சரியான எழுத்துக்கு அடையாளம்

Posted on

சரியான எழுத்துக்கு அடையாளம் – தன்னை தாண்டி சிந்திக்க வைப்பதே. இதை நான் இந்த நடையில் எழுத காரணம் .. சரியாகவே ஊகித்துவிட்டீர்கள் சரியான எழுத்தை படித்தேன்.

எழுத்து நடை என்பது அழகிப்போட்டியில் கேட் வாக் போன்றது . என்னதான் கேட் வாக் கற்றாலும் – குரூபி உலக அழகி ஆக முடியாது. என் நடை ஆரம்பத்தில் எப்படியிருந்தது . போக போக எப்படி மாறியது என்பதை கவனித்தால் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.

இன்றும் நான் என் நடையை மாற்றிக்கொண்டதில் எனக்கு வருத்தமில்லை. அதை விமர்சிப்பவர்கள் “ஒரு நடைக்கு” பழக்கப்பட்டு போனவர்கள் .. சற்றே தடுமாறுகிறார்கள் அவ்வளவே.

அவர்களை அடியொற்றி எழுத வந்த நானாவித வர்ணத்தாரும் அதே நடையை பின்பற்றினர்.

நடையை பின்பற்றினால் பரவாயில்லை. விஷயங்களையும் அவர்களது பார்வையையும் பின்பற்றியதுதான் சோகம். மாமா ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார் மாமி காபியை கொண்டு வந்து லொட்டென்று வைத்தாள் பாணி கதைகள் படித்து ரொம்பவே உ.வ பட்டவன் தான் நானும்.

ஆனால் காலப்போக்கில் என் தவறை திருத்திக்கொண்டேன். நம் விஷயங்களை எழுதவேண்டும் – நம் நடையில் எழுதவேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட்டது ( நம் -பிராமணரல்லாதோர்)

எவனோ லண்டனில் நடத்திய பேப்பரை பார்த்து இங்கே அவாள் ஒரு பேப்பர் வைக்க -அதைப்பார்த்து நம்மவர் பேப்பர் வைக்க கொடுமை போங்க. முன்னெல்லாம் பக்கோடா மடித்து வந்த ஒற்றைகாகிதத்தை கூட அது எந்த இதழுக்கு சொந்தமானது என்று சொல்லிவிடுவேன்.

நேற்று குமுதம் -குங்குமம் இரண்டையும் புரட்டிவிட்டு சிண்டை பிய்த்துக்கொண்டேன். ஜஸ்ட் ஜெராக்ஸ். என்ன ஒரு ஆறுதல் என்றால் கலர் ஜெராக்ஸ்.

இந்த உலகம் இதுவரை தன்னை முன்னோக்கி உந்தும் பேச்சுக்கும் எழுத்துக்கும் இரண்டாவது இடத்தை தான் தந்திருக்கிறது.( ஓரிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்) . மேலும் இந்த வகை பேச்சும் எழுத்தும் ஒரு சிறுவட்டத்தில் சிக்கிவிடுகின்றன.

உடலளவில் வாழ்வோருக்கு அந்த சிறுவட்டமே பிரபஞ்சமாகிவிடுகிறது . நான் உயிரளவில் உயிர்ப்போடு வாழ துடிக்கிறேன். மக்கள் தாகம் தீர்க்க விரைந்தோடி வரும் நதியை போல் ..

ஆகாய கங்கை போல் – சரஸ்வதி நதியை போல் எட்டாது பாய என் தாய்மனம் இடம் கொடுக்கவில்லை. வான் மழை போல் இறங்கி வருகிறேன்.

உலகில் முன்னோடிகள் பட்ட பாட்டோடு ஒப்பிட்டால் “ஒளுங்கான தமிழ்ல எழுது” மாதிரி விமர்சனங்கள் ஜுஜுபி.

இந்த அவாஸ்தும் – விண்டோசும் முட்டிக்கொண்டதில் சிஸ்டம் தமிழக சட்டமன்றம் மாதிரி ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்டில் தனியே நிற்பவனை கேள்வி கேட்காது போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்செல்வதை போல இந்த அவாஸ்த் விண்டோஸ் எக்செல் ஃபைலை எல்லாம் – அழகி உட்ப்ட சான்ட் பாக்ஸில் போட்டு தொலைக்க வேலை கெட்டு பயங்கர கடுப்பு. ஆன்டிவைரஸ் இல்லாவிட்டால் சிஸ்டம் நன்றாகவே வேலை செய்கிறது . ஆனால்அது பெரியார் இல்லாத தமிழ் நாடு போல ஆகிவிடும் . அதனால் தான் விடாப்பிடியாக முட்டி மோதிக்கொண்டிருக்கிறேன்.

Advertisements

6 thoughts on “சரியான எழுத்துக்கு அடையாளம்

  suntaresan said:
  February 12, 2012 at 8:02 pm

  ஐயா,

  தங்கள் எழுத்து நடை விட தங்கள் விளக்கம் ஆராய்சி அருமை. உடனுக்குடன் கேள்விக்கு பதில் தரும் பொறுப்பு, வயது வித்தியாசம் இல்லாமல் மாண்பு காட்டும் தன்மை என்னக்குள் உங்களை பற்றி ஒரு உயர்வான எண்ணம் எற்படுத்தி உள்ளது. தங்கள் தொழில் பற்றி கூட கவலைபடாமல் பெரியார் பற்றி கூறி நம்பியவருக்கு சரியான பாதை காட்டியது பற்றி ஒப்பிட்டு கூற வார்த்தை இல்லை. என்னை போல் பல மனிதருக்கு ஆன்மிக குருவாக வழிகாடும் சேவை தொடர எனது மனம், சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  suntaresan said:
  February 13, 2012 at 1:56 am

  அண்ணே!

  உங்களுக்கு சனி புக்தி முடிந்து விட்டது. புதன் புத்தி ஆரம்பித்து விட்டது. அதனால் ஜோதிட புத்தகத்தை ஈரம் காய்வதற்குள் வெளியிட ஆரம்பியுங்கள். எப்பூடி.

  வர்ட்டா…

  suntaresan said:
  February 13, 2012 at 2:05 am

  அய்யா…

  உங்களுக்கு புதன் புத்தி ஆரம்பித்து விட்டதாமே? 

  அப்புறம் ஏன் தயக்கம்!

  எழுத்துக்களை கல்வெட்டில் பதிக்க ஆரம்பியுங்கள்.

  14.2.2012 புத்தகம் வெளியிடும் நாள்

  பிறவி எண் புதனின் ஆதிக்கத்தில்.
  விதி எண் குருவின் ஆதிக்கத்தில்.

  உங்களுக்கு நடப்பு புத்தி நாதன் புதன்.

  நாளை எதிர்பார்க்கலாம்தானே?

   S Murugesan said:
   February 13, 2012 at 11:20 pm

   19/Oct/2012 முதல் புத புக்தி ஆரம்பம். நமக்கு புத புக்தி ஆரம்பிக்கிறதுல உமக்கு என்ன அப்படி ஒரு அக்கறை?

   அட புதன் அலிகிரகம். அதனால லுல்லா கட் ஆயிரும்னு ஆசையோ?

   ஆசை தோசை அப்பளம் வடை.. 19/Apr/2009 ல செவ் தசை ஆரம்பமாயிருச்சா.. அவருதான் கமாண்டர் ஆஃப் தி ப்ளேனட்ஸா..

   ஒரு மண்ணும் நடக்காது. உம்ம ஆசை நிறைவேறாது..

   வேற வேலை எதுனா இருந்தா பாருங்க

  விமலாதித்தன் said:
  February 13, 2012 at 2:14 am

  அய்யா…

  உங்கள் எழுத்து நடை மட்டுமல்ல, நீங்களும் இந்த அளவுக்கு மாறியிருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் திரு.சுந்தரேசன் ஐயா தான். அவர் அவதரிக்கவில்லை என்றால் நீங்கள் இன்னும் கிணற்றுத்தவளையாகத்தான் இருந்திருப்பீர்கள். நானும் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  நீங்களும் சொல்லுங்கள் அய்யா.

  யப்பா சுந்தரேசா.. ரொம்ப நன்றிப்பா. 🙂

  சுந்தரேசன் said:
  February 13, 2012 at 8:24 am

  ஐயா!

  என் பெயரில் யாரோ சி(ப)ல விஷமிகள் மறுமொழி இட்டுள்ளார்கள்.

  இவ்வளவு நாளாக மற்றவர்கள் பெயரில் இட்டு வந்தார்கள். இப்பொழுது என் பெயரை பயன்படுத்தியுள்ளனர். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பார் என்பார்களே அது இது தானோ?

  நான் ஜோதிட ரகசியங்களை அப்படியே வெளிச்சம் போட்டு எழுதி வருவதால் பலருக்கு நவத்துவாரத்திலும் புகை வருவதாக தாங்கள் ஏற்கனவே எனக்கு மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் அவர்கள் இப்பொழுதுஎன் பெயருக்கு களங்கம் விளைவித்து நான் ஜோதிட ரகசியங்களை வெளியிட முடியாதவாறு தடைக்கற்களை செதுக்கி செதுக்கி போடுவது போல் உள்ளது.

  தயவுசெய்து தாங்கள் மறுமொழிகளை அப்ரூவ் செய்யும் பொழுது தங்களுடைய கண்களில் ஒரு துளி விளக்கெண்ணையோ அல்லது மண்ணெண்னையோ விட்டு அலம்பிய பிறகு வெளியிடுங்களேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s