திருமண தடை: உடல் -உளவியல் காரணம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஒரு படத்துல வடிவேலு “ஒரு மனுசன் வீட்ல இருந்து வெளிய வந்து வீடு சேர்ரதுக்குள்ள எத்தீனி கண்டம்டா சாமீ”ன்னு புலம்புவார். கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து பதிவுக்கு வர்ரதுக்குள்ள எத்தீனி டைவர்சனு?

நேத்திக்கு சொன்னாப்ல ஃபேஸ் புக் காரன் ஆப்படிச்சுட்டான். மொபைலுக்கு கோட் அனுப்பறேங்கறான். கோடும் வரமாட்டேங்குது.. லங்கோடும் வரமாட்டேங்குது. இப்பம் என்னடான்னா கோட் லிமிட் தாண்டி போச்சு ஃபர்ஸ்ட் நேம் – லாஸ்ட் நேம் ஃபோட்டோ -டேட் ஆஃப் பர்த் எல்லாம் இருக்கிறாப்ல ஒரு ஐ டி ப்ரூஃப் அனுப்பனுமாம்.

ஜா.ரா ரேன்ஜுக்கு இல்லின்னாலும் நமக்கும் ரெண்டு மூணு பேரிருக்கு. பேங்க்லயே ரெண்டு பேரு (அஃபிடவிட் கொடுத்திருக்கம்) என்னா இழவு இதெல்லாம்? அல்லாரையும் பிளாட்ஃபார வியாபாரி மாதிரி வாங்க வாங்கன்னு ஃபேஸ் புக்குக்கு கூப்டாச்சு. இப்பம் நாமே போகமுடியாத ஆயிருச்சு ( சுமார் 4,000 பேரை கூப்டிருக்கம் – நம்ம கான்டாக்ட்ஸ் அப்படி) பார்ப்பம் பான் கார்ட்ல முருகன் அலியாஸ் முருகேசன் கொடுத்தாப்ல ஞா. நாளைக்கு த்தேன் இந்த இழவை எடுக்கனும்.

நிற்க திருமண தாமதம் மேட்டரை மேரீட் லைஃபுக்கு அப்ளை பண்ணிக்க சொல்லி சொல்லியிருந்தம்.அது எத்தீனி பேரு கண்ல பட்டதோ தெரியலை.

இதுவரை மேற்படி மேட்டருக்கு அப்பா,அம்மா , உ.பிக்கள் காரணமா லொள்ளு இருந்தா என்னா பண்றதுன்னு பார்த்தோம். இன்னைக்கு அசலான மேட்டரு தன் திருமணத்துக்கு தானே தடையா இருக்கிறது. அஸ்கு புஸ்கு அதெப்படினு கேப்பிக. சொல்றேன்.

உடலியல் காரணங்கள்:

இழந்த சக்தி வைத்தியர்கள் தர்ர விளம்பரங்கள்ள உள்ள காரணங்கள் அப்படியே பச்சக்குன்னு பொருந்தும். ( கைப்பழக்கம் -சக்தி விரயம் – கனவுகளில் சக்தி வெளியாதல் – தாழ்வு மனப்பான்மை இத்யாதி இத்யாதி) இதையெல்லாம் ஒரு காலத்துல ரெம்ப விரிவாவே எழுதியாச்சு அதனால இப்பம் அம்பேல்.

(இந்த நிலைமை லக்னாதிபதி – அவரோட சேர்ந்த கிரகங்கள் – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன் –

மனோகாரகனாகிய சந்திரனின் நிலை -அவருடன் சேர்ந்த கிரகங்கள்

பஞ்சமாதிபதி அவரோட சேர்ந்த கிரகங்கள் – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன்-

ரோகாதிபதி – அவரோட சேர்ந்த கிரகங்கள் – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன்
களத்ர பாவம்/ அதில் (ஏழில்) நின்ற கிரகங்கள் – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன்

அஷ்டமாதிபதி – அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன்
விரய பாவாதிபதி -அவர் நின்ற இடத்ததிபதியோட பொசிஷன் ஆகியவற்றால் ஏற்படும் – )

மனவியல் காரணங்கள்:
உடலியல் காரணங்களுக்கு சொன்ன அதே கிரகங்கள் இதற்கும் காரணமா இருக்க சான்ஸிருக்கு. கூடுதலாக சந்திரனின் நிலை மற்றும் ஐந்தாம் பாவம் இதற்கு ரெம்ப முக்கியம். இதற்கு பரிகாரம்:

இவற்றிற்கான பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம்.. (ஸ்கூலுக்கு வராதவுகளுக்கும் சொல்லிருங்க .. நாளைக்கு வந்துரச்சொல்லுங்க)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s