ஆண்மை இழப்பு : ஜோதிட காரணங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

சமீபத்துல கில்மா கனவுகள்னு ஒரு மினி தொடர் ஆரம்பிச்சம். அதை டீல்ல விட்டுட்டம். ஏன்னா கனவுல்லாம் கலாம் சார் டிப்பார்ட்மென்ட்.

அதனாலத்தேன் திருமணத்தடைங்கற தலைப்பை பிடிச்சம். ஒரு ஜாதகர் தன் ஜாதகத்துல லக்னம் /லக்னாதிபதியோட பலம் போதாம உடல்,உள்ள காரணங்களால தன் திருமணத்துக்கு தானே தடையாக இருக்கக்கூடிய ஒரு அமைப்புக்கு என்ன பரிகாரம்னு இந்த பதிவுல பார்ப்போம்.

நாம என்னமோ இந்த கட்டத்தை தவளைப்பாய்ச்சல்ல கடந்துரலாம்னு தான் நினைச்சோம். ஆனால் ஜா.ரா பயத்துல கமெண்ட் போடலின்னாலும் மெயில் /ஃபோன்ல “விவரமா” எளுதச்சொல்லி ப்ரஷர்.

ஜெனட்டிக் (பராம்பரிய) காரணங்கள்:

நம்ம முன்னோர்களோட உடலமைப்பு – நிறம் -மணம்- குணம் மசாலால்லாம் நம்ம ஜீன்லயே இருக்கு. அதுக்கு தோதான சூழல் கிடைக்கும் போது வெளிப்படுது.

எங்கப்பா சைடுல கிரி கிரி ராஜகோபால்னு ஒரு பார்ட்டி. ஜீ பூம்பா வேலைலல்லாம் புலின்னு பேராம். எங்க அப்பாவுக்கு இதுல எல்லாம் ஜஸ்ட் படம் பார்க்கிற ரேஞ்சுக்கு தேன் ஆர்வம்,

மேற்படி ஜீ பூம்பா பார்ட்டி ஊருக்கு வந்தா தான் கவர்மிட்டு உத்யோகத்துல இருந்தாலும் சாராயக்கடைக்கு போய் சில்லறை கொடுத்து சரக்கு கொடுக்க சொல்ட்டு காத்திருந்து ஊட்டுக்கு கூப்டுக்குனு வருவாரு.

எங்க தாத்தா ( முனுசாமி) சிகரட் அட்டை பின்னாடி ஜாதக சக்கரம்லாம் போட்டு வச்சிருந்தாரு. எங்க சித்தப்பா அட்டெண்டரா இருந்தாலும் பிரியாணி பண்ணி போட்டே ஆஃபீசர்களை எலலாம் கவுத்துருவாரு.

இன்னொரு சித்தப்பா தலையணை சைஸ்ல இருக்கிற தெலுங்கு நாவல்களோட நின்னுட்டாரு. எங்க அப்பா குமுதத்துல ஆரம்பிச்சு மூலிகை மணி , சுபயோகத்தோட நின்னுட்டாரு. நாம ஓஷோவரை வந்திருக்கம்.

எங்க அத்தை டைப்ரைட்டிங் ஹையர். ( நம்ம தட்டச்சு வேகத்தை பார்த்திருக்கிங்கள்ள) அவிக வயசுல இருக்கும் போது குருவி காரிச்சி மாதிரி ஒரு லேடியோ பெட்டியை கழுத்துல மாட்டிக்கிட்டு பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பாய்ங்களாம். அம்மா பாட்டே பாடுவாய்ங்க. (பொம்மை கொலு கேஸ்) நாம ஏதோ ட்யூனுக்கு பாட்டு எழுதற ரேஞ்சுக்கு வந்தம்.

இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா ஆர்கன் டெவலப்பர் – இழந்த சக்தின்னு விளம்பரம்லாம் வருதே அந்த பிரச்சினைகளுக்கெல்லாம் 99.99% பராம்பரிய காரணம்தேன். அப்பம் ஜோசியம் என்ன நாக்கு வளிக்கிறதுக்கான்னு கேப்பிக. சொல்றேன்.

ஒரு கூட்டு குடும்பத்துல உள்ளவுக ஜாதகங்களை எல்லாம் பக்கத்துல பக்கத்துல வச்சு பார்த்திங்கனா நிறைய ஒற்றுமைகளை பார்க்கலாம். எங்க வீட்ல அப்பா, பெரிய அண்ணன் , நாம, தம்பி அல்லாருக்கும் கடகலக்னம் தேன். கடலைச்செடிக்கு கடலைதானே காய்க்கும்.

இந்த ஆண்மை -பெண்மைல்லாம் கூட இப்படித்தேன் அமையுது.

ராசிகள்ள ஆண் ராசி பெண் ராசின்னு இருக்கு.கிரகங்கள்ள ஆண் கிரகம் பெண் கிரகம்னு இருக்கு. இந்த விவரங்களை கீழே தந்திருக்கன்.

ஒரு ஆண் ஜாதகத்துல கிரகங்கள்ல்லாம் பெண் ராசியில ,உட்கார்ந்து தொலைச்சா என்ன ஆகும்? ஆண் கிரகங்கள் எல்லாம் வலுவிழந்து பெண் கிரகங்கள் எல்லாம் வலுபெற்றாச்சுன்னு வைங்க என்ன ஆகும்?

இதுவே ஒரு பெண் ஜாதகத்துல கிரகங்கள்ளாம் ஆண் ராசியில உட்கார்ந்து பெண் கிரகங்கள் எல்லாம் வலுவிழந்து கிடந்தா என்ன ஆகும்?

பால் மாற்றம் நடந்துரும்னு சொல்லவரல்லை.ஆனா ஆணில் பெண் தன்மை ,பெண்ணில் ஆண் தன்மை ஓங்க வாய்ப்பிருக்கா இல்லியா?

எங்கம்மாவுக்கு மொதல் ரெண்டும் ஆண் குழந்தைகள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெண் குழந்தைகள்னா ரெம்ப பிரியம் போல. பெரியவன் பிறந்ததும் அவனுக்கு சடை பின்னி , மை எழுதி ,பொட்டெல்லாம் வச்சு அழகு பார்த்திருக்காய்ங்க.

பாவம் திருப்பதில வேலை கிடைச்சு தானே சமைச்சு தின்னுக்கிட்டிருந்தான். அப்பாறம் ஹைதராபாத்லயும் இதே கதை தேன்.

கக்கூஸுல கட்டை எறும்பு வந்துருச்சுன்னா பொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு அம்மா ஊடு.வேலைக்காரிக்கு உடம்பு சரியில்லைன்னு ப்ரைவேட் நர்சிங் ஹோமுக்கு கூட்டிட்டு போன பொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு அம்மா ஊடு.

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். ஒரு ஆண் பெண் தன்மையுடன் இருப்பதை பெண் விரும்பறதில்லை. ( ஆனா ஆண் தன்மையோடு உள்ள பெண்கள்னா நமக்கு ஒரு அட்மைரேஷனே உண்டு -நிறைய ஆண்களுக்கும் இப்படித்தேன் )

ஆனால் இந்த அட்மைரேஷன் நிறைவான ஆண் தன்மை உள்ள ஆண்களுக்குத்தான் சாத்தியம். தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு இருக்கிற ஆண்கள் “பொம்பளையா லட்சணமா இரு”ன்னு அனத்த ஆரம்பிச்சுருவாய்ங்க.

இதே போல பெண்மை பூத்துக்குலுங்கும் பெண் ஆண்மையை அட்மைர் பண்ணுவாள். இதுவே அவள் கன் பாய்ன்ட் காஞ்சனா,ரிவால்வர் ரீட்டா ரேஞ்சுக்கு இருந்து புருசங்காரனும் ” நான் ஆம்பளைடி”ன்னு படம் காட்டினா “போடாங்கொய்யால”ன்னிருவாள்.

இப்படியா கொத்த குட்டிகளுக்கு ” ஏய் வெங்காயத்தை அப்படியா நறுக்கிறது.. இப்படி கொடுன்னு அழகா உட்கார்ந்து பொடியாபொடியா அறுத்துக்கொடுக்கிற கணவனை பிடிக்கும்.

சரிங்ணா.. கொடுக்கிறேன்னு சொன்ன டேட்டாவை நாளைக்கு கொடுத்திர்ரன். ஆண் பெண் என்பதோடு அலிங்கற டிவிஷனும் இருக்கு. நட்சத்திரங்கள்ள கூட இப்படி முப்பால் இருக்கு. ஆண் கிரகம் ஆண் ராசியில நிற்பதோடு ஆண் நட்சத்திர கால்லயும் நின்னிருந்தா நீங்க ஆண் பிள்ளை சிங்கம் தேன்.

இதுவரை நான் சொன்ன தியரியை அனலைஸ் பண்ணிப்பாருங்க..குத்தம் குறை இருந்தா சொல்லுங்க. விளக்கம் தரேன்.

உடுங்க ஜூட் !

Advertisements

One thought on “ஆண்மை இழப்பு : ஜோதிட காரணங்கள்

  Singaravelan said:
  December 3, 2012 at 5:19 pm

  D.O.B 09.01.1992
  place : dharmapuri

  Enakku jaathaka reethiya aanmai kuraivu irukka?? naan athikama suya inba nugarchchila addimaiththanama irikken.. kaarnam theriyavillai.. thinamum seikiren.. ithu jaathaka reethiyana pirachinaiya? mana reethiyana prachinaiya?
  please sollunga..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s