ஜோதிடம் 360 ரெடி!

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஏற்கெனவே ஒரு தேதி அறிவிச்சு அது தவறினதால புஸ்தவம் அச்சாகிற படத்தையெல்லாம் வைக்க வேண்டியதாயிருச்சு. நீங்க பார்க்கிற ஃபோட்டோ நேத்து திங்கள் இரவு 7.30 மணி நிலவரத்தை காட்டுது . இன்னைக்கு மதியம் அ மாலைக்குள்ள மொதல் 100 புஸ்தவமாவது பைண்டிங் முடிச்சு கொடுக்கிறதா சொல்லியிருக்காய்ங்க. முன்பதிவு செய்துக்கிட்டவுகளுக்கு ஒரு நாள் முன்னே பின்னே கூரியர்ல அனுப்பிருவம் .

இன்னொரு மேட்டர் இன்னான்னா 10 கேள்விக்கு பதில்+ புஸ்தவம் ரூ.250 ன்னு அறிவிச்சிருந்தம். முன் பதிவு ஜரூரா நடந்தா கைக்காசு போடாமயே ஹை குவாலிட்டில புஸ்தவம் கொண்டுவரலாம்னு ப்ளான்.ஆனால் பப்பு வேகல்லை.

ஆப்பரேஷன் இந்தியா 2000 தவிர வேறு எந்த விசயத்துக்கும் கைக்காசை இன்வெஸ்ட் பண்றதில்லைன்னு டிசைட் பண்ணியிருக்கமா.. முன்பதிவுல கிடைச்ச காசை மட்டும் வச்சு ” என்ன” பண்ண முடியுமோ அதை மட்டும் செய்திருக்கம்.

யூனிட் காஸ்ட் குறைஞ்சு போனதால கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையான்னு கேட்காமலே முன் பதிவு செய்துக்கிட்டவுகளுக்கு மட்டும் 1+1 அதாவது ரெண்டு பிரதி கூரியர்ல அனுப்பறதா இருக்கம்.

இதுக்கு மேல புஸ்தவத்துக்கு காசு அனுப்பறவுகளுக்கும் 1+1 ஆஃபர் உண்டு. ( ஆயிரம் பிரதி போட்டு வருசக்கணக்கா விக்கிறதுல்லாம் அசிங்கம் வாத்யாரே.. ஆடித்தள்ளுபடி கணக்கா தள்ளி விட்டுரனும்) ஆக அனவுன்ஸ்மென்ட் ஓவர்.

நம்ம சிஸ்டம் ஏகத்துக்கும் கண்ணா மூச்சி காட்டிருச்சா ஜோதிடம் 360 வேலை முடிஞ்சும் 3 நாளா பொளப்பு கேட்டுப்போச்சு ..இன்னைக்கு டபுள் ட்யூட்டி அடிச்சா பென்டிங் ஒர்க் எல்லாம் முடியும் நாளைக்கு வச்சுக்குவம் கச்சேரி.

கில்மா கனவுகள் – யோகங்களின் மறுபக்கம்னு டபுள் தமாக்கா தேன்..

Advertisements

13 thoughts on “ஜோதிடம் 360 ரெடி!

  Sankar Gurusamy said:
  February 14, 2012 at 4:35 am

  திரு முருகேசன், புத்தகம் எப்போது ரெடி ஆகும். நான் இந்த மார்ச் மாசம் கடைசில இப்ப இருக்கர வீட்டை (கல்கத்தா) காலி செஞ்சுட்டு வேற ஊருக்கு மாற்றலாகி போறேன். அதுக்கு முன்னாடி புத்தகம் கிடைக்குமா? நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

   S Murugesan said:
   February 14, 2012 at 8:13 am

   வாங்க சங்கர் !
   அம்மாம் லேட் எல்லாம் ஆகாது ஒரு நாள் ரெண்டு நாள் முன்னே பின்னே ( பிப்.14 க்கு) அனுப்பிருவமில்லை.

  Thiru said:
  February 14, 2012 at 6:41 am

  நான் ஏற்கனவே ஜோதிடம் உங்களிடம் பார்த்துவிட்டேன், எனக்கு புத்தகம் மட்டும் வேண்டும்

   S Murugesan said:
   February 14, 2012 at 8:13 am

   வாங்க திரு !
   ரூ.150 + கூரியர் சார்ஜ் அனுப்பி 1+1 பிரதிகள் பெறலாம்.

  Mani said:
  February 14, 2012 at 7:24 am

  அய்யா ராசா!

  துட்டு அனுப்புனவங்களுக்கு மொதல்ல தள்ளி விடுங்க.

   S Murugesan said:
   February 14, 2012 at 8:12 am

   மணி அண்ணே !
   ஜா.ரா வை பத்தி ஒரு அத்யாயமே இருக்கிறதால முதல் பிரதி ஜா.ராவுக்கு ( லீகல் நோட்டீஸ் கொடுக்க வசதியா இருக்கும்ல) ரெண்டாவது பிரதியும் சேலம் தான். அது ஆருக்குன்னா ஆயிரம் பேரு புரட்டிரனும். அப்படி ஒரு சென்டருக்கு..

   துட்டு அனுப்பினவுகளுக்கு ? விலாசம் எழுதி கவர் எல்லாம் ரெடி. புஸ்தவத்தை உள்ளாற போட்டு ஒட்டி கூரியர்ல புக் பண்ண வேண்டியதுதேன்.

  வெங்கடேசன் said:
  February 15, 2012 at 2:34 am

  வணக்கம்,
  எனக்கு புத்தகம் மட்டுமே வேண்டும்.சென்னைக்கு அனுப்ப கொரியர் சார்ஜுடன் எவ்வளவு தொகை அனுப்பவேண்டும்?
  M.O செய்யவேண்டிய முகவரி என்ன?

   S Murugesan said:
   February 15, 2012 at 4:49 am

   வெங்கடேசன் !
   புத்தகம் மட்டும் பெற 150+25 அனுப்பனும் . ( ரெண்டு பிரதி அனுப்புவம் – ஒரு பிரதி அனுப்ப முடியாது)
   எம்.ஓ அனுப்பவேண்டிய முகவரி:
   17-201,கும்மரா தெரு,சித்தூர் ஆ.பி 517001

  நடராஜன் குமார் said:
  February 16, 2012 at 2:36 pm

  வணக்கம்,

  தங்கள் புத்தகம் “ஜோதிடம் 360” இரண்டு பிரதிகள் சென்னையில் பெருவதற்க்கு ரூ. 340/- அனுப்ப வேண்டுமா என்பதைத் தயவு செய்து குறிப்பிடவும்/தெரிவிக்கவும். நன்றி

   S Murugesan said:
   February 16, 2012 at 4:13 pm

   நடராஜன் .குமார் ..!
   10 கேள்விகளுக்கு பதில் வேணம்னா ரூ.250+25 , பதில் வேணாம்னா ரூ.150 + 25

  Mani said:
  February 17, 2012 at 3:59 am

  அண்ணே..

  சுந்தரேசன் அண்ணாச்சிய பதிவு போட சொல்லலாம்ல. நீங்களும் எழுத மாட்டேங்கிறீங்க. எழுத துடிச்சிக்கிட்டு இருக்குறவரையும் வேண்டாம்ன்றீங்க. பழைய படம் ஓடுற சினிமா தியேட்டர் மாதிரி ப்ளாக் அண்ட் ஒயிட்டாவே இருக்குண்ணே.

  சுந்தரேசன் அண்ணாச்சிய நான் கேட்டேன்னு சொல்லுங்கண்ணே.

  lordarul said:
  February 18, 2012 at 6:04 pm

  Sir,
  I have transferred the amount quit long time back but still I didn’t get the books. Could you please check it out.

   S Murugesan said:
   February 19, 2012 at 5:21 am

   அய்யா,
   எல்லா வேலையும் ஞாயிற்றுக்கிழமைதான் முடிஞ்சது. திங்களன்று கூரியர்ல புக் பண்ணப்போறோம். கிடைக் ………….. கும் . நிச்சயமா கிடைக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s