2012 ல் நம் (?) எதிர்காலம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நாடு எக்கேடு கெட்டா எனக்கென்ன .. நான் இன்னொரு ஃப்ளாட் வாங்கினா போதும், சனம் எக்கேடு கெட்டா எனக்கு என்ன நான் இன்னொரு கார் வாங்கினா போதும்னு நினைக்கிறவுகளும் இருக்காய்ங்க. ஆனா இது அசாத்தியம். இன்னைய க்ளோபலைசேஷன் காரணமா நம்ம எல்லாரோட வாழ்க்கையும் பின்னி பிணைஞ்சு போச்சு.

இது என்னமோ புதுசா இன்னைக்கு நடந்த ஒரு மேட்டர் கடியாது. படைப்பின் ஆரம்பமே ஒரு செல் அங்கஜீவியான அமீபாலருந்துதேன். அந்த அமீபாலருந்து வந்த பார்ட்டிங்க தான் நாம எல்லாரும். டார்வின் தியரி பிரகாரம் எல்லா மிருகங்களுடைய மணம்,குணம்,காரம்லாம் நமக்குள்ள புதைஞ்சிருக்கு.

நீ தனி , நான் தனிங்கறதெல்லாம் நம்ம அகந்தையின் திருவிளையாடல். எனக்குள்ளயும் ஒரு ஜா.ரா இருக்காரு. ஜா.ராவுக்குள்ளயும் ஒரு முருகேசன் நிச்சயம். நாம ஜா.ராவை தட்டி வச்சிருக்கோம். ஜா.ரா நம்மை தட்டி தூங்க வச்சிருக்காரு.

நாம நல்லாருக்கனும்னா நாம எல்லாருமே நல்லா இருக்கனும். யாவாரம்னா கொஞ்சம் “ஏமாத்து” இருந்தே ஆகனும். இது அந்த காலம். யாவாரம்னாலே ஏமாத்துதேன்.அது இந்த காலம்.

எப்பம் நம்ம நாடு அன்னிய படையெடுப்புகளுக்குள்ளானதோ அன்னையிலருந்தே நமக்குள்ளருந்த “குட்னெஸ்” எல்லாம் சப் கான்ஷியஸுக்கு போக ஆரம்பிச்சுருச்சு. பிரிட்டீஷ் பரிபாலனம் அதை அன் கான்ஷியஸுக்கு கொண்டு போயிருச்சு. இன்றைய க்ளோபலைசேஷன் அதை அதல பாதாளத்துக்கு கொண்டு போயிருச்சு.

ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி வேதகாலம் அது இதுன்னு ஜல்லியடிக்க மாட்டேன்.ஆனால் ஒருத்தரை ஒருத்தர் சுரண்டாம பிழைக்க முடியாதுதேன். இல்லேங்கலை.ஆனால் அந்த சுரண்டல் நாசூக்கா இருக்கனும். சுரண்டப்பட்டவனுக்கு ஒரு வித சைக்கலாஜிக்கல் சேட்டிஸ்ஃபேக்சனையாவது தரணும்.

வேத காலத்து சாதீயம் , பார்ப்பன மேலாண்மைல்லாம் இன்னைக்கு ஓரளவு கட்டுப்பட்டிருக்கு. இப்படி கட்டுப்பட்டதாலயே இப்படி ஒரு இழவு இல்லவே இல்லைங்கற க்ரூப்பும் கிளம்பியிருக்கு.அது வேற கதை..

கமிங் டு தி பாய்ண்ட் அகெய்ன்.

நம்ம எல்லாரோட எதிர்காலமும் பின்னி பிணைஞ்சிருக்கு. இதை எந்த கோணத்துலருந்தும் நிரூபிக்க நம்மால முடியும். இதுல இன்றைய ஜன நாயக அமைப்பில் நம் எதிர்காலங்களை தீர்மானிக்கிற இடத்துல சில பார்ட்டிங்க இருக்காய்ங்க. அவிகளோட முடிவுகள் நம் வாழ்க்கையை புரட்டிப்போட வாய்ப்பிருக்கு.

அடுத்து இந்த பாழாபோன சினிமா. நம்ம இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் இந்த சினிமா உலக பிரமுகர்களின் சிந்தனை போக்கு நம் இளைஞர்களை பெரிதும் பாதிக்கிறதை மறுக்கவே முடியாது.

அவிக நல்லாருந்தா நாம இல்லாருப்போம்ங்கறதுக்கு கியாரண்டி இல்லை தான். ஆனால் அவிக நேரம் கெட்டு – நாறிப்போற நேரம் வந்து தொலைச்சா மொதல்ல நாறிப்போக போறது நம்ம வாழ்க்கை தான்.

புர்ச்சி தலைவிக்கு கெட்ட நேரம் வந்து அவப்பேர் வாங்கற நிலைமை வந்தா பால் விலை உயர்வு,பஸ் கட்டண உயர்வுல்லாம் நம்ம தலையில தானே விடியுது.

இந்த ஒரு கான்செப்ட்லதான் நேத்து 2012 ல் பிரபலங்கள்னு ஒரு குரல் பதிவை போட்டிருந்தேன். பலரும் இதை டெக்ஸ்டா கேட்டு மெயில் அனுப்பிக்கிட்டே இருக்காய்ங்க.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்கறதால அந்த பதிவை டெக்ஸ்டா தந்திருக்கேன் படிங்க..

* முதல்வர் ஜெயலலிதா:

இவங்களுக்கு 2011 பிப்ரவரி 3ம் தேதியில் இருந்து 2012 ஆகஸ்டு 3ந் தேதி வரைக்கும் ராகு திசையில் சந்திரயுக்தி. சந்திரன் என்றால் இன்னிக்கு இருப்பவன் நாளைக்கு இல்லைங்கிற கதை. சந்திர புக்தி முடியும் வரை இவர் குடும்பாதிபதி என்பதால் அம்மாவின் குடும்பத்தினருக்கு பாதிப்புகள் ஏற்படும். குடும்பம்னா சொந்த குடும்பத்தை பற்றி மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவங்க பெரிய அரசியல் தலைவியா இருப்பதினால் கழகத்தையே ஒரு குடும்பமா நடத்துறதுதால, கட்சி தொண்டர்களுக்கு கூட இந்த சந்திரபுக்தி முடியறவரைக்கும் கொஞ்சம் சிக்கல்தான்.

ராகுதிசையில் செவ்வாய் புக்தி 2012 ஆகஸ்டு 3ந் தேதி ஆரம்பம் ஆகப்போகு. அந்த செவ்வாய் புக்தி 2013 ஆகஸ்டு 21ந் தேதி வரைக்கும் நடக்கப்போகுது.இந்த செவ்வாயை பொறுத்த வரையில் இவங்க ஜாதகத்துல ஒரு சிக்கல் இருக்கு. செவ்வாய் என்றால் சகோதர சகோதரிகளை காட்டும். இதனால் தான் அம்மா முன்னெச்சரிக்கையாக தன் உடன்பிறவா சகோதரிக்கு டாடா சொல்லி அனுப்பிவைத்துவிட்டார்கள்.

இருந்தாலும் கார்டனுக்கு உள்ளே பின்னப்பட்ட சதிவலைகள் கார்டனுக்கு வெளியேயும் தொடரக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கு. எதிரிகள் எல்லோரும் ஒன்று சேர பரஸ்பரம் ஒத்துழைக்க ஒரு வாய்ப்பு இங்கு ஏற்படுகிறது. இந்த கால கட்டத்தில் அம்மாவின் ஆட்சிக்கும், கட்சி க்கும் பாதிப்பு ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

* ராகுல் காந்தி

இவர் ஜூன் 19ந்தேதி 1970ல் பிறந்திருக்கிறார். இவருடைய உயிர் எண் 1.இவருடைய வாழ்க்கைய பத்து பத்து வருஷமா பிரிச்சிக்கணும். இதுல 3வது பத்து, 6ஆவது பத்து வருடங்கள் நல்லா இருக்கும் , இவர் நூறு வருடம் வாழ்ந்தால் 10 ஆவது பத்து வருடங்கள் கூட நல்லா இருக்கும்.

ஆனா இப்போ இவருக்கு இப்போ 5வது ரவுண்டு நடந்துகிட்டு இருக்கு. இவருக்கு 50 வயசுமுடியறது வரை சும்மா டென்ஷன், அவமானங்கள், நிராசைகள் இதுதான் நடக்கும். இவருக்கு 60வயது முடிஞ்சி 6வது ரவுண்டு ஆரம்பிச்சா, அப்போது தான் இவரால் எதிலாவது சோபிக்க முடியும்.

இவருடைய ஜாதகப்படி சந்திர தசையில் சனி புக்தி நடக்குது. இது 2011ல் ஜூன் மாதமே தொடங்கிவிட்டது. 2013 ஜனவரி 30 வரைக்கும் நடக்கப்போகுது.ஏறுனா ரயில் இறங்குனா ஜெயில் இதுதான் இந்த சந்திரனுக்கு சொல்ல வேண்டிய பலன். நண்பர்கள் விரோதியாகவும் விரோதிகள் நண்பர்களாவதும், உறவுகளில் நிலையற்ற தன்மை இருக்கும்.

மிதுனலக்ன ஜாதகத்தில் வாஸ்தினாதிபதி சந்திரனே 6ல் இருப்பதால் வாயை குடுத்து எதையோ
புண்ணாக்கிக்கற கதை தொடர்ந்து நடக்கும். சந்திர திசையில் சனி புக்தி முதல் பாதியில் இவரை ஒரு வழி ஆக்கிடும். பொருளாதார ரீதியில், சமூக ரீதியில், மற்றும் அரசியல் ரீதியிலும் இவருக்கு பாதிப்பு வரலாம்.

*விஜயகாந்த்:

விஜயகாந்த் ஜாதகத்துல லக்னாதிபதியே எட்டுல இருக்காரு. கொஞ்சம் சங்கடம்தான். ஆனால்,
கும்ப லக்னத்தை பொருத்தவரை சனி விரயாதிபதியாவும் இருக்காரு. அதனால விரயாதிபதி 12 ல்
மறைந்த யோகமும் வேலை செய்யனும்.

இதனால், முதல் பாதியில் தீமையையும் அடுத்த பாதியில் நன்மையையும் செய்கிறது.
எந்த வயசுல ஜாதகருக்கு கால், நரம்பு, ஆசனம் சம்பந்த பட்ட பிரச்சினை உச்சக்கட்டத்துக்கு போகுதோ
அங்கருந்து அந்த வயசைப்போல இரண்டு மடங்கு வாழ்வாரு. வாழ்க்கையின் ரெண்டாவது பாகம் ஆரம்பிக்கும். அந்த ரெண்டாவது பாகம் ராஜயோகத்தை தரும்.

ரிஸ்க் எல்லாம் ரஸ்கு சாப்பிடற மாதிரின்னுட்டு, சம்பாதிச்ச காசையெல்லாம் ‘செல்ஃப் ஷேவ்’ பண்ணி
தொலைச்சுக் கட்டிருவாருங்கோ. இப்பம் நடக்கிற தசையே புத தசை தான். இதனோட பலன் என்னன்னா,
கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும். எதிரி ஒழியனும்னு நினைச்சா கடன் தீராது. கடன் தீரனும்னு
நினைச்சா எதிரி ஒழியமாட்டான்.

ஒரு ரெண்டே கால் வருசம் ஏறுமுகம்னா அடுத்த ரெண்டேகால் வருஷம் இறங்கு முகம் ஆரம்பமாயிரும்.
மேலும், சந்திரனுக்கு ரோகாதிபத்யம் வேற கிடைச்சிருக்கு. இதனால எதிரி நண்பனாதல் – நண்பன்
எதிரியாதல் எல்லாம் இவர் லைஃப்ல சகஜமப்பா.

சசி அண்ட் கோ’ வால அம்மாவுக்கு பிரச்சினை வந்தா, அந்த சமயம் பார்த்து அம்மாவுக்கு கை
கொடுத்தாலும் ஆச்சரிய பட வேண்டாம். அட.. கட்சியை கலைச்சுட்டு அம்மா கட்சியில
ஐக்கியமாயிட்டா கூட ஆச்சரிய வேண்டாம்.

மே 8 ம் தேதி வரை குரு 6 ல் இருக்காரு. ஆக, எதிர்கட்சியிலதான் கிடக்கனும். குரு 7 க்கு வந்த
பிற்பாடு அம்மாவோட ஓரளவு ஒத்துப்போக வாய்ப்பிருக்கு.

மே 16 முதல் ராகு, கேது 2/8 ல இருந்துக்கிட்டு சகட்டு மேனிக்கு சீறச்செய்வாங்க. கடுமையான
சட்டம் பாயாம பார்த்துக்கனும்.

உண்மையை சொல்லியிருக்கோம். நமக்கு விசயகாந்துக்கும் வரப்பு தகராறு – வாய்க்கால் தகராறு
ஏதும் கிடையாது. விஜயகாந்த் மேல ஒரு மதிப்பு கூட உண்டுங்கண்ணா.

எச்சரிக்கை:

கீழே குறிப்பிட்டுள்ள பிரபலங்களின் எதிர்காலம்லாம் எண்கணிதப்படி, அதுவும் என் சோந்த
ஃபார்முலாவான ஆஸ்ட்ரோ- நியூமராலஜி அடிப்படையில் கணிச்சது.இவற்றில் நான் குறிப்பிட்டு
பலன் சோன்ன எண்களுக்குரிய கிரகங்கள் ஜாதகர்களின் ஜாதகங்களில் பலம் பெற்றிருந்தால்
இவை 100 சதம் கூட பலிக்கலாம்.

ஒரு வேளை விதிவிலக்காக மேற்படி கிரகங்கள் பலவீனப்பட்டிருந்தால் சில கேஸ்ல 70 சதவீதம் கூட
பலிக்காமல் போகலாம். அப்படியும் 30 சதம் சக்ஸஸ் ரேட் கியாரண்டி.

**எண் கணிதப்படி**

* உள்துறை அமைச்சர் சிதம்பரம்

2012ம் வருடம் உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு எப்படி இருக்குனு பார்ப்போம். இவர் செப்டம்பர்
16, 1945ல் பிறந்திருக்கிறார். இவருடைய உயிர் எண் 7. இவருக்கு 67 ஆவது வயது நடக்குது. 67ஐ ஏழாக
பிரித்தால் இப்ப 63 வயதிலிருந்து 70 வயது வரைக்கும் 10 வது ரவுண்டு.

10 என்பது கரும ஸ்தானம். உயிர் எண் கேது. இந்த பதவிகள் கிடைச்சது தனக்கு ராஜ யோகம்னு
நினைச்சிருப்பாரு. என்ன பிரச்சனை என்றால், கேது மோட்ச தாரகர். இந்த கேதுவினுடைய 10வது
ரவுண்டு இவருக்கு 63 வயதில் ஆரம்பிச்சிருக்கு.

இவர் வாழ்க்கையில் விரக்தி அடையணும். ஞானத்தை தேடணும். இவர் கோயில் கோயிலா சுத்தணும்.
அதுக்காக தான் இவருக்கு இந்த பதவியே வந்திருக்கு. இவருக்கு 70 வயது முடியும் வரைக்கும் இவருடைய வாழ்க்கை ஞானத்தை தேடுவதிலேயே போகும்.

ஞானத்தை இவர் தேடி போகலைனா ஞானம் இவரைத் தேடி வரும். ஞானம் எப்படி வரும்? நாம
போககூடாது என்று நினைக்கும் இடத்திற்கெல்லாம் போக வேண்டி வரும். அப்பதான் ஞானம் வரும்.
மனிதன் வாழ்நாளில் போககூடாது அப்படின்னு நினைக்கிற இடம் எது போலீஸ் ஸ்டேஷன், சுடுகாடு,
ஆஸ்பத்திரி, கோர்ட். அதனால், இந்த வருஷம் இவர் சாட்சி கூண்டில் ஏறுகிறாரா, அல்லது குற்றவாளி
கூண்டில் ஏறுகிறாரா அதுதான் கேள்வி. கூண்டு கூண்டு தான்.

இவருடைய ராசி என்ற வகையில், பூராடம் நட்சத்திரம், தனுசுராசிக்கு டிசம்பர் 25வரைக்கும் குரு
வக்கிரத்தில் இருந்தார். குரு வக்கிரத்தில் இருந்ததால் வாழ்நாளில் எப்பவும் எதிர்கொள்ளாத விஷயம் எல்லாம் எதிர்கொள்ள வேண்டியதாயிருச்சு. அதான் குரு வக்கிர பலன்.

முன்னுக்கு பின் முரணாக பேசுவது, ஞாபக மறதிங்கறது இதெல்லாம் சிதம்பரம் வாழ்க்கையில் இதற்கு
முன் எப்போதும் நடந்ததில்லை. ஆனால், இப்போது நடந்திருக்குது. இதற்கு காரணம் குரு வக்கிரமானது தான்.

இப்போது இந்த குரு வக்கிர நிவர்த்தி பெற்று மே மாசம் வரைக்கும் 5ம் இடத்தில் நல்லாவே இருக்கார்.
சனி 11ம் இடத்தில் இருக்கிறதால அதுவரை . தலை தப்பும். ஆனால் மே மாசம் குரு 6 க்குவந்துட்டா , இவர் கூண்டு ஏறியே ஆகணும். அ ஐ.சில அட்மிட் ஆகோனம்.

………………………….

திமுக பொருளாளர் ஸ்டாலின்

ஸ்டாலினின் பிறந்த தேதி மார்ச்1, 1953. இவருக்கு 59 வயது நடக்குது. இவர் வாழ்க்கையையும் பத்து
பத்தா பிரிக்கனும் இவருக்கு 2012 மார்ச் 1ந்தேதி வரைக்கும் 10 வது ரவுண்டு. 10 வது ரவுண்டு சூரியன் என்பதால் தூக்கம் பிடிக்காது, டென்ஷன், தலை, முக்கியமா முதுகெலும்பு போன்ற பிரச்சனைகள் வாட்டி வதைக்கும். இவர் 60 வயதை முடித்து விட்டால் இவர் அதிகாரத்தை அனுபவிப்பார். ஆனால், இந்த ஜாதகத்தின் எண் கணிதப்படி இவர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்ககூடிய குணத்தை பெற்றிருப்பார். இதனால் சினிமா, லாட்டரி இந்த மாதிரி ராகு காரகம் கொண்ட மனிதர்கள் இவரை சுற்றி சேர்வார்கள். அப்படி சேர்ந்தவர்களால் ஏற்படக்கூடிய அவமானம், அவப்பெயர் அதெல்லாம் அப்புறம் கதை. அவர்கள் இவருக்கும் கண்டிப்பாக பிரச்சினை ஏற்படுத்துவார்கள். இதுபோன்ற ஆட்களை விலக்கியே வைக்கவும்.
ஏறக்குறைய, என்.டி. ராமராவ் மாதிரி ஒரு நிலைமை (சொந்தக்காரவுகளே, நம்பினவுகளே ஆப்படிச்சுர்ரது)
ஸ்டாலினுக்கு வரலாம். ஜாக்கிரதையா இருக்கனும்.
…………………………….

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
இவருடைய பிறந்த தேதி ஜூலை 25 1939. கூட்டு எண் 36. 36 வில்லங்கம் பிடிச்ச நம்பர். 3 என்றால் குரு. 6 என்றால் சுக்கிரன். குரு, தேவ குரு. சுக்கிரன், ராட்சச குரு,இதனால இவருடைய சிந்தனையிலே ஒரு இரட்டைத் தன்மை இருக்கும்.

அதாவது தற்காலிக லாபங்கள் தருகிற சிந்தனையும் இருக்கும். அதே போல தொலைநோக்கு கொண்ட ஒரு சிந்தனையும் இருக்கும். இவர் எதை அடிப்படையா வைத்து செயல்படுவார் என்று கடைசி நொடி வரைக்கும் யாருக்கும் தெரியாது.

இவருக்கு இப்ப 73 வயது. இவருடைய வாழ்க்கைய ஏழு ஏழாக பிரிக்கும் போது 10 வது ரவுண்டு முடிச்சு 11 வது ரவுண்டுல இருக்கார். இந்த 11வது ரவுண்டு. இவருக்கு விரக்தியை, ஞானத்தை கொடுக்குமே தவிர ஆட்சி அதிகாரங்களை இவர் பெற வாய்ப்பு கிடையாது.

இவருடைய உயிர் எண் 7. இந்த 7ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ஒரு யோகி, சன்னியாசி யைப் போல.
வாழ்ந்தா ஹிட்டடிப்பாய்ங்க.இவர் எவ்வளவு வரைக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பற்றி கனவு காண்கிறாரோ
அதுவரைக்கும் அல்லல், அலைச்சல், கோர்ட், போலீஸ்டேஷன், ஜப்தி, வாரண்ட் ரெய்டு இதெல்லாம் நடக்கும்.
……………………………..

இந்திய ஜனநாக கட்சி தலைவர் பாரிவேந்தர்:

இவர் ஆகஸ்டு 24ம் தேதி 1942ல் பிறந்திருக்கிறார். இவருடைய உயிர் எண் 6. ஆறு என்ற எண் எப்படி ஏற்பட்டதுனு பார்க்கனும். 2+4=6 இதுல 2 என்றால் சந்திரன் 4 என்றால் ராகு. பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்றுத்தரவேண்டியவர் சந்திரன். இந்த ஆதரவுக்கு ஆப்பு வைப்பவர் ராகு.

இந்த இரண்டு எண்களும் சேர்ந்து இவருக்கு உயிர் எண்ணாக அமைந்துள்ளது. இவருடைய கூட்டு எண் 3. மூன்று என்றால் குரு. 6 என்றால் சுக்கிரன் . 6ஆம் எண் தனிப்பட்ட வாழ்க்கையில் போகங்களுடனான வாழ்க்கையை குடுக்கும்.

ஆனால், இந்த குரு அரசியல் ஈடுபாட்டை கொடுத்து அந்த சுகபோக வாழ்க்கைக்கு பிரச்சினையை ஏற்படுத்துவார். தற்சமயம் இவருக்கு 70 வயது நடக்கிறது. இவர் வாழ்க்கைய ஆறு ஆறா பிரிக்க இதை ஆறால் வகுக்கனும் 6X12 = 72. இவர் 12வது சுற்றில் இருக்கிறார். 12வது சுற்று இவருக்கு 66 வயதில் ஆரம்பித்தது 72 வயசு வரைக்கும் நடக்கும்.

72 வயது வரைக்கும் அரசியல் ஈடுபாடு காரணமாக தன்னுடைய சுகபோகங்களை, தனிப்பட்ட வாழ்விலான யோகங்களை எல்லாம் வீண் விரயமாகிரக் கூடிய ஒரு வாய்ப்பும் இருக்கு.

அதே நேரம் சுக்கிரகாரகம் கொண்ட மனிதர்கள் மேல் சிந்தனை செலுத்தினால் பேர்சொல்லும் வாய்ப்புள்ளது. அதாவது பெண்கள்,கலைஞர்கள் .இப்படி ஒர்க் அவுட் செய்தா எதிர்காலத்தில் மகளிர் துறை மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு மந்திரியாக கூடிய ஒரு வாய்ப்பும் இருக்கிறது.

………………………..

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்

இவர் டிசம்பர் மாசம் 5ந் தேதி 1966 பிறந்திருக்கிறார். 5 என்கிற எண் வியாபாரத்திற்கான எண். புதன் இந்த எண்ணிற்கான அதிபதி.அதனால் தான் இவர் ஒரு வியாபாரியாக பெரும் வெற்றியை அடைய
முடிஞ்சது. இவருடைய கூட்டு எண் 3. மூன்று என்றால் குரு. இவர் வெறும் வியாபாரத்தை பார்த்து கொண்டிருந்தால் இவர் வாழ்க்கை முடியும் வரை நிம்மதியாக இரு ந்திருக்கலாம்.

ஆனால், இந்த கூட்டு எண் 3 இவரை அரசியலுக்கு இழுத்தது. இந்த புதனுக்கும், குருவுக்கும் பகை. குரு என்றால் நீதிமன்றம். இதனால் இவர் நீதிமன்ற நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு.
இந்த வருடம் இவருக்கு 46 வயது நடக்குது. இதை 5 ஆக பிரித்தால் 50 வயதில் 10வது சுற்று முடிகிறது
கோச்சார ரீதியில் புதன் 10ல் வரக்கூடாது.

புதன் என்றாலே கமிஷன். இவங்க பார்த்த தரகர் வேலைகள், வாங்கிய கமிஷன்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த தொல்லைகள், லொள்ளுகள் இவருக்கு 50 வயது முடியும் வரை நீடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இவர் பிறந்த தேதி மே மாதம் 22ந்தேதி 1944. இவருடைய உயிர் எண் 4, கூட்டு எண் 9. இது அருமையாகாம்பினேஷன்.
9 என்றால் செவ்வாய், 4 என்றால் ராகு, செவ்வாய் என்றால் யுத்தம்,ராகு என்றால் ரகசியம்.

இவருடைய இயக்கம் தடைசெய்யப்பட்டு இவர் தலைமறைவுக்கு போனால் இவர் பெரும் புரட்சியை
ஏற்படுத்தகூடிய வாய்ப்புள்ளது.

ஆனால் கடைசியில் இவருக்கு கையளவு பூமி கூட மிஞ்சாது. தற்சமயம் இவருக்கு 68 வயது நடக்கிறது.
இந்த 68 யை 4 ஆக பிரித்தால் 48 வயதுக்கே முழு ரவுண்ட் வந்துட்டார். அதற்கப்புறம் 20 வருடம் கடந்து விட்டது.
இப்போது 6வது ரவுண்டில் இருக்கிறார். அதனால் இனி அடுத்து வரக்கூடிய 4 வருடங்கள் வைகோவுக்கு
ஏறுமுகமாக இருக்க வாய்ப்புள்ளது.

நடிகர் விஜய்

இந்த பிற்ந்தது ஜுன் 22ந்தேதி 1974. ராகுவின் ஆதிக்கம் கொண்ட எண். ராகு என்றால் ஏமாற்று,மோசடி.
தெரியாததை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்வது.

அப்பொழுது தான் இவர் சக்ஸஸ் ஆவார். நெஜமாலுமே தெரிஞ்சிக்கிட்டா சாப்டர் க்ளோஸ்.அதே போல்
ராகு என்றால் சினிமா, நடனம் என்றெல்லாம் வரும். அதனால் தான் இவர் சின்ன ரஜினி என்று பெயர்
வாங்குகிறார். உயிர் எண்ணும் 4.

கூட்டு எண் 4 ஆக இருப்பது ஒரு யோகம். இவருடைய ஜாதகத்தில் ராகு நிச்சயம் நல்ல இடத்தில் இருப்பார்.

ராகு காரகம் கொண்டவர்களுக்கு ஒரு சக்தி இருக்கும். தங்களுடைய எதிரிகளின் பலத்தை இவர்களுடைய
ஜாதகம் உறிஞ்சி எடுத்துரும்.

தற்சமயம் இவருக்கு 38 வயது நடக்கிறது. 38 வயதை நான்கு நான்காக பிரித்தால் இவர் 10வது சுற்றில்
உள்ளார். 40 வயது வரைக்கும் 10 ஆவது சுற்று இருக்கும்.

மாத்தி யோசிக்கிறேன், புதுமையாக செய்கிறேன் என்றும் தனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் தலையை
நுழைப்பது போன்று கோக்குமாக்காக செயல்படக்கூடிய ஒரு வாய்ப்பிருக்கிறது. ஆனால், 40 வயது
முடிந்தால் 8 வருடம் வரை இவரை யாரும் அசைக்க முடியாது. இவருடைய வெற்றி நடை தொடர வாய்ப்புள்ளது.

…………………………

நடிகர் அஜீத்

மே 1ந் தேதி 1971 ல பிறந்திருக்கிறார். இவருடைய உயிர் எண் 1, கூட்டு எண் 6 இந்த 1, 6 காம்பினேஷனை
பார்த்தால் 1வது எண்ணிற்கு சூரியன் காரகன், 6வது எண்ணிற்கு சுக்கிரன் காரகன்.

இவர் கார் ரேஸ் ,பைக் ரேஸ் என்று காசை விரயம் மாக்குவது, கை, கால் களை உடைத்துக் கொள்வது
இதற்கெல்லாம் காரணம் சூரிய சுக்கிர சேர்க்கை தான்.

இவர் அதையெல்லாம் விலக்கிவிட்டு சூரிய காரகம் கொண்ட வேலைகளை செய்யலாம். சூரிய காரக
வேலைகள் என்றால் கிராமம்,மலை, குவாரி பின்னணியில் தனி ஒரு மனிதனாக ஒரு பெரிய
அமைப்பை எதிர்த்து போராடுவது போன்ற கதாம்சங்கள் கொண்ட படங்களில் இவர் நடிக்கவேண்டும்.
அந்த படங்களில் கலை நோக்கு, கவர்ச்சி, கனவு, காட்சி காதல் பிண்ணனி, இதற்கெல்லாம் முக்கியத்துவம்
கொடுக்காமல், ஒத்தையாக, காடுகளில் , மலைகளில் ஒளிந்து வாழக்கூடிய படங்களில் நடித்தால்
இவருடைய வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கார் ரேஸ் போன்றவற்றை விட்டு விட வேண்டும். ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஒற்றை வீடு கட்டி
வாழவேண்டும். இது இவருடைய குடும்ப வாழ்க்கைக்கும், மனைவிக்கும் நல்லது. சினிமாவில் நம்பர்
1 ஆக வாய்ப்புள்ளது. தற்சமயம் இவருக்கு 41 வயது நடக்கிறது.

இவருடைய வாழ்க்கையை 10 ஆக பிரித்தால் 5 வது சுற்று நடக்கிறது. குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது,
அவப்பெயர், நிராசை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

……
நடிகர் சூர்யா:
நடிகர் சூர்யா:
இவர் ஜூலை 23 , 1975ல் பிறந்திருக்கிறார். பிறப்பு எண் 5, கூட்டு எண் 7 .ஐந்துக்குரிய புதன் வித்யா
காரகன்,7க்குரிய கேது மோட்ச காரகன். இவர் தியானம் ,யோகம் பயின்றால் ரெம்ப தெளிவா இருப்பாரு.

‘எமக்கு தொழில் கவிதை எழுதுதல்’ என்று பாரதியார் சொன்ன மாதிரி ‘எமக்கு தொழில் சினிமாதான்’
என்றிருப்பார். அதை விட்டு வியாபாரத்துல இறங்கினா ஆப்புதேன்.

இவருக்கு 37 வயது நடக்கிறது. இவருடைய வாழ்க்கையை ஐந்து ஐந்தாக பிரித்தால் 8 வது ரவுண்டில்
இருக்கிறார்.

அடுத்த 3 வருடங்கள் தோல்,கீல்,அண்டம் தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் வரும்.
……

* நடிகர் தனுஷ்

* நடிகர் தனுஷ்

பிப்ரவரி 25ந் தேதி 1982ல் பிறந்திருக்கிறார். உயிர் எண் 7, கூட்டு எண் 29 ( இதை 2+9 என்று கூட்டினா
11 இதை சிங்கிள் நெம்பராக்கினா 2 ) 7 என்றால் கேது ,இவர் மோட்ச காரகன். சந்திரன் மனோ காரகன்,

இவர் தன்னுடைய மாமா ரஜினிகாந்த் வெளி உலகத்திற்கு போபாட்டுக்காட்டக் கூடிய சீனை,
உண்மையிலே தொடர்ந்தால், தன்னுடைய ஆன்மீக வாழ்க்கையை பிளான் பண்ணிக்கொண்டால் நன்றாக
வருவார்.

அப்படி இல்லைன்னா சந்திரன் சுகமான கற்பனைகளை -தந்து ஆகாயக்கோட்டைகளை கட்ட வைக்க
கேது தேவையில்லாத வம்பு, கிசுகிசுக்களில் சிக்க வைத்து இவரை லொள்ளு பண்ணுவார். சிறு நீரகம் ,நுரையீரல் பாதிக்கும்.

தற்சமயம் இவருக்கு 30 வயது நடக்குது. இவருக்கு வாழ்க்கையை 7 ஆக பிரித்தால் 5 வது சுற்று நடக்கிறது. 35 வயது முடியற வரைக்கும் பெரிய அவமானங்கள், கோர்ட் படிஏறுவது, தனக்கு நெருக்கமானவர்களை பிரிவது,ரஜினியை போலவே ஃபுட் பாய்சன் அ மெடிக்கல் போன்ற கெட்ட பலன்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதையாக இருக்கவும்.

நடிகர் சிம்பு

பிப்ரவரி 3ந் தேதி 1983ல் பிறந்திருக்கிறார். இவர் உயிர் எண் 3 அதிபதி குரு, கூட்டு எண் 8. குரு என்று
சொல்லும் போதுகிளாஸ், சனி என்று சொன்னால் மாஸ். நல்ல கிரகம், கெட்ட கிரகம் சேரும் போது
கெட்டகிரகத்திற்கு சக்தி அதிகம். அதனால் தான் இவருடைய அப்பா கட்டி காத்த நார்ம்ஸ், டிசிப்ளின்
போன்றவற்றுக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இன்னொரு லொள்ளும் இருக்கிறது. இவருக்கு தெய்வ நம்பிக்கை இருக்காது. அரசியல்வாதிகளின் மேல்
கேவலமான கருத்து இருக்கும்.
அதனால் இவர் அரசியலுக்கு வரும் வாய்ப்பே கிடையாது. இவருக்கு வயிறு, இதயம் பிரச்சனைகள்
எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்புள்ளது. இவருக்கு 29 வயது நடக்கிறது. இவருடைய வாழ்க்கையை
3ஆக பிரித்தால் 10 வது சுற்று நடக்கிறது. இந்த குருவுக்கு 10 சுற்று நடப்பது நல்லது கிடையாது.
குருவின் 10 வது சுற்று நடப்பதால் தன்னுடைய இயல்புக்கு மாறாக இவர்ரஜினிகாந்த் மாதிரி வாய்ஸ்
கொடுப்பதற்கும், வில்லங்கத்தில் சிக்கவோ,சவால் வசனங்களை விட்டு இடியாப்ப சிக்கலில்
மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

இவருக்கு 30 வயதிற்கு பிறகு வரும் 3 வருடங்கள் நன்றாக இருக்கும்.

Advertisements

One thought on “2012 ல் நம் (?) எதிர்காலம்

    thiyanes said:
    January 14, 2012 at 9:52 am

    ayya, dhanush matrum surya ku undana kootu engal sariya endru meendum oru murai sari paarugal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s