வறுமை ஒழிய பெரியாரை (ப)புடிங்க !

Posted on

அண்ணே வணக்கம்ணே ! என்னடா இது சோசிய புஸ்தவ அட்டையில பெரியாரை போட்டிருக்குன்னு கன்ஃப்யூஸ் ஆனவுகளுக்கு காம்ப்ளான் கொடுத்து ஒரு பதிவை போட்டிருந்தேன். நம்ம ஜோதிடம் 360 அட்டையில பெரியார் படத்தை போட்டதுக்கு கான்க்ரீட் காரணம் இருக்கு வாத்யாரே..

வறுமை நிலைக்கு குரு சனி /குரு ராகு /குரு கேது சேர்க்கை முக்கிய காரணம். (குரு தனகாரகராச்சே) இதுமட்டுமில்லிங்ணா மேற்படி கிரக சேர்க்கை உள்ள ஜாதகர்களுக்கு இதயம்,வயிறு பாதிக்கலாம். திருமணம் தாமதமாகலாம். விவாகரத்துல முடியலாம். குழந்தை பிறப்புல கூட பிரச்சினைகள் வரலாம்.

ஒரு ஜோதிடனாக குருஸ்தானத்தில் உள்ள நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனாலும் தங்கள் நலம் நாடி கூறுகிறேன் இன்று முதல் கோவில் குளம், தெய்வம், தெய்வ நம்பிக்கை இத்யாதியை மறந்துவிடுங்கள் . உங்கள் ஜாதகப்படி அந்த கடவுள் தங்களுக்கு கொடுத்துள்ள சாய்ஸ் 2
அதில் ஒன்று தெய்வ நம்பிக்கையுடன் பணரீதியில் நிறைய கஷ்டப்படுவது. திருமணம், கணவர் ,வாரிசுகள் விசயத்தில் நிராசைப்படுவது
இரண்டாவது சாய்ஸ்: நாத்திக வாதியாக ஓரளவேனும் நிம்மதியாக வாழ்வது. இதில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை செய்யவும்.
பழக்கத்தை விடமுடியாதுன்னா பெரியாரையே தெய்வமா வணங்குங்க. அவரோட கடவுள்மறுப்பு கொள்கைகளை வேதமா நினைச்சுப்படிங்க.

ப்ராக்டிக்கலா ரோசிச்சாலும் ஆஸ்திகரா இருந்தா பூசை,புனஸ்காரம், கோவில், குளம் , அபிசேகம் அர்ச்சனைன்னு ஏகப்பட்ட செலவிருக்கு. அதுலயும் இந்துக்களுக்கு வருசம் பூரா பண்டிகை. தண்ணி வராதுன்னு தெரிஞ்ச பிற்காடும் கிணறு தோண்டுவானேன்? மாத்தி யோசிங்ணா..

ஜோதிடம் 360 அனுபவங்கள்:

நம்ம ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கான மேட்டரை நம்ம சைட்ல இருந்து எடுத்து எடிட் பண்ணும் போதுதேன் பதிவு எழுதும்போது இன்னம் கொஞ்சம் பொறுப்பா எழுதனும்னு உறைச்சதுண்ணே. அதுகளை கழிக்கிறது ஒரு வேலைன்னா சேகரிச்சதை Sort Out பண்றது மலையாயிருச்சு. Sort Out பண்ணதை கோர்க்க ஒரு சரடை முடிவு பண்றது மாமலையாயிருச்சு.

எப்படியோ பெரிய்ய கண்டத்துலருந்து தப்பிச்சுட்டதாதான் நினைக்கிறேன். காசு போட்ட வாங்கினவுக என்ன சொல்றாய்ங்கன்னு பார்க்கோனம். உங்கள்ள ஆருக்காச்சும் எதிர்காலத்துல புஸ்தவம் போடற எண்ணமிருந்தா கீழ் காணும் எளிய விதியை ஃபாலோ பண்ணுங்க. தப்பிக்கலாம்.

நம்ம பதிவுகளில் ஒன்னை அது எழுதப்பட்ட காலத்துக்கு அப்பாறம் படிச்சா அது ஒரு நெடுந்தொடரோட அத்யாயமா இருக்கனுமே தவிர தினசரி செய்தி பத்திரிக்கை காரியாலயத்து ஃபைல்ல இருந்து பிடுங்கப்பட்ட நியூஸ் பேப்பரோட பக்கமா இருக்கப்படாது.

எப்படியோ நமக்குன்னு ஒரு லைன் அப் – லட்சியம் இருந்ததாலயும் – இந்த 45 வயசுக்கு எதை சொன்னாலும் பன்னா பன்னான்னு மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டிருக்கிறதாலயும் தப்பிச்சம். மத்தவுக நிலை எப்படியோ?

ஜோதிடம் 360 க்கு ஃபினிஷிங் டச் கொடுத்தது பெரிய கூத்துங்ணா. அது கெடக்கு களுதை.புஸ்தவம் எங்க கைக்கு வரட்டும். கிளிச்சிர்ரம். இப்பம் மேட்டருக்கு வாப்பான்னு அலுத்துக்கறிங்க .புரியுது..புரியுது.

இன்னைக்கு எழுதியிருக்க வேண்டிய பதிவோட தலைப்பு ” கில்மா கனவுகள்:கன்னி துலாம் ” இது நாளைக்கு வெளிவரும்.. ப்ளீஸ் வெய்ட் !

அதுவரை நீங்க மிஸ் பண்ண பதிவுகளை படிச்சுருங்க (மிஸ் பண்ணியிருந்தா)

கில்மா கனவுகள் : ரிஷபம் ,மிதுனம்
http://anubavajothidam.blogspot.in/2012/02/blog-post.html

கில்மா கனவுகள் – கடக,சிம்மம்
http://anubavajothidam.blogspot.in/2012/02/blog-post_01.html

மிஸ்டர் விஜய்காந்த் ! டேக் கேர் ..
http://anubavajothidam.blogspot.in/2012/02/blog-post_02.html

ஜோதிடபுத்தக அட்டையில் பெரியார்
http://anubavajothidam.blogspot.in/2012/02/blog-post_04.html

Advertisements

8 thoughts on “வறுமை ஒழிய பெரியாரை (ப)புடிங்க !

  விமலாதித்தன் said:
  February 7, 2012 at 6:39 pm

  ஐயா,

  குரு, ராகு சேர்க்கை குரு சண்டல யோகம் என்றும் அப்படி அமைப்பு பெற்றவர்கள் விதவை மறுமணம் செய்தல் பரிகார நிவர்த்தி கிட்டும் என்பது உண்மை யா?

  என் ஜாதக கணிப்பில் 7 மிடம் குரு, ராகு, சனி சேர்க்கைக்கு மனைவி குரு, ராகு, சனி பரிகாரம் செய்தல் தீவினை குறைம் என்று கூறினீர்கள். 1 – 7 கேது, ராகு அமைப்புக்கு துர்க்கை, கணபதி வழிபாடு வேண்டும் என்று கூறினீர்கள், மற்றும் கிரக காரகத்துவ வழிபாடு பற்றியும் கூறினீர்கள்.

   S Murugesan said:
   February 8, 2012 at 2:22 am

   ஐயா,
   ஆராய்ச்சி தொடரும் போது முடிவுகளில் லேசான மாற்றம் ஏற்படுவது சகஜம். ஜேஜிங்களை விட்டுட்டு பெரியாருக்கு ஜே போடுங்க. குரு என்றால்கங்கணம் (கல்யாணம்) ராகு என்றால் விதவை. இதனால் இப்படி ஒரு ரூட்டை போட்டு கொடுத்திருப்பாய்ங்க.அதுக்கு ராகுவாச்சும் நல்ல இடத்துல இருக்கனும்ல. 1-7 ;ல் ராகு கேது நல்லதில்லையே..

  விமலாதித்தன் said:
  February 8, 2012 at 6:18 am

  ஐயா,

  சரி, கடவுள் வேண்டம் (குல தெய்வ வழிபாடு உட்பட). தனிமனித ஒழுக்கம், ஜோதிட நம்பிக்கை, பெயோர் மீது மரியாதை, தியானம், யோகா, விவேகனந்தர் போன்ற முற்போக்கு சந்நியாசி வழி நடத்தல் போன்றவை களாவது கடைபிடிக்கலாமா? குடும்ப உறுபினர்கள் கடவுள் நம்பிக்கையுடன் இறுக்க அனுமதிக்கலாம? ஒரு மனிதன் வாழ்கை முழுவதும் பல்வேறு காலகட்டாதில் பங்கு பொறும் சாஸ்திர முறைகள் தவிர்க்க வேண்டுமா?

   S Murugesan said:
   February 8, 2012 at 11:42 am

   ஐயா,
   மனிதனை மையமாக கொள்ளும்போது ஆன்மீகம் -நாத்திகம் ரெண்டும் உயர்வானவையே. அஹம் ப்ரம்ஹஸ்மின்னா என்ன? கடவுள் இல்லைன்னு உணர்ரதுதான். ஜோதிட நம்பிக்கையில ரெண்டிருக்கு. ச்சொம்மா அவுட்லைன் தெரிஞ்சுக்கிட்டு அலார்ட் ஆயிர்ரது ( ஒன் டைம்) : இது ஓகே. தொட்டதுக்கெல்லாம் சோசியரை தேடறது நாட் ஓகே.அடுத்தவுக திருப்திக்காக நீங்க கோவிலே கட்டினாலும் நோ ப்ராப்ளம். (பெரியார் கோவில் தர்மகர்த்தாவா இருந்தா உற்சவம்லாம் நடத்தியிருக்காரு தெரியுமோ) .கடவுளை மறுக்க சொன்னது – இன்னைக்கு செலாவணியில இருக்கிற கடவுளைத்தேன். உங்களுக்குள்ள இருக்கிற கடவுளை அல்ல. உ.இ.கடவுளுக்கு சக மனிதர்களின் நலம் – திருப்தியே முக்கியம் .

  விமலாதித்தன் said:
  February 8, 2012 at 7:15 pm

  ஐயா,

  தங்கள் முன் வைக்கும் வாதம் சரி என்றாலும். கடவுள் பெயாரால் எர்படும் பயம் கூடா மனிதனை சரியான பாதைல் அழைத்து சென்று இருகிறது. ஹே ராம் என்று ராமஜெபம் செய்து அகிம்சை வழிகாடிய காந்தியாடிகள் கருத்து இன்று அவருடை இயக்கத்தால் பூறக்கணிக்கப்படுள்ளது. தெய்வ நம்பிக்கை மறுப்பு தலைவர் பெரியாரை அவருடை இயக்கமும் சாராய வியாபாரம் தழைக்க வழி செய்துள்ளது. கடவுள் ஒருவரே என்ற இஸ்லாமிய மக்கள் இந்திய தவிர பிற நாடுகளில் நிலை என்ன? கடவுள் நம்பிக்கை மட்டும் ஒருவனை உயார்த்திவிடாது. பிறார்தானை மனித மனதின் ஒருமைபாடு. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் கூறிய கருத்து மிக தெளிவனது. கண்ணதாசனும் ஒரு சமயத்தில் கடவுள் மறுபாளர். அன்னை தாராசா கடவுள் நம்பிக்கையை கைவிடு சேவை செய்யவில்லை. அரவிந்தர் நட்டுபணி துறந்து ஆன்மிக பணில் இடுபட்டார். புத்த மதம் இந்தியாவில் மறைந்து வருகிறது. சீனா, ஜப்பானில் தளைத்து உள்ளது. ஸ்ரீலங்காவில் நிலை வேறு. திபேத்தில் நிலை வேறு. கடவுள் அறிதலும் மறுப்பதும் கூட அனுபவமே

   S Murugesan said:
   February 9, 2012 at 4:08 am

   //கடவுள் அறிதலும் மறுப்பதும் கூட அனுபவமே// இது உங்க கருத்து நம்ம “சுண்டு”வோட கருத்தும் இதாத்தான் இருக்கும்.

   (சில ஜென்மங்களுக்கு வேலை வெட்டி இல்லை – பொஞ்சாதி கடுகு டப்பாவுல பத்து இருவது வச்சிருந்தா ஆட்டைய போட்டு ப்ரவுசிங்..

   கொய்யால சித்தூர் வந்து பொயச்சிக்கிறேன்னா நான் ஸ்பான்ஸர் பண்றேன். ( ஆனா கெட்டபய ஊரு இது.. வா.சூ சாக்கிரதையா வச்சுக்கனும்) )

   கடவுளை அறிதலும் – மறுத்தலும் ஒரு யோக்கியனுக்கு சாத்தியப்பட்டால் வித்யாசம் பூஜ்ஜியம்..ரெண்டுமே ஒட்டு மொத்த மனித குல /புல்,பூண்டு சகல உயிரினத்துகாகவும் உயிர்வாழ்தல் தந்த பரிசாகவே இருக்கும்.

  விமலாதித்தன் said:
  February 9, 2012 at 6:47 am

  ஐயா,

  ஜோதிடரீதியாக விளக்கம் தர வேண்டுகிறேன். கிரககரகதுவதில் சுக்கிரன் பலமாக இருந்தால். ப்டோபமான வாழ்கை வேண்டாம் எளிமை வேண்டும் என்பது உங்கள் பரிகாரம். குருவிற்கு தங்கம் வேண்டாம், சனிக்கு சுத்தம் வேண்டாம், புதனுக்கு வாக்கு வேண்டாம், கிரக சேற்கைக்கு தெய்வமே வேண்டாமா? இதானால் கிரககரகதுவை பாதிக்காத. தங்கள் பழைய பதிப்பில் கிரககரகதுவம் கேட்ட பலன் பாதிபை ஓரளவுக்கு குறைக்கும் என்பது?

   S Murugesan said:
   February 9, 2012 at 12:50 pm

   பாஸ்!
   எந்த கிரகம் சரியில்லையோ அதனோட காரகத்வத்தை விட்டுர்ரது – லோ ஓல்ட்டேஜ் சமயம் மோட்டரை நிறுத்திர்ர மாதிரி – இந்த பெரியார் மேட்டர் – டோட்டல் லைன் ஃபால்ட் -ட்ரான்ஸ்ஃபாரம் எரிந்து போன நேரத்துல சோலார் பவரை யூஸ் பண்ற மாதிரி ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s