ஜோதிடம் 360 : முன்னோட்டம்

Posted on

அண்ணே..வணக்கம்ணே !
இந்த 45 வயசுக்கு பாம்ப்லெட்டா இருந்தாலும் சரி ,புக்லெட்டா இருந்தாலும் சரி,அட பாக்கெட் புக்காவே இருந்தாலும் சரி மேட்டர் மொதல்ல ரெடியாயிரும்.அதுக்கப்பாறம்தேன் காசு புரட்ட கிளம்புவோம். காசு புரளாம வேலை நின்னிருக்கலாமே தவிர மேட்டர் விசயத்துல உடனடி லாட்டரிதேன். ஒரே ராத்திரியில குறு நாவல் எழுதின கேஸு நாம.

என்னமோ தெரியலை. ஜோதிடம் 360 மேட்டர்ல மட்டும் ஃபைனான்ஸ் ரெடி.மேட்டர் நாட் ரெடி. ( ஐ மீன் ஃபைனல் காப்பி) . சேராதிருப்பது கல்வியும் செல்வமும்ங்கறது நெஜம் தான் போல. இந்த ஜோதிடம் 360 விசயத்துல நிறைய சந்தேகங்கள்.

1.பேச்சுத்தமிழா ? இலக்கண தமிழா?

நூத்துக்கு எண்பது பேரு நம்ம லாங்குவேஜை ரசிக்கத்தேன் நம்ம சைட்டுக்கும் -வலைப்பூவுக்கும் வர்ரதா மெயிலியிருக்காய்ங்க.ஆகவே பேச்சுத்தமிழ் தேன்.

2.வேதம்-புராணம்-சரித்திர ஜல்லிகள்:

விக்கிபீடியா கணக்கா வேதம்-புராணம்-சரித்திரம்னு ஆரம்பிச்சு ஜோதிடத்தை பத்தி எழுத ஆரம்பிச்சா அசலாட மேட்டருக்கு வர்ரதுக்குள்ள 160 பக்கம் தீர்ந்துரும். எனவே நோ ஜல்லிகள். ஒன்லி கில்லிகள்.

3.ஜாதக கணிப்பு:

ஜாதக கணிப்பை பத்தி எழுதனுமாங்கறது அடுத்த கேள்வி. பத்து காசு செலவில்லாம ஜாதகம் போட்டுக்க ஆயிரத்து எட்டு சைட்ஸ் இருக்கு -லட்சத்து எட்டு சாஃப்ட் வேர்ஸ் இருக்கு.ஆகவே நோ ஜாதக கணிப்பு.

4.புஸ்தவம் ஜாதகம் உள்ளவர்களுக்கா இல்லாதவர்களுக்கா?

ஜாதகம் உள்ளவர்களுக்குன்னுட்டு டெக்னிக்கலா வச்சு எழுதினா ஜாதகமில்லாத மஸ்தா பேரு ச்சொம்மா வேடிக்கை பார்த்துட்டு போகவேண்டி வந்துரும். அதே சமயம் ஒரு மன்சனோட வாழ்க்கை நிலைய வச்சே -அதுக்கான காரணம் – தீர்வு (பரிகாரம்) ன்னு தெரிஞ்சுக்கறாப்ல எழுதினா பீலா விடறான்னிருவாய்ங்க. இதுக்கு தீர்வு மொதல்ல வாழ்க்கை நிலை -பாரா கடைசியில கிரகஸ்திதி -அதுக்கப்பாறம் பரிகாரம்ன்னு கொடுத்துர்ரன்.

5.பொதுப்பலன்:
லக்ன பலன்,ராசிபலன்,நட்சத்திர பலன்னு ஆயிரத்தெட்டு பொதுப்பலன்களை தந்து பக்கங்களை நிரப்பலாம். ஆனால் இந்த வலையுகத்துல இதெல்லாம் ஒரு சொடுக்குல கிடைக்கிற சமாசாரம். அதனால நம்ம டச்சோட ராசி/லக்ன பலன் மட்டும் கொடுத்துட்டு உள்ளாற போயிர்ரன்.

6.சிறப்பு பலன்கள் -யோகங்கள் -தோஷங்கள்:

இவை நிச்சயம் இந்த புஸ்தவத்துல தரப்படும்.

7.ஜோதிடத்துக்கும் – ஆன்மீகத்துக்கும் உள்ள தொடர்பு:

நானே பல தடவை ஜோதிடம்ங்கறது ஜஸ்ட் சைன்ஸு – கணக்குன்னு சொல்லியிருக்கேன்.ஆனால் ஜோதிடம் ஒரு மிஸ்டிக் சைன்ஸ். ஜோதிடம் ஒரு மர்மக்கணக்கு. அல்ஜீப்ராவுக்கு தாத்தா. ஆன்மீக அடித்தளமில்லாத ஜோதிடமோ -ஜோதிடனோ-ஜோதிட ஆர்வலனோ வருசக்கணக்கா முட்டி மோதினாலும் கால் காசுக்கு பிரயோசனமிருக்காது.

எனவே தான் இந்த புஸ்தவத்தோட மொத அத்யாயமே படைப்பின் ஆரம்பத்துலருந்து துவங்குது.

எச்சரிக்கை:
பே சேனல் கணக்கா ஜோதிடம் 360க்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே படிக்க முடியக்கூடிய நிர்வாண உண்மைகள் மற்றும அனுபவஜோதிடம் வலைப்பூக்களில் மட்டுமே அடுத்தடுத்த அத்யாயங்கள் பிரசுரிக்க படும். மேற்படி வலைப்பூக்களை வாசிக்க அழைப்பு பெற உடனே ஜோதிடம் 360 நூலுக்கு முன் பதிவு செய்துக்கோங்க.

மேலதிக விவரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.

Advertisements

2 thoughts on “ஜோதிடம் 360 : முன்னோட்டம்

  கிருஷ்ணா said:
  January 19, 2012 at 6:49 am

  ///மேலதிக விவரங்களுக்கு ///இங்கு/// க்ளிக் செய்யவும்.///

  No Link is given thala …Check it

  arul said:
  January 19, 2012 at 7:00 am

  appo anubava jothidam website only for jothidam 360 book vangiravangalukku mattum thana? mathavanga new posts parka mudiyatha?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s