திருமண தடை: 3

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நாட்டு நடப்பை பத்தி எளுதறதை ஏறக்குறைய ஏறக்கட்டியாச்சு. ஆனால் ஒன்னு நாம 1986 லருந்து நாட்டை பத்தி ரோசிச்சதும் – ஆப்பரேஷன் இந்தியா 2000 னு அலைக்கழிஞ்சதும் வீண் போகல்லே. இந்தியாவை பணக்கார நாடாக்க நாம செய்த முயற்சியை பார்த்து ஆத்தா மனமிரங்கி ( அல்லது ஒரு சதி பண்ணி) நம்மை கை தூக்கி விட்டுட்டா.

ஆ.இ இல்லாட்டி நம்ம லைஃபுக்கும் கலைஞர் லைஃபுக்கும் வித்யாசமே இருக்காது. நாம என்ன செய்தாலும் அதனோட அதனோட அந்திம இலக்கு ஆ. இ தான். சுப்ரீம் கோர்ட் நதிகளை இணைக்கிற மேட்டர்ல ஏதோ குட்டு வச்சாப்ல இருக்கு.

கவைக்குதவாத அரசியல் வாதிகளோட எண்ணிக்கை உசந்துக்கிட்டே போயி இப்பம் கோர்ட்டுங்க தான் பரிபாலனம் பண்ணிக்கிட்டிருக்கு.

இவிகளோட அலப்பறை காரணமா அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஏன் ராணுவ அதிகாரிகள் கூட அரசியல்ல குதிக்கப்போறாய்ங்க. நடிகர்களை இந்த பட்டியல்ல கொண்டு வரலை ஏன்னா அவிகளுக்கு மறைமுகமாவாச்சும் அவிக பிம்பத்துக்காச்சும் சனங்களோட இறுக்கமான உறவு இருக்கு. இந்த அதிகாரிங்க கதைதேன் கண்ணை கட்டுது. போதாக்குறைக்கு கோர்ட்டுங்க.

இதெல்லாம் எங்கன போயி முடியப்போகுதோ பயம்மா இருக்கு. பை தி பை சமீபத்திய சட்டமன்ற தேர்தல்கள்ள காங்கிரஸ் பயங்கர பல்பு வாங்கினா பாராளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் கியாரண்டி. உங்க ஓட்டு எவரிக்கன்டி?

நிற்க திருமண தாமதம்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சம். அதுல திருமண தாமதத்துக்கு அப்பா,அம்மா காரணமா இருந்தா அதுக்கென்ன பரிகாரம்னு பார்த்தோம் . நேத்து பி எஸ் என் எல் காரவுக ஸ்ட் ரைக் காரணமா நெட் கனெக்சனை ஃபணாலாக்கிட்டாய்ங்க. ( புது ட்ரெண்டா இருக்கு) அதனாலதான் பதிவு போட லேட்டாயிருச்சு.

மேலும் திருமண தாமதத்துக்கு உ.பிக்கள் காரணமா இருந்தா பரிகாரம் என்னங்கற விஷயத்தை சொல்லவே இல்லை. அதை இன்னைக்கு பார்த்துருவம்.

அதுக்கு மிந்தி இன்னொரு மேட்டர். இது ஏதோ கண்ணாலமாகாத பார்ட்டிகளுக்குத்தான்னு நினைச்சுராதிங்க. கண்ணாலத்துக்கு அப்பாறமும் உங்க மேரீட் லைஃபுக்கு ஆரு – எந்த விஷயம் ஆப்பா இருக்குன்னு பார்த்து அதுக்குரிய பரிகாரம் செய்துக்கிட்டாலும் ரிலீஃப் கிடைக்கும்.

3 ஆமிடத்தை பொருத்தவரை அது கெட்டு குட்டிச்சுவரா போகனும். அப்பத்தேன் உ.பிக்கள் மத்தியில் உங்க
கை மேல் கையா இருக்கும்.அவிகளால பிரச்சினை ஏதும் இருக்காது.

இந்த பாவம் எந்தளவுக்கு பலப்பட்டால் -எந்த அளவுக்கு சுப பலமா இருந்தா அந்த அளவுக்கு அவிக உசர உசர பறப்பாய்ங்க. நீங்க கோழையா இருப்பிங்க.

அவிக ராசி உங்க ராசிக்கு பகை ராசியா இருந்தா அந்தளவுக்கு உங்களை அசரடிப்பாய்ங்க. இதுக்கு என்னதான் தீர்வு?

மொதல்ல அவிக இருக்கிற வீட்டை விட்டு – ஊரை விட்டு கிளம்புங்க. சந்திர, குரு,புத,சுக்கிர காரகம் கொண்ட பாடல்களை கேளுங்க.

சந்திர காரகம்:
நீர் நிலைகளின் பெயர்கள் ,மனம் போன்ற வார்த்தைகள் அடிக்கடி வரும் பாடல்கள் நிலையாமையை விவரிக்கும் பாடல்கள். லட்சுமி,சரஸ்வதி போன்ற சாந்த ரூப ஸ்த்ரீ தேவதைகளின் ஸ்லோகங்கள்

குரு:
சேமிப்பு , நீதி ,நியாயம் ,தருமத்தை வலியுறுத்தும் பாடல்கள். ராகவேந்திரர், சாயிபாபா போன்ற குருமாரை புகழ்ந்து பாடிய பாடல்கள்

புதன்:
பெருமாள் குறித்த பாடல்கள் , காற்று, தண்ணீர் இத்யாதியை தூது போகச்சொல்லும் பாடல்கள் , கணக்கு குறித்த பாடல்கள் (உ.ம் எட்டு எட்டா உலக வாழ்வை பிரிச்சுக்கோ , )

சுக்கிரன்:
சொல்லனுமா என்ன ? காமரசம் ததும்பும் பாடல்கள்

பொடி நடையா அ சிட்டி பஸ்ஸை பிடிச்சு போயி நீர் நிலைகளை , ராகவேந்திரர், சாயிபாபா போன்ற குருமார்களின் கோவில்களை தரிசித்து வாருங்க. கோர்ட்டு,வங்கி,அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு போயி படிக்க தெரியாதவுகளுக்கு ஃபார்ம் ஃபில் அப் பண்ணி கொடுங்க. ஆருக்காச்சும் பின் பளுவா போங்க ( துணையா)

ஈகோ பார்க்காம கடை கண்ணி,போஸ்ட் ஆஃபீஸ், வீட்ல உள்ளவுகளுக்காக டெலிஃபோன் எக்சேஞ்ச், போஸ்ட் பெய்ட் மொபைல் ஃபோன் பில் கட்ட போய்வாங்க

ஊட்ல பெண் ஜனத்தொகை இருந்தா அவிகளுக்கு ஆத்திரம் அவசரத்துக்கு ஃபேன்சி ஸ்டோர், டெயிலர் கடைக்கு போய் உதவுங்க.

இதெயெல்லாம் செய்திங்கனா ஆட்டோமெட்டிக்கா உங்க மனசுல தகிரியம் பொங்கும். திருமணத்தடை விலகும்.

நாளைக்கு முக்கியமான மேட்டர். உங்களுக்கு ஒரு காலத்துல ஏற்பட்ட அவப்பேர், உங்க மனசுலயே கண்ணாலம் கட்டியாகனுங்கற நிச்சயமின்மை (Lack Of Will) , ரீ மேரேஜுக்கு ட்ரை பண்ற டைவர்சீ, விடோயர்னா குழந்தைகள் ஆகிய விஷயங்கள் திருமணத்தடையை தரும் போது அதுக்கு என்னா பரிகாரம்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.

சந்தேகம்:
ஃபேஸ் புக்ல திடீர்னு நம்மையே சந்தேகப்பட்டு கோட் அனுப்பறோம் அதை இங்கன பேஸ்ட் பண்ணுங்கறாய்ங்க.ஆனால் மணிக்கணக்கா ஆனாலும் கோடும் வர்ரதில்லை ..புள்ளியும் வர்ரதில்லை. என்ன இழவு இது?

Advertisements

One thought on “திருமண தடை: 3

    arul said:
    February 29, 2012 at 5:05 am

    nalaya pathivai ethirparkiraen

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s