சூரியன்

Posted on

அண்ணே வணக்கம்ணே..

நேத்து எந்த ப்ளேனட் சரியில்லினா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு லிஸ்டை கொடுத்திருந்தேன்.. இதுக்கான காரண காரியங்களை நாளுக்கு தரேன்னு வாயிதா வாங்கியிருந்தேன். நேற்றைய பதிவை மிஸ் பண்ணவுக வசதிக்காக அந்த பட்டியல் மறுபடியும் இங்கே கொடுத்து கா.கா விளக்க ட்ரை பண்றேன்.ட்ட்.

1.சூரியன்:

சூரியன்,சூரிய நாராயணன்,காயத்ரி (நான் படிச்ச புஸ்தவங்கள்ள சிவன்)

விளக்கம்:
ஜாதகத்துல சூரிய பலம் இல்லேன்னா கால்ஷியம் குறை பாட்டால் வரக்கூடிய வியாதிகள் வரும். இதனால பல்,தலை,எலும்பு ,முதுகெலும்பு எல்லாமே பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு.மேலும் ஜாதகர் இன்சோம்னியாவால் அவதி படுவார்(தூக்கமின்மை) .மறு நாள் ஜாய்ண்ட் பெய்ன்ஸ்,கண் எரிச்சல், சிடுசிடுப்பு,கடுகடுப்பு எல்லாம் இருக்கும். அப்பாவோட மிஸ் கம்யூனிகேஷன்ஸ் இருக்கும். ( பத்து மணி வரைக்கும் தூங்கிக்கிட்டு இருந்தா ராத்திரி பாருக்கு போய் சரக்கடிச்சுட்டு வந்து படுத்த அப்பனுக்கு கூட பைல்ஸ் கணக்கா எரியும்ல)

இவிகளை சூரியனை வழிபட சொல்றோம்.சூரிய வழிபாடுன்னா சூரிய நமஸ்காரம். இதை விடியல்ல தான் செய்யனும். ரா முச்சூடும் தூங்கலின்னாலும் காலங்கார்த்தாலை எந்திரிச்சு முறைப்படி சூரிய நமஸ்காரம் செய்தா மறுபடி தூங்க முடியாது. மதியம் கொஞ்சம் கண்ணசர்ந்தா மேட்டர் ஓகே.

இதை இப்படியே கன்டின்யூ பண்ணா மேற்சொன்ன உபாதைகள் நாளடைவில் குறைஞ்சு கிட்டே வரும். மேலும் சூரிய ஒளியில விட்டமின் டி, விட்டமின் ஈ எல்லாம் இருக்காம். (போனஸ்).

சூரியன்னா ஈகோ. வெறுமனே சூ.ந பண்ணிட்டு போறதால பெருசா உபயோகம் இருக்காது. கொஞ்சம் ரோசிக்கனும் -படிக்கனும். சூரியனை பத்தி அதனோட பிரம்மாண்டத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டா ஈகோ குறையவும் வாய்ப்பிருக்கு.

மேலும் சோனிங்கதான் ஈகோவுக்கு விக்டிம்ஸ். படிப்படியா ஹேல் அண்ட் ஹெல்த்தியா மாறிட்டா ஈகோவும் சுருங்கிக்கிட்டே போகும் . இதையெல்லாம் பார்க்கிற நைனாவும் சந்தோசப்படுவாரு. ( டாடி). சூரியனுக்குரிய திசையாக ” நடு” என்று சொல்லப்பட்டிருக்கு.

நம்ம பாடில ” நடு ” தொப்புள் தான். காயத்ரி மந்திரத்தை ஒழுங்கான ஸ்ருதியில சொன்னா தொப்புள் பகுதியில அழுத்தம் ஏற்படும். தொப்புள் தான் நாடி நரம்புகள் கிராஸ் ஆகிப்போற கிராஸ் ரோட் /ஜங்சன் பாய்ண்ட்டுன்னு சொல்றாய்ங்க. காயத்ரி மந்திரத்தை ஜெபிச்சா எல்லா நாடி நரம்புகளும் ஆக்டிவேட் ஆகும். உடல் நலம்,மன நலம் மேம்படும். ஈகோ கரைஞ்சு போகும்..

யத்பாவம் தத்பவதி – நாம எதை நினைக்கிறோமோ அதுவா மாறுவோம். இந்த விதிப்படி சூரியன் எப்படி பங்சுவலா பலன் கருதா கருமம் செய்கிறாரோ அப்படி ஒரு ட்யூட்டி கான்ஷியஸ் வரும். சூரியன் எப்படி இருட்டை துரத்தி ஒளியை தராரோ அப்படியே ஜாதகரும் சமூகத்து இருட்டை துரத்தி பகுத்தறிவை ஓளி வீச செய்வார்.

நாளைக்கு சந்திரனுக்குரிய தெய்வம் – அதன் பின்னாடி உள்ள காரண காரியங்களை பார்ப்போம்.

Advertisements

One thought on “சூரியன்

    arul said:
    January 22, 2012 at 11:50 am

    nalla pathivu anna

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s