ஆண்மை இழப்பு பரிகாரம்: 3

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகம் எப்டி இருந்தாலும் மன்சன் நாறிப்போக வாய்ப்பிருக்கு. முக்கியமா தன் திருமணம் -திருமண வாழ்க்கையை நாறடிச்சுக்க வாய்ப்பிருக்குன்னு லக்னாதிபதியை உதாரணமா வச்சு சொல்லிக்கிட்டு வந்தேன்.

அதுல லக்னாதிபதி 1 முதல் 3 பாவங்களில் இருந்தா – மன்சன் விலை கொடுத்து வாங்கிக்கிற பிரச்சினைகள் அதுக்குண்டான பரிகாரங்களை நேத்து பார்த்தோம்.

இன்னைக்கு லக்னாதிபதி 4 முதல் 12 பாவங்களில் நின்றால் என்னா பிரச்சினை என்னா சொல்யூஷனுன்னு பார்த்துருவம்.

ஆதி நாட்கள்ளயே நாம ஒரு பஞ்ச் அடிக்கிறது உண்டு. நட்பு புனிதம் – நண்பர்கள் தான் அத நாறடிக்கிறாய்ங்க. காதல் புனிதம் -ஆண் பெண் தான் அதை நாறடிக்கிறாய்ங்க.

இந்த வரிசையில நம்ம ஜாதகம்ங்கறது நம்ம முக்திக்காக நாம கெஞ்சி கூத்தாடி வாங்கின வரம். அதையே சாபமாக்கிக்கிறதுல நாம கில்லாடிங்களா இருக்கம்.

சாபத்தையும் வரமா மாத்திக்கனும். (அர்ஜுனன் அஞ்ஞாத வாச காலத்துல திரு நங்கையா வாழ்ந்த கதையா) வரங்களை சாபமாக்கிக்ககூடாது ( அசுரர்கள் கதையா)

ஓகே இப்பம் பதிவுக்கு போயிருவமா?

1-4
லக்னாதிபதி 4 ல இருந்தால் பலான பரீட்சையில செயிச்ச பிற்காடுதேன் கண்ணாலம்/ டாக்டர் பட்டம் வாங்கினபிறவுதேன் கில்மான்னு திருமணத்தை தள்ளி போடலாம். அம்மா மேல அதீத பாசம் வச்சு வர்ரவ கொடுமை பண்ணா என்ன பண்றதுன்னு தள்ளி போடலாம்.

கச்சாமுச்சான்னு வாகனசுகத்தை அனுபவிக்கலாம்/ கண்ணாலத்துக்கு மிந்தியே ஊடு கட்டி கடனாளி ஆகி கடனை நினைச்சு நினைச்சே ஆண்மை இழப்புக்கு ஆளாகலாம்.

வாகன சுகத்தால இல்லற சுகம் எப்டி பாதிக்கப்படும்?

மனித உடலின் சராசரி உஷ்ண நிலை 98.4 டிகிரி. இதுல உயிரணு உயிர் வாழமுடியாதுனுதான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளிய விட்டிருக்கு.பாடி டெம்பரேச்சர் அதிகமா இருக்கிறப்ப இன்னம் கொஞ்சம் கீழே இறங்கி சூட்டை குறைக்கற ஏற்பாடும் இருக்குது.

ஆண்கள் 24 மணி நேரம் டென்டெக்ஸ் போட்டு/ஜீன் போட்டு விதைகளை அழுத்தி வைக்கிறதால விந்துல உயரணுக்களோட கவுண்ட் குறைஞ்சி போயிருது. இதுல தாளி விழிச்சிருக்கிற நேரம்லாம் வண்டி வாகனத்துல சுத்திக்கிட்டிருந்தா என்ன ஆகும்? இதான் கணக்கு.

பரிகாரம்:

1 படிப்பு போட்டி தேர்வு:

.நாம ஒரு உயிரணுவா அம்மா கருப்பையை அடைய போட்டோமே ஒரு நீச்சல் – மில்லியன் கணக்கான உயிரணுக்களோட போட்டோமே ஒரு போட்டி -அதான் அசலான நீச்சல் -அதான் அசலான போட்டி. கொய்யால கரணம் தப்பினா மரணம்.

அதுலயே செயிச்சாச்சு. அப்படின்னா இன்னா அருத்தம் ? நமக்கு இந்த பூமியில வாழக்கூடிய எல்லா தகுதிகளும் நமக்கிருக்கு.

நெஜமாலுமே நாம மில்லியனில் ஒருவன்/ஒருத்தி. ஆனால் நாம ஒலிம்பிக்ல செயிச்சவன் பாப்பம்பட்டி அணியோட மோதின கணக்கா இந்த உதவாக்கரை படிப்புகளையும் , பரீட்சைகளியும் பெருசா நினைக்கலாமா?

இதுக்காவ உயிரின் அடிப்படை உணர்வுகளான / இயற்கையின் அடிப்படை ஆணைகளான உருவாக்குதல் – பரவுதலுக்கு வழி செய்யும் கண்ணாலத்தை தள்ளிப்போடலாமா? ரோசிங்க நைனா..

2.அம்மா:
குடியிருந்த கோயில் ,அன்னை ஓர் ஆலயம், தாய் காலடியில் சொர்கம் எல்லாம் ஓகே தான் . இல்லேங்கலை.

ஆனால் அம்மாங்கறது ஒரு பெண். வீக்கர் செக்ஸ். சர்வைவல் பிரச்சினை உள்ள கேரக்டர் யங் அண்ட் எனர்ஜட்டிக் கணவர் – உத்யோகம் – சொத்து சொகம் , சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கைன்னு இருந்தா அது வேற கதை.

தாய்ப்பறவை கூட்டில் இருக்கும் குஞ்சை குத்தி குத்தி துரத்தி பறக்க கத்துக்கொடுக்கிறாப்ல கண்ணாலம் கண்ணாலம்னு அவிக பரபரப்பாய்ங்க.

மேட்டர் வேற மாதிரி இருந்து நீங்க கண்ணாலம் பண்ணிக்கிட்டா பாசத்தை பங்கு வைக்கனும் – சம்பள கவர் நம்ம கைக்கு வராதுன்னு நினைக்கிற சூழல் இருந்தா? அவிக ஒரு விதவையா -டைவர்சியா
இருந்தா ?

அம்மா,ஆயா,அண்ணா,தம்பி ஆரையாவது சந்தோசமா வச்சுக்கனும்னு உண்மையிலயே நீங்க நினைச்சா அதுக்கு நீங்க சந்தோசமா இருக்கனும்.

கண்ணாலம் கட்டினவன் எல்லாம் சந்தோசமா இருக்கான்னு பீலா விடமாட்டேன். ஆனால் கண்ணாலங்கறது அதுக்கான முயற்சி. முயற்சி செய்து ஃபெயிலாயிட்டா அது வேற கதை.ஆனா முயற்சியை கூட செய்யலின்னா தன்னிரக்கம் – மன அழுத்தம் அது இதுன்னு ஏகப்பட்ட சிக்கலுங்ணா.

3.வாகனம்:
வாழ்க்கையில வாகனம்னா நாம பாப்பாவா இருந்தப்ப அம்மா இடுப்பு – ஃபிகர் தேத்தற வயசுல ஒரு லேட்டஸ் பைக் – கண்ணாலமான புதுசுல பொஞ்சாதியை ஷாப்பிங் கூட்டிட்டு போயி காசை கரியாக்கறதுக்கு ஒரு டூ வீலர் – விபரீதம் நடந்துட்டா ஆஸ்பத்திரிக்கு வாரிக்கிட்டு போக ஒரு 108 – செத்துத்தொலைச்சா ஒரு அமரர் ஊர்தி. இதான் முக்கியம்.

இடையில சொன்ன ஐட்டங்க இல்லாட்டியும் குடி முழுகி போயிராது . ஆனால் ஆரம்பத்துல சொன்ன அம்மா இடுப்பு – 108 -அமரர் ஊர்தி என்ற 3 ஐட்டம்தான் ரெம்ப முக்கியம்.

நாலாவது இடம் 100 சதம் சுபபலமா இருந்தாலும் – சுக்கிரன் உச்சத்துலயே இருந்தாலும் வாரத்துல ரெண்டு நாள் ( கு.பட்சம்) முடிஞ்சா கால் நடையா போங்க – இல்லாட்டி சைக்கிள் – டிஸ்டன்ஸ் ரெம்ப அதிகம்னா பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட்டை யூஸ் பண்ணுங்க.

காலா காலத்துல கண்ணாலம் நடக்கும்.வயாக்ரா சாப்பிட்ட கணக்கா கில்மால தூள் பண்ணுவிங்க

லக்னாதிபதி மற்ற பாவங்களில் நின்றால் என்னா பண்றதுன்னு நாளைக்கு பார்ப்போம்..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s