கில்மா கனவுகள்: முன்னோட்டம் 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு கில்மா கனவுகள் :முன்னோட்டம் 2 பதிவு போட்டிருக்கேன். நீங்க இந்த வலைதளத்தை மட்டும் பார்க்கிற பார்ட்டியா இருந்தா கீழ் காணும் பதிவுகளை மிஸ் பண்ணியிருப்பிங்க. உங்களுக்காக அவற்றின் சுட்டிகள் கீழே :

1.சுபர் அசுபர் : 6 வித்யாசம்
http://anubavajothidam.blogspot.com/2012/01/6.html

2.அம்மனின் வாகனம் ஆடு
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_23.html

3.அவன் அவள் அது 22
http://anubavajothidam.blogspot.com/2012/01/22.html

4.சர்ருன்னு ஏறனுமா?
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_26.html

5.உங்க லைஃப் பத்திக்கிச்சா? ஊத்திக்கிச்சா?
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_2354.html

6.அடுத்த பிரதமர் யாரு? : பகீர் முடிவுகள்
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_27.html

இப்பம் கில்மா கனவுகள் :முன்னோட்டம் 2

உங்கள் ராசியும் – கில்மா கனவுகளும்

அண்ணே வணக்கம்ணே !

இதே தலைப்பை வச்சு சுக்லாம் பரதரம் சொல்லி மாமாங்கமாச்சு. இன்னைக்கும் மொக்கைதான் போல.
நமக்கு ஊசிக்காது அளவு இடமிருந்தா ஒட்டகத்தை நுழைச்சுருவம்.ஆனால் மைண்ட் இன்னமும் கொஞ்சம் மச மசன்னு தான் இருக்கு.

கனவுன்னா கலாம் சொல்ற கனவு வேற . நாம சொல்லப்போற கனவு வேற. கலாம் சொல்றது பகல் கனவு. நாம சொல்றது ராக்கனவு. தமிழ் சினிமால வர்ர கனவெல்லாம் கனவுல சேர்த்தியில்லை. அது தயாரிப்பாளரின் கொழுப்பை பொருத்த விஷயம்.

மன்சங்களுக்கு கனவு வர்ரது சகஜம். (மிருகங்கள் கூட கனவு காண்றதா சொல்றாய்ங்க) கனவுகள்ளயும் கில்மா கனவுகள் தான் இந்த தொடர்பதிவுக்கு நாட்.

கில்மா கனவுங்கறது சகஜத்துலயும் சகஜம். காந்தி தாத்தா ஆனபிற்காடு கூட ” கனவுகளில் நான் யோக்கியன் அல்ல”ன்னு சொல்லியிருக்காரு. எல்லா மேட்டர்லயும் அப்டேட் பண்ணிக்கிட்டே வந்த தாத்தா இந்த கில்மா மேட்டர்ல மட்டும் ஏன் இப்படி “மடிசஞ்சியா ” இருந்துட்டாருன்னு இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.

அதுசரி ..ஜாதகப்படி ராசிப்படி கில்மா கனவும் மாறுமா அப்டின்னு கேப்பிக. ஒரு வார இதழ்ல ஜஸ்ட் வெறும் ராசிப்படி வீட்டுக்கான் ப்ளூ ப்ரிண்டே அடிச்சு கொடுத்திருக்காய்ங்க ஆனால் நாம இந்த தொடர்ல ஓவராலா ஜாதகம் – 12 பாவங்கள் – 9கிரகங்களையும் அனலைஸ் பண்ணப்போறோம்.

கனவுங்கறது மனசோட லீலை . ( மனசுன்னா என்ன ? உங்க நினைவுகளின் தொகுப்பு – நினைவுகள்னா என்ன பாஸ்ட் .. ஐ மீன் உங்கக கடந்த காலம் – கடந்த காலம்னா அது உங்க முன் ஜென்ம நினைவுகளா கூட இருக்கலாம் )

சந்திரன் தான் மனோகாரகன். சந்திரன் நின்ற ராசிதான் நம்ம ஜன்ம ராசி. ராசிப்படி வீடு அமைஞ்சுரும்னு ஜல்லியடிக்கிறாய்ங்க. நம்பறிங்க. ஆஃப்டர் ஆல் கனவு ..அதுவும் மனதின் லீலையான கனவு ராசிப்படி வரும்னா கேள்வி கேட்கறிங்க.. இது என்னண்ணே நியாயம்? அதுலயும் ஏற்கெனவே சொன்னபடி உங்க ஜாதகம் – 12 பாவம் – 9 கிரகங்களையும் அலசப்போறோம்ல .

கனவுக்கு அடிப்படையே செக்ஸுங்கறது சிக்மன் ஃப்ராய்ட் ஸ்டாண்ட். கனவுங்கறதே உங்க கடந்த பிறவிகளோட எச்சம்ங்கறது அவரோட சீடப்பிள்ளையோட வாதம்.எது எப்படியிருந்தாலும் கனவு வருது. அதுலயும் கில்மா கனவு கட்டாயம் வருது.

அதுலயும் கில்மாவை பற்றிய கருத்து பரிமாற்றத்துக்கு வாய்ப்பில்லாதவுகளுக்கு – கட்டாயத்திலும் கட்டாயமா வருது.

இந்த கனவு ராசிக்கு ராசி வேறுபடுமா? நிச்சயம் வேறுபடும். கனவு மனதின் லீலை. மனம் நம் நினைவுகளின் தொகுப்பு. நினைவுகளுக்கு மூலம் நம் அனுபவங்கள். அனுபவங்கள் வேறுபடும் போது நினைவுகள் – மனம் -கனவுகள் எல்லாமே வேறுபடும் இல்லியா?

இப்பம் முதற்கட்டமாக துவாதச ராசியினரின் கில்மா கனவுகளை பார்ப்போம். ( படிப்படியா ஜாதகங்களை பொறுத்தும் கனவுகளை பார்ப்போம்)

கெட்ட மேட்டரா இருந்தாலும் அதை நல்ல மேட்டருக்கு செய்யுபோது கெட்ட மேட்டரும் நல்ல மேட்டர் ஆயிருது. ஆகவே இந்த கில்மா கனவுகளை படிக்கும் அன்பர்கள் ( கவனிக்க: வம்பர்கள் அல்ல) கு.பட்சம் வேறு பெயரிலாவது தங்கள் ராசிக்கு குறிப்பிட்ட கனவுகள் தங்களுக்கு வருதா இல்லையான்னு சொல்லலாம். (எப்படியும் நம்ம அனுபவஜோதிடம் டாட் காம் தாளி போலி கமெண்டுகளுக்கு பேர் போனதாயிருச்சு.)

ஓகேவா ..உடுங்க ஜூட்..

எச்சரிக்கை 1: கனவுங்கறதே ஒரு ரிகர்சல் மாதிரி தான். வாய்ப்பு கிடைக்கும் போது கனவை நனவாக்கிக்க ட்ரை பண்ணாதவுக ஆரும் கடியாது.அதனால நம்ம மாதிரி தில்லு துரைகளுக்கு இந்த கனவுகள் நனவும் ஆகியிருக்கலாம்.

ஒரு துணிகர தொடருக்கு நான் ரெடி .. நீங்க ரெடியா?

Advertisements