ஆண்மை இழப்பு : பரிகாரம் 1

Posted on

அண்ணே வணக்கம்ணே !
திருமண முயற்சியில் தாமதம் -திருமண வாழ்வில் சிக்கல்னு ஒரு தொடரை ஆரம்பிச்சம். அதுல ஜாதகரே அவரோட உடல் உள்ள காரணங்களால் அவரோட திருமணத்துக்கு தடையா இருக்க வாய்ப்பிருக்கிறதை விளக்கிக்கிட்டு இருக்கம்.

இந்த செனேரியோல ஜாதகம் எப்டி இருந்தாலும் ஆண்மை இழப்புன்னு ஒரு தலைப்பு வந்துருச்சு.

// அல்லா வீட்லயும் ப்ராண்டட் ஆட்டா தான் வாங்கறாய்ங்க. ஆனால் அல்லார் வீட்லயும் சப்பாத்தி ஒரே மாதிரியாவா கீது. நீங்க உபயோகிக்கிற எண்ணெய், ஸ்டவ், வைக்கிற ஃப்ளேம் , போடற உப்பு,அதனோட அளவு இப்படி எத்தனையோ சமாசாரம் சப்பாத்திய சப்பையாக்கிருது. அதை போலவே தான் ஜாதகமும். எந்த ஜாதகத்துல பிறந்தாலும் ஆண்மை இழப்புக்கு வழி இருக்கு.//ன்னு சொல்லி லக்னாதிபதியை உதாரணமா எடுத்துக்கிட்டம்.

இவரு எங்கன இருந்தா எப்படி ஆண்மை இழப்பு ஏற்படும்னு விஸ்தாரமா பார்த்தோம். பழைய பதிவுகளை படிக்காதவுகளுக்காகவும் -படிச்சிருந்தாலும் கொஞ்சம் மசமசன்னு இருக்கக்கூடிய பார்ட்டிகளுக்காகவும் ஜாதகத்தில் லக்னாதிபதியின் நிலை – அது ஆண்மை இழப்புக்கு எப்படி காரணமாகக்கூடும்ங்கற டேட்டாவையும் கொடுத்து ( ரிப்பீட்டு) அதை ஓவர் கம் பண்றதுக்கு என்ன பண்றதுங்கற தீர்வையும் இந்த பதிவுல தரேன்.பார்த்துக்கிடுங்க..

1-1
லக்னாதிபதி லக்னத்துலயே இருந்தா../ உச்சம் பெற்றால்:

மன்சனுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துரும். தாளி “அஞ்சு மினட்டுக்காக” என்ன இவளுகளை கெஞ்சிக்கிறதுன்னு ஹோமோவா மாறலாம்/ சுய இன்பத்துக்கு அடிமையாகலாம்.

தேவையான புரிதல்:

இங்குள்ள ஆண்,பெண் எல்லாமே அரைகுறை. ஒரு ஆண் -ஒரு பெண் இரண்டற கலக்கும் போது தான் ஒரு முழுமையான ஆண்- பெண் உருவாக முடியும்.

மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம் . மனிதனா சீன் போட்டுக்கிட்டிருக்கம் தட்ஸால். ஹால்லயோ வராந்தாலயோ நாளெல்லாம் கட்டி வச்ச வளர்ப்பு நாயை காலை மாலை வாக்கிங் கூட்டு போகலின்னா நாறிரும்

கண்ணாலங்கறது உலாவப்போதல் மாதிரி – மனைவி/கணவர் துணையோட “உலாவ”போகும் போது மத்த நாய்களோ/நாய் வண்டியோ நம்மை எதுவும் செய்ய முடியாது.

அடிப்படையில் சுய நல பிசாசான மன்சனை கொஞ்சமாச்சும் தன் மையத்தில் இருந்து நகர்த்தி மன நோய்லருந்து காப்பாத்தறது கண்ணாலம் தேன்.கம்ட்டட் பேச்சிலர்ஸை அதுவும் அவிக கிழவாடிகளான பிறகு அவிக மெஸ்ஸுக்கு போற அவசரத்தையும் – அறையை பூட்டற அவசரத்தையும் பார்த்தா சாந்த மூர்த்தி கூட ருத்ரமூர்த்தியாயிருவான் ( சின்ன குத்தூசி போன்றவர்கள் விதிவிலக்கு)

உலகம் வேற. நம்ம மனோ ராஜ்ஜியம் வேற. மனோ ராஜ்ஜியத்துலயே சஞ்சரிக்கிறவனுக்கு – அதுவும் சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்ல மூழ்கி இருக்கிறவனுக்கு தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாத நிலை வந்துரும். “இந்த சில்லறை” விஷயங்களை கண்டுக்கினு சொல்றதுக்கு ஒரு உளவுத்துறை வேணம்.அதான் மனைவி

இப்டி மஸ்தா பாய்ண்டுங்க கீது தலை ! இதையெல்லாம் மண்டையில ஏத்திக்கிட்டு மனம் திரும்பினாலே திருமணம் குறித்த மனத்தடை விலகிரும்.

1-2
லக்னாதிபதி ரெண்டுல இருந்தா வெறுமனே பேசியே ஓய்ஞ்சு போயிரலாம்

எச்சரிக்கை:
ஜாதகர் ஆணா இருந்தால் பரவாயில்லை. பேசியாவது ஓயலாம். பித்துப்பிடிக்காது. (இதுலயும் சில கேஸுங்க இருக்கும். என்னமோ தங்களுக்கு லுல்லாவே இல்லாதது போல பேசிக்கிட்டு கிடக்கும். இவிகளுக்கு மன நோய் கியாரண்டி. திடீர்னு பாயை பிறாண்ட ஆரம்பிச்சுருவாய்ங்க

ஜாதகர் /பெண்ணா இருந்து மொஃபசல் கல்ச்சர்/ஹாஸ்டல் லைஃப்ல இருந்து இதே கேட்டகிரி தோழிகள் இருந்தா பிழைச்சாய்ங்க. இல்லேன்னா இவிகள் நிலையும் அதே தான்.

வாய்க்கும் இன உறுப்புக்கும் உள்ள தொடர்பை தெரிஞ்சுக்கிட்டா “பேச்சே” நின்னு போயிரும். இதைபத்தி ஏற்கெனவே விஸ்தார எளுதியிருக்கம். இதை தமிழ்மணம் கூடவெளியிட்டிருக்கு . அதை படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க

அது சரிண்ணே .. நீங்க ஏன் பேசறிங்கன்னு கேப்பிக. நாம பேசிக்கலா ஹ்யுமேனிஸ்ட். சின்ன மேட்டர்ல கோட்டை விட்டு சனம் அல்லாடறதை பார்த்து ஓஷோ சொல்றாப்ல இரக்கம் உந்த /பேசாம இருக்க முடியாம பேச வேண்டியதா/எழுத வேண்டியதா இருக்கு.

கில்மாங்கறது பல்லவிதேன். ஆன்மீகம் தேன் சரணம்.சரணத்துக்கு போகனும்னா பல்லவியையும் ஆலாபிச்சுத்தானே ஆகவேண்டியிருக்கு.

1-3
லக்னாதிபதி 3 ல இருந்தா ப்ரதர்ஸ் /சிஸ்டர்ஸுக்கு அதிக முக்கியத்வம் கொடுத்து அவிகளை பிரியனுமேங்கறதுக்காவ திருமணத்தை தள்ளி போடலாம். பருவத்தே பயிர் செய்யாத காரணத்தால ஆண்மை இழப்பு ஏற்படலாம்.

இங்கன நண்பர் ஒருவர் தன் சகோதிரிகள் காரணமா கண்ணாலத்தை தள்ளிப்போட்டு இப்பம் 52 வயசை எட்டிப்பிடிச்சுட்டு இருக்கிற கதைய சொல்ல நினைச்சு தட்டினேன். ஈபி காரவுக புண்ணியம் கட்டிக்கிட்டாய்ங்க.

வாழ்க்கையில ஒன்னை நல்லா தெரிஞ்சுக்கனும். சந்தோசமா இருக்கிறவன் தான் அடுத்தவுகளை சந்தோசப்படுத்த முடியும். அதனால அண்ணா,தம்பி, அக்கா,தங்கச்சின்னு ஆரை சந்தோசப்படுத்தனும்னாலும் மொதல்ல நீங்க சந்தோசமா இருக்க கத்துக்கனும். கண்ணாலம் கட்டிக்கிட்டவன்லாம் சந்தோசமா இருக்கான்னு நான் சொல்லவரல்லை.

கண்ணாலத்துக்கப்பாறம் “கொய்யால ஆண்டவன் என்னை எவ்ள நிம்மதியா வச்சுருந்தான் – இந்த நாயை கட்டிக்கிட்டு நாறிட்டமே”ங்கற ரியலைசேஷனாவது வரும்.

வாழ்க்கையில ஏதோ ஒரு கட்டத்துல கூட சந்தோசமா இருக்க முடியாதவன்- அப்படி இருந்ததை/இருக்கிறதை உணரமுடியாதவன் சதா புலம்பிக்கிட்டிருக்கிறவன் (மனசுலயாச்சும்) செல்லரிச்ச மரம் மாதிரி.

ஆண்மை மட்டுமில்லை ஆரோக்கியம் கூட சீக்கிரமே டாட்டா சொல்லிரும். இந்த படிப்பு -வேலை -கண்ணாலம் -குழந்தை பிறப்பு – அவிக கண்ணாலம் -தாத்தா ஆறது எல்லாம் ஒரு வரிசையில நடந்துக்கிட்டே வரனும்.

இடையில ஒரு ஃப்ரேம் எகிறிப்போச்சுன்னாலும் அதுல ஒன்னும் பிரச்சினையில்ல.. அதை விட்டுட்டு வாழ்க்கைங்கற சினிமாவை ஸ்லைட் ஷோ போல பண்ணிட்டு அதுல ஒரே ஃப்ரேம்ல நின்னுட்டா நமக்கே போரடிச்சுரும். மாத்தி ரோசிங்கப்பா

நாளைக்கு லக்னாதிபதி 4 முதல் 12 வரை பாவங்களில் நின்றால் ஏற்படக்கூடிய ஆண்மை இழப்பு -திருமணத்தடை இத்யாதிக்கான பரிகாரங்களை பார்ப்போம். அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் சி.எம் ( ஹி ஹி..சித்தூர் முருகேசனுங்ணா)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s