ளிட்டிருந்தாய்ங்க. அவரு :

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா விரும்புகிறதுன்னு சொல்ட்டாராம்.

உடனே அந்த தீர்மானமே சப்பை -மொக்கை -தக்கை அதனால எந்த யூஸும் இல்லைன்னு ஆரம்பிச்சுட்டாய்ங்க. கொயப்பமா கீது பாஸு..

//கூடங்குளம்: திறக்க முடிவு: முதல்வர் ஜெயலலிதா//

இதை .. இதைத்தான் நான் 3 மாசம் மிந்தி கெஸ் பண்ணி வச்சிருந்தேன்.ப்ளாக்லயும் கிறுக்கினாப்ல ஞா. நம்ம அரசியல் அமைப்புல மானிலம்லாம் ஒன்றியத்தை விட கொஞ்சம் பவர்ஃபுல் அவ்ளதான்.

அம்மாவை சொல்லிக்கூட குத்தமில்லை. அமைப்பே அப்படித்தான். ஏதோ அம்மாவோட ராட்சத மெஜாரிட்டி கொஞ்சம் தயங்க வச்சிருக்குமே தவிர.. அம்மாவை “சற்றே தள்ளியிரும் பிள்ளாய்”னுட்டு கோதாவுல இறங்கற தாக்கத் மத்திய அரசுக்கு கீது.

ஆனால் இது ஜெ மேல கடுப்பாக என்னடா காரணம்னா “அவிக அவிகளாவே இருந்திருக்கலாம்” . அதாவது அவிக மென்டாலிட்டியே ஃப்யூடல் மென்டாலிட்டி, ஃபன்டமென்டலிஸ்ட், மதவாதி , இந்த அணு ஆயுதம், தடா,பொடால்லாம் ரெம்ப பிடிக்கும்.

ஆரம்பத்துலருந்தே “கூடங்குளம் வேணம்”னு அனவுன்ஸ் பண்ணி மூவ் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு நரித்தனமா வேணாம்னுட்டு “காரியங்களை” சாதிச்சுட்டுக்கிட்டு (லேட்டஸ்டா சங்கரன் கோவில் இடைத்தேர்தல்) அமைச்சரவைய கூட்டி தீர்மானிக்கிறது பச்சை ………. தனம்.
( கோடிட்ட இடத்தை பச்சோந்தி தனம்னு நிரப்புங்கப்பா)

ட்வீட் பண்ண வேண்டிய மேட்டரை இந்த பதிவுல சேர்த்திருக்கேன். (செய்திகள் உபயம்: தினமணி)

//பிரதமரின் பதில் மழுப்பலானது: ஜெயலலிதா//
ஆனால் நீங்க ரெம்ப எதிர்பார்க்கிறிங்க. வாய் திறந்ததே மலை..

// கேஸ், டீசல் விலை உயர்த்தப்படும்: பிரணாப் முகர்ஜி//
நாட்டோட மரியாதையத்தான் உசத்தை முடியலை. இதியாச்சும் உசத்தறிங்களே

// அவமதித்தால் ஆதரவு வாபஸ்: மம்தா //
அங்கன முலாயம் ரெடி.. இனி கிலோ கிலோவா அவமதிப்புத்தேன்

// கோவாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 11 குறைவு//
எட் றா.. வண்டியை உட்றா கோவாவுக்கு

//பிரதமருடன் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று சந்திப்பு//
போனமாதிரியே வேட்டியோட திரும்பிவரனும்

//தமிழக அரசின் முடிவு துரதிருஷ்டவசமானது: உதயகுமார்//
இதை இப்பம் சொன்னா நாம கேணைங்க.. வெடிச்சு தொலைச்சு சனம் கொத்தா செத்தாதேன் இவிகளுக்கு திருப்தி

//அணுமின் நிலையம் திறக்க தமிழக அரசு முடிவு ;அமைச்சரவை கூட்டத்தில் ஜெ., //சூப்பர்// முடிவு !//
தினமலர் ஹெட் ஆஃபீஸை கூ.குளத்த்க்கு மாத்த தயாரா?

// 24 மணி நேரத்தில் மாற்றம் வரும் காலம்: நொந்து பேசுகிறார் பிரணாப் //(தினமலர்)
நீங்க மட்டும் மாறவே மாட்டேங்கிறிங்களேடா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s