திருமண தாமதம் : பெற்றோர் காரணமா?

Posted on

அண்ணே வணக்கம்ணே !

பொதுவா பார்த்தா குரு,சுக்கிரன்,களத்ர பாவாதிபதி சோனியா இருந்தா தாமதம் ஏற்படும். டீப்பா பார்த்தா லக்னாதிபதியே பல்பு வாங்கியிருந்தாருன்னு வைங்க தாமதம் சகஜம். உ.ம் நீசம், 6,8,12 ல மாட்டறது, அல்லது மேற்படி அதிபதிகளோட சகவாசம் வச்சுக்கறது . அஸ்தங்கதம், நெல்ல இடத்துல நின்னு வக்ரம் அடையறது, இப்படி ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு.

கண்ணாலத்துக்கு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வகையில கோ ஆப்பரேட் பண்ணுது. ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு வகையில கோ ஆப்பரேட் பண்ணுது.

மேஜரான பாவங்கள் கெட்டிருந்து 1 ,2 , 4, 5, 7, ( பெண்ணானால் 8) , 9 , 11 ( ஆணுக்கு ரெண்டாம் கல்யாணம்) ,12 பாவங்கள்ள எதாவது ஒன்னு பேர் சொல்லியிருந்தாலும் கண்ணாலம் நடந்துருது .( மத்ததெல்லாம் மத்த பாவங்களோட பலத்தை பொருத்து நடக்கும் – நடக்காம போகும் .அதுவேற சங்கதி)

அதே போல மேஜரான கிரகங்கள் கெட்டிருந்து குரு,சுக்கிரன் அல்லது 7 ஆம் பாவாதிபதிகள்ள ஒருத்தரு தம் கட்டி நின்னிருந்தாலும் கண்ணாலம் நடந்துருது ( மத்ததெல்லாம் மத்த கிரகங்களோட பலத்தை பொருத்து நடக்கும் – நடக்காம போகும் .அதுவேற சங்கதி)

இந்த ஆங்கிள்ள இந்த பதிவை எழுதினா ஜாதகம் இல்லாதவுக கழண்டுக்குவாய்ங்க. அதனால முந்தா நாள் திருமண தாமதத்துக்கு கொடுத்த காரணங்களை இன்னம் கொஞ்சம் அப்டேட் பண்ணி அவற்றை அடிப்படையா வச்சு அதுக்கு எந்த கிரகம் காரணமா இருக்கலாம்ங்கற ஹன்ச் – அதுக்கு என்ன பரிகாரங்கற டிப்ஸை தந்துர்ரன்.

பெற்றோர்களால் ஏற்படும் தாமதம்:

மாதா,பிதா செய்தது மக்களுக்குங்கறாப்ல பேரன்ட்ஸோட மேரீட் லைஃபே தகராறுன்னு வைங்க பசங்க மேட்டரு புட்டுக்குது

ஒரு அம்மா டீச்சரு -அவிக ஆத்துக்காரரு அரசு ஊழியர். அவிக சந்தோசமா வாழ்ந்த காலகட்டத்துல கருவான பையன், பெண் மட்டும் கண்ணாலம் நடந்து குப்பை கொட்டிக்கிட்டிருக்காய்ங்க. இவிக முட்டி மோத ஆரம்பிச்ச பிறவு பிறந்ததுல ஒரு டிக்கெட் கண்ணாலமாகி ஸ்க்ரூ லூஸாகி பிரிஞ்சு கிடக்கு, இன்னொரு டிக்கெட் முத்திக்கிடக்கு(வெண்டைக்காய் கணக்கா)

ஜாதகத்துல மாதா பிதான்னா பொதுவா சந்திர -சூரியர்கள். ( இரவில் பிறந்தவர்களுக்கு சனி பித்ருகாரகன் – பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மாத்ரு காரகன்). இவிக கெட்டிருந்தா மேற்படி கேஸ் மாதிரி இவிக திருமணம் தாமதமாக அப்பா,அம்மா அவிக வாழ்க்கையே ஒரு காரணமா இருக்கலாம்.

இதுக்கான பரிகாரங்கள் வருமாறு:

1.அப்பா,அம்மா வழியில் ஆதாயத்தை எதிர்பார்க்கக்கூடாது ( சொத்துக்கள் உட்பட -அவிக சொத்துக்கு ஆசைப்பட்டா அவிய கருமம் கூட வந்து ஒட்டிக்கும்)

2.அவிகளுக்கு நீங்க வாரி கொடுக்கலாமே தவிர அவிய கிள்ளி கொடுக்கிறதை கூட வாங்க கூடாது.

3.அவிக வழி உறவுல பெண் தேடக்கூடாது.

( எந்த கிரகம் கெட்டிருக்கோ அந்த கிரகம் காட்டும் அப்பா அல்லது அம்மாவை /அவிக வழி ஆதாயத்தை மட்டும் அவாய்ட் பண்ணா போதும்)

அடுத்து 4 ,9 ங்கற பாவங்கள் ரெம்ப முக்கியம் இந்த பாவங்கள் கெட்டாலும் இந்த கதிதான். இதுக்கான பரிகாரங்கள் வருமாறு:

4ஆம் பாவம்:

1.சொந்த வீடா இருந்தாலும் உங்க அறைக்கு நீங்களே ஒரு வாடகை ஃபிக்ஸ் பண்ணி அதை பாதி அம்மன் கோவில் உண்டியல்ல -பாதி சிவன் கோவில் உண்டியில போட்டுருங்க. வாடகை வீடா இருந்தா உங்க ஷேரை கான்ட்ரிப்யூட் பண்ணுங்க.(மொத்தத்தையும் நீங்களே பேர் பண்ணா விசேஷம்)

2.சொந்த வாகனத்துக்கு தடா .பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டையே யூஸ் பண்ணுங்க.

3.தாய் மேட்டர்ல ஒன்வே ட்ராஃபிக் வச்சுக்கோங்க. சட்டைக்கு பட்டன் தைக்க கூட விடாதிங்க. நீங்க வேணம்னா அவிக உள் பாவாடைக்கு நாடா போடலாம். ஃபேஸ் புக்ல ஜல்லியை விட இது மகா புண்ணியம்.

4.மேற்படிப்புக்கு குட்பை சொல்லிருங்க.

9ஆம் பாவம்:

1.அப்பா மேட்டர்ல ஒன்வே ட்ராஃபிக். சில்லறையா இல்லேன்னு வண்டிக்கு காத்தடிக்க சில்லறை கூட வாங்காதிங்க. நீங்க அவருக்கு எவ்ள வேணா செலவழிக்கலாம். அவர் வழி உறவை – சொத்தை கம்ப்ளீட்டா பாய்காட் பண்ணுங்க. சேவிங்ஸ் -முதலீடு எல்லாம் கண்ணாலத்துக்கு அப்பாறம் தான்னு டிசைட் பண்ணிக்கங்க.

2.அய்யாமாரு சொன்னாய்ங்கன்னு அந்த சேத்திரம் இந்த சேத்திரம்னு போயி காசை கரியாக்காதிங்க.

3.தூர தேச தொடர்புகளை அவாய்ட் பண்ணிட்டு குண்டு சட்டியில குதிரை ஓட்டுங்க..

(தொடரும்)

Advertisements

3 thoughts on “திருமண தாமதம் : பெற்றோர் காரணமா?

  arul said:
  February 27, 2012 at 5:25 am

  nalla pathivu anna

  kandhan said:
  February 27, 2012 at 3:53 pm

  தல

  தகவல் நிரைந்தும் அதெ சமயத்துல நல்லா ஜனரஞ்சகமாவும் இருக்கு.

  விமலாதித்தன் said:
  February 28, 2012 at 12:32 pm

  ஐயா,

  பதிப்பு அருமை, தாமத திருமணமாகி மீண்டும் இரண்டவது திருமணம் செயும் அமைப்பு யாருக்கு அமையும் வயது அதிகம் காரணமாக எதாவது ஒரு பெண்ணை மணைந்து பிறகு தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செபவர்கள் ஜாதகம் எவ்வாறு இருக்கும். எனது அனுபவத்தில் லக்கனதிற்கு 2ல் ராகு அமைய பெட்றவர்கள் பெரும்பாலும் பெண்களை எமாற்றி காதலில் விழவைபவர்கள், 2 ம் திருமணம், தனது பழைய காதலி நெனைப்பில் மனைவியை வேருப்பது, மணமான காதலியை மணக்க முயற்சி செய்வது போன்றவை பார்துல்லேன். பெரும்பாலும் லக்ன கேது அல்லது ராகு ஜாதகரை மட்டும் பதிக்கிறது ஆனால் 2ல் ராகு அமைய்தவர்கள் மிக சுயநலமாக வாழ்கின்றனர் பெரும்பாலும் பதிப்பு மற்றவருக்குத்தான். இதை சற்று விளக்கம் தரவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s