காதலி -மனைவி : உங்க டீலிங் எப்பூடி?

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கில்மா கனவுகள் பென்டிங்ல கீது. இடையில மனைவி/காதலி : உங்க டீலிங் எப்பூடி?ன்னு ஒன்னை ஆரம்பிச்சம். அதையும் டீல்ல விட்டாச்சு. அது என்னாச்சுன்னா இடையில நம்ம உஜிலாவோட பதிவு ஒன்னை படிச்சு இர்ரிட்டேட் ஆகி எதிர்வினையாற்ற வேண்டியதாயிருச்சு.

இப்பம் மனைவி/காதலி : உங்க டீலிங் எப்பூடி?ங்கற மேட்டருக்கு வந்துருவம்.

காதலி மனைவியுடன் டீலிங் எப்பூடிங்கற தலைப்புல களத்ரபாவாதிபதி லக்னத்துலருந்து எத்தீனியாவது வீட்ல இருந்தா இன்னா மாரி நிலவரம் இருக்கும்னு 1 டு 5 பார்த்தோம்.அஞ்சாம் பாவம் வரைக்கும் பார்க்கிறதுக்குள்ள கண்ணை கட்டிருச்சு. ( ஆருக்கு உங்களுக்குத்தேன்)

இந்த மேரி டெக்னிக்கல் பதிவுகள் சாதா வாசகர்களை தள்ளி வச்சுருமோன்னு ஒரு சம்சயம். அதனாலதேன் இந்த மேரி பதிவுகளை போஸ்ட் போன் பண்ணிக்கிட்டே வந்தோம். ஆனாலும் எத்தீனி நாளுக்குத்தேன் சில்லி வேர்களையே சில்லியா டீல் பண்றதுன்னு தேன் தில்லா ட்ராக் மாத்திட்டம்.

சரீ..இ.. இந்த பதிவுகளை ஜாதகம் இல்லாதவுக . படிச்சுட்டு இன்னா பண்றதுன்னு ஒரு கேள்வி வரும். ரெம்ப சிம்பிள்.

இன்னார் -இன்ன பாவத்துலன்னு சொல்ற டெக்னிக்கல் டீட்டெய்லை ஓரக்கண்ல பார்த்துக்கிட்டு 12 ஆப்ஷன்ஸையும் மேஞ்சுக்கிட்டே வாங்க. அதுல எது உங்களுக்கு பச்சக்குன்னு பொருந்துதோ அந்த டெக்னிக்கல் டீட்டெய்லை குறிச்சு வச்சுக்கங்க ( உ.ம்: களத்ராதிபதி லக்னபாவத்துல நின்னா என்ன பலன்ங்கற மேட்டர் சூட் ஆகுதா பார்க்கிறது – இந்த பாய்ண்டை குறிச்சு வச்சுக்கறது ) இதே ரேஞ்சுல போனா ஒரு நாளில்லை ஒரு நாள் உங்க ஜாதகம் ரெடியாயிரும். இமிசை ரெம்ப ஓவரா இருந்தா ஒரு மெயிலை தட்டிவிடுங்க. உரிய பரிகாரம் நச்சுன்னு சொல்லுவம்ல.

இதை விட கில்மா கனவுகள் தொடர் ஜாலியா இருந்திருக்கும்.ஆனால் ஜஸ்ட் வெறும் ராசிய வச்சு இந்தளவுக்கு சொல்றது மோரலி நாட் கரெக்ட். ஏன்னா ஜோதிடப்படி கனவுகளை கெஸ் பண்ண இன்னம் எத்தீனியோ ஃபேக்டர்ஸை கணக்குல எடுத்துக்க வேண்டியிருக்கு.

அப்போ கில்மா கனவுகள் பூட்ட கேஸான்னு பேஜாராவாதிங்க. அதையும் கன்டின்யூ பண்ணி முடிச்சுருவம்ல. இப்ப மேட்டருக்கு போயிருவமா?

களத்ர பாவாதிபதி 6 ல் நின்றால்:
கடன் வாங்க போறச்சயோ, டாக்டரை பார்க்க போனப்பயோ , லாயரை பார்க்க போனப்பயோ உங்க மொதல் சந்திப்பு நடந்திருக்கலாம். ஆரம்பத்துலருந்தே உங்க உறவு பாம்பு கீரியாவே இருக்கும். கண்ணாலத்துக்கு அப்பாறம் அவிக கடன்/ நோய்/வழக்கு தொல்லைகளுக்கு ஆட்படலாம். அல்லது உங்களுக்கு ஏற்படுத்தலாம்.

அவர் சுபரானால்:
சத்ரு ரோக ருண உபாதை சங்கர் பட ரேஞ்சுல ஏற்படும்.

அசுபரானால்:
சத்ரு ரோக ருண உபாதைகள் பேர்லலா இன்னொரு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும்.

களத்ர பாவாதிபதி 7 ல் நின்றால்:
உங்க லக்னாதிபதி உச்சம் பெற்றிருந்தா தப்பிச்சிங்க. இல்லின்னா பல வகையில அவிக கை ஓங்கியிருக்கும். ஒரு வேளை லக்னாதிபதியும் ஆட்சி தான்னா டக் ஆஃப் வார் தான். நீயா நானான்னு முட்டிக்கிட்டே இருப்பிங்க. அவிக இன்ஃப்ளுயன்ஸ் அதிகமா இருக்கும். லக்னாதிபதியோட பலம் அதைவிட குறைவா இருந்தா நாறிருவிங்க.

அவர் சுபரானால்:

“என்னம்மா.. ஆஃபீஸ்ல நிறைய கேம்ப் போக சொல்றாய்ங்க.. டார்ச்சர் அதிகமாயிட்டே வருது பேசாம கால் கடுதாசு கொடுத்துரலாமான்னு பார்க்கிறேன்.”

” வேணாங்க சோதனைகளை அடுத்து சாதனை படைப்பீர்கள்னு ராசிபலன்ல படிச்சேன். கொஞ்ச நாள் பல்லை கடிச்சுக்கிட்டு இருங்க”

அவர் அசுபரானால்:

” என்னங்க .. இன்னைக்கு என் தம்பியோட டேட்டா என் ட்ரி வேலைக்கு டெப்பாசிட் கட்டனும் .மொதல்ல அதை பார்த்துட்டு அப்பாறம் ஆஃபீஸ் போய்க்கோங்க – மறந்து கிறந்து போயிட்டிங்கனா அப்பாறம் ஆஃபீஸ்க்கு ஃபோன் போடுவேன் .பர்மிஷன் போட்டுட்டு வரவேண்டியிருக்கும் ”

களத்ர பாவாதிபதி 8 ல் நின்றால்:
அவிக தப்பிக்க சான்ஸே விடாம துரத்தி துரத்தி மடக்கியிருக்கலாம்.சினிமா கணக்கா தற்கொலை மிரட்டல் கூட விட்டிருக்கலாம்.கண்ணாலத்துக்கு அப்பாறம் அவிக இருட்ல /தனிமையில/ துயரத்துல இருக்க வாய்ப்பு. பிரிவுக்கும் சான்ஸ் இருக்கு. அல்லது கடேசி வரைக்கும் அவிகளுக்கு கடுமையான உடல் உழைப்பு இருந்துக்கிட்டே இருக்கும்.

அவர் சுபரானால்:
உடல் உழைப்பு தவிர மத்த மேட்டருக்கு சான்ஸ் அதிகம்

அவர் அசுபரானால்:
உடல் உழைப்பு இருக்கலாம் .மத்த மேட்டருக்கு சான்ஸ் குறைவு தான்.

களத்ர பாவாதிபதி 9 ல் நின்றால்:

இதர கிரகங்கள் ஒத்துழைத்தால் அப்பா வழி உறவுலயே காதல்/ திருமணத்துக்கு வாய்ப்பு. தூர பிரயாணம் / தீர்த்த யாத்திரை தலத்துல உங்க மொத சந்திப்பு நடக்கலாம். நைனா கணக்கா உங்களை அதட்டி கூட செயல் பட வைப்பாய்ங்க.

அவர் சுபரானால்:
” என்னங்க ..இந்த வருசம் லீஸ் பணம் வந்தா காசி ராமேஸ்வரம் ட்ரிப்பை மறந்துராதிங்க”

அவர் பாபரானால்:
“என்னங்க ஃபிக்ஸடுக்கு என்னாத்த வட்டி வருது? அது மேல கடன் வாங்கி கொடுங்க. நான் அக்கம்பக்கத்துல கொடுத்து வாங்கினா ஒரு வருசத்துல சிங்கப்பூர் போய் வரலாம்”

களத்ர பாவாதிபதி 10 ல் நின்றால்:
டாக்டர் நர்சை கட்டிக்கிறது,மேஸ்திரி சித்தாள கட்டிக்கிறது மாதிரியான அமைப்பு இது . ( சீரியஸ்: உங்க ஆஃபீஸ் கொலிக் மனைவியாகலாம் . அல்லது ஒர்க்கிங் பார்ட்னர் மாதிரி தொழில் உத்யோகத்துல பக்கதுணையா இருப்பாய்ங்க.

அவர் சுபரானால்:
“சரிங்க.. நீங்க சொன்னாப்லயே பேசறேன்” ” சரிங்க.. அவன் சரக்கும் வேணாம் – சங்காத்தமும் வேணாம்னு கச்சிதமா சொல்லிர்ரன்”

அவர் பாபரானால்:

“உங்களுக்கு தெரியாது.. நீங்க சும்மா இருங்க.. நான் பேசிக்கறேன்.. இதுலயெல்லாம் முலாஜா பார்க்கக் கூடாது”

களத்ர பாவாதிபதி 11 ல் நின்றால்:
கண்ணா .. இன்னொரு லட்டு திங்க ஆசையான்னு வாய்ப்பு கதவை தட்டிக்கிட்டே இருக்கும். திறந்தா போலீஸ் வந்துரும் சாக்கிரதை. பைசாவும் வரும். வரதட்சிணை / பொஞ்சாதி சம்பளம். “காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கை கொடுத்தே”ங்கற மாதிரி அவிக கை கொடுக்கும் கையா இருப்பாய்ங்க.

சுபராக இருந்தால்:
” என்னங்க .. நான் வேணம்னா எங்கப்பாவை ஒரு பேச்சு கேட்டுப்பார்க்கட்டா.. ரெண்டு லட்சம்லாம் அவருக்கு ஒரு மேட்டரில்லங்க .. நீங்க வீணா மனசை போட்டு அலட்டிக்காதிங்க”

அசுபராக இருந்தால்:

” நானா எங்கப்பனை கேட்கிறதா ? ஊஹூம்.. பைசா பேராது.. இதைவிட நான் நாண்டுக்கிட்டு சாகலாம்”

களத்ர பாவாதிபதி 12 ல் நின்றால்:

உங்க மேல அவிக இன்ஃப்ளுயன்ஸ் ஜீரோ பர்சன்டேஜா இருக்கலாம். உங்களை பொருத்தவரை அவிக தூங்கப்போற சமயம் மட்டும் ஞா வர்ர ஏர் பில்லோ மாதிரி . அவிகளை நீங்க ஒரு போகப்பொருளா மட்டும் பார்க்க வாய்ப்பிருக்கு.ஆச்சரியம் என்னன்னா அவிகளும் உங்களை அப்படியே நினைக்கவும் சான்ஸ் இருக்கு. இது மாதிரியான லைஃப் இளமையில் ஓகே. ஆனால் போக போக நாட் ஓகே. அவிகனால நிறைய செலவுகள் ஏற்படும். இல்லின்னா முட்டி மோதி பிரியவே வாய்ப்பு அதிகம்.

சுபரானால்:
” என்னம்மா .. கூந்தல மல்லிகை மணக்குது.. முகத்துல ஒரு மினுமினுப்பு தெரியுது.. ”

பாபரானால்:
“என்னா முகம் அழுது வடியுது.. சரி சரி ..வந்து தொலை…

Advertisements

4 thoughts on “காதலி -மனைவி : உங்க டீலிங் எப்பூடி?

  vinoth said:
  February 18, 2012 at 4:29 am

  thala 1 – 5 paavam enga irkku nana padikalayae .. link thareengala ?

  yoghi said:
  February 18, 2012 at 11:08 am

  நமக்கு களத்ர பாவாதிபதி 2ல தான் இருக்கரு ஆனா நெஜத்துல 11 ல இருந்தா நடக்க வேன்டிய பலன்கள் தான் நடந்துகிட்டு இருக்கு ஹ்ம்ம் அதையும் பாப்போம்

   S Murugesan said:
   February 18, 2012 at 1:05 pm

   வாங்க யோகி !
   ரெண்டு தன ஸ்தானம் / 11 லாபஸ்தானம்..அதனாலதேன் இந்த ஒற்றுமை. இதுல வித்யாசம் கண்டுக்கனும்னா ரெம்ப ஈஸி..

   7 க்கு அதிபதி 2 லருந்து ரெகுலர் -ரெவின்யூ -இன் கம் கிடைக்கும். இதுவே அவரு 11 லருந்தா ஒரே தாட்டியா – ஒரு தடவை மட்டும் கேப்பிட்டல் இன் கம் கிடைக்கும்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s