372 பதிவுகளை காணவில்லை

Posted on

அண்ணே வணக்கம்ணே !

இந்த பதிவை படிச்சுட்டு பழைய பதிவுகளை புரட்டலாம்னு பார்த்தா மொத்தமா 7 பதிவுகள் மட்டுமே இருக்கிறதை பார்த்து ஷாக் ஆகியிருப்பிங்க. அய்யய்யோ சைட்டை எவனாச்சும் ஆட்டை போட்டுட்டானான்னு (அதாங்க ஹேக்கிங்) கூட ரோசிச்சிருப்பிங்க. ஆனால் ஆத்தா தயவுல அப்படி எதுவும் நடக்கல்லை.

பின்னே என்னாச்சு மத்த பதிவுகளுக்குன்னு கேப்பிக சொல்றேன். பல்க் ஆக்சன்ல போயி ட்ராஃப்டா மாத்திட்டன். நம்ம எழுத்து வைன் மாதிரி பழசாக பழசாகத்தேன் ஜிவ்வுன்னு ஏறும். ப்ளாகர் ஸ்டேட்டஸ்ல பார்த்திங்கனா கரண்ட்ல போட்டதை 100 பேர் கூட படிச்சிருக்கமாட்டாய்ங்க. பழைய பதிவுகளை புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கணக்கா தேடி தேடி ரிவிஷன் பண்ணிக்கிட்டிருப்பாய்ங்க.

நமக்குள்ள கிரியேட்டிவிட்டிய காக்கா தூக்கிட்டு போயிருச்சான்னு ஐ.சி கூட வந்துரும். அதே சமயம் புதுசா போட்டது பழசா போனா நோண்டி நுங்கெடுத்துருவாய்ங்க.அதுவேற கதை.

இந்த பழைய ஃபிக்ஸட் டெப்பாசிட்டுக்கு வந்த வட்டிய ( ஹிட்ஸ்) சில வந்தேறிகள் கொண்டாட ஆரம்பிச்சுருச்சுங்க. கட்டுச்சோத்துல பங்கு போட ஆரம்பிச்சிருச்சுங்க. அதனாலதேன் இந்த ஆக்சன். இப்பம்
ஆரு பர்சனாலிட்டி என்னனு தெரிஞ்சுரும்ல.

மேலும் நாம ஜோதிடம் 360 புஸ்தவத்தை போட்டே ஆகனும். ஏற்கெனவெ சொன்னாப்ல 2012 ,ஜூன் 23 க்குள்ள பெத்த கடனை தீர்த்து தொலைச்சுர்ரதா டிசைட் பண்ணித்தேன் நாயா பேயா ஓடி ஓடி ரூ.250 க்கு முழுப்பலன்லாம் தந்துக்கிட்டிருந்தம்.

இப்பம் டார்கெட் ஓவர். அந்த காசை தூக்கி புஸ்தவ ப்ராஜக்டுக்கு திருப்பி விட்டா நம்மை கூண்டுல ஏத்தி விஜாரிக்கிற சீன் எல்லாம் கடியாது.ஆனால் மனசாட்சின்னு ஒன்னு இருக்கில்லை. அதனாலதேன் ரெண்டு ப்ளாகையும் ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லின்னு மாத்தி இந்த தளத்தில் உள்ள எல்லா பதிவுகளையும்
ட்ராஃப்டா மாத்தியாச்சு.

இப்பம் நம்ம பழைய எழுத்துக்களை படிக்கனும்னா ஜோதிடம் 360 க்கு முன் பதிவு செய்துக்கனும்.அவிக மட்டும்தேன் படிக்க முடியும். நெட்ல ஹிட்டு கிடைக்குது. ஆயிரத்து ஐநூறுக்கு மேலயே ஹிட்டு கிடைக்குது. இல்லேங்கலை. ஆனால் ப்ரஸ்ல புஸ்தவம் போட துட்டுதானே கேட்கிறான். அதனாலதேன் கொஞ்சமா துட்டு பீராய்ஞ்சு புஸ்தவம் போடத்தேன் இந்த கதை. சொந்த கதை கிடக்கட்டும்.

ஃபோக்கஸ்லைட்டை சோசியத்துக்கு திருப்புவம். ஏன் இந்த திடீர் முடிவு ? ஏனிந்த திடீர் திருப்பம்? ஜோதிட ரீதியா என்ன காரணம்னு பார்ப்போம்.

நம்முது கடகலக்னம் சிம்மராசி. லக்னாதிபதி,ராசியாதிபதி பரிவர்த்தனம். லக்னத்துக்கு பத்துல குரு .ராசிக்கு 9 ல குரு . பத்துல குரு வந்தா பதவி பறிபோகனும். 9 ல குரு வந்தா தூர தேசங்கள்ளருந்து சில்லறை புரளனும். இது ரெண்டும் ஒர்க் அவுட் ஆகனும்னா என்ன பண்ணனும்?

இனி முழுப்பலன் கிடையாதுன்னு அறிவிச்சாச்சு. பொளைக்கத்தெரியாத மன்சன்பா என்ற பதவி பறிபோயிருச்சு.

ரெண்டு ப்ளாகையும் ப்ளாக் பண்ணி – இந்த தளத்துல உள்ள எல்லா பதிவுகளையும் ட்ராஃப்டாக்கியாச்சு. இப்பம் நெஜமாலுமே சோசியத்து மேல ஆர்வம் , நம்பிக்கை உள்ளவுக துட்டை வெட்டி அனுமதி வாங்கிருவாய்ங்க. சில்லறை புரளும்.

லக்னத்துக்கு 4 ல சனி. வீடு தங்கினா வீட்டம்மாவுக்கும் நமக்கும் குத்து கொலை நடக்கனும். ராசிக்கு 3 ல சனிங்கறதால ட்ராவல் பண்ணனும்.

முழுப்பலன் ஆஃபரை தூக்கிட்டதால வீட்ல இருக்கவேண்டிய நேரம் குறையும். ட்ராவல் பண்ணவும் டைம் கிடைக்கும். ( தற்சமயம் நிலுவையில் உள்ள ஜாதகங்களை முடிக்க மாசம் பிடிக்கும்ங்கறது வேற கதை)

ராகு கேதுக்களை பார்த்தா ராகு 5 ல் கேது 11ல். இதனால அவப்பேர் வரனும். ஞானம் வரனும். மேற்சொன்ன ரெண்டு முடிவுகளால ” என்னென்னவோ ஃபிலிம் எல்லாம் காட்டினாரு .. இப்பம் பார்த்தியா?”ன்னுட்டு அல்லாரும் பேசிக்குவாய்ங்க.பேசிக்கட்டும். இதனால எனக்கோ – என்னிடம் ஆலோசனை பெறுபவர்களுக்கோ எந்த நஷ்டமும் கடியாது.

இதுவே நான் பேருக்கு ஆசைப்பட்டு கண்ணால காசுல கை வச்சு புஸ்தவம் போட்டேன்னு வைங்க .பேர் வரும்.அதே சமயம் நான் தரும் கணிப்புகள் பொய்யாகி அதனால அவப்பேர் வரலாம். கல்யாண மேட்டர்ல ஏத்தக்குறைச்சலாகி மகளோட வாழ்வு பாதிக்கப்படலாம்.

(முழுப்பலன் ஆஃபரை வாபஸ் வாங்கிட்டதால ரிஸ்க் குறையுது. பத்துல 6 பாஸ் ஆனாலே நாம சூப்பர் சோசியர்னு பேர் வரும். முழுப்பலன் சொல்லும்போது 5ல ராகு குழப்பி விட்டுரலாம். எல்லாமே தவறா போகலாம்.அப்பம் நமக்கும் அவப்பேர். ஆர்வலருகும் நஷ்டம்)

ராசிய வச்சு பார்க்கும் போது 4 ல் ராகு , 10 ல் கேது . வீடு தங்கினா ஆப்பு. நாடோடியா சுத்தனும். கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு கரீட்டா வரும்.

ஆருக்கும் நஷ்டம் வரக்கூடாதுங்கறதுதேன் நம்ம கணக்கு. அப்படி நஷ்டம் தான் வரும்னா அந்த நஷ்டத்தை நாம ஏத்துக்க சித்தமா இருப்பம்.

ஒன்னு பலன் எல்லாம் பலிக்காம போகனும். அல்லது நமக்கு அவப்பேர் வரனும். அவப்பேரே வந்துட்டு போவட்டுமே.. இதான் நம்ம வியூகம்.

வியூகம்னா யுத்தம் ஞா வருது. யுத்தகாரகனான செவ் ஜனவரி 23 வரை ராசியிலயும், லக்னத்துக்கு ரெண்டுலயும் சஞ்சரிக்கிறாரு. ராசியில் நின்ன செவ் எதிர்ப்பை தரனும். நான்கு ,ஒன்பதுக்கு அதிபதியாக பாசத்துக்குரியவர்களை விரோதமாக்கனும் , தூரதேசத்து வெல் விஷர்ஸையும் எதிரியாக்கனும்.
அவருக்கு ஏன் அந்த வேலைன்னு அவர் வேலைய நாமே பார்த்துட்டம்.

லக்னத்துக்கு ரெண்டுல நின்ன செவ் தனயோகத்தை தரனும் ( பஞ்சமாதிபதியும் இவர் தானே)செவ் ஜீவனாதிபதியாகி வாக்கில் நின்றதால் நம்ம தொழிலை பற்றி விவரமாவே பேசிட்டம்.

செவ்வாய்க்கு பின் நிற்கும் கிரகமெல்லாம் கிரக யுத்தத்துல தோத்துட்டதா ஒரு விதி இருக்கு. இது கிரக யுத்தம்.

நம்முது கிரகங்களுடனான யுத்தம் . அதுக்குத்தேன் இந்த வியூகம். இது எந்தளவு வெற்றிய தரும். எந்த அளவு பொங்கல் வைக்கும்னு காலம் தேன் பதில் சொல்லனும்.

Advertisements

36 thoughts on “372 பதிவுகளை காணவில்லை

  Surya said:
  January 11, 2012 at 2:44 am

  History repeats!! same route of classroom.
  Best of luck.

  Mani said:
  January 11, 2012 at 5:02 am

  சுந்தரேசன் அண்ணே!

  நீங்க வந்த பிறகுதான் முருகேசன் அண்ணன் தொடர்ந்து பதிவு போட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு வந்திட்டார்னே. இல்லையென்றால் பதிவு போடுறதுக்கு ரொம்ப யோசிப்பார்னே. உங்கள் பார்வை பட்டதால்தான் இந்த வெப்சைட்டை தூசு தட்டி வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார். நீங்க அடிக்கடி எழுதுங்க. அப்பொழுதுதான் அவரும் உங்களுக்கு போட்டியாக எதையாவது எழுத வேண்டுமே என்று எழுதிக்கொண்டிருப்பார். அவரை ரூம் போட்டு யோசிக்க வைத்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

   S Murugesan said:
   January 11, 2012 at 7:13 am

   மணி அண்ணே !
   கமெண்டே போடமாட்டேன்னு நீங்க கழண்டுக்கிட்ட பிறவும் உங்க பேர்ல கமெண்ட் மழையா கொட்டுது பார்த்திங்களா? ஜா.ராவுக்கு என்னமா பரிஞ்சு பேசினிங்க.. இப்பம் புரியுதா ?

   அப்பா ..சுந்தரேசா @ ஜா.ரா .. உன் ஸ்டேட்மென்ட் எப்டி கீதுன்னா.. திருப்பதில லாலா கடை ப்ராஞ்ச் ஆரம்பிச்ச பிறவுதான் ஏழுமலையான் கோவிலை ஒளுங்கா திறக்கறாய்ங்கங்கற மாதிரி கீது..

   சற்றே அடக்கி வாசியும் பிள்ளாய்..

   இந்த ஒரு வாரக்கூத்துலயே 4 தாட்டி வேட்டி உருவிட்டாய்ங்க. (வகுப்பறை..!!!) 2 தாட்டி மீசை கீழே விளுந்திருச்சு..( ஹிட்ஸுக்கு தந்த ஆதாரம் வாய பிளந்துருச்சு) நாங்கல்லாம் அடிவாங்காத ஏரியாவெ கடியாதுங்கறாப்ல இந்த கைப்புள்ள பதிவு போடாத நாளே இல்லை..

   கொஞ்சம் யதார்த்தத்தையும் பார்க்கனும்ல? ஆமா இன்னைக்கு பதிவு எங்கே.. பெஞ்ச் மேல ஏறி நிக்க ஆசையா?

    Mani said:
    January 11, 2012 at 1:42 pm

    ஆமாண்ணே. நீங்களும் எம்மேல மரியாத வச்சி என்னோட கமெண்ட்சை அப்ரூவ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இருந்தாலும் ஜானகி ராமண்ணன் பாவம்னே. அவர் இந்த வேலையெல்லாம் பண்றவர் மாதிரி தெரியலைண்ணே.

    திரு.சுந்தரேசன் அவர்களுடைய படைப்புகளை பார்க்கும் பொழுது, கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல் நம் தளத்திலுள்ள அனைவரின் கலவையாக தெரிகிறார். இவர் சாதாரண மனிதர் போல் எனக்கு தெரியவில்லை. பஞ்ச பூதங்களையும் அடக்கியாள தெரிந்த, சர்வ ஜீவராசிகளுக்கும் அப்பாற்பட்ட, இறையின் அவதாரமாகவே தெரிகின்றார்.

    இந்த சுந்தரேசன் என்பவர் நிச்சயம் குண்டலினி சக்தி கிளம்பியவராக இருப்பார் என்பது நன்கு புலனாகிறது. ஏனெனில் அவரது படைப்புகளில் நம் அனைவரின் ஜாடையும் தெரிந்தாலும் அவர் கூறிய நுணுக்கமான விஷயங்கள் அனைத்தும் பூமியில் வாழும் ஜோதிடர்கள் (நீங்கள் உட்பட) யாருமே அறிந்திராத விஷயம்தான். அவரை கையெடுத்து கும்பிட வேண்டும் போல் உள்ளது. அவரது மின்னஞ்சல் முகவரி இருந்தால் குடுங்களேன். உங்கள் சார்பாக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

    ஹீ இஸ் யன் எக்ஸ்ட்ரா டினரி பெர் ஸ ன்.

    கிருஷ்ணா said:
    January 12, 2012 at 6:54 am

    ///////இவர் சாதாரண மனிதர் போல் எனக்கு தெரியவில்லை. பஞ்ச பூதங்களையும் அடக்கியாள தெரிந்த, சர்வ ஜீவராசிகளுக்கும் அப்பாற்பட்ட, இறையின் அவதாரமாகவே தெரிகின்றார்.

    இந்த சுந்தரேசன் என்பவர் நிச்சயம் குண்டலினி சக்தி கிளம்பியவராக இருப்பார் என்பது நன்கு புலனாகிறது. ஏனெனில் அவரது படைப்புகளில் நம் அனைவரின் ஜாடையும் தெரிந்தாலும் அவர் கூறிய நுணுக்கமான விஷயங்கள் அனைத்தும் பூமியில் வாழும் ஜோதிடர்கள் (நீங்கள் உட்பட) யாருமே அறிந்திராத விஷயம்தான். அவரை கையெடுத்து கும்பிட வேண்டும் போல் உள்ளது. ////

    🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

    சுந்தரேசன் said:
    January 11, 2012 at 2:15 pm

    //அப்பா ..சுந்தரேசா @ ஜா.ரா .. உன் ஸ்டேட்மென்ட் எப்டி கீதுன்னா.. திருப்பதில லாலா கடை ப்ராஞ்ச் ஆரம்பிச்ச பிறவுதான் ஏழுமலையான் கோவிலை ஒளுங்கா திறக்கறாய்ங்கங்கற மாதிரி கீது..//

    ஐயா!

    தங்கள் கருத்தில் பிழை உள்ளது. ஒரு பெண்ணானவள் தன் தலையில் சூடிய மல்லிகையின் நறுமணத்திற்காக தேடி வந்த வண்டுகளை பார்த்ததும், தன்னுடைய அழகில் மயங்கி வண்டுகள் பின்னாடியே சுற்றிக் கொண்டு வருவதாக கற்பனை செய்து கொண்டு இறுமாப்புடன் இருப்பதை போல் இருக்கிறது ஐயா தங்கள் கூற்று .

    பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பது போல் உள்ளது தங்களது அறியாமை.

    //சற்றே அடக்கி வாசியும் பிள்ளாய்//
    அப்படியே ஆகட்டும் ஐயா

    //நாங்கல்லாம் அடிவாங்காத ஏரியாவெ கடியாதுங்கறாப்ல இந்த கைப்புள்ள பதிவு போடாத நாளே இல்லை..//

    ஐயா.. பழைய பதிவுகளை ப்ளாக் பண்ணிய தைரியத்தில் இவ்வாறு கூறுகின்றீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தங்களை உசுப்பேத்தி ரணகளமாக்க விரும்பவில்லை ஐயா.

    //ஆமா இன்னைக்கு பதிவு எங்கே.. பெஞ்ச் மேல ஏறி நிக்க ஆசையா?//
    ஐயா… எனக்கு கக்கா கூட உக்காந்தால்தான் வரும். ஏற்கனவே தலை மேல் ஏறி அடிக்கொண்டிருப்பதாக சிலர் காண்டுடன் கூறி வருகின்றனர். போதாக்குறைக்கு நீங்களே பெஞ்ச் மீது ஏறி ஆட சொல்லிவிடாதீர்கள் ஐயா. அனுப்புகிறேன் ஐயா.

  கிருஷ்ணா said:
  January 11, 2012 at 6:09 am

  ////நீங்க வந்த பிறகுதான் முருகேசன் அண்ணன் தொடர்ந்து பதிவு போட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு வந்திட்டார்னே. இல்லையென்றால் பதிவு போடுறதுக்கு ரொம்ப யோசிப்பார்னே. உங்கள் பார்வை பட்டதால்தான் இந்த வெப்சைட்டை தூசு தட்டி வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்////

  🙂 🙂 🙂 🙂

   கிருஷ்ணா said:
   January 11, 2012 at 6:10 am

   சுந்தரேசன் அண்ணே(??)…..சும்மா காட்டு காட்டுன்னு காட்டுறீங்க 🙂

    கிருஷ்ணா said:
    January 11, 2012 at 6:54 am

    இது என்னுடைய தோழி ராதா எழுதி பாடிய பாடல் Zee Telungu வில் cinna kodalu என்ற சீரியலில் 7.00 மணிக்கு வருகிறது ….பாட்ட கேட்டு பாருங்க

  Anbu said:
  January 11, 2012 at 7:54 am

  Hello sir,

  How to become a member of this blogspot. pls advise

   S Murugesan said:
   January 11, 2012 at 9:21 am

   வாங்க அன்பு !
   விரைவில் வெளிவர இருக்கும் ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு ரூவா காட்டி முன் பதிவு செய்துக்கிடனும். மேலதிக விவரங்கள் இந்த கமெண்ட்ஸ் பக்கத்துலயே இருக்கும் தேடிப்பாருங்க. Ctrl+F அழுத்தி S.Murugesan என்று தேடுங்களேன்

  Mani said:
  January 11, 2012 at 9:00 am

  //// மணி அண்ணே !
  கமெண்டே போடமாட்டேன்னு நீங்க கழண்டுக்கிட்ட பிறவும் உங்க பேர்ல கமெண்ட் மழையா கொட்டுது பார்த்திங்களா? ஜா.ராவுக்கு என்னமா பரிஞ்சு பேசினிங்க.. இப்பம் புரியுதா ? ///////

  தலை! இன்னமுமா உங்களுக்கு போலி யாருன்னு தெரியலை.

  எனக்கு எப்பவோ புரிஞ்சிரிச்சி போலி யாருன்னு. அண்ணே! நாம யாரு நம்மகிட்டேயா, ஒருத்தன் எழுத்து நடை, உடை பாவனைன்னு அவன் மூஞ்சிய வச்சே கண்டுபுடிக்கிற ஆளு நாம.

  அண்ணே! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

  கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு கூட தாக்குபிடிக்காது.

  எப்பேர்பட்ட திருடனும் வலிய வந்து ஆதாரத்தோடு மாட்டிக்குவான்.

  அந்த போலி நீங்க நினைக்கிற மாதிரி ஜா.ரா. இல்லை. ஜா.ரா.வுக்கு இந்தளவுக்கு நுணுக்கமான ஜோதிட விஷயங்கள் எல்லாம் தெரியாது என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

  என்னதான் காப்பி பேஸ்ட், புக்கிலிருந்து உருவினாலும் இடையிடையே வார்த்தைகளை போட்டு எழுதனும்னா கொஞ்சமாச்சும் சரக்கிருந்தாதான் முடியும்.

  போலி நம்ம தளத்தை ரொம்ப ஆர்வமா படிச்ச, படிக்கிற ஆளுன்னு அவரோட ஆதங்கத்திலிருந்து நல்லாவே தெரியுது. நீங்களே உங்க தளத்தில் அப்டேஷனுக்கு மறந்தாலும் போலி மறக்கமாட்டாருன்னும் புரியுது.

  உங்களில் ஏதோ ஒரு சில விஷயங்கள் அந்த மனிதருக்கு பிடிக்காமல் இப்படி சுந்தரேசன் அவதாரம் எடுத்து விளையாடுறாருன்னு நல்லாவே தெரியுது.

  ப்ரீயா உடுங்க. எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்கலாம்.

   S Murugesan said:
   January 11, 2012 at 9:14 am

   ஹய்யோ ஹய்யோ !
   என்ன ஜா.ரா ! உங்களை டைம் பாஸுக்குன்னே வச்சிருக்கம். இது கூட உறைக்கலியா?

    Mani said:
    January 11, 2012 at 9:29 am

    அண்ணே! நான் நிஜம் போலியில்லை. உங்களுக்கு மின்னஞ்சலில் இதே கமெண்டை அனுப்புகிறேன்.

    டவுசர் பாண்டி said:
    January 11, 2012 at 12:08 pm

    //எனக்கு எப்பவோ புரிஞ்சிரிச்சி போலி யாருன்னு. அண்ணே! நாம யாரு நம்மகிட்டேயா, ஒருத்தன் எழுத்து நடை, உடை பாவனைன்னு அவன் மூஞ்சிய வச்சே கண்டுபுடிக்கிற ஆளு நாம.//

    மணி அண்ணே! நம்மள மாட்டி விட்டுராதீங்கணே! உங்களுக்கு 108 தேங்காய் வேண்டுமென்றாலும் உடைக்கிறேண்ணே. நம்மள பற்றி எதையும் போட்டு உடைச்சிராதீங்கணே.

    //கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு கூட தாக்குபிடிக்காது. எப்பேர்பட்ட திருடனும் வலிய வந்து ஆதாரத்தோடு மாட்டிக்குவான்.//

    அச்சச்சோ… வாயக்குடுத்து வாய புண்ணாக்கிட்டேனா! நானாகத்தான் வலையில சிக்கினேனா? அய்யகோ.

    //அந்த போலி நீங்க நினைக்கிற மாதிரி ஜா.ரா. இல்லை. ஜா.ரா.வுக்கு இந்தளவுக்கு நுணுக்கமான ஜோதிட விஷயங்கள் எல்லாம் தெரியாது என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.//

    ஹி…ஹி…ஹி…. போங்கணே எனக்கு வெட்கமாக இருக்கு. இருந்தாலும் ரொம்பத்தான் புகழுறீங்க. எனக்கு திருஷ்டி சுத்தி போடணும். இந்த வார்த்தையை முருகேசன் நைனா காதுல நல்லா அழுத்தி சொல்லுங்க (காத்தை கடிச்சிராதீங்க்ணே). இருந்தாலும் செவிடன் காதுல சத்தம் கேட்டுறும் என்றீர்களா?

    //என்னதான் காப்பி பேஸ்ட், புக்கிலிருந்து உருவினாலும் இடையிடையே வார்த்தைகளை போட்டு எழுதனும்னா கொஞ்சமாச்சும் “””சரக்கிருந்தாதான்””” முடியும்.//

    ஹி…ஹி…தேங்க்சுணே. நல்லா சத்தமாக சொல்லுங்கணே.

    //உங்களில் ஏதோ ஒரு சில விஷயங்கள் அந்த மனிதருக்கு பிடிக்காமல் இப்படி சுந்தரேசன் அவதாரம் எடுத்து விளையாடுறாருன்னு நல்லாவே தெரியுது.//

    ஆமாம்ணே. என்னுடைய கஷ்டம் உங்களுக்கு புரியறது. ஆனால் எஸ்.எம்.அபிஷ்டுவுக்கு புரிய மாட்டேன்றதே. லோகத்துல இப்படியும் மனுஷாள் இருப்பாழா!

    //ப்ரீயா உடுங்க. எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்கலாம்.//

    அதானே. இப்ப சொன்னீங்க பாருங்க இது நியாயமான பேச்சு. பூனை என்ன நிறத்தில் இருந்தால் என்ன. நமக்கு எலி பிடிக்கணும். அவ்வளவுதான். நன்றாக ஐயா காதில் உரைக்கும்படி சொல்லுங்கணே. வர்ட்டா… 🙂

    டவுசர் பாண்டி said:
    January 11, 2012 at 12:10 pm

    யப்பா டவுசரு இது உன் வேலைதானா? எதுக்குப்பா இந்த வேல?

    Sugumarje said:
    January 11, 2012 at 12:11 pm

    யப்பா டவுசரு இது உன் வேலைதானா? எதுக்குப்பா இந்த வேல?

  சுந்தரேசன் said:
  January 11, 2012 at 1:21 pm

  நான் யார் என்பதை மணி அண்ணன் மறுமொழியை படித்த உடனே எனக்கு தேள் கொட்டிருச்சு. இன்னமும் கொட்டிக்கொண்டுதான் உள்ளது. அதனால் தான் குற்றமுள்ள என் நெஞ்சிலிருந்து என் குமுறலை கொட்டுகின்றேன். மணி அண்ணனுடைய கணிப்பு என்னுடைய படைப்புகளுக்கு கிடைத்த வெற்றியாகவும், எழுத்து நடைகளுக்கு கிடைத்த பரிசாகவும் கருதுகின்றேன். தீர்க்கதரிசியான திரு.மணி அண்ணனுடையை கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு என்னுடைய பதிவுகள் வராது. அப்பொழுதாவது திரு. முருகேசன் ஐயாவுக்கு உண்மை விளங்குகிறதா என்று பார்ப்போம்.

  நான் என் தவறை உணர்ந்தது போல் திரு.முருகேசன் ஐயா அவர்களும் கள்ளங்கபடமறியாத திரு.ஜானகிராமன் என்ற நபரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால்தான் அடுத்து என்னுடைய படைப்புகள் வெளியாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  “அண்ணனாருந்தாலும் தம்பியாருந்தாலும் நாயம் நாயந்தாண்டா. பசுபதி வண்டிய எடுரா”

   S Murugesan said:
   January 11, 2012 at 2:15 pm

   சுந்தரேசன் ஐயா ..

   // திரு.ஜானகிராமன் என்ற நபரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். //
   இந்த ஒரு வரி போதும். நீங்க தான் ஜா.ரா ங்கறதுக்கு. ஜீரோ கிரைம் போலீஸ் கூட தேவையில்லை. உண்மையிலயே நீங்க வேறு ந்பர்னா உங்க செல் நெம்பர் கொடுங்க. நான் பேசறேன். ( உங்க ஜாதகத்தை தோண்டி எடுக்கிறேன்) உங்க ஃபோட்டோவை மெயில் பண்ணுங்க. அடுத்த பதிவுல பப்ளிஷ் பண்றேன்.

   மேட்டர் தெரீமா ஒரு ஃபோட்டோவை கொடுத்தா அந்த ஃபோட்டோ எந்தெந்த வெப்சைட்ல பப்ளிஷ் ஆயிருக்குன்னு சொல்ற சைட் எல்லாம் இருக்கு.

   டுபாகூர் ஃபோட்டோல்லாம் கொடுத்துராதிங்க மாட்டிக்குவிங்க

    சுந்தரேசன் said:
    January 11, 2012 at 4:10 pm

    முருகேசன் ஐயா… மேலே உள்ள மறுமொழி என்னுடயதில்லைய்யா. வேற யாரோ என்னுடைய நாமத்தை போட்டுட்டாங்கையா.

    S Murugesan said:
    January 11, 2012 at 5:10 pm

    அடடே…….. திருப்பதிக்கே லட்டா?

    Mani said:
    January 11, 2012 at 5:52 pm

    அண்ணே,

    உங்க மேலயும் எனக்கு சந்தேகமா இருக்குணே. ஶ்ரீனிவாச ஐயங்காருடைய நண்பராக சுந்தரேசன் இருப்பாரோ. நாங்க குட்டைய குளப்பி குளப்பித்தான் மீனைப் புடிப்போம். இருந்தாலும் உங்களுடைய சுந்தரேசன் ரோல் நல்லாருக்குணே. 

    S Murugesan said:
    January 12, 2012 at 2:32 am

    வாங்க மணி..
    பஞ்சாங்கம்னா திதி,வாரம்,கரணம்,நட்சத்திரம்,யோகம் எல்லாம் சேர்ந்ததுதான் பஞ்சாங்கம். ஒரு நட்சத்திரம் அதுவும் பொஞ்சாதி,மச்சினி நட்சத்திரம்லாம் எஃபெக்ட் பண்ணும்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதறதெல்லாம் சல்லி வேரை பிடிச்சுக்கிட்டு ஜல்லியடிக்கிற சமாசாரம்..

    நாம ஆணிவேரை பிடிச்சுத்தான் அசைப்போம்.. உங்க ஜட்ஜ்மென்ட் ரெம்ப தப்பு..

    சுந்தரேசன் said:
    January 12, 2012 at 2:23 am

    ஐயா!

    மணி அண்ணன் புறா மூலம் அனுப்பிய ஓலையை படித்துவிட்டு ஒரு நல்ல முடிவை எடுங்கள் ஐயா. ஓலையில் உள்ள கருத்துக்களை ஜீரணிக்க முடியாமல் புறாவை ஜீரணித்து விடாதீர்கள் ஐயா.

    மேலே உள்ள 372ஐ என் கணித ரீதியாக பார்க்கும் பொழுது விதி எண்ணாக 3 வருகிறது. . தயவுசெய்து குருவை காணவில்லை என்று கூறாதீர்கள். பிராமணனை காணவில்லை என்று கூறுவது போல் உள்ளது. ஜெயா டிவியில் “எங்கே பிராமணன்” என்ற சீரியலை பாருங்கள் ஐயா. உங்கள் மனம் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    S Murugesan said:
    January 12, 2012 at 2:30 am

    //ஜெயா டிவியில் “எங்கே பிராமணன்” என்ற சீரியலை பாருங்கள் ஐயா. உங்கள் மனம் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.//

    அவனா நீயி..

    கொய்யால ..அவாளுக்கு ( வெறுமனே) பிறந்தாலே (ஜஸ்ட்) பிராமணன் ஆகமுடியாது – இதுல கட்டிண்டா.. ஆகவே முடியாதுரா அம்பி..

    அவாளே பூணூலை டீஷர்ட் உள்ளாற போட்டுட்டுண்டுர்ரா.. உனக்கு ஏன் இந்த கொலை வெறி..

    Mani said:
    January 12, 2012 at 8:24 am

    //ஒரு நட்சத்திரம் அதுவும் பொஞ்சாதி,மச்சினி நட்சத்திரம்லாம் எஃபெக்ட் பண்ணும்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதறதெல்லாம் சல்லி வேரை பிடிச்சுக்கிட்டு ஜல்லியடிக்கிற சமாசாரம்.. நாம ஆணிவேரை பிடிச்சுத்தான் அசைப்போம்..//

    அண்ணே!

    என்னணே நாட்டு நடப்பு தெரியாத ஆளா இருக்குறீங்க. எங்க தொட்டா ஷாக் அடிக்கும்னு முன்னெச்சரிக்கைகளை தெரிஞ்சிக்கிறது ரொம்ப முக்கியம்ணே. ” சனம் இதுக்குத்தானே அம்முது”

    இதுகளை வச்சுத்தானே நிறைய பத்திரிக்கைங்க காலத்தை ஓட்டுது

  Mani said:
  January 11, 2012 at 4:32 pm

  ///இவர் சாதாரண மனிதர் போல் எனக்கு தெரியவில்லை. பஞ்ச பூதங்களையும் அடக்கியாள தெரிந்த, சர்வ ஜீவராசிகளுக்கும் அப்பாற்பட்ட, இறையின் அவதாரமாகவே தெரிகின்றார்.////

  சுந்தரேசன் ஐயா இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லீங்களா?. இப்படியே போயிகிட்டுருந்தா முத்திடும் அப்புறம் எந்த வயித்தியத்துக்கும் கட்டுப்படவே படாது.

  லோகத்து கெட்ட வார்த்தையெல்லாம் இறைஅவதாரம் பேசுற பேசறாங்களாண்ணா? ஓ! நித்யா மாதிரியான இறைஅவதாரமா இருக்குமோ. 🙂 🙂

  இறை அவதாரமே மொதல்ல உங்க மனதை அடக்கியாள கத்துக்கங்க. அப்புறமா சகல ஜீவராசிங்க கிட்ட நம்ம பவர காட்டலாம்.

  ஏதோ ஜோதிட பதிவுகளை எழுதறீங்கன்னு கொஞ்சம் இறங்கி வந்தா உங்களை ரொம்ப ஏத்திவுடுறீங்களே. எங்கே உங்க திறமையை சோதிச்சிருவமா? போட்டி வச்சிருவமா? தல கூப்டுங்க வினோத்தை.

  ///இந்த சுந்தரேசன் என்பவர் நிச்சயம் குண்டலினி சக்தி கிளம்பியவராக இருப்பார் என்பது நன்கு புலனாகிறது. ///

  குண்டியில அடச்சே குண்டலினியில சக்தி கிளம்பிருச்சோ. அதான் தலை கால் புரியாமல் ஆட வைக்குதோ. 🙂 🙂

  ///அவர் கூறிய நுணுக்கமான விஷயங்கள் அனைத்தும் பூமியில் வாழும் ஜோதிடர்கள் (நீங்கள் உட்பட) யாருமே அறிந்திராத விஷயம்தான்.///

  அட இப்படி நுணுக்க(த்த) தெரிஞ்சவர பக்கத்துல வச்சிகிட்டு எங்கங்கயோ அலஞ்சி நேரத்தை வேஸ்ட் பண்ணிபுட்டேனே. ஆகாயத்துல வாழுற ஜோசியரை இப்பதான் ஆவி ரூபத்துல பார்க்க முடியுது. ஐயா ஒங்ககிட்ட ஜோசியம் பார்க்கிறதுக்கு எங்கய்யா வரனும். போனு, மெயில் ஐ.டி ஏதுனா இருந்தா கொடுங்களேன். டெஸ்ட் பண்ணி பார்ப்பம். பயந்துராதீங்க ஜாதகத்தை தான் சொன்னேன்.

  பாத்து நுணுக்கி கரைச்சி குடிங்கோ. அப்புறம் அகாலத்துல வவுத்த கலக்க போகுதுங்கோவ்.

  பி.கு. முருகேசன் அண்ணாச்சி இது போலி கமெண்ட் இல்லை. என்னோட மெயில் ஐ.டி.யை மாத்தி குடுத்திருக்கேன். கிராஸ் செக் பண்ண வசதியா இருக்கும்.

   S Murugesan said:
   January 12, 2012 at 4:47 am

   மணி அண்ணே !
   நீங்க டெக்னிக்கலா விசயம் தெரிஞ்சவருங்கறதால கேட்கிறேன். ஒரே ஐ.பி நெம்பர்ல பலர் வரமுடியுமா? கீழே உள்ள சுட்டிகளை க்ளிக் பண்ணி பாருங்க. எனக்கு கண்ணை கட்டுது    Mani said:
    January 12, 2012 at 5:15 am

    அண்ணே! நீங்க அனுப்பிய லிங்கை பார்த்தேன். பிராபளம் வெரி சிம்பிள்.

    அந்த போலி ஒரே இடத்தில் ஒரே ஐ.பி.யில் இருந்து வேறு வேறு நபர்களின் பெயரில் வந்து கமெண்ட் போட்டிருக்கிறான்.

    ஆமாம் ஒரு சிறிய சந்தேகம் இருக்கிறது. தனிமெயிலில் வருகிறேன்.

    Mani said:
    January 12, 2012 at 6:36 am

    முருகேசன் அண்ணாச்சி!

    நீங்க தசாவதாரம் படம் பார்த்ததில்லையா? அவ்வளவு ஏன். ஒரே பஸ்சுல நிறைய பேர் பயணம் செய்வதில்லையா? ஒரே முகவரியில் பலர் வசிப்பதில்லையா? அதுபோல் தான் ஒரே ஐ.பி. அட்ரஸில் வரலாம் இல்லையா?

   Vinoth said:
   January 13, 2012 at 2:32 am

   //தல கூப்டுங்க வினோத்தை.//

   தல… வணக்கம் தல… போட்டிய ஆரம்பிச்சி சுந்தரேசன் அண்ணனை பொட்டி படுக்கையோட ஓட விட்டிருவோமா?

   அவரு போட்டிக்கு வர்றாரான்னு கொஞ்சும் கேட்டு சொல்லுங்க.

  Mani said:
  January 11, 2012 at 5:23 pm

  /////////////
  1 . ஜாதக யோகங்களுக்கு 144 ஏன்? : சுந்தரேசன்
  2. கோட்சார பலன்கள் கணிப்பது எப்படி?: சுந்தரேசன்
  3. அஸ்ட்ராலஜியில் அனாட்டமி (உடலியல்): சுந்தரேசன்
  4. பெண் மூலம் நிர்மூலமா? : சுந்தரேசன்
  5. சுக்கிரன் – ஒரு திகில் ரிப்போர்ட்
  6. விபத்து : சுந்தரேசன்
  7. ஆகாத நட்சத்திரங்கள் : சுந்தரேசன்
  //////////////////////////////

  இவைகள் நம்ம போலி கமெண்ட் புகழ் சுந்தரேசன் எழுதிய பதிவுகள். இந்த பதிவுகளில் தான் பூமியில் நாம் இதுவரை கண்டிராத ஜோதிட கருத்துகள் பொதிந்து கிடக்கிறது.

  இந்த பதிவுகளுக்கு தான் நம்மாள் அலம்பல் ரொம்பவே அதிகமா போயிருச்சு. கொஞ்சம் டீடெயிலா பார்த்துருவமா? ஐயா சுந்தரேசன் நாங்க ஆட்டத்துக்கு வரலாமா? இல்லை நீங்களே சேம் சைட் கோல் போட்டுக்கறீங்களா?

  உத்தரவு கொடுத்தீங்கன்னா குறுக்கு விசாரணையை ஆரம்பிச்சிரலாம். ஆனா ஒரு கண்டிஷன் கமெண்டை உங்க பேரிலேயே போடனும். மத்தவங்க பெயரில் போட்டு உங்களை நீங்களே புகழ்ந்துக்க கூடாது சரியா.

   Vijay said:
   January 12, 2012 at 11:32 am

   சார் வணக்கம். நான் இந்த இணையத்தை ரெகுலராக வாசித்து வரும் வாசகன். இந்த இணையத்தில் வெளி வந்த பதிவுகளிலேயே நீங்கள் குறிப்பிட்ட அந்த ஏழு பதிவுகள்தான் குறிப்பிடத்தக்க பொக்கிஷம் போல் உள்ளது. நானும் ஒரு பதிப்பக அலுவர்தான். தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் ஜோதிட நூல்களை படித்திருக்கிறேன். ஆனால் இந்தளவுக்கு விளக்கமாக கூறியதை என்னுடைய சர்வீஸ்லையே இப்பொழுதுதான் முதன்முறையாக பார்க்கிறேன்.

   இது சாதாரண மனிதருடைய கட்டுரையே அல்ல. அந்த வராக மிஹிரரே திரு.சுந்தரேசன் அவர்கள் வடிவில் வந்து பதிவுகள் எழுதுவதைப்போல் உணர்கிறேன்.

   தொடர்ந்து அவரது பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    S Murugesan said:
    January 12, 2012 at 5:18 pm

    சுந்தரேசன்@ ஜா.ரா !
    பு………….ல்……….லரிக்குதுய்யா..

    கிருஷ்ணா said:
    January 13, 2012 at 6:16 am

    ////இது சாதாரண மனிதருடைய கட்டுரையே அல்ல. அந்த வராக மிஹிரரே திரு.சுந்தரேசன் அவர்கள் வடிவில் வந்து பதிவுகள் எழுதுவதைப்போல் உணர்கிறேன். ////
    ROFL

  Surya said:
  January 12, 2012 at 2:20 am

  my earlier comments and your reply is also missing

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s