திருமண தாமதம் : உ.பிக்களே காரணமா?

Posted on

அண்ணே வணக்கம்ணே!
வழக்கமா நாம பயங்கர மொக்கை போட்டுட்டுதேன் மேட்டருக்கே வருவம். சமீப காலமா பதிவு போடறதுக்குள்ளயே நாக்கு தள்ளுது.இதுல மொக்கைக்கு எங்கன போறது?

ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு 419 பேர் முன் பதிவு செய்திருக்க அவிகளுக்கெல்லாம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை 10 கேள்விகளுக்கு பதில் தர எப்படி கிளிஞ்சிருக்கும்னு நினைச்சு பாருங்க. இது போதாதுன்னு புஸ்தவம் வெளி வந்தாச்சுங்கற சங்கதி தெரிஞ்சு 27 பேர் லைனுக்கு வந்துட்டாய்ங்க.

இதையும் மீறி பதிவு போட்டுட்டு வரேன்னா அது ஆத்தா கருணை தேன். இன்னைக்கு என்ன வேணா ஆகட்டும் மொக்கைக்கு அப்பாறம் தேன் பதிவுன்னு முடிவு பண்ணிட்டம்.

திருமண தாமதம்ங்கற மேட்டரை நாம எடுத்ததுக்கு பல காரணம் இருக்கு. இந்த கண்ணால மேட்டர் மட்டும் கொஞ்சம் சுமாரா அமைஞ்சுட்டா ஆண்-பெண் – மனிதன் -குடும்பம்- சமூகம் ஏன் ஒட்டு மொத்த உலகமே பெட்டரா இருக்க வாய்ப்பிருக்கு.

வாழ்க்கையும் ஒரு வியாபாரம் தான். பெட்டர் பார்ட்னர் கிடைச்சதாலயே உருப்பட்டவுகளும் உண்டு. பிட்டர் பார்ட்னர் கிடைச்சதாலயே நாசமா போனவுகளும் உண்டு.

நாமளும் கொளந்தையா இருந்து வளர்ந்தவுகதேன்.குளந்தையும் தெய்வமும் ஒன்னுங்கறமே தவிர அதுகளுக்கிருக்கிற சுய நலமும் பிடிவாதமும் பெரியவுகளுக்கு கூட இருக்காது. அம்மா மடிய விட்டு இறக்கி விட்டா ஒரு ராகம், வாய்ல இருந்து …எடுத்தா ஒரு ஆலாபனை. அப்பங்காரன் நடுராத்திரி பொஞ்சாதி மேல கைய போட்டா ஒரு கிறீச்.

ஏதோ கொஞ்சம் கொஞ்சமா அப்பா, பாட்டி, கின்டர் கார்டன் மிஸ்ஸுன்னு அஜீஸ் பண்ணிக்க கத்துக்குதே தவிர கொளந்தை சரியான காட்டுமிராண்டி -சுய நல பிசாசு. ஒரு கொளந்தை தேர்ந்த சமூக பிராணியா மார்ரதே கண்ணாலத்துக்கப்பாறம் தான்.ச.பிராணியா மாறலேன்னா அப்பாறம் மகிளா ஸ்டேஷன் -ஃபேமிலி கோர்ட்டெல்லாம் தனிக்கதை. இது மேரீட் லைஃப் மேட்டர்.

மத்த மேட்டர்லாம் எந்த ரேஞ்சுக்கு போகுமோ தெரியாது.

சாஸ்திரப்படி பார்த்தாலும் எந்த காரியத்தையும் ( ஐ மீன் சடங்கு ,சம்பிரதாயம்) பொஞ்சாதியோட சேர்ந்து செய்தாதான் பலனாம்.

சோஷியல் லைஃப்ல கண்ணாலமானவன்னா ஒரு மருவாதி இருக்கும். “எப்பா அந்தாளு மேரீட் – இந்த மேட்டருக்கெல்லாம் அவரை இளுக்க வேணாம்”

ஏம்பா அந்தாளு ஏதோ கிருஷ்ணா ராமான்னு பொஞ்சாதி புள்ளைங்களோட வாள்ந்துக்கிட்டிருக்கான். விட்டுருப்பா. அந்த பாவம் நமக்கு ஏன்?

இந்த மாதிரி வசனம்லாம் நிறைய கேட்டிருப்பிங்க.

அதனால பெசலா லட்சியம் கிட்சியம் இல்லாம கண்ணாலத்துக்கான ஏக்கத்தோடயே கண்ணால வயசு தாண்டி போயி மென்டல் மெச்சூரிட்டி இல்லாம இருக்கிற கிராக்கிங்களோட சைக்காலஜி தனி . இப்படியா கொத்த கேஸுங்க மெல்ல சமூக பணி அது இதுன்னு டைவர்ட் ஆயிட்டா பரவால்லை. ரொட்டீன் லைஃப்ல இருந்தா மட்டும் நாஸ்தி தேன். அந்த சமூக பணியில கூட உள்ளாற தூங்கற சைத்தான் முழிச்சுக்க சான்ஸ் இருக்கு.டேக் கேர்.

அதது காலா காலத்துல நடந்துரனும். தாளி அதனால உபயோகமா இல்லியாங்கறது அப்பால. நாம படிச்சோம். படிப்பு சோறு போடும்னா படிச்சம். படிக்கனுமேன்னு படிச்சம். படிச்சதால அது படிப்பில்லைங்கற ஞானோதயமாவது ஏற்பட்டுருச்சுல்லயா? இதுவும் ஒரு படிப்பு தானே.

அதே போல இந்த கண்ணால மேட்டரும் ஒழிஞ்சு போவட்டுமே. இதாண்டா வாழ்க்கைன்னாச்சும் தெரிஞ்சுக்கட்டும். கொய்யால இது இல்லடா வாழ்க்கைன்னாச்சும் தெரிஞ்சுக்கட்டும். தெரியாமயே வாழ்ந்துட்டா அது அவிக மனம்,உடல், சமூக ,பொருளாதார,அரசியல் வாழ்வுகளை கூட பாதிச்சுருது.

அதானலதேன் இந்த கண்ணால மேட்டரை பிடிச்சு கிளிச்சிக்கிட்டிருக்கம்.

நேத்து கண்ணாலத்துக்கு அப்பா,அம்மா தடையா இருந்தா என்ன பண்றதுன்னு பார்த்தோம். இன்னைக்கு சகோதர -சகோதிரிகளே தடையா இருந்தா என்ன பண்றதுன்னு பார்ப்போம்.

சகோதர -சகோதிரிகளே தடையான்னுட்டு வாயை பிளக்காதிங்க. நாட்ல நடக்குது வாத்யாரே… நேத்திக்கு அப்பா அம்மாவால கண்ணாலம் தடைபட்ட கேஸை பார்த்தோம். ஞா இருக்குல்ல.

இன்னைக்கு சகோதர சகோதிரிகளால தடை பட்ட கேஸை பார்ப்போம்.ஒரு பெண் பார்க்க ரெம்ப சுமார். ஒல்லி பீச்சான் தான். மாங்கா மண்டை தான். ஆனால் செமர்த்தியான ஃபேமிலி பேக்கிரவுண்ட். ஆனால் இந்த பெண்ணுக்கு ஒரு அண்ணங்காரன். கண்ணாலமாகி ரெண்டு கொயந்தைங்க.

நம்மாளுக்கு ஒரு செட்டப்பு. ஆனால் செட்டப்பை ஃபேமிலி மாதிரியும் ஃபேமிலியை செட்டப்பு மாதிரியும் மெயின்டெய்ன் பண்ணுவான். அங்கன 29 நாள் . இங்கன 1 நாள் . இதான் ரேஷோ. இந்த மேட்டர் ஊரு சனம்லாம் பரவி கண்ணாலத்துக்கு இருந்த 10 பைசா சான்ஸும் கோயிந்தா. இப்பம் அந்த பொண்ணும் கண்ணாலமாகி நெல்லபடியா வாள்ந்துக்கிட்டுதான் இருக்கு. இல்லேங்கலே.ஆனா ஏற்பட்ட தாமதம்? கரைஞ்சு போன வயசு. அனுபவிச்ச இமிசை?

இப்படி ஒரு அமைப்பிருந்தா என்னல்லாம் நடக்கும்?

மனசுல ஒரு பயம் பீதி இருந்துக்கிட்டே இருக்கும். ப்ரதர்/சிஸ்டர் இப்படி எக்குதப்பா நடந்துக்கிட்டிருப்பாய்ங்க. சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமான்னு நீங்களும் பிறந்த ஊரையும் – வீட்டையும் சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருப்பிங்க. சவுண்ட் பாக்ஸ்ல கூட பிரச்சினை வரலாம்.(காது)

இதெல்லாம் லக்னத்துலருந்து 3 ஆமிடம் கெட்டா வர்ர பிரச்சினைகள். 3 ஆமிடத்துல பாப கிரகம் இருந்தா சவுண்ட் பாக்ஸ் அவுட்டாகுமே தவிர மத்த மேட்டர்லாம் டபுள் ஓகே.

அந்த இடம் ஓவர் சுபபலமா இருந்தா உங்க உடன் பிறப்பு உச்சி நேரத்து சூரியன் மாதிரி பிச்சி உதறிக்கிட்டிருப்பாரு. நீங்க பகல் நேரத்து சந்திரன் மாதிரி மங்கி கிடப்பிங்க.

அல்லாரும் உங்க உடன் பிறப்பை காட்டி “அவனை பாரு” “அவளை பாரு”ன்னு கடுப்பேத்திக்கிட்டே இருப்பாய்ங்க.

இதுக்கு என்ன பரிகாரம் ? நாளைக்கு பார்ப்போம்.. ( மொக்கை ஓவராயிருச்சுங்ணா) :

Advertisements

One thought on “திருமண தாமதம் : உ.பிக்களே காரணமா?

  lordarul said:
  February 28, 2012 at 4:50 pm

  Hello brother,
  few thoughts about Jothidam 360 book. I have read your book. The book is very good but I have excepted many things from your book, but it’s satisfied 10% only. 😦

  I think You should add some general predictions and astro yogas in your book; Sombarla “Karivapplai” add pandradhu, nalla manathuka but no one test it…

  I feel that you didn’t cover few more interesting and important topic in your book but those are in your site.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s