பதிவர்களுக்கு பைசாவும் கொடுக்கறாப்ல ஒரு திரட்டி

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நமக்கு சோசியத்துல ரெம்ப பிடிச்ச அம்சமே /வார்த்தையே “அல்லது”ங்கறதுதேன். சோசியத்துல டச் இல்லாத வயசுல அப்பா சுபயோகம் புஸ்தவம் வாங்கிட்டு வந்து ரெம்ப சீரியசா படிச்சிக்கிட்டிருப்பாரு. படிக்க புஸ்தவம் இல்லாத சமயம் அதையும் புரட்டறது உண்டு.

அதுல ராசிபலன் முழுக்க அல்லதுங்கற வார்த்தை மஸ்தா வரும். நான் ” நழுவறான்யா”ன்னு நினைச்சுர்ரது. ஆனால் சோசியத்தை தெரிஞ்சு -புரிஞ்சுக்கிட்ட பிறகுதேன் லைஃப் ஈஸ் ஆப்ஷன்ஸ்ங்கற உண்மையை சோசியம் கூட அங்கீகரிச்சிருக்கிறது புரிபட்டது.

நமக்கு அஞ்சுல ராகு. அவமானம் நடக்கனும். அல்லது குழந்தைக்கு வாந்தி. மொதல் பாய்ண்டுக்கு சான்ஸே தர்ரதில்லை. நம்மை என்ன இன்னொருத்தன் அவமானப்படுத்தறதுன்னு அந்த வேலைய நாமே பார்த்துக்கிடறம். ஜா.ரா மாதிரி ஆளுங்க பாவம் “கர சேவை”பண்ணி சகாயம் பண்றாய்ங்க.வாழ்க. இதனால பாப்பாவுக்கு வாந்தி ( சாதாதேன் – நாம தாத்தா ஆறதுக்கு இன்னம் நாளிருக்குங்கோ)

அல்லாருக்குமே நாம ஒரு ஆனை மாதிரி. ஆளுக்கு ஒரு பார்ட்டை பிடிச்சுக்கிட்டு இது சூப்பரும்பாய்ங்க. நாம ஒட்டு மொத்த காட்சியை தர ட்ரை பண்ணா “கொடுமை” “ஓவரு”ன்னு கழண்டுக்குவாய்ங்க. இல்லாட்டி “வேணா.. வேணா..இதெல்லாம் நல்லதுக்குல்லை”ம்பாய்ங்க. உரிமை உள்ளவுகளா இருந்தா கண்டபடி பேசிருவாய்ங்க. அப்படி பேசினாத்தேன் அஞ்சுல ராகுவுக்கு சாந்தி . அதுக்குன்னே இந்த பதிவை போட்டிருக்கன். மதியத்துக்கு மேல ஃபோட்டோ செஷனை ஃபேஸ்புக்ல போடப்போறேன்.

மொதல்ல நாம ஆரு – நம்ம நோக்கம் என்னன்னு உள்ளது உள்ளபடி க்ளியர் பண்ணிட்டா வேடிக்கை பார்க்க வர்ரவுகல்லாம் விலகிருவாய்ங்க. வேடிக்கை பார்க்க வர்ரவுகளால பல சமயம் அசலான வேலையே கெட்டுப்போயிரும்.

நாம எக்காலத்திலும் -எதையும் செய்யப்போறதுல்லன்னு முடிவு பண்ணிட்டா இதெல்லாம் தேவையில்லை. எதுனா செய்தே ஆகனும்னா மட்டும் இந்த டிக்ளரேஷன் கம்பல்சரி. ஆரும் நமக்கு உதவி உபகாரம் செய்யலின்னாலும் பரவால்லை .. உபத்ரவமிருக்காது.

லட்சியம்னு ஒன்னை கைப்பிடிச்சு -அதுக்காவ ரிஸ்க் எடுக்க ஆரம்பிச்சுட்டா தெய்வத்தால் ஆகாதெனினும் தன் மெய் வருத்த கூலி தரும்.

பச்சையா ஒரு சொலவடை உண்டு ஓ..ற நாயை கண்டா பா..ற நாய்க்கு இளக்காரம்னு . சனங்கள்ள நூத்துக்கு 99.99 சதவீதம் பிறரை விமர்சிக்கிறதுலயே வாழ்க்கைய முடிச்சுர்ராய்ங்களாம். நாமளும் ஒரு காலகட்டம் வரை இந்த ரேஞ்சுலதேன் இருந்தம். ஆனால் நாம ஆருக்கெல்லாம் பரணி பாடினமோ அவிகளுக்கும் – நாம கடுமையா விமர்சிச்சவுகளுக்கும் நாளடைவுல வித்யாசமே இல்லாம போயிருச்சா.. அப்பம் ரோசிக்க ஆரம்பிச்சுட்டம்.

எவனோ கிளிப்பான்னு நம்பறது ஏன்? அவன் கிளிக்கலின்னா நொந்து நூடுல்ஸ் ஆறது ஏன்? ஐசா பைசா நாமளே ட்ரை பண்ணா என்னன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டம்.

தமாசு இன்னாடான்னா நாம பேண்ட் போட்ட புதுசலயே பஞ்ச் பேச ஆரம்பிச்சுட்டம் ” மச்சான் ..லைஃப்ல ஒரு கட்டத்துல எதையுமே செய்ய முடியாத நிலைமை வந்துரும்.அதுக்குள்ள எத்தனா செய்துரனும் – ஈசி சேர்ல சாஞ்சு ரோசிக்கவாச்சும் எதுனா பண்ண வேணா” – இதான் நம்ம பஞ்ச்.

( தம்பிங்களா ! ஏதோ நம்ம ஜாதகத்துல குரு உச்சமா .. தண்ணி போட்டும் லிவர் வீங்காம ,கிட்னி ஃபெய்லியர் ஆகாம தப்பிச்சம் குட்டி போட்டும் ஒரு விடி கூட இல்லாம தப்பிச்சோம் .. இன்னைக்கு டைரக்ட் எய்ட்ஸு தேன் -டேக் கேர் ! )

நாம ஒரு ஓரமா விளையாட டெஸ்ட் மேட்சுல விளையாடறவுகளை இன்ஸ்பிரேஷனா வச்சுக்கிட்டிருந்த கால கட்டம் அது.

அப்பவும் செரி -இப்பவும் செரி நம்ம கிட்டே கிரிட்டிசிசமும் உண்டு .கிரியேட்டிவிட்டியும் உண்டு. நாம அரசியலையும் -சினிமாவையும் விமர்சிக்கிறது போது போகாமயோ -பைல்ஸ் கம்ப்ளெயிண்டாலயோ இல்லிங்ணா.

நமக்குள்ள ஒரு கலாம் இருக்காரு. அவரு கனவு கண்டுக்கிட்டே இருப்பாரு. அந்த கனவை ஆராச்சும் நனவாக்க துடுப்பு போடறாய்ங்கன்னா நாம ஒடனே அவிகளுக்கு பரணி பாட ஆரம்பிச்சுருவம்.எங்கடா பிரச்சினை வருதுன்னா..

நாம யாரை வெறுத்தமோ -எதை மாத்த நினைச்சமோ -அதை வெறுத்து -அதை மாத்தவந்தவுக – தங்கள் முன்னோடிகளை நல்லவுகளாக்கிர்ராய்ங்க.

உதாரணமா ரஜினி காந்த்.அவரு வர்ரதுக்கு மிந்தி ஹீரோன்னா பான் கேக் ,ரோஸ் பவுடர்,சுருள் முடின்னு இருந்தது நம்மாளு ரெம்பவே வித்யாசம் காட்னாரு. நாமளும் ஜொள்ளு விட்டோம்.

என்னா ஆச்சுன்னா ரஜினியும் இன்னொரு செலுலாய்ட் எம்.ஜி.ஆரா மாறத்தான் துடிச்சாரே தவிர எம்.ஜி.ஆர் ல இருந்த எந்த நல்ல குணத்தையும் சொந்தமாக்கிக்க விரும்பலை.

இப்பம் ரஜினின்னா என்ன ? நாம வெறுத்த அதே எம்.ஜி.ஆர் மைனஸ் எம்.ஜி.ஆரின் நல்ல குணங்கள். அரசியல்லயும் இதே இழவுதேன்.

கலைஞர் என்ன ஆனாரு? கலைஞர் மைனஸ் கலைஞரோட போராட்டகுணம் . ஜெ என்ன ஆனாங்க? ஜெ+ ஜஸ்ட் ஈகோ டு தி பவர் ஆஃப் ஃபைவ்.

எத்தீனி நாள் தேன் ச்சொம்மா நை நைன்னு ஆள மாத்தி மாத்தி பரணி பாடறது? என்.டி.ஆர் ,ஒய்.எஸ்.ஆர் மறைவுக்கு பிறவு நமக்கு ஆரும் தலைவனில்லை. ஜகன் மோகன் ரெட்டியா? நோ சென்டிமென்ட்ஸ்.

முந்தா நேத்து அவரு பண்ண வேலைய ( ஜகன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாங்க தனி க்ரூப்புன்னு சபா நாயகருக்கு லெட்டர் கொடுத்தது ) ஒய்.எஸ் செத்த பத்தாவது நாளே பண்ணசொல்லி ஃபேக்ஸ்/மெயில்/தந்தின்னு அடிச்சு விட்டம். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இந்த சினிமாவுல பாருங்க.. ஆம்பளை மாரியும் இல்லை, பொம்பள மாரியும் இல்லை. பையன் மாரியும் இல்லை ,ஆசாமி மாரியும் இல்லை. சரி இவிக சூஸ் பண்ற கேரக்டர்ஸ்னா சூட்டபிளா இருக்கா? அந்த இழவும் இல்லை. நல்லாவே ஆரம்பிக்கிறாய்ங்க. அப்பாறம் பார்த்தா பழைய குருடி கதவை திறடி..

சிவாஜி,எம்.ஜி.ஆர் ,ரஜினி கமல் , சத்ய ராஜ், விஜய் ,அஜீத் இவிக விசயத்துல விமர்சிக்கவாவது சில மேட்டர் இருக்கு. மத்த டிக்கெட்டுங்க?

வலையுலகத்துல கில்மாவை காட்டி இழுத்தே எத்தனையோ உயர்ந்த விஷயங்களையெல்லாம் சொல்லிட்டு வந்தோம். வர்ரோம் . இதையே ஏன் சினிமால பண்ணக்கூடாது. தமிழ்ல விளையாடற கப்பாசிட்டி இருந்தும் வைட் ரீச்சுக்காக நமக்குன்னு ஒரு ஒக்காபிலரிய டெவலப் பண்ணோம்.

அதே போல சினிமாலயும் குத்துப்பாட்டு .. குத்தாத பாட்டு அல்லாத்துக்கும் நாமளும் ரெடி.ஆனால் இத்தீனி பை.தனத்துக்கிடையில சனங்க மைண்ட்ல பச்சக்குனு ஒட்டிக்கிறாப்ல ஒரு மெசேஜ் ஏன் தரமுடியாது?

அரசியல்லயும் சனங்க ரூட்லயே போயி அட்லீஸ்ட் ஒரு இருபது வருசத்துக்கு பின்னாடியாச்சும் ஒரு சுமாரான நிர்வாகத்தை ஏன் கொடுக்கக்கூடாது.

நாம சகட்டு மேனிக்கு ஃபோட்டோ செஷன் பண்ணி ஃபோட்டோஸ் பப்ளிஷ் பண்றதை பார்த்து அண்ணன் திடீர்னு ஏன் இப்படில்லாம் பண்றாருன்னு நினைக்கிறவுக இல்லாம இல்லை. இந்த கோணங்கித்தனம்லாம் பால்யத்துலருந்தே உண்டு. நாம மூணாங்கிளாஸ் க்ரூப் ஃபோட்டோலயே உள்ளார நெக் பனியன் போட்டு ,மேல கருப்பு சட்டை -அதுல 3 பட்டன் திறந்து நின்ன பார்ட்டி –

( அந்த ஃபோட்டோ கிடைச்சா நிச்சயம் வைக்கிறேண்ணே)

இடையில புவ்வாவுக்கே லாட்டரியா? ஒரு ஃபோட்டோவுக்கு அம்பது ரூவா செலவழிக்கனுங்கற நிலைமையா அம்பேல் ஆயிட்டம்.

இப்பம் நம்ம எண்ணம் செயல் வடிவம் பெற்று மகள் ஃபோட்டோ ஷாப்ல விளையாடறா – எதிர்கால மாப்பிள்ளை சொந்த ஸ்டுடியோ வச்சிருக்காரு..எல்லாம் தயிருதேன்.

இன்னைக்கு உலகமே ஒரு கிராமமாயிருச்சாம். ஆராச்சும் ஹாலிவுட் டைரக்டர் கண்ல நம்ம ஃபோட்டோ
சிக்கி – குருட்டு தனமா ஒரு படம் பண்ணி அது ஹிட்டாகியும் தொலைச்சுருச்சுன்னு வைங்க..

அட.. காசா பணமா ஒரு வாய்ப்பிருக்கா இல்லியா? அதை ஏன் நாம உபயோகிச்சுக்கக்கூடாது? அட குறைஞ்ச பட்சம் ஒரு அழுகாச்சி சீரியல்ல வில்லன் ரோல் தரட்டுமே .. முருகேசன் முருகேசனா வல்லரசு கனவுகளை சொன்னா அது ஆயிரம் பேரைத்தான் ரீச் ஆகும்.

சின்னத்திரை நடிகனா சொன்னா? கையில காசு பணம் உபரியா இருந்தா பதிவர்களுக்கு பைசாவும் கொடுக்கறாப்ல ஒரு திரட்டி ஆரம்பிச்சா ? நிச்சயமா பெட்டராத்தானே இருக்கும்.

அது செரி படம் பார்த்திங்கள்ள. மெசேஜ் ரீச் ஆயிருச்சுல்லயா? ஜோதிடம் 360 புஸ்தவம் நம்ம டேபிளுக்கு வந்துருச்சு. இன்னைக்கு (திங்கள்) முன் பதிவு செய்தவுகளுக்கு கூரியர்ல புக் பண்றோம்..

Advertisements

6 thoughts on “பதிவர்களுக்கு பைசாவும் கொடுக்கறாப்ல ஒரு திரட்டி

  P.TamilSelvan said:
  February 20, 2012 at 8:50 am

  Pls give confrmation how a human can live without commiting a small blunder for which their is a birth ,even if a human lives without commiting a blunder or sin ,even he will have a birth .how come a human sole reach the supreme power .What should a human do for it .
  Kindly provide an artical regarding this coment.
  Thanks & Regards

   S Murugesan said:
   March 3, 2012 at 6:43 pm

   வாங்க தமிழ் செல்வன் !
   பாவம் பண்ணாம வாழமுடியுமா? இதானே கேள்வி.. பதில் சிம்பிள்.மனிதர்களை வாழ வைப்பது ரெண்டே கோரிக்கைகள்.

   1.கொல்வது 2.கொல்லப்படுவது

   இதுல ரெண்டாவது கோரிக்கையை ஏற்று வாழ ஆரம்பிச்சா கருமம் தொலையும்.பிறவி இருக்காது.

   ஐ மீன் கொல்லும் விருப்பத்தை லஞ்சம்,பத்துவட்டி, வரதட்சிணைன்னு மறைமுகமா எப்படி நிறைவேத்திக்கிறாய்ங்களோ அப்படியே தங்கள் கொல்லப்படும் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வது பாவம் செய்யாத வாழ்க்கை..

  kalyan said:
  February 20, 2012 at 4:49 pm

  தல, மனம் நிறைந்த வாழ்த்துக்கள். புத்தகம் ரெடி பண்ணிட்டீங்க. நிச்சயமான achievement . வாழ்த்துக்கள்.

   S Murugesan said:
   February 20, 2012 at 5:08 pm

   வாங்க கல்யாண் !
   அச்சீவ்மென்டுன்னு நீங்க சொல்றிங்க. நாம ஆருன்னு நமக்கு காட்டிருச்சு.

   நெஜமாலுமே டர்ராயிட்டம். புதன் கிழமை சனம் கைக்கு புஸ்தவம் போன பிற்காடு இருக்கு நமக்கு ஆப்பு..

  kalyan said:
  February 20, 2012 at 5:53 pm

  தல டர்ர்ர் ஆகி வேலை முடிஞ்சாதான் அது அச்சீவ்மென்ட். ஈசியா நடந்துட்டா அது அச்சீவ்மென்ட் இல்லை. அதனால் மீண்டும் சொல்கிறேன், வாழ்த்துக்கள்.

  MINNAL said:
  February 21, 2012 at 2:40 am

  Congrats sir

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s