திருமணம் மனத்தடை: ஜோதிடம்

Posted on

அண்ணே வணக்கம்ணே..

நேத்திக்கு நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் ராசிகளில் ஆண் பெண் விவரத்தை தர்ரதா சொல்லியிருந்தன். இன்னைக்கு மொதல்ல அதை பார்த்துருவம்.

நட்சத்திரங்கள்:

1.ஆண் நட்சத்திரம் (8)

அஸ்வினி, புனர்பூசம்,பூசம்,
அஸ்தம், திருஓணம், அனுஷம்,
பூரட்டாதி,உத்திரட்டாதி

2.பெண் நட்சத்திரம்: ( 16)

பரணி,கிருத்திகை ரோகிணி,
திருவா,ஆயில்,மக,
பூரம்,உத்தர,சித்திரை,
ஸ்வாதி,விசாக,கேட்டை,
பூராடம்,உத்திராடம்,
அவிட்டம்,ரேவதி

3.திரு நங்கை நட்சத்திரங்கள்:
மிருக சீர்ஷம்,மூலம்,சதயம்

கிரகங்கள்:
சூரி,செவ்,குரு – ஆண்
சந்திரன் ,சுக்கிரன்,ராகு – பெண்
புதன்,சனி,கேது – திரு நங்கை

ராசிகள்:

ஆண் ராசிகள் (6)
மேஷம்
மிதுனம்
சிம்மம்
துலா
தனுசு
கும்பம்

பெண் ராசிகள் (6)
ரிஷபம், கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம்

கவனிங்க:
நீங்க ஆணா இருந்தா ஆண் நட்சத்திரத்துல பிறந்து , ஆண் கிரகங்கள் வலுப்பெற்று , ஆண் ராசிகளில் நின்று , ஆண் நட்சத்திர சாரம் வாங்கியிருந்தா ஆண்மை மிரட்டும்

நீங்க பெண்ணா இருந்தா பெண் நட்சத்திரத்துல பிறந்து ,பெண் கிரகங்கள் வலுப்பெற்று பெண் ராசிகளில் நின்று ,பெண் நட்சத்திரங்களின் சாரம் வாங்கியிருந்தா பெண்மையின் மறு உருவமே நீங்கதேன்.

குறிப்பு:
குறைஞ்ச பட்சம் 60 சதவீதம் உங்கள் பாலுக்கேற்ற படியான அமைப்பு இருந்தா பிரச்சினை இல்லை. அதுக்கும் கீழே போனா பிரச்சினை தேன். (ரெம்ப ஓவரா கற்பனை பண்ணிக்கிடாதிங்க – இப்பம் கைனகாலஜி ,சைக்காலஜி எல்லாம் எங்கயோ போயிட்டிருக்கு.

கொஞ்சம் போல தடுமாற்றமா இருந்தா உடனே கன்சல்ட் பண்ணுங்க. சரி பண்ணிருவாய்ங்க. இந்த தடுமாற்றமே திருமணம் குறித்த மனத்தடையை ஏற்படுத்தலாம்னு சொல்லவந்தேன் .அம்புட்டுதேன்.

இந்த தடுமாற்றம் வெளி உலகத்துக்கும் தெரியற ரேஞ்சுல இருந்தா “செய்தி”பரவும். கண்ணால மார்க்கெட்டிங்லயும் பிரச்சினை வரும்.அது வேற கதை.

இதுக்கு என்ன பரிகாரம்னு கேப்பிக. நிறைய ஜாதகங்கள் பெண்டிங்ல இருக்கு. அதனால ஒரு நாளு வாயிதா கொடுத்தா நாளைக்கு சொல்றேன்.

Advertisements

2 thoughts on “திருமணம் மனத்தடை: ஜோதிடம்

  விமலாதித்தன் said:
  March 3, 2012 at 8:35 am

  ஐயா,

  ஒரு ஆண், பெண் நட்சத்திரம், பெண் ராசி அமைப்பு இருந்து லக்கணம் ஆணுக்குரியதாக அமைந்திருந்தால். எத்தனை சதவீதம் ஆணுக்குரி அமைப்பு இருக்கும். லக்ன அமைப்பு எந்தளவு கைகொடுக்கும்.

   S Murugesan said:
   March 3, 2012 at 10:51 am

   அய்யா,
   நல்ல கேள்வி. ஆனா பதில் சொல்றது கஷ்டம். இருந்தாலும் ட்ரை பண்றேன். நட்சத்திரம் ஆண் நட்சத்திரமா இருந்து , லக்னம் ,ராசி ஆண் ராசியா இருந்து லக்னாதிபதி, ராசியாதிபதி ஆண் ராசியில நின்னாலே போதும் . இதுல எதுனா தவறினா லக்னாதிபதி ,ராசியாதிபதி அ இந்த அதிபதிகளோட சேர்ந்த கிரகங்கள் ஆண் ராசியில இருந்தாலோ அ ஆண் நட்சத்திர சாரம் வாங்கியிருந்தாலோ அஜீஸ் ஆயிரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s