ஜாதகம் எப்டி இருந்தாலும் ஆண்மை இழப்பு:2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகம் எப்டி இருந்தாலும் ஆண்மை இழப்புன்னு ஒரு பதிவை போட்டிருந்தம். ஆரும் அப்ஜெக்சன் பண்ணலை. ( கிளம்பிராதிங்கப்பா)

ஜா.ரா பேரை எடுத்தாலே போலி கமெண்டுங்க குமியும். நேத்தைக்கு கிளிச்சு பதிவு போட்டும் ஒன்னத்தையும் காணோம். பாவம்.. ஆத்தா தன் வேலையை ஆரம்பிச்சுட்டாளா தெரியலை. நிற்க பதிவுக்கு வந்துருவம்.

லக்னாதிபதி 1முதல் 8 பாவங்கள்ள இருந்தா ஆண்மை இழப்பு /திருமண தாமதம் எப்படி நடக்கும்னு நேத்து பார்த்தோம்.

இன்னைக்கு மத்த பாவங்கள்ள இருந்தா ஆண்மை இழப்பு /திருமண தாமதம் எப்டி ஏற்படும்னு பார்த்துருவம்.

லக்னாதிபதி 9 ல் இருந்தால்:
ஜாதகர் ஆணா இருந்தா பெருசா பிரச்சினை இருக்காது. அப்பா நெல்லவரா இருந்தா நோ ப்ராப்ளம் அட் ஆல். ஒரு வேளை அவரு வில்லாதி வில்லனா இருந்தா ஜாதகரும் அதே போல தயாராயிருவாரு.

செக்ஸ் -வன்முறைல்லாம் ஸ்தூலமாத்தான் வேறு . சூட்சுமத்துல ரெண்டுத்துக்கும் வேர் ஒன்னுதேன். அதனால அவரோட செக்ஸுவல் அர்ஜ் வன்முறையை வடிகாலா தேர்ந்தெடுத்துர வாய்ப்பிருக்கு. அப்பம் செக்ஸ் கோவிந்தா.

ஜாதகர் பெண்ணா இருந்தா ? அப்பாவை ஆதர்சமா கொண்டு – அப்பா மாதிரி இருந்தா ஓகேன்னு வரன் தேடினா எப்படி கிடைக்கும் ? (அப்பாவுக்கு அப்பம் 40+ ஆ இருக்கும்)

வரன் 20 டு 25 ல தேடுவம். எவனுக்கு 20 /25 வயசுல 40+ குணம் ,மணம் இருக்கவே இருக்காது. எதையோ ஒன்னை கட்டி வச்சுட்டா இந்திரா மாதிரி எனக்கு எங்கப்பன் தேன் முக்கியம்னு கழண்டுக்கவும் சான்ஸ் இருக்கு.

லக்னாதிபதி 10ல் இருந்தால்:
ஜாத்கர் ஒர்க்கஹாலிக்கா இருப்பாரு. வேலை வெட்டி இல்லாதவன் தேன் சேலை/ரவிக்கை பின்னாடி ஓ சாரி சுடிதார்,சல்வார் கமீஸ் பின்னாடி அலைவான்.

நம்மாளு 24 மணி நேரம் வேலையிலயே கவனமா இருந்தா செக்ஸ்ல கிடைக்கிற ஆர்காசம் அவருக்கு வேலையிலயே கிடைச்சுரும்.

கண்ணால ரோசனையே வராது.

ஜாதகர் பெண்ணா இருந்தா – கண்ணாலத்துக்கப்பாறமும் இவிக வேலைக்கு போறதை அனுமதிக்கிற வரன் வந்தா தான்னு வெய்ட் பண்ணுவாய்ங்க.

பொஞ்சாதியை வேலைக்கு அனுப்பறவன்லாம் ரெண்டு க்ரூப்பு.

1. ஆண் பெண் சமம் – என்னப்போல அவளுக்கும் வேலைக்கு போக உரிமை இருக்கு. அவள் வேலை அவளுது -அவள் சம்பளம் அவளோடதுன்னு நினைக்கிறவன் ஒரு க்ரூப்

2.கொய்யால கோழிய உறிச்சு மசாலாவும் தடவி தரேன்னா கசக்குதா ஒன்னுக்கு ரெண்டு சீட்டா போடலாம்/ ஒன்னுக்கு ரெண்டு வீடா கட்டலாம்னு கணக்கு பார்க்கிற கயவாளிங்க இன்னொரு க்ரூப்பு

ஜாதகத்துல இன்ன பிற கிரகங்கள்/பாவங்கள் சுபபலமா இருந்து மொதல் க்ரூப் பார்ட்டி மாட்டினா ஓகே .ரெண்டாவது க்ரூப் மாட்டினா நாஸ்தி தேன்.

லக்னாதிபதி 11 ல இருந்தா:
ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே -பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோனேங்கற ரேஞ்சுல ரோசிப்பாய்ங்க.

கண்ணாலம் /கண்ணால வாழ்க்கைல்லாம் விவசாயம் மாதிரி. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதும்பாய்ங்க.

அதைப்போல கண்ணாலமாயி 10 வருசத்துக்கு பிற்காடு கணக்கு பார்த்தா ஆண் பெண் ரெண்டு பேருக்கும் நஷ்டம் தேன் .

இதுல போயி கணக்கு பார்த்து -லாபம் பார்த்து செயல்பட்டா பல்பு கியாரண்டி.

லக்னாதிபதி விரயத்துல இருந்தா:
இவிக வவுத்துக்குள்ள போன ஆகாரமே விரயமாத்தான் வெளியேறும் .உணவிலான சக்தியை உறிஞ்சி சேகரிக்கவும் ஒரு சக்தி வேணம்ல.அது இருக்காது.

சொந்த ரோசனை , சொந்த திட்டம்னு எதுவும் இருக்காது. அதனால இவிக மைண்டே பஸ் ஸ்டாண்ட் க்ளாக் ரூம் மாதிரி.ஆரு வேணம்னா லக்கேஜை வச்சுட்டு போவலாம்.

இவிக வாழ்க்கையே பிறருக்காகத்தேன். இகோவை விட்டு தொலைச்சு “தேடியுனை சரணடைந்தேன் எங்கள் முத்து மாரி”ன்னுட்டு பொஞ்சாதிக்கு சரண்டர் ஆயி வாழ்க்கையை ஓட்டினா பிரச்சினை இல்லை.

அதை விட்டுட்டு ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா ” நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே”ன்னுட்டு சிலும்பினா புலம்பல்தேன் மிச்சம்.

அலம்பல்,புலம்பல்,சிலும்பல் இதெல்லாம் கில்மாவுக்கு ஒத்துவராத விசயங்க.

சரிங்ணா லக்னாதிபதி எங்கருந்தாலும் கில்மாவுக்கு ஆப்பு -ஆண்மை இழப்புன்னு பார்த்தோம். லக்னாதிபதி எங்கன இருந்தாலும் ஆண்மை இழப்பு நிகழாம இருக்க என்ன பண்ணனும்னு -என்ன பண்ணக்கூடாதுன்னு நாளைக்கு பார்ப்போம்

உடுங்க ஜூட்..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s