புத்தக கண்காட்சியில் கத்தி குத்து ..

Posted on

அண்ணே வணக்கம்ணே !
பண்டிகை ஜோர்ல நெஜமான கத்திக்குத்துக்கே கவனம் கொடுக்க ஆளில்லேன்னு தெரியும்.ஆனால் இந்த பதிவை இன்னைக்கு எழுதாட்டா எப்பயும் எழுத முடியாது.

ஜன.17 ஆம் தேதிக்கு மேல எழுதினா சனம் ஆரும் படிக்கவும் மாட்டாய்ங்க. அப்படி படிச்சாலே அதனோட விளைவு அடுத்த வருச க.கா லதேன் தெரியும்.

நாம எடுக்கிற காரியம்லாம் இப்படித்தேன். ( பாக்ய சனி- ஆறுதல் என்னன்னா அவரு வக்ரம்). இதனாலல்லாம் உடனடியா பலன் தெரியலின்னாலும்

அன்னைக்கு திருமலா விஷன் 1900 திட்டத்துல நாம குறிப்பிட்ட அம்சம்லாம் இப்பம் அமலாயிட்டு வருது. ( நம்ம பேரை குறிப்பிடாம). இந்த இருட்டடிப்புக்கு சாட்சாத் பெருமாள் வாரத்துக்கு ஒரு தாட்டி நம்ம கிட்டே மன்னாப்பு கேட்டுக்கிட்டே இருக்காரு. தேவஸ்தானத்துக்கு தனிய சானல் இருக்கனும்னு கொடுத்த ஐடியாவுக்கு நாம கேட்டுக்கிட்டே இருக்கம்.மன்னாப்பு. (கொய்யால ..கோடிக்கணக்கா சுருட்டிட்டானுவ – சானல் மட்டும் லோக்கல் சானலை விட கோரமாத்தான் வருது)

அதனால தேன் இந்த பதிவு. புத்தக கண்காட்சிக்கு நாம போன கதை ..பெரிய்ய கதை. மொத கோனை முற்றும் கோனைங்கற மாதிரி ஆயிருச்சு.

காலையில 3.30க்கு எந்திரிச்சு பாலவினாயகதை புடிக்கிறதா ப்ளான். எந்திரிச்சுன்னு சொன்னது சாஸ்திரத்துக்கு தேன். ரா..த்திரி ..சிவ ராத்திரின்னு ஜாதகபலன்கள் பதிவு பண்ணிக்கிட்டிருந்தம். 3.30 க்கு நாம ரெடியாகி .. மகளை 4.00 க்கு வேக் அப் பண்ணி புறப்பட்டோம்.

அம்மா புண்ணியத்துல பஸ் சார்ஜெல்லாம் டபுள் ஆகியிருக்க.. பா.வி சீண்ட ஆளில்லை. மணியடிச்சாப்ல புறப்பட வேண்டியவன் 5 வரை உருட்டி உருட்டி அப்பயும் வே.வெ புறப்பட்டான்.

க.கா க்கு போக (வர) நினைச்சதுக்கு ரெண்டு காரணம் . ஒன்னு புஸ்தவம் வாங்கறது .ரெண்டு நம்மை சந்திக்க விருப்பமுள்ளவர்களை சந்திக்கிறது. ரெண்டாவது ப்ரோக்ராம் படு மொக்கை. இத்தனைக்கும் டிவிட்டர்ல ,சைட்ல கூட கோடிகாட்டியிருந்தம். சனத்துக்கு ஆயிரம் வேலை. புக் ஃபேருக்கு வந்தவுக சைக்காலஜியை சொன்னாலே பபாசி வழக்கே போட்டுருவாய்ங்க வேணா.

சனம் நம்மை ஐடென்டிஃபை பண்ண வசதியா சைட் பேக் கிரவுண்டலயே டீஷர்ட் – அதுல முன்னாடி சைட் லோகோ பின்னாடி சைட் பேரெல்லாம் ஃபேப்ரிக் பெய்ண்ட்ல எளுதிக்கிட்டுத்தான் வந்தம். இதனால என்னடா லாபம்னா ஒரு ஸ்டால்ல ஒரு பெண்குட்டி ஸ்பெஷல் ஆஃபர்ஸ் பத்தி சொல்றதுக்கு நீங்க ஸ்டூடென்டான்னு கேட்டதுதேன்.

நிற்க ..பாலவினாயகர் எலிமேல் பயணம் போல கழுத்தறுக்க நம்ம பொறுமை + நுரையீரல்களின் நிக்கோடின் தாகம் + இன்னபிற அல்ப சங்கியைகள் விரட்ட பூந்தமல்லிலயே லேண்ட் ஆயிட்டம். ஆக்சுவலா மதியம் 3 மணிக்குத்தேன் புக் ஃபேர்னு ஒரு ப்ரோகிராம் வச்சிருந்தம்.அதுவரை ச்சொம்மா சாட் பண்ணலாம்னு உத்தேசம்.

மொதல்ல இந்த சைட்டை உருவாக்கித்தந்த சரணுக்கு ஃபோன். அவர் வரமுடியாத நிலையில் இருக்க.. தொடர்பு கொண்ட பிறருக்கும் ஏதோ சொந்த வேலைகள் இருக்க – நம்ம சொந்த வேலைல்லாம் ஞா வந்துருச்சு. ப்ரோக்ராமை படக்குன்னு மாத்தி பஸ் ஸ்டாண்டை விட்டு விலகி நம்ம ரேஞ்சுல இருந்த ஒரு ஓட்டலுக்கு போயி அருமையான டிஃபன் அடிச்சுட்டு அமிஞ்சிக்கரை வந்து சேர்ந்தாச்சு.

(ஒரிஜினல் உச்சரிப்பு அமைந்த கரை – ஆமா எல்லா நதிக்கும் -கடலுக்கும் உள்ள கரைகள் தானா அமைஞ்சதுதானே.. இதுக்கு மட்டும் அப்டி இன்னா ஸ்பெசலு? )

மொதல்ல தாக்க வேண்டிய இலக்கை வேவு பார்த்துக்கிட்டு அப்படியே ஒரு ரவுண்டு வந்தம். பூந்த மல்லி டு அமிஞ்சிக்கரை வந்த பஸ்ல (பேருந்து ?) சொகுசு பேருந்துன்னு ஒரு ஸ்டிக்கர் இருந்தது.அதுல எவனோ “சொ” வை சுரண்டி விட்டிருக்க.. நல்லவேளை இப்படில்லாம் கமெண்ட் போடற வசதி ப்ளாகர்ல இல்லைன்னு ஆ.பட்டுக்கிட்டம்.

அங்கன இருந்து போர்டுகளை பார்த்து சின்ன ஆராய்ச்சி. வினையகம் , பொருத்துகள் ,வன் பொருள்,அறைகலன் இதுக்கெல்லாம் என்ன அருத்தம்னா ரோசிச்சு வைங்க. கடேசில நான் ட்ரை பண்றேன்.

அடுத்த ப்ரவுசிங் சென்டரை தேடி பயணம். இணையதள மையம்னு ஒரு போர்டு. கொய்யால தமிழ் படுத்த வேண்டியதுதேன்.அதுக்காக இப்படி படுத்தனுமா?

அப்பம் நேரம் 10.30. மகளுக்கு ஒரு சிஸ்டம் வாங்கி கொடுத்துட்டு நாம நம்ம வேலைய ஆரம்பிச்சுட்டம். (பலன் பதிவு) 12.30 ஆச்சு. மறுபடி மெயின் ஸ்ட்ரீம்ல இருந்து டைவர்ட் ஆகி நல்ல ஓட்டலா பார்த்து அருமையான சாம்பார் சாதம் , தயிர் சாதம்லாம் அடிச்சுட்டு (ரீசனபிள் ப்ரைஸ் 22ரூ, 24 ரூ). .. புக் ஃபேர் ஸ்தலத்துக்கு வந்துட்டம்.

செக்யூரிட்டி நம்மை மாதிரி வெளியூர் கேணங்களுக்காகவே உள்ளாற நிறைய சேர் போட்டு வச்சிருக்கிறதா சொன்னாரு. போயி உட்கார்ந்து படிக்காமயே கக்கத்துல இடுக்கி வச்சிருந்த தினசரில்லாம் மேஞ்சு முடிச்சாச்சு.

அப்பாறம் அப்படியே காலாற நடந்து ஒரு தாட்டி பான் பண்ணி பார்த்தம். கட்சி மா நாடு மாதிரி ஒரே பேனர் மையம். மைதானத்துல அங்கங்கே குளம் மாதிரி தண்ணி. சனம் லாங் ஜம்ப் பண்ற அழகை கொஞ்ச நாழி பார்த்தம். உயிர்மை காரவுக சுஜாதாவோட படம் போட்டு பேனர் வச்சிருந்தாய்ங்க. (பழுத்த பழம் கணக்கா இருக்காரு சுஜாதா – நமக்கு பிடிச்ச படம் வேற ஒன்னிருக்கு . முடிஞ்சா அதை இதே பதிவுல போஸ்ட் பண்றேன். இருந்தாலும் பேன்ர் கீழே நின்னு ஒரு படம் எடுத்துக்கிட்டம்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்ங்கற மாதிரி இந்தி கான்வர்சேஷன் தேன் காதுல விழுந்துக்கிட்டிருந்தது. இன்னாடா மேட்டருன்னா அவிக ஸ்கூல் ஸ்டூடென்ட்ஸ் மாதிரி இருக்கு. கொஞ்ச நாழியில அவிக பேரண்ட்ஸ் வந்து கூட்டு போயிட்டாய்ங்க.

ஒரு ஜோடி (30+) கக்கத்துல கை கோர்த்துக்கிட்டு 3 மணி வரை அதே ஃபோஸ்ல பேசிக்கிட்டிருந்தாய்ங்க. வாழ்க. ஒரு பார்ட்டி ஹாட் பேக்ல கொண்டு வந்த சாப்பாட்டை வெளுத்துக்கட்டிக்கிட்டிருந்தாரு. ஜெனரேட்டர்ஸ் வச்சிருந்த இடம்தான் அறிவிக்கப்படாத யூரினல்ஸ்.

லேசான பசி. வெளியூர் போனா மட்டும் அதிகம் பசிக்குது என்ன காரணம்னு ஆருனா சொல்லுங்கப்பா. எஸ்.வி சேகர் சர்ட்டிஃபிகேட்டோட வச்சிருந்த அறுசுவை பவனுக்கு போனம். மசாலா பால் ரூ.30 , மெது பக்கோடா 4 பீஸ் ரூ.50 . பசி போயே போச்.சந்தனை கட்டை ஓட்டினா கூட இத்தனை லாபம் வராது போல.
சந்தனக்கட்டை பார்ட்டிகள் அடுத்த வருசம் இந்த கேண்டீன் காண்ட்ராக்டுக்கு ட்ரை பண்ணலாம்.

ஒரு வழியா சனம் சேர ஆரம்பிச்சாய்ங்க. விகடன் புக் ரிலீஸுக்கு மேடையில ஒரு பேனர் வச்சாய்ங்க. சூப்பர் சைஸு.. பைனாகுலர் இருந்தா என்ன புஸ்தவம் ஆரு எழுதினதுன்னு பார்க்கலாம். டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ளாற போனோம்.

அதுக்கு நமீதா கணக்கா குலுக்கி பரிசெல்லாம் கொடுப்பாய்ங்க போல சனம் காதலிக்கு கடிதம் எழுதற ரேஞ்சுல அதும்பின்னாடி விலாசம் எழுதி பெட்டியில போட்டுட்டுத்தேன் மறுவேலை பார்த்தாய்ங்க.

பேச்சிலர் ஒருத்தன் செக்ஸ் ஒர்க் ஷாப்புக்கு போன கதையா எதை பார்த்தாலும் வாங்கனும்னே தோன ஆரம்பிச்சுது. மகள் என்னவோ “டாடி! உனக்கு வேணுங்கறதையெல்லாம் வாங்கிக்க.. நாம சாப்ட இடத்துக்கு பக்கத்துலயே சேட்டு கடை இருக்கு. நான் வேணா செயினை அடகு வச்சு காசு வாங்கியாரேன்”ன்னாள்.

படக்குனு யதார்த்தம் சுட.. நம்ம செலக்சன் விதிகளை இறுக்கிக்கிட்டு வாங்க ஆரம்பிச்சம். வாங்கினதுல ரெம்ப பிடிச்சது காந்தி தாத்தாவின் சுயசரிதை ,ஆரோ எழுதின முகமது நபி வா.வரலாறு தேன். மத்ததெல்லாம் தூங்கத்தான் போகுது. அப்பப்போ படிச்சுட்டு அதை பத்தி எழுதறேன்.

இந்த பபாசிகாரவுகளுக்கு சில ரோசனைகள் சொல்லியே ஆகனும்.

1.எல்லா பதிப்பகத்துலயும் (ஒரு சில விதி விலக்குகள் இருக்கு) எல்லா சாதி புஸ்தவமும் இருக்கு. பதிப்பகத்துக்கு ஒரு ஸ்டால்ங்கறதை விட புஸ்தவ சாதிக்கு ஒரு ஸ்டால்னு போடலாம். நடையா நடந்து பார்த்த புஸ்தவங்களையே அதுலயும் நமக்கு தேவையில்லாத புஸ்தவங்களையே பார்க்க வேண்டியதாயிருச்சு… முக்கியமா பிற மொழி புஸ்தவங்களுக்கும், சமையல், ப்யூட்டி, ஜி.கே, போட்டி பரீட்சைக்கு தனி ஸ்டால் கட்டாயம்.

2.சர்க்கஸ் கணக்கா ஒரு கூடாரம் போட்டு அதுக்கு செலவழிக்கிறதை விட எதுனா வசதியான கல்யாண மண்டபத்துல வச்சு – மிச்சமாற காசை வாங்குறவுகளுக்கு தள்ளுபடியா கொடுத்திருக்கலாம். நிறைய வித்திருக்கும்.

அட்லீஸ்ட் Zig Zag ஆ ஸ்டால்ஸ் போட்டதை விட “ப” னாவை தலை கீழா போட்ட கணக்கா போட்டு தொலைச்சிருக்கலாம். இன்னபிற (திங்கறது -குடிக்கிறது ) ஸ்டால்ஸை மையத்துல போட்டிருக்கலாம்..இப்படி வந்து ஒரு வாய் டீ குடிச்சுட்டு வேட்டைய தொடரலாம்.

3.பதிப்பாளர்கள் கவனத்துக்கு : இது விக்காதுன்னு தெரிஞ்சே பல புஸ்தவங்களை போட்டிருக்கிறது தெரியுது. மொதல்லயே கரீட்டா ஜட்ஜ் பண்ணி தவிர்த்துருங்க பாஸ்.. உங்களுக்கு சிரமம் குறையும்.தேடறவுகளுக்கும் குறையும்.

4.கட்சி மாநாடு கணக்கா பேனர்கள் வைக்கிறதை விட எந்த புஸ்தவம் எங்கன கிடைக்கும்னு ஒரு ரூட் மேப் அச்சடிச்சு கொடுத்திருக்கலாம்.

தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். புக் ஃபேரை விட எதிர்க்க பிளாட்ஃபாரத்துல குவிச்சிருந்த புஸ்தவங்கள்ளயே முத்துக்கள் அதிகம்.

இதை வேறு வாக்கிய அமைப்பில் சொன்னா பிளாட்ஃபாரத்துல குவிச்சிருந்த புஸ்தவங்களில் இருந்த குப்பைய விட புக் ஃபேர் புஸ்தவங்கள்ள குப்பை அதிகம்.

இதுதான் கத்திக்குத்தை விட அதிக வலிய கொடுத்தது.

பரிதாப ஸ்டால்கள்: கல்கி, யூனிவர்சிட்டி ஸ்டால்ஸ் தான். சீந்த ஆளில்லை..

Advertisements

4 thoughts on “புத்தக கண்காட்சியில் கத்தி குத்து ..

  சுந்தரேசன் said:
  January 14, 2012 at 2:23 pm

  ஐயா!

  சுற்றி காண்பித்தமைக்கு நன்றி. ஜோதிடம் பற்றிய புத்தகங்கள் போடவில்லையா? மருதை பக்கம் போட்டா வருவீயளா?

  புத்தகங்களை படிக்கிறேனோ இல்லையோ, இந்த மாதிரி கண்காட்சி என்றால் ஜோதிட புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து வருவது என் பழக்கம். ஏனெனில் இங்கு பத்து சதவீதமோ அல்லது இருபது சதவீதமோ தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

   S Murugesan said:
   January 14, 2012 at 5:01 pm

   வாங்க சுந்தரேசன்!
   கமெண்ட் கிடக்கட்டும் கழுதை. . பதிவு எங்கே காணோம்? சரக்கு தீர்ந்து போச்சா? வரத்து குறைஞ்சு போச்சா..?

   நீங்க விட்ட டகுலுக்கு ஒரு நாளைக்கு 3 பதிவு கணக்கா 3 வருசம் போடனும்.. ஒரு வாரத்துக்கே இந்த மெனோஃபஸா?

  கிருஷ்ணா said:
  January 17, 2012 at 2:00 pm

  என்ன தல

  வாயும் வயுருமா ஆளே உப்பிட்டு வரீங்க 🙂
  12 நாள் உண்ணா விரதம் இருந்த முருகேசா இது ???

  வயறு ஊத ஊத வாய் மட்டும் தான் நல்லா வேலை செய்யும் 🙂

  பொதுவா வயறு வந்துட்டாவே….யோக வாழக்கை மாறி
  போக வாழ்கையை தான் நோக்கி செல்லும்…..

  ஹட யோகம் பண்ணுங்க….இல்லைனா இனி நீங்க சரி பட்டு வர மாட்டீங்க…….நீர்த்து போக ஆரம்பிச்சுடுவீங்க

  ஏன்னா ஊருக்கு ஆன்மிகம் சொல்லுறவன் முதலில் தான் அதற்கு தகுதி உடையவனாய் இருக்க வேண்டும்

  இது ஏதோ அறிவுரை எல்லாம் இல்லை….இதெல்லாம் யோகத்தின் அடிப்படை தகுதி…..என் மனதில் பட்டதை சொன்னேன்……டேக் கேர் 🙂

  அப்புறம் ..இந்த காய கல்பம் காயாத கல்பம் நு சிலர் சொல்லுவாங்க……

  நம்ம சுகுமார் ஜி கிட்ட ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்டேன் ….

  காய கல்பம் பயிற்சி சொல்லி தர வேதாத்திரி மகரிஷி ஏன் வயசான காலத்தில் எல்லோரையும்
  போல சாதாரண வயசான மாதிரி தானே இருந்தார் என்று…..
  ஒரு பதிலையும் காணோம் அவரிடம் இருந்து…..(பதில் வரும் வரை அவரை விட போவதில்லை 🙂 )

  ஆனால் என்னளவில் ஹட யோகம் தான் உடம்பை குறைக்க பெஸ்ட் சாய்ஸ்

   S Murugesan said:
   January 17, 2012 at 4:51 pm

   பாஸ் !
   ரவுண்ட் தி க்ளாக் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருந்தா என்ன ஆகுமோ அதான் இப்ப ஆகியிருக்கு.அதனாலதான் முழுப்பலனுக்கெல்லாம் டாட்டா சொல்லியாச்சு. ஜஸ்ட் பத்து கேள்விக்கு பதில் அதுவும் ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு முன் பதிவு பண்றவுகளுக்கு மட்டும் தான்.

   கார்ப்பென்டரிங்ல இறங்கிட்டா 15 நாள்ள வவுறு கிவுறெல்லாம் காணாம போயிரும்.. ஒரு ஆணி அடிக்கிறதுக்கும்
   ( வளையாம) தியானம் தேவை. என்னைப்பொருத்தவரை அதுவே ஒரு யோகம்.

   நான் கடந்த மாதம் டிசைன் பண்ணி அடிச்சு பாதியில விட்டிருக்கிற ட்ரசிங் டேபிளோட படத்தை இங்கே பாருங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s