எதுவனாலும் திடீர்னு நடக்குதா?
நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலயும் ஒரு வித நிலையற்ற தன்மை இருக்கு. சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை இருக்கு. அவ்வப்போது மூட் அவுட்டாயிர்ரம். எளிதில் எரிச்சல்,கோபம் வருது..சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வேதனை படறோம். ( காதல்?) நம்ம பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கு.
சில நேரம் காசு பணத்தை வீணாக்கறோம். சில நேரம் கால் காசுக்கு லாட்டரி அடிக்கிறோம். சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருக்கிறோம். சில நேரம் குடும்பம்னா அது என் குடும்பம் தான்னு காலரை தூக்கிவிட்டுக்கறோம். சில சமயம் ” நான் எங்கயாவது ஒழியறேன்னு” தெருமுனை பெட்டிக்கடையில சிகரட் குடிக்கிறோம்.
சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்குது. திடீர் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வருது.
சில சமயம் அம்மான்னா அம்மாதான். மத்த சொந்தமெல்லாம் சொம்மான்னு சொக்கிப்போயிர்ரம். அவிக உதவாக்கரை தம்பிக்காகவோ , திமிர் பிடிச்ச தங்கைக்காகவோ வக்காலத்து வாங்கும்போது செமை கடுப்பாயிர்ரம்.
சொந்த வீடு கட்டற வரை தாளி இந்த வீட்லயே இருந்துரனும்னு நினைக்கிறோம்.மறுமாசமே சட்டியை தூக்க வேண்டி வந்துருது. உஸ் ..அப்பாடா இனி வண்டியை பத்தி கவலையில்லைன்னு நினைக்கிறோம். மறுவாரமே திருடு போயிருது .அல்லது மூட்டையா கட்டி கொண்டுவரோம்.
நம்ம மூளையில பாதி சாணக்யன் -பாதி சகுனின்னு பீத்திக்கறோம். பவரை ஆஃப் பண்ணாமயே ஸ்விட்ச் பாக்ஸ்ல கை விட்டு அல்வா வாங்கறோம். என் பையன் ஜெம் சார்.. னுட்டு அலட்டறோம். அவன் டீச்சரம்மாவை கத்தியால குத்திட்டான்னு தெரிஞ்சு சரிஞ்சு விழறோம்.
சில சமயம் நான் அஜாத சத்ரு.. எனக்கு விரோதியே கிடையாதுங்கறோம். கடனா.. மூச் ! கடன் உடன் பகை ன்னு வசனம் விடறோம். இன்னை வரைக்கும் நமக்கு ஜூரம் தலைவலி கூட வந்ததில்லைங்கறோம். அடுத்த வாரமே சத்ரு -ரோக -ருண பீடைகள் ரவுண்டு கட்டி அடிக்குது.
சில சமயம் கடவுள் எந்த விஷயத்துல எனக்கு ஆப்படிச்சிருந்தாலும் பொஞ்சாதி மேட்டர்ல தூள் பண்ணிட்டாரு. நம்ம பை. தனங்களுக்கு என்னைக்கோ ஓடிப்போயிருக்கனும்னு க்டவுளுக்கு நன்றி சொல்றோம்.
அடுத்த வாரமே கிரைம் நாவல் கணக்கா பெண்டாட்டியை போட்டு தள்ளிட்டா என்னன்னு ரோசிக்கறோம்.
இன்னும் ஒரு பத்துவருசம் வாத்யாரே .. பையனுக்கு வேலை கிடைச்சு – பெண்ணுக்கு கண்ணாலம் பண்ணி அனுப்பிட்டன்னனா காசி ராமேஸ்வரம்னு சுத்தவேண்டியதுதான்னு டிக்ளேர் பண்றோம். தூக்கத்துலயே டிக்கெட் போட்டுர்ரம்.
இதே மாதிரி தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து, சேமிப்புக்கள்,தூர பிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் தொழில்,வேலை,உத்யோகம்,வியாபாரம், மூத்த சகோதிரி/சகோதரன்,லாப நோக்குடனான செயல்கள்
தூக்கம்,செக்ஸ் எல்லாத்துலயும் ஒரு வித இன்ஸ்டெபிலிட்டி,அன்செர்ட்டனிட்டி,அப் அண்ட் டவுன்ஸ், Anxious conditions இருக்கு.
எல்லாருக்கும் எல்லா விஷயத்துலயும் இல்லின்னாலும் மேற்சொன்ன பாராக்கள்ள ஏதோ ஒரு பாரால சொன்ன மேட்டர்ல இதெல்லாம் மாட்டிக்கிது. இதுக்கு என்ன தான் காரணம்?
சந்திரன்.. ஆமாங்னா ஜஸ்ட் சந்திரன் தான் இதுக்கு காரணம்.” நல்லாதானே போயிட்டிருந்தது”ன்னு நாம வடிவேலு மாதிரி புலம்பற கண்டிஷன் திடீர்னு வந்தா அதுக்கு சந்திரன் தான் காரணமா இருப்பாரு.
நான் மேற்கண்ட நிலையற்ற தன்மை குறித்த நிலவரங்களை மொத்தையா சொல்லிட்டு வரலே. ஒரு கணக்கா தான் சொல்லிட்டு வந்தேன்.
மொதல் பாரா கடக ராசி/லக்னத்துக்கு உரியது . ரெண்டாவது பாரா மிதுன ராசி/லக்னத்துக்கு உரியது. 3 ஆவது பாரா ரிஷபம், நாலாவது பாரா மேஷம் , அஞ்சாவது பாரா மீனம் , ஆறாவது பாரா கும்பம், ஏழாவது பாரா மகரம், எட்டாவது பாரா தனுசுக்கு உரியது.
ஒன்பதாவது பாரா விருச்சிகம் ,பத்தாவது பாரா துலா, 11 ஆவது பாரா கன்னி, 12 ஆவது பாரா சிம்ம ராசி/லக்னத்துக்கு உரியது.
ஏன்? ஏன்? ஏன்?ன்னு கேப்பிக. சொல்றேன். உங்க ராசி/லக்னப்படி சந்திரன் எந்த பாவத்துக்கு ஆதிபத்யம் வகிக்கிறாரோ அந்த பாவ காரகங்கள்ள இந்த இன்ஸ்டெபிலிட்டி,அன்செர்ட்டனிட்டி,அப் அண்ட் டவுன்ஸ், Anxious conditions எல்லாம் சகஜமப்பா..
இதையே இன்னம் கொஞ்சம் டீட்டெய்லா தெரிஞ்சுக்கனும்னா லக்னம் /ராசி காம்பினேஷனை பார்க்கனும். அதையெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.
பை தி பை மேற்சொன்ன நிலையற்ற தன்மையை ஓரளவாவது ஓவர் கம் பண்றதுக்கு எதுனா பரிகாரம் இருக்கான்னு கேப்பிக .. தரேன். ( ஹி ஹி நாளைக்கு)