தனுஷுக்கு ரஜினி தர வேண்டிய அட்வைஸ்

Posted on

அண்ணே வணக்கம்ணே .. இன்னைக்கு ஹாட் டாபிக் ரஜினி மருமகனுக்கு கமலோட மகளுக்கு இதுவாமே.. இந்த மேட்டர்லதான் முருகேசன் மூக்கை நீட்டறாருன்னு நினைச்சு இந்த பதிவுக்கு நீங்க வந்திருந்தா நாம அம்பேல்.

ஆனா இந்த மேட்டர்ல நாம தெரிஞ்சுக்க வேண்டிய மேட்டர் ஒன்னிருக்கு. நாம வயசுல இருக்கிறச்ச பொம்பளைன்னதும் 6 லிருந்து 60 வரை “தாளி..இந்த குஞ்சு கோழியானா” “தாளி .. கெய்வி ரெம்ப செக்ஸியா கீறாப்பா .20 வருசத்துக்கு மிந்தி எப்டி இருந்திருப்பா”ன்னு கமெண்ட் பண்ணிக்கிட்டிருந்திருப்பம்.

ஆனால் நமக்குன்னு ஒரு பொண்ணு பிறக்கும் போதுதான் வலி தெரியுது. எவனோ பெத்த பொண்ணுன்னா குட்டி , நாம பெத்த பொண்ணுன்னா மட்டும் தங்கக்கட்டின்னா இந்த நியாயம் ஆண்டவனோட கோர்ட்ல செல்லுபடியாகாது.

நாம ஊரான் பெத்த பெண்களுக்கு என்ன செய்தமோ அதான் நாம பெத்த பெண்களுக்கும் நடக்கும். இது ரஜினி,கமல் சார் மேட்டர்ல இப்பம் நடந்துக்கிட்டிருக்கு.தனுஸ் மேட்டர்ல எதிர்காலத்துல நடக்கும் அம்புட்டுதேன்,

ஆனால் ஆக்சுவலா பீடி மாதிரி பாடிய வச்சுக்கிட்டு இருக்கிற தனுஷ் கொஞ்சம் போல உடம்பை தேத்த ரஜினி சில அட்வைஸ்லாம் கொடுத்தா நல்லாருக்குமேன்னு நமக்கு தோணுச்சு.அதுக்குதேன் இந்த பதிவு.

தப்பித்தவறி இந்த பதிவு தனுஷ் நோட்டீஸுக்கு போயி அவரு ஃபாலோ பண்ணி பூசினாப்ல ஆகி வேற ரூட்ல செட்டிலாயிட்டா அதுக்கு நாம பொறுப்பில்லிங்கோ..

நாம தனுஷ் மாதிரியே ஒல்லி பீச்சானா இருக்கிற யூத்துக்கு உபயோகப்படட்டுமேன்னுதேன் இந்த பதிவை போடறோம். பொங்கல் ஹாலிடே மூடை மீறி நாலு பேர் அதிகமா படிக்கனும்னுதேன் இந்த வில்லங்க முன்னுரைல்லாம்.

“உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்”னு கவிஞர் சொல்லியிருக்காரு. ஆனா நான் சொல்றேன். உங்க பாடியோட நேச்சரை தெரிஞ்சுக்கிட்டா உலகத்துல போராடவேண்டிய அவசியமே இல்லை.

ஏன்னா நம்ம பாடியோட நேச்சரை நாம கரீட்டா கேட்ச் பண்ணி அதுக்கேத்த ஃபுட் எடுக்க ஆரம்பிச்சுட்டா பாடி நம்ம கட்டுப்பாட்ல இருக்கும், பாடி கண்ட் ரோலுக்கு வந்துட்டா நம்ம மைண்ட்டை ட்யூன் பண்றது ஈசி. பாடி -மைண்ட் இரட்டைக்குழல் துப்பாக்கி மாதிரி . எதிர்ப்பை அடிச்சு தூள் பண்ணலாம்.வெற்றியை நம்ம காலடியில விழச்செய்யலாம்.

பாடியோட நேச்சரை எப்படி தெரிஞ்சுக்கறது?

ஆயுர்வேதத்துல இன்னம் டீப்பா சொல்றாய்ங்க. ஜோதிடத்துல நாடின்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதுக்குள்ளாற போனா நமக்கு கிளிஞ்சிரும். அதனால பாடில ரெண்டு சாதின்னு ஆரம்பிச்சு சுருக்க முடிச்சுர்ரம்.

உங்க பாடி ஹீட் பாடியா கூல் பாடியான்னு தெரிஞ்சுக்கனும். எப்டி?

ஹீட் பாடின்னா மலச்சிக்கல் இருக்கும், கட்டி,கொப்புளம் இத்யாதி வரும். மூக்குல புண்ணு வரும்.
( ஜெனரலா அல்லாருக்குமே ஜூரம் அடிச்சு முடிஞ்ச பிற்காடு வரும் அது வேற கதை) சாதாரணமா நோய் வராது. வந்தாலும் ஒரு நாள் ரெண்டு நாள் ரிக்கவரி ஆயிருவிங்க. ரெண்டு நாள் தாண்டிட்டா தாளி .. டங்குவார் அறுந்துரும். சொட்டு மூத்திரம், வவுத்து வலி இத்யாதி சீக்கிரம் ரிக்கவரி ஆயிரும்,
மூத்திரப்பையில கல்லு,ஜாண்டிஸ் இத்யாதி வந்தா கிளிஞ்சிரும்.

கூல் பாடின்னா ( நீங்க இந்த பதிவை இன்னமும் படிச்சிக்கிட்டிருக்கறிங்க்ன்னா நீங்க தனுஸ் கேட்டகிரியாத்தான் இருக்கனும். அ உங்க பையனோ பெண்ணோ இந்த ரேஞ்சுல இருக்கனும். ) தூங்கி எந்திரிச்சதும் மூஞ்சி “பொத பொத”னு ஆயிரும். அடிக்கடி “ஜல்ப்” பிடிக்கும். தலை பாரமா இருக்கும். ( இந்த சிம்ப்டம்ஸ் ஹீட் பாடிகாரவுகளுக்கும் சில சமயம் எஃபெக்ட் ஆகும்.ஆனால் அது வேற சாதி. ஹீட் ஓவராகி -இன்னம் வேற வழியே இல்லைன்னு பாடியே ஏ.சி போட்டுரும்)

இப்பவும் விலகாம இந்த பதிவை தொடர்ரிங்கன்னா நீங்க ப்ளைண்டா நம்ம சஜஷன்ஸை ஃபாலோ பண்ணலாம்.

நாம கொடுக்கிற சஜஷன்ஸை ஃபாலோ பண்ணா வெறுமனே குண்டாயிர்ரது மட்டுமில்லை.உங்க அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் மினிமம் கியாரண்டி கிடைக்கும். நீங்க தப்பித்தவறி டீன் ஏஜ்ல இருக்கிற பெண்ணா இருந்தா மென்ஸ்ட்ருவல் சைக்கிள் பக்கா ஆயிரும்.எதிர்காலத்துல நார்மல் டெலிவரிக்கு கியாரண்டி. டெலிவரிக்கு பிறகு காத்து போன ஏர் பில்லோ மாதிரி ஆயிட்டு மூட்டு வலி,முதுகுவலின்னு ஆத்துக்காரரை கடுப்பேத்தமாட்டிங்க. உடுங்க ஜூட்.

காலையில எந்திரிச்சதும் ஒரு செம்பு வென்னீர் குடிங்க – அதுக்கப்பாறம் பழையது ( மழை காலங்களில் தவிர்க்க) டிஃபன்ல : பூரி,தோசை,வடை இத்யாதி எண்ணெய் பண்டம் தவிர்க்கவும். மதியம் களி ( போனஸ்: மிஞ்சினதை தண்ணீர் ஊற்றி வைத்தால் மறு நாள் காலை கூழ் குடிக்கலாம். களின்னா கம்பங்களி,கேழ்வரகு களி,சோளக்களின்னு மாத்தி மாத்தி சாப்பிடனும்.

நம்ம அனுபவம் என்னடான்னா 1997 லருந்து டிஃபன் சாப்பிடறதை விட்டுட்டம் .அதனாலதேன் குண்டாயிட்டம்னு கூட ஒரு ஹன்ச். ஆனால் இதை நீங்க ஃபாலோ பண்ணாதிங்க. புச்சுங்கறதால கண்ணை கட்டும். மயங்கி விழுந்து – ஆட்டோல வீட்டுக்கு போகவேண்டி வரும்.

சாப்பாட்ல நெய் -மோர் சேர்த்துக்கங்க. வழக்கமா திங்கற சோறு அளவுக்கு காய்கறி.கீரை ( பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை தவிர்க்கவும்) நீர் சத்துள்ள காய்கள் அதிகம் சேர்க்கவும்.முந்தி தின்னுக்கிட்டிருந்த காய் கறி அளவுக்கு சோறு சாப்பிடுங்க.

டெட் பாடி தவிர ஹீட் பாடி -கூல் பாடி எந்த பாடியாயிருந்தாலும் இந்த விதியை ஞா வச்சுக்கங்க.

1.பச்சையா தின்னா ( நெல்லா கழுவிட்டு) 100 சதம் சேஃப்
2.வேக வச்சு தின்னா 90%
3.உப்பு சேர்த்து தின்னா 80%
4.தாளிச்சு தின்னா 70%
5.வறுத்து தின்னா 35%
6.ரோஸ்டா தின்னா 0% -அதையும் வெளிய தின்னா விசம்

உருளைக்கிழங்கு .உளுத்தம்பருப்பு நிறைய சேர்த்துக்கங்க, சமையலுக்கு நல்லெண்ணெய் உபயோகிக்க பாருங்க.

மதியம் லஞ்சுக்கு பிறகு கு.ப ஒரு அரை மணி நேரம் தூக்கம் அ ரிலாக்ஸ்டா படுத்து ஓய்வு.இரவு அரிசி தவிர்த்து கேழ்வரகு,கோதுமை ,கம்பு சோள ரொட்டி. இரவில் ஒரு தம்ளர் பால் ,ஒரு வாழைப்பழம்.

அல்லாத்தை விட முக்கியமான மேட்டர். “கொய்யால ..வெற்றிப்பாதையிலதான் இருக்கம்”ங்கற நம்பிக்கை. அல்லது வெற்றி தோல்வில்லாம் வெத்து ..எல்லாம் அவன் செயல்ங்கற மைண்ட் செட் வந்துரனும்.

ச்சொம்மா அலைஞ்சு பறை சாத்தக்கூடாது. படுத்த அடுத்த நிமிசம் தூக்கம் வந்துரனும்.அந்த அளவுக்கு உழைக்கனும்.

ஆன்லைன் ஜோதிட ஆலோசனை பத்திக்கிறதுக்கு முந்தி – இந்த பாழாப்போன டூவீலருங்களை வாங்கறதுக்கு மிந்தி 24 ஹவர்ஸ் – 365 டேஸ் நட ராஜா சர்வீஸ் தேன்.அப்பம் உடம்பு கல்லா- வில்லா இருந்தது.

இப்பம் ? இப்பம்?

ஆஷ் ட்ரே கொஞ்சம் எட்ட இருந்தா அதை எடுத்து கொடுக்க ஆளிருக்குமான்னு கண்ணு பார்க்குது.தொந்தி பெருத்துக்கிட்டே போகுது. ஆருனா ஸ்லிம் ஆக டிப்ஸ் கொடுத்து பதிவு போட்டா நல்லா இருக்கும்

Advertisements

3 thoughts on “தனுஷுக்கு ரஜினி தர வேண்டிய அட்வைஸ்

  kandhan said:
  January 17, 2012 at 4:11 am

  “டெட் பாடி தவிர ஹீட் பாடி -கூல் பாடி எந்த பாடியாயிருந்தாலும் இந்த விதியை ஞா வச்சுக்கங்க.”

  :)))

   S Murugesan said:
   January 17, 2012 at 4:31 am

   வாங்க கந்தன் !
   இந்த வரியை நான் அடிக்கும் போதே சிரிப்பு வந்தது. காரணம் நம்ம சர்க்கிள்ள இந்த பேர்ல ஒரு பார்ட்டி உண்டு. ஆரம்பத்துல டெட் பாடின்னு முழுசா சொன்னவுக பாதி செத்துப்போனவனை என்ன முழுப்பேர் சொல்லி கூப்பிடறதுன்னு வேறும் பாடியாக்கிட்டாய்ங்க

  ThirumalaiBaabu said:
  January 18, 2012 at 4:31 am

  தனக்கு தேவையானவற்றை செய்து கொள்ள இன்னொருவர் உதவியை எதிர் பார்ப்பது அதிகமாகி விட்டது …தனது உடல் நலத்திற்கு ப்ரீ ஆப் காஸ்ட் ல சிறந்த வழிமுறைகள் கொடுத்த போதிலும் , அதை வழி மொழிய எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதை நனைத்தால் கொஞ்சம் வருத்தம் தான் …

  நம்ம என்ன டைப் பாடி நு பாத்து , அண்ணன் சொல்வதை செஞ்சுதான் பாருங்க பாஸ் , என்ன ரிசல்ட் நு பாப்போம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s