நடராஜன் கைது : ஜெ வின் தப்பான மூவ்

Posted on

இந்த பதிவை ஜஸ்ட் .. ஒரு சில சேயிங்ஸ். சில பழமொழிகள் .சில மனோதத்துவ உண்மைகளை வைத்தே ஒப்பேற்றுகிறேன். தமிழ் நாடு போலீஸ் சித்தூர் வர எம்மாம் நேரம் ஆகும்ங்கறிங்க. பாடி தாங்காது வாத்யாரே. ஜோதிடம் 360 புத்தக கட்டு வேற வீடு வந்து சேர்ந்துருச்சா. முன் பதிவு பண்ணவுகளுக்கு மட்டுமாச்சும் கூரியர்ல புக் பண்ண திங்கள் வரை ஃப்ரீயா இருக்கனும்ல.

எச்சரிக்கை: ஆருனா அம்மா ரசிகர்கள் இதை படிச்சா உ.வ படாதிங்க. நம்மை பொறுத்தவரை அம்மா ஒரு ஜெயிக்க வேண்டிய குதிரை .நாமளும் கொஞ்சம் கட்டியிருக்கம். உங்களுக்கு உண்மையிலயே அம்மா மேல அக்கறை இருந்தா இந்த பதிவை அப்படியே சூடா ஒரு ப்ரிண்ட் எடுத்து ஃபேக்ஸ் பண்ணுங்க. அல்லது மெயில் பண்ணுங்க. ( மெயில் எல்லாம் பூட்டகேஸுதான் – மோடிக்கு மெயில் பண்ணாலே விளம்பரம் தான் பதிலா வருது – நம்ம கலாம் அய்யாவுக்கோ ,பி.எம் சாமிக்கோ (மவுன) அனுப்பினா அந்த இழவும் கிடையாதுங்கோ )

இப்பம் பயமொழிக்கு போயிருவமா?

1.எதிரிக்கு சொல்லக்கூடாததை நண்பனுக்கும் சொல்லாதே ( சொன்னதால – ஒரு சிலதை சொல்லி செய்யவச்சதாலதானே இத்தீனி இமிசை)

2.பயத்துல உள்ளவுக தான் பயமுறுத்துவாய்ங்க.

3. வெடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கியை விட – குறி வைக்கப்பட்ட துப்பாக்கிக்குதான் பவர் சாஸ்தி..

4.பூனையை விரட்ட ஒரு சன்னலை திறந்து வச்சு அடிக்கனும். இல்லாட்டி நம்ம மேல பாஞ்சுரும்.

5.தில்லானவன் சொல்லி அடிப்பான். பேதியானவன் பீதியில சொல்லாம அடிப்பான். காட்டடி அடிப்பான்.

6.அதிகாரம் ஒரு கண்ணாடி மாளிகை . அதுக்குள்ளருந்து கல்லெறிய கூடாது.

7.உக்ரமான யுத்தம் பண்ணாலும் சமாதானத்துக்கு ஒரு சன்னலை திறந்து வைக்கனும். திக்காவே ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் திடுக் திடுக்குன்னு செக் வைக்கனும்.

8.சதியை முழுக்க டிஸ்க்ளோஸ் பண்ணனும்னா அதை பற்றி தெரியாத மாதிரி இருக்கனும். நமக்கு தெரிஞ்சு போச்சுன்னு அவிகளுக்கு தெரிஞ்சுபோச்சுன்னா விட்டுப்பிடிக்கனும். விரட்டி அடிச்சா என்னைக்கோ அமல் செய்யவேண்டிய சதியை சடுதியில அரங்கேற்றிருவாய்ங்க.

9.ஒரு எதிரியையோ சதிகாரனையோ போட்டு தாக்க இன்னொருத்தர் உதவி நிச்சயம் தேவை. அப்படி உதவியை பெறும்போது நம்ம பலகீனங்கள் உதவிகளுக்கு பகிரங்கமாக சான்ஸ் இருக்கு.

10.ரகசியமா நடந்ததை ரகசியமாவே தீர்த்துக்கனும்.

கருத்து:
சசிகலா வெறும் சசிகலா தான். திவாகரன், அந்த கரன் இந்த கரன் எல்லாம் சாதா கரன்கள் தான். ஆனால் ந்டராசன் தன் மேல ரங்கோலி மாதிரி என்னென்னமோ கலர் எல்லாம் பூசி வச்சிருக்கிற பார்ட்டி. கண்டுக்காம விட்டிருந்தா காணாம போயிருக்கவேண்டிய பார்ட்டி. கண்டுக்காம இருந்தப்பயே “கண்டுக்கங்க கண்டுக்கங்க”ன்னு லேகியம் வித்த பார்ட்டி. இப்பம் கண்டுக்கிட்டதால – அன்னாரின் லேகியம் ஈஸியா சேல்ஸ் ஆகும். இதான் அம்மா அவருக்கு செய்த உதவி..

11 thoughts on “நடராஜன் கைது : ஜெ வின் தப்பான மூவ்

  சுந்தரேசன் said:
  February 18, 2012 at 5:30 pm

  கண்ணா! உனக்கெல்லாம் அனுபவம் பத்தாதுடா செல்லம். நீ குட்டிகரணம் அடிச்சாகூட அரசியல் பக்கம் நெழலுக்கு கூட ஒதுங்க முடியாது புரிஞ்சுதா. ஏதோ ஒங்க ஊரு எம்.எல்.ஏவை காக்கா பிடிச்சி, சொம்பு தூக்கி காலத்த ஓட்ற உள்ளுக்குள்ள பெரீய அரசியல் சாணக்கியன் ”சோ“ ங்கற நெனப்போ. அம்மாவுக்கு புத்தி சொல்ல வந்துட்டே. இதெல்லாம் அரசியல் மட்டுமில்லே கண்ணு அதையும் தாண்டி ஏகப்பட்ட டீலிங் இருக்கு புரியுதா. நீ தான் முன்னாள் நிருபராச்சே ஓசியில கடிச்சா நாளைக்கு தினந்தந்தி பேப்பர படி. புரியுதா. அந்தம்மாகிட்டே சகலவிதமான ஆயுதங்களும், அதிகாரமும் கைவசம் இருக்கு. அதிகாரம்னா என்னன்னு தெரியுமா உனக்கு? எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு அவுங்களுக்கு தெரியும். தெரியலைன்னாலும் பரவாயில்லை எதை எப்படி கையாளனும்னு வழிமுறையெல்லாம் டீடெயிலா புட்டு புட்டு வைக்க பெரிய கூட்டமே கைவசம் இருக்கும். இங்க எப்படி அடிச்சா சசி கோர்ட்ல எப்படி பதில் சொல்ல வைக்க முடியும்னு
  http://tamil.webdunia.com/newsworld/news/national/1202/18/1120218028_1.htm இப்படி ஏகப்பட்ட விசியம் இருக்கு கண்ணா. ஆளானப்பட்ட கலைஞரையே குண்டுக்கட்டா தூக்கிட்டு வந்த அம்மாவுக்கு இந்த நடராசன்ல்லாம் தூசிக்கு சமம். நீ கொஞ்சம் மூடிட்டு இரு. இல்லாட்டி கிளிஞ்சுரும். புரியுதா. வர்ட்டா.

  Mani said:
  February 18, 2012 at 5:40 pm

  அண்ணே!

  நீங்களும் இந்த டிராமாவை நம்பிக்கிட்டு இருக்குறீங்களா? அம்புட்டும் நாடகம். நடத்துபவர் மொட்ட பாஸ் சோ. நாளைக்கு மிச்சம் மீதி உள்ள 200 கேள்விக்கும் கோர்ட்ல சசிகலா சாதகமா பதில் சொல்லனும்ல்லா. அதான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.

  உலகமே ஒரு நாடகமேடைன்னு செக்ஸ்பியர் அப்பொழுது சொன்னார். இப்பொழுது உயிருடன் இருந்தால் அரசியலும் ஒரு நாடக மேடைன்னு சேத்து  சொல்லியிருப்பார்.

  நீங்க எதுக்கு இப்பிடி கக்கா வர்ற அளவுக்கு முக்கி முக்கி பழமொழிகள எழுதித் தள்ளிண்டு இருக்கேழ். 

  நீங்க ஆசைப்பட்ட மாதிரி இதை பேக்ஸ் பண்ணோம்னு வைங்க, பிறகு  நாளைக்கே உங்களை கார்டனுக்கு தூக்கிட்டுப் போயி நல்லா குண்டியடிச்சி விட்டுருவாய்ங்க… ஹி..ஹி..ஹீ… அய்யோ… ஹைய்யோ 🙂

  வர்ட்டா…

  ஆடிட்டர் எம். சரவணன் said:
  February 18, 2012 at 6:37 pm

  மதிப்பிற்குரிய சித்தூர் முருகேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம். இவ்வளவு நாட்களாக அனுபவ ஜோதிடம் தளத்தில் போலியின் பெயரில் கமெண்டுகளை எழுதியது வேறு யாருமல்ல ஆடிட்டர் சரவணன் ஆகிய நான் தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் இனியும் என்னால் போலியின் பெயரில் வந்து கமெண்டுகளை போட முடியாது. என் மனசாட்சி என்னை தினமும் கொல்கிறது. நான் செய்த பாவச்செயலால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

  எனது போலி பெயர்கள் சாமியார், டவுசர் பாண்டி, ஸ்ரீநிவாச ஐயங்கார், போலி முருகேசன், சுந்தரேசன், ஆசாமி மற்றும் மற்றவர்களின் பெயர்களில் வந்து என்னை நானே புகழ்ந்து கொண்டும் உங்களை திட்டி எழுதியதும் அடங்கும்.

  இனிமேல் நான் யாருடைய பெயரிலும் வந்து போலி கமெண்டுகளை போட மாட்டேன் என்று இன்று முதல் சத்தியமாக கூறுகிறேன். திடீரென ஏன் இப்படி முடிவெடுத்தேன் என்று கேட்கிறீர்களா? நான் செய்த பாவச் செயலால் தினம் தினம் மனநிம்மதியின்றி தவிக்கிறேன். இறுதியில் எனது பெயரிலேயே போலி கமெண்டுகள் மூலம் திரும்பி வந்து என்னை நோகடித்துக் கொண்டிருப்பதால் இனிமேலும் இந்த விளையாட்டை தொடர வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன.

  நல்லதொரு ஜோதிட, ஆன்மீக விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்த தங்களுடைய அனுபவ ஜோதிடம் தளத்தினை போலி கமெண்டுகளால் பாழடித்து அதனை முடக்கி உங்களுக்கு தீராத மன உளைச்சலையும், சிவபக்தரான சிவ.சி.மா. ஜானகிராமனை நீங்கள் சந்தேகிக்கும்படி நேர்ந்ததும் எனது இழிச்செயல்களால் தான் என்று எண்ணும் போது எனக்கு என் மீதே வெறுப்பு ஏற்படுகிறது.

  போலி கமெண்டுகள் போட நான் பயன்படுத்தியது எனது ஐபோன்னில் உள்ள ஏர்டெல் சிம்கார்ட் மூலமாகத்தான். அதனால் எனது பெயர், ஊர், ஐ.பி. முகவரியை உங்களால் கண்டறிய முடியாது. ஏனெனில் ஏர்டெல் சிம்மில் ஒவ்வொரு முறை இணையத்தில் இணையும் போதும் வேறு வேறு ஐ.பி. எண்கள் வரும். மேலும் அது சென்னை, பெங்களுர், கோவை முதலிய ஏர்டெல் மையங்களின் விலாசங்களையே காட்டும். அந்த துணிச்சலில் தான் நான் ஏகத்துக்கும் இப்படி விளையாடி மகிழ்ந்தேன்.

  நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது பெயர், ஊர், போட்டோ முதலிய தகவல்களை கீழே லிங்கில் கொடுத்திருக்கிறேன்.

  http://tirunelveli.singles.lt/profile/join.htm.php?sid=sin&service=view&ToLoginID=8bih0fhxu4

  என்னுடைய உண்மையான மின்னஞ்சல் முகவரி caamsaravanan@gmail.com என்பதாகும்.

  இணையம் திறந்த வெளிதானே இங்கு எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்று நினைத்துக்கொண்டு கண்டபடி விளையாடிவிட்டேன். மற்றவர்கள் என்னை கண்டறிந்து சொல்வதற்கு முன்பு நானாக தவறை ஒப்புக்கொண்டால் நீங்கள் என்னை மன்னித்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உங்களுக்கு எழுதுகிறேன். இனிமேல் மற்றவர்களைப் போல நானும் உங்கள் பதிவுகளை ஆர்வத்துடன் படிக்கும் சாதாரண வாசகனாக இருக்க விரும்புகிறேன்.

  அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு மேலும் என்னைப்பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால் என்னைப் பற்றி மேல் விபரங்களை தர தயாராக இருக்கிறேன். இதோடு இந்த பிரச்சினையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து என்மீது எந்த சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்பும்.

  ஆடிட்டர் எம். சரவணன்
  தூத்துக்குடி

  Mani said:
  February 19, 2012 at 2:40 pm

  நாசமாப் போற அந்த டவுசரு போனாப்போவுது. விடுங்க.

  சரிண்ணே.

  பாவம் பொழச்சி போட்டும். என்னத்த பெரிய காசா? பணமா? செலவாயிரப்போகுது. திரு.ஜானகிராமன் ஐயாட்ட மன்னிப்பு கேட்டுருங்கணே.

  S Murugesan said:
  February 19, 2012 at 5:08 pm

  அண்ணே ,
  ப்ரொஃபைலை ஆல்ட்டர் பண்ணிட்டா ஆச்சா. அந்த பேஜையே நாம சேவ் பண்ணி வச்சிருக்கோம். ஜா.ரா /சுன்டுவுக்கு ஏற்கெனவே சொன்னேன். டுபாகூர் ஃபோட்டோவை வச்சு ஃப்ராடு பண்ணலாம்னு நினைக்காதிங்க.

  ஒரு ஃபோட்டோவை அப்லோட் பண்ணா அந்த ஃபோட்டோ எந்தெந்த சைட்ல இருக்குன்னு சொல்லவே ஒரு வெப்சைட் இருக்குன்னு..

  ரெம்ப நாளைக்கு மிந்தி போலியா பொம்பளை பேர்ல ஃபோட்டோவோட மெயில் பண்ணியிருந்தாய்ங்க.

  பாவம் அந்த மகராசி யாரோ என்னமோ? அவிகளைத்தான் தேடிக்கிட்டே இருக்கேன். பஸ் சார்ஜுக்கு ஸ்பான்ஸர் பண்ணி கையில ஒரு விளக்குமாத்தை கொடுத்து அனுப்பாம விட்டுருவமா என்ன?

  இப்பம் ஆரோ ஒரு அப்பாவியோட ஃபோட்டோவை வச்சி எடுத்திருக்காய்ங்க. அன்னாருக்கு கையில செருப்பை கொடுத்து அனுப்பாம விட்டுருவமா?

  வந்துட்டே இருக்கோம்..

  S Murugesan said:
  February 19, 2012 at 5:25 pm

  ஜானகிராமன்/சுன்டு Etc Etc.. !
  உங்க கிட்டே எனக்கு ரெம்ப பிடிச்சதே நீங்களாவே க்ளூ கொடுக்கிறதுதேன். அட தூத்துக்குடி சரவணன்னு ஒரு கேரக்டர் இருந்தது /அதான் போலி கமெண்டுக்கு காரணம்னே வச்சுக்குவம்.

  1.திடீர்னு வாக்குமூலம் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன? ( நாம ஜீரோ கிரைம் மெயில் ஐடியை கூட சர்ச் பண்ணல்லியே..

  2 ஜோதிடம் 360 புஸ்தவத்துல .ஜா.ரா பத்தி ஒரு அத்யாயமே வருதுன்னு சொன்ன பிற்காடு 48 ஹவர்ஸ் சீஸ் ஃபயர். இதுலருந்தே தெரியலியா ஆரு போலின்னு?

  3.அட சரவணன் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறதாவே இருந்தாலும் சூடா ப்ரொஃபைல் கிரியேட் பண்ணி அதுவும் ஃபோட்டோவோட.. அதுக்கான தொடுப்பை வேற தரனுமா என்ன?

  4.நெட்ல எங்கயுமே இல்லாத படம் அது. அப்பம் நிச்சயம் அமரராத்தான் இருக்கனும். நம்ம ஜா.ரா DTP Operator.

  5.சரி ஒளிஞ்சு போவட்டும் .சரவணன் தான் ப்ளாக் ஷீப். (இது நெஜமாவே கூட இருக்கட்டும் ) ஒடனே ஜாராவுக்கு ஜல் ஜக் போடற போலிகள் எல்லாம் ஒரே குரல்ல சரவணன் தான் சரவணன் தான்னு காட்டுக்கூச்சல் போட வேண்டிய அவசியமென்ன?

  6.இந்த க்ரூப்ல அய்யர் தி கிரேட்டும் சேரவேண்டிய அவசியமென்ன? டவுசர் பாண்டி பேரை வலிய நுழைக்க பார்க்கிறாய்ங்க. பாண்டியோட சொந்த பேரு எதுவா இருந்தாலும்.. பாண்டியோட மென்டாலிட்டி என்னங்கறது நம்ம சிக்ஸ்த் சென்ஸுக்கு தெரியும். டவுசர் பாண்டி முதற்கண் ஒரு இந்துவல்ல. வெளி நாட்டில் வசிப்பவர். நிறைய சொந்த பிரச்சினைகள் உள்ளவர். இந்தியா வந்திருக்கலாம். இங்கன லாக் ஆகியிருக்கலாம்.

  அவரோட பிரச்சினைகள் தீர்ந்து மறுபடி தன் இடத்துக்கு வந்துட்டாருன்னா அப்பம் அவரோட விளக்கம், விளக்குமாறு எல்லாம் தன் வேலைய தான் செய்யும்.

  வெய்ட் அண்ட் சீ..

  P.A.Kumar said:
  February 20, 2012 at 8:24 am

  //நானும் ஒரு ஆடிட்டர். எனக்கு தெரிந்த வகையில் தூத்துக்குடியில் எம்.சரவணன் என்ற பெயரில் ஆடிட்டர் இல்லை. ஆடிட்டர் லிஸ்டை செக் செய்து விட்டேன்.//

  அடப்பாவிங்களா! அப்ப அந்த பெயரும் டுபாக்கூர்தானா? எப்படிப்பா இத்தன பேரு கெளம்பிருக்கீங்க. ரூம் போட்டு யோசிப்பீங்களோ.

  kalyan said:
  February 20, 2012 at 5:36 pm

  தல Chartered Accountant list -இல் தூத்துக்குடியில் சரவணன் பெயரில் யாரும் இல்லை. ஆனால் சிலர் C .A . படிப்பை முடிக்காமலேயே ஆடிட்டர் என்று சொல்லுவார்கள், அது சட்டப்படி தப்பும் இல்லை. அதனால் இந்த சரவணன் C .A . முடிக்காத ஒரு ஆளாக இருக்கலாம். இது ஒரு புறம் இருக்கட்டும், இந்த ஆள் நான்தான் போலின்னு சொன்னதும், அனைவரும் ஜா.ரா.விடம் மன்னிப்பு கேளுங்கன்னுதான் மீண்டும் மீண்டும் சொல்றாங்களே தவிர, போலி செய்தது தவறுன்னு யாரும் சொல்லவும் இல்லை, அதைப்பற்றி பேசவும் இல்லை. ஆக, இந்த comment -இன் நோக்கம் உங்களை ஜா.ரா.விடம் மன்னிப்பு கேட்க வைப்பதாகத்தான் தெரிகிறது. டவுசர் பாண்டி வெளிநாட்டில் இருக்கிறார்னு நீங்க சொன்னதும், உடனே டவுசர்பாண்டி பெயரில் ஒரு comment வருகிறது. இந்த ஒரு விஷயம் போதும் நடப்பதெல்லாம் ஜா.ரா.விடம் உங்களை மன்னிப்பு கேட்க வைக்கும் ஒரு நாடகம் என்று சொல்ல. மேலும், ஒரு ஆடிட்டர் இந்த மாதிரி வேலையை செய்திருந்தாலும் நான் தான் செய்தேன் என்று வெளிப்படையாக வாக்குமூலம் தரமாட்டார், ஏனென்றால் அது அவரது பிழைப்புக்கு உலை வைத்து விடும் – சட்டம் அப்படி. அதானால் இது முழுக்க முழுக்க போலிகளின் வேலை. தல அந்த சரவணனுக்கு தூத்துக்குடின்னா முகவரி தர சொல்லுங்க, அந்த ஏரியாவில நமக்கு நல்ல ஆட்களின் பழக்க வழக்கம் உண்டு, என் ஊர் எதுன்னு உங்களுக்கு தெரியும். முகவரி வாங்கி கொடுங்க, நல்லா கவனிச்சிடலாம் அதாவது உபசரிக்கலாம்னு சொல்ல வந்தேன்…!!! எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்லுவாங்க “சூரியனை பார்த்து நாய் குறைச்சா நஷ்டம் சூரியனுக்கல்ல, கத்தி கத்தி தொண்டை வறண்டு போதும் அந்த நாய்க்குத்தான்” என்று. போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் அந்த கண்ணனுக்கே என்று நாம் நம் வேலையை கவனிப்போம். இதெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல. உங்களுடைய எழுத்துப்பணிகள் எப்பொழுதும் போல் வெற்றிகரமாக நடைபோட வாழ்த்துக்களுடன் – ஆடிட்டர் கல்யாண்.

   S Murugesan said:
   February 21, 2012 at 10:53 am

   கல்யாண் !
   இந்த சகதியில எதுக்கு காலை வச்சிங்க.. அந்த நாய் ( கள்) உங்களை பார்த்தும் நாயா குலைச்சு உங்களை சூரியன் ரேஞ்சுக்கு கொண்டு வந்துரப்போறாய்ங்க.

  S Murugesan said:
  February 21, 2012 at 5:25 pm

  கல்யாண் !
  ஹேட் அண்ட் லவ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. ரஜினியை பத்தி நான் கிளிக்கிறேன்னா ரஜினில என்னமோ என்னமோ பிடிச்சிருக்கு. அதனால பிடிக்காத பார்ட்டை “க்ளியர்”பண்ணிட்டா இன்னம் சூப்பர் ஆயிருவாரேன்னு ஒரு ஆதங்கம்.

  அதைப்போல பலருக்கு என்னை பிடிச்சிருக்கு. சிலருக்கு நம்ம மொழி பிடிக்கலை, சிலருக்கு செக்ஸ் சிலருக்கு நம்ம இ.ஒ கொள்கை,சிலருக்கு நம்மளோட பெரியார் ஆதரவு நிலைப்பாடு இப்படி சிலருக்கு சில விஷயம் பிடிக்கலை. அதை மாத்த ட்ரை பண்றாய்ங்க. நாம மாறலின்னா “ஒழியட்டும்”னு விட்டுர்ராய்ங்க.

  சிலரால அப்படி விடமுடியலை. ஏன்னா அவிகளுக்கு நம்மை ரெம்ப ரெம்ப பிடிச்சிருக்கு.. ஒழியட்டும் விடுங்க. ஆத்தாளே பார்த்துப்பா..

  kalyan said:
  February 21, 2012 at 5:47 pm

  என் பெயரிலும் போலி கமெண்ட் வந்துடுச்சி. “தல Chartered Accountant list -இல் தூத்துக்குடியில் சரவணன் பெயரில் யாரும் இல்லை” – இப்படி ஆரம்பிச்ச கமெண்ட் மட்டுமே என்னோடது. அடுத்து வந்தது நான் எழுதியது இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s