ஆண்மைக்குறைவு: பரிகாரம் 4

Posted on

அண்ணே வணக்கம் !
எளுதினவன் ஏட்டை கெடுத்தான் -பாடினவன் பாட்டை கெடுத்தாங்கறாப்ல எம்மாம் நெல்ல ஜாதகத்துல பிறந்தாலும் நாறிப்போறவுக இருக்காய்ங்க.

அதுலயும் இந்த கண்ணாலம் – கில்மா மேட்டர்ல நிறையவே நாறிப்போறாய்ங்க. இந்த செனேரியோல லக்னாதிபதி எங்கே இருந்தாலும் ஆண்மை இழப்பு – கண்ணாலத்தடைக்கு காரணம் இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதையடுத்து பரிகாரங்கள் சொல்லிட்டு இருக்கேன்.

நேத்திக்கு லக்னாதிபதி 1 டு 4 பாவங்கள்ள இருந்தா என்ன பரிகாரம்னு சொல்லியிருந்தேன். இன்னைக்கு லக்னாதிபதி அஞ்சுல இருந்தா என்ன..ஏதுன்னு பார்ப்போம்..

1-5
லக்னாதிபதி அஞ்சுல இருந்தா சதா சர்வ காலம் தன்னை பற்றியே யோசிச்சுக்கிட்டு கனவுலகுல சஞ்சாரம். ஆகாய கோட்டை கட்டிக்கிட்டு அதுலயே வாசம். இப்டி இருந்தா என்ன ஆகும்? இவரோட உலகமே வேறயா இருக்கும்.

இங்கன யதார்த்தமா உள்ள உலகம் இவிகளை நெக்லெக்ட் பண்ணிரும். கண்ணாலமாவது கருமாதியாவது.மூச்.

மேலும் இவிக அதிர்ஷ்டத்தையே நம்பிக்கிட்டு இருப்பாய்ங்க. மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி தம் மக்கள் ( வாரிசுகள்) நலனையே நாடுவாய்ங்க , கனவு கண்டுக்கிட்டு இருப்பாய்ங்க.

இயற்கையில ஒரு விசித்திர விதி என்னன்னா எவன் எதை முக்கியம்னு நினைக்கிறானோ அதான் அவனுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கிட்டே இருக்கும்.

எவன் எதை கண்டுக்கலியோ அது இவனை விடாது பின் தொடரும். பெயர்,புகழ்,வாரிசுகள்,அதிர்ஷ்டம் எல்லாம் ஒரு இழவுதேன்.

நீங்க கண்டுக்கிடலின்னா ஃபாலோ பண்ணும். கண்டுக்கிட்டா லொள்ளு பண்ணும். ஒரே ஆசாமி மேற்படி ஐட்டங்களை கண்டுக்காதவரைக்கும் ஃபாலோ பண்ணும். கண்டுக்கிட்டா ஃபணால் ஆயிரும். கண்ணாலம் கூட இதே கேஸுதேன்.

லக்னாதிபதி அஞ்சுல இருந்தா ” எனக்கொரு மகன் பிறப்பான் -அவன் என்னைப்போலவே இருப்பான்”னுட்டு கனவு காண தொடங்குவாய்ங்க.

உயிர் வாழ்தல் அசலுக்கே ஆப்படிச்சுரும். கண்ணாலமே மாய்மாலம் பண்ணும். அதனால ஃப்ரீயா உடு ராசா !

தன்னையே தான் நினைத்திருந்தால் என்னாகும்ங்கறதுக்கு ஒரு பலான கதை .

ஒரு அணிலுக்கு ரொம்ப நாளா லைஃப்ல ஒரு ஆனையோட கில்மா பண்ணனும்னு ஆசை. இதுக்காக என்னென்னமோ தகிடு தத்தமெல்லாம் பண்ணி காதல் கீதல்னு படம் காட்டி ஒரு ஆனைய லைனுக்கு கொண்டு வந்துருச்சு. காரியத்துலயும் இறங்கிருச்சு.

அந்த நேரம் பார்த்து ஆனை தலை மேல ஒரு பனங்காய் கொத்து விழுந்துச்சு. ஆனை வலில பிளிருச்சு.உடனே அணில் . ” என்ன..டா.. செல்லம் ரொம்ப வலிக்குதா?” னு கேட்டுச்சாம்.

தன்னையே தான் நினைத்திருந்தால் இந்த மாதிரிதேன் இழவெடுக்கும்.

ஒரு பிரபல எழுத்தாளர் தன் நண்பர் ஒருவரை தன் கதைகளை உரக்க படிக்க சொல்லிவிட்டு பின்னாலிருந்து அவரும் அதை ரசிப்பாராம்.

நம்ம தாத்தா கூட பாசத்தலைவனுக்கு பாராட்டு , மோசத்தலைவனுக்கு சீராட்டுன்னு விழால்லாம் எடுத்து சனம் புகழ புகழ கேட்டுக்கிட்டே இருந்தாரு நிலைமை என்னாச்சு?

இந்த மாதிரி கிராக்கிங்களுக்கு இதர கிரக பலம் காரணமா கண்ணாலமானாலும் பொஞ்சாதி சீக்கிரத்துலயே கழண்டுக்குவா.

அடுத்தது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டம்ங்கறது நாம அடிக்கடி எடுத்து விடற அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்” மாதிரி ”

அது நம்ம மூளையில தெறிக்கனும்னா அதுக்கும் முயற்சி தேவைப்படுது. ” நான் என்னிலிருந்து விலகி நின்றால்” மட்டுமே இது சாத்தியம்.

சதா தன்னை நினைத்து தன்னில் மூழ்கி இருக்கும் பார்ட்டி எங்க தன்னிலிருந்து தான் விலகுவது?

வாரிசுகள் மேட்டரும் இதே கதைதான். எங்க அப்பா வருசா வருசம் ட்ரான்ஸ்ஃபர் ஆயிக்கினே இருப்பாரு. ஆறு மாசத்துக்கொரு தபா ஊருக்கு வருவாரு.

வந்தப்பல்லாம் எங்கம்மா கிட்டே ” சுசி.. இப்ப முருகன் எந்த க்ளாஸு படிக்கிறான்” னு கேட்டு தெரிஞ்சுக்குவாரு.

லோக்கல்ல வந்த பிறகும் 9 மணி ஸ்கூலுக்கு மொதல் பெல் அடிச்ச பிற்காடுதேன் ( நம்ம ஊடு அம்மாம் கிட்டக்க) எளுப்பி விடுவாரு.

ஆனால் இன்னைக்கு நிறைய அப்பா அம்மா பசங்க என்னமோ ரேஸ் குதிரை மாதிரியும் தாங்கள் ஏதோ ஜாக் பாட் அடிக்க காசு கட்டறாப்லயும் வெறி பிடிச்சு அலையறாய்ங்க.

நான் சொன்ன விதியை ஞா படுத்திக்கங்க. நீங்க கண்டுக்காதது விளங்கும். துலங்கும் . கண்டுக்கிட்டு லொள்ளு பண்ண ஆரம்பிச்சா தண்ணி காட்டும்.

இதுக்கெல்லாம் என்ன பரிகாரம்?

1.மேஷ லக்னம்:
அதிபதி செவ். இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (சிம்மத்துல ) இன்னா பண்ணனும்?

2.ரிஷப லக்னம்:
அதிபதி சுக். இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (கன்னியில ) இன்னா பண்ணனும்? இங்கன சுக்ரன் நீசம் வேற .

3.மிதுனம்:
அதிபதி புதன் இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (துலா ) இன்னா பண்ணனும்?

4.கடகம்:
அதிபதி சந்திரன் .இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (விருச்சிகம் ) இன்னா பண்ணனும்?இங்கன இவர் நீசம் வேற

5.சிம்மம்:
அதிபதி சூரியன் இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (தனுசுல ) இன்னா பண்ணனும்?

6.கன்னி:
அதிபதி புதன் . இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (மகரம் ) இன்னா பண்ணனும்?

7.துலா:
அதிபதி சுக்கிரன் இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (கும்பம் ) இன்னா பண்ணனும்?

8.விருச்சிகம்:
அதிபதி செவ் இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (மீனத்துல ) இன்னா பண்ணனும்?

9.தனுசு:
அதிபதி குரு இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (மேஷம் ) இன்னா பண்ணனும்?

10.மகரம்:
அதிபதி சனி. இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (ரிசபத்துல ) இன்னா பண்ணனும்?

11.கும்பம்:
அதிபதி சனி.இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க (மிதுனத்துல ) இன்னா பண்ணனும்?

12.மீனம்:
அதிபதி குரு. இவர் அஞ்சுல நிக்கிறாருன்னு வைங்க ( கடகத்துல) இன்னா பண்ணனும்? இங்கன இவரு உச்சம் வேற.

இந்த எல்லா கேள்விகளுக்கும் விடை அடுத்த பதிவில் .. உடுங்க ஜூட்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s